முதல் பக்கம்

Mar 22, 2011

இன்று சர்வதேச மகளிர் தினம்.

அன்பு நெஞ்சங்களே,

 வணக்கம். இன்று சர்வதேச மகளிர் தினம். தியானோவை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். 

என்றும் தோழமையுடன், 

மோகனா. 

பெண் ..கணிதவியலாளர்..தியானோ ..கி. மு 546..!

தியானோ
 பெண் ..கணிதவியலாளர்..தியானோ ..கி. மு 546

2010,சர்வதேச.. பெண் விஞ்ஞானிகள்.. ஆண்டு..! 
     பெண் விஞ்ஞானிகளை சிறப்பிக்கும் பொருட்டு 2010 ம் ஆண்டு சர்வதேச பெண் விஞ்ஞானிகள் ஆண்டு என அறிவிக்கப்பட்டது. சுமேரியர்கள்தான் முதன்முதலில் கி மு 7000 களில் எழுத்துக்களைப் பயன்படுத்தியவர்கள் என்று சொல்லப்படுகிறது. அந்தந்த காலகட்டத்தில் அறிவில் சிறந்தவர்கள் பலர் வாழ்ந்திருப்பார்கள். பலரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்,  சிலரின் பெயர்கள் பல்வேறு காரணங்களால் பதிவு செய்யப்படாமல் விடுபட்டிருக்கக் கூடும்.அப்படி விடுபட்ட சில விஷயங்களில் பெண்களைப் பற்றிய, கல்வி,அவர்களின் திறமைகள், போன்றவைகளும் இருக்கும்; இருந்தன.. ஆனால் கி.மு. 3700 களிலிருந்தே பெண்களைப்பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன.நாகரிக காலம் என்று சொல்லப்படும், இந்தக் காலத்திலேயே பெண்களின் படிப்பும்,திறமையும் ஒதுக்கப் படுகிறது எனில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்களின் நிலையை எண்ணிப் பாருங்கள் ..! உலகம் மறந்த, உலகத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்ட மறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள் ஏராளம். அவர்களில் ஒரு சிலரை பற்றிய பதிவுகள்  எப்படியோ கசிந்து நமக்கு கிடைத்துள்ளன .

<span> </span>
 குரோடோனாவின் ..தியானோ..!
  
இத்தாலி கடற்கரையில் குரோட்டோன் நகர்
 <Photo16>
     எந்த காலத்தில் குழந்தை பிறந்தாலும், அதனை மக்கள் கொண்டாடுவது இயல்பு. அதுவும் அரசனின் மகவு என்றால் கேட்கவா வேண்டும்? .அப்படி ஒரு பெண் மகவு சுமார் 2,557 ஆண்டுகளுக்கு முன் கி.மு. 546 ல்,அன்றைய கிரீஸ் நாட்டில்,  இன்றைய இத்தாலியின், தென் கடற்கரை ஓர நகரமான குரோடோனாவில் பிறந்தது. அந்த குழந்தை  இந்த உலகில் பல ஆயிரம் ஆண்டுகள் பேசும் பொருளாக இருக்கப் போகிறது என்ற அரிய உண்மை அன்றைக்கு அதன் பெற்றோருக்குத் தெரியாது.பெண் செல்லத்துக்கு,செல்லமாக தியானோ என்று பெயர் சூட்டினர். அந்த கால கிரேக்கத்தில் தியானோ என்ற பெயர் வைப்பது ரொம்ப பிரபலமான வழக்கம்.அப்போதைய பதிவில் இரண்டு தியானோக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நம் கதையின் நாயகிதான் முதல் தியானோ. இரண்டாவது தியானோ இவருக்குப் பின்,கிரேக்கத்தில், கி.மு.500 களில்  வாழ்ந்தவர் . இவரும் கூட பின்னாளில் பித்தாகராஸ் கல்வி நிறுவனத்தில்  இருந்தவர்தான். கிரேக்க புராணக்கதையின்படி,ஏதெனாவின் பெண் ராஜகுருவின் பெயரும் தியானோ . இவர் திராசியன் அரசரான சிஸ்சியசின் பெண்;அன்டேனாரின் மனைவி. 

    தியானோவின்...பிறப்பு..கருத்து..மோதல்..!
     அன்று நிலவிய, ஒரு கருத்துப்படி, தியானோ என்பவர், கிரேக்கத்தின்  கிரேட்(Crete) என்ற பகுதியிலிருந்து வந்தவர் என்றும், இவரது தந்தை பைத்தொனாக்ஸ்(Pythonax) என்றும் சொல்லப்படுகிறது. இன்னொரு தகவல் தியானோ புரோண்டினசின் (Brontinus) மகள் என்றும் , குரோடோனிலிருந்து(Croton) வந்தவர் என்றும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், தியானோ ஒரு கணிதவியலாளர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.   இந்த தியானோ என்ற பெண் விஞ்ஞானி கி.மு 6 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்தான்.தியானோவுக்கு நல்ல கல்வி அவரது தந்தையால் தரப்பட்டது.தியானோவின், குழந்தைப் பருவமும், இளமைக் காலமும் பற்றி அவ்வளவாக அறியப் படவில்லை.  

  முதல்.. கணிதவியலாளர்.....பித்தாகராஸ் ..! 
     
பித்தாகரஸ்
  கிரேக்கத்தின் பித்தகராஸ் என்ற தத்துவ ஞானி கி.மு கி.மு 540 களில் கணிதத்தை மக்களுக்கு அருமையாக போதித்தார். மேலும் தன் வாழ்க்கையை இந்த சமூகத்தின் அரசியல், நீதிபோதனை,  நெறிகளுக்காக அர்ப்பணித்துக் கொண்டார்.  பித்தாகரஸ்தான் , பழங்கால கிரேக்கத்தின் அறிஞர் என்றும், முதல் கணிதவியலாளர் என்றும் சொல்லப்படுகிறார்.கி.மு 569 ல் இந்த உலகைப் பார்க்க வந்த , பித்தகராஸ், தனது 18 வது வயதில் சாமோஸ் தீவை விட்டு தேசாந்திரியாகப் புறப்பட்டார். மத்தியதரைக்கடல் நாடுகளை சுற்றித்திரிந்தார். எதற்குத் தெரியுமா? அங்கு வாழும் கல்வியில் சிறந்த மேதைகளைச் சந்தித்து பல அறிய விஷயங்களை தெரிந்து கொள்வதற்காகத்தான்.
      பித்தாகரசும்..தாலசும்..!
பித்த்தாகரஸூம், தேற்றமும்
எகிப்தில் பித்தாகரச் உரையாடல்
தாலஸ்
     பித்தாகராஸ் தன் 18 -20  வயதுகளில் மிலிட்டஸ் நகரின் தாலஸ் என்ற தத்துவஞானியை சந்தித்தார்.தாலஸ் சாக்ரடீசுக்கு முன் வாழ்ந்த தத்துவஞானி ஆவார். தாலஸ்,பித்தாகரசுக்கு ஏராளமான, வானவியல் மற்றும் கணிதம் பற்றிய தகவல்களை வாரி வழங்கினார். அவர்தான் பித்தாகராஸ், எகிப்து சென்றால், வானவியல் மற்றும் கணிதம் தொடர்பான அறிவுத் தேடல்களை அறிந்து கொள்ளமுடியும் என்று தூண்டுதல் தந்தவர். அதன் பின்னரே, பித்தாகராஸ் கி.மு 535 ல் எகிப்து,பாபிலோன்,கிரேட் மற்றும் ஸ்பார்ட்டாவுக்கும் பயணித்தார்.  
<span> </span>
 பித்தாகரஸ் ..குரோட்டன்.. வருகையும் ..தியானோ..சந்திப்பும்...!
    
தியானோ
   பித்தாகராஸ் கி.மு 531 .ல் தன் 56 வது வயதில்,இத்தாலியின்/
கிரேக்கத்தின், குரோட்டன் நகருக்கு வருகை புரிந்தார்.இந்த காலகட்டத்தில்தான்,  தியானோ குரோட்டன் மற்றும் சாமோசில் கணிதம் கற்பித்து கொடுத்துக் கொண்டிருந்தார். தியானோ..  ஓர் அற்புதமான கணிதவியலாளர்.அது மட்டுமல்ல. இயற்பியல், மருத்துவம், குழந்தை மனநலம் மற்றும் நிர்வாக திறமைகளில் கைதேர்ந்தவர் தியானோ ..! அந்த தியானோ, பித்தகராஸ், குரோட்டன் வந்ததை, கேள்விப்பட்டார்.பித்தாகரசின் திறமையையும்., பெருமையையும் முன்னமேயே அறிந்திருந்ததால், அவரைப் பார்ப்பதற்காக சென்றார் தியானோ.அதன்பின், பித்தாகரசை நேரில் கண்டு, பல விஷயங்களை அவருடன் விவாதித்தார். பின்னர்,பித்தாகரசிடமே, கணிதம் பயின்றார் தியானோ .

  பித்தாகரசின்...கணித.. நிறுவனமும்..பெண்களின்..உயர்வும்..!
    
பித்தாகரஸ் வகுப்பறையில் பெண்கள்
  பீட்டர் கார்மென் என்ற வரலாற்றியளார் , பித்தகராஸ் மற்றும் தியானோ பற்றி மிக உயர்வாக கூறுகிறார். அதன்படி, பித்தாகராஸ் மிகவும் உயரமான மனிதராகவும், கம்பீரமான தோற்றம் உடையவராகவும் , மற்றவர்கள் மனத்தைக் கவரும் குரல் வளம் கொண்ட வராகவும் இருந்தாராம். பித்தாகராஸ் தன்னுடன், சில உயர்குடி சீடர்கள் வட்டத்தை உருவாக்கி,  குரோட்டன் நகரில் ஒரு கணிதம் போதிக்கும் கல்வி நிறுவனத்தை நிர்மாணித்தார்.!.இந்த கல்வி நிறுவனத்தில் கணிதம்தான் முக்கியத்துவம் தந்து கற்பிக்கப் பட்டது.இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே இருந்தன.பித்தாகரசின் மறைவுக்குப் பின்னரே, இவையனைத்தும் வெளியுலகுக்கு வந்தன.  இங்கு ஆண்,பெண் இருவரையும் சமமாக பாவித்ததிற்கான சான்றுகள் இருக்கின்றன.பித்தாகராஸ் பெண்களுக்கு அதிக மதிப்பும், மரியாதையும் தந்தார்.  பித்தாகரசின் பள்ளியில் 28 பெண்கள் ஆசிரியர்களாகவும் ,ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தனராம். அதைத் தவிர 300 மாணவர்கள் அங்கு தங்கி படித்தனராம்.இந்த கணித நிறுவனத்தில், தியானோ தவிர, அரிஸ்டோகிளியா  (Aristoclea ) என்ற பெண் கணிதவியலாரும்,பெண் மாணாக்கர்களும் இருந்தனராம்.ஆனால் அவரின் சமகாலத்தில், மற்ற இடங்களில் பெண்களுக்கு கல்வியும், அரசியலும் மறுக்கப் பட்டிருந்தகால கட்டம் அது..! பெண்களை அப்போது பெண்களை உரிமைகள் அற்ற ஒரு சொத்தாக/பொருளாகவே கருதினாராம்.
பித்தாகராஸ் ..கல்வி நிறுவன..சூழல்..!
    
பித்தாகரஸ்
 இயாம்பிளிகஸ் (Iamblicus ) என்ற ஆய்வாளர் பித்தாகராஸ் கல்வி நிறுவனம் பற்றி மிகச் சிறப்பாவே, எடுத்துரைக்கிறார். அவரது கூற்றுப்படி, பித்தாகரசின் நிறுவனத்தில்,  ஒழுக்கம் கறாராக கடைபிடிக்கப்பட்டது; இவ்விடத்தில் சைவ உணவே உண்ணப்பட்டது; பெண் ஆண் சமத்துவம் இருந்தது; ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை நிலையே வாழ்ந்தனர்; சமய  கல்வியும், அனைவருக்கும் பொதுவான உணவும், உடல் பயிற்சியும்,வாசிப்பும், தத்துவ படிப்பும் சமமாக சொல்லித்தரப்பட்டன. கூட்டு வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாக இசை கருதப் பட்டது. எனவே, அவர்கள் உறங்கும் முன்னும், விழிக்கும்போதும், நினைவு சக்தியைத் தூண்டும் வகையில்,கவிதைகளையும், அப்பல்லோ என்ற கிரேக்க கடவுளின் பாசுரங்களையும்
சூரிய கடவுளுக்கு வந்தனமும்,பாடலும்
பாடினார்கள்.பித்தாகரஸ் கல்வி நிறுவனத்தில், பெண், ஆண் ஆசிரியர்கள், மா
ணாக்கர்கள் அனைவரும். ஒரு ஒட்டுமொத்த கூட்டு சமூகமாகவே வாழ்ந்தனராம். மதமும், அறிவியலும் அந்த காலத்தில் பிரிக்க முடியாத இரட்டையர்களாவே இருந்தது. மேலும் இங்கு இயற்கைத் தத்துவத்தை,அறிவு பூர்வமாக சொல்லித்தந்தனராம். 
  
பித்தாகரஸ் வகுப்பறையில் தியானோவும், இரண்டு மகள்களும்
   தம்பதியான..  பித்தாகரசும்.. தியானோவும்.....!
 தியானோ பித்தாகரசை விட 36 வயது சின்னவர்.இருந்தாலும் கூட ,பித்தாகரசின் மேல்,  மிகவும் ஈடுபாடும்,அர்ப்பணிப்பும் கொண்டிருந்தார். எனவே, அவரையே..வாழ்க்கைத்துணையாக்க முடிவு செய்து, திருமணமும் செய்துகொண்டார். பின்னர் பித்தாகரசும், தியானோவும் இணைந்து, பித்தாகரசின் கல்வி நிறுவனத்தைக் கவனித்துக்கொண்டனர்.    பித்தகராஸ், தியானோ தம்பதியருக்கு 5  குழந்தைகள் பிறந்தன . அதில் டாமோ, மைரியா, அரிக்நாட்,(Damo, Myria and Arignote ) என்ற பெண் மகவுகளும், ம்னேசார்கஸ், 
தெலேகஸ் ( Mnesarchus and Telauges) என்ற இரு ஆண் குழந்தைகளும் இருந்தன .
     கணித நிறுவன..அழிப்பும், பித்தாகராஸ்..கொலையும்..!                        
வயதான் பித்தாகரஸ்
  பித்தாகரசின் கல்வி நிறுவனம், குரோட்டன் நகரின் அரசையும்   தன் கரத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அரசு அதிகாரிகள், அதன் புகழையும், புனிதத்தையும், ஆளுமையையும், குறைத்து, அதன் மேல் வஞ்சம் தீர்க்க முடிவெடுத்தனர். அவர்களில் முக்கியமாக, இந்த நிறுவனத்தில் இணையமுடியாத சைலோன் (Cylon) என்பவரே, இந்த நிகழ்வின் முதன்மை சூத்ரதாரியாக இருந்தார்..! விளைவு..பித்தாகரசின் கல்வி ,கணித நிறுவனம் சூறையாடி அழிக்கப்பட்டது; எரிக்கப்பட்டது.ஏராளமான பதிவுகள் தீயின் கங்குகளுக்கு இரையாயின. மாணவர்களும், ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்; நாடு கடத்தப் பட்டனர். இந்த சமயத்தில்தான், பித்தாகரசும்(கி.மு. 500 /495 ல் ) கொல்லப்பட்டார் என்றே சொல்லப் படுகிறது. பித்தாகராஸ் இறக்கும் தறுவாயில் அவரது வயது 90௦ என்று சொல்லப்படுகிறது.  
  சாம்பலிலிருந்து..உயிர்த்தெழுந்த..தியானோ..பறவை..!
  
    தியானோ எதிராளிகளின் தாக்குதலிலிருந்து எப்படியோ உயிர் பிழைத்து, சாதுரியமாக தப்பித்தார்..! கணவர் பித்தாகரசின் இறப்புக்குப் பின்னர் சிதைந்து போன,பித்தாகரசின் கல்வி நிறுவனத்தை மீண்டும் தன் மூன்று பெண்களின் உதவியுடன், நிர்மாணித்தார்.அப்போது பித்தகராஸ் தனது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை, பதிவுகளை, தான் உயிருடன் இருந்தபோதே,தன் மூத்த பெண் டாமோவிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்க சொன்னார். அவரோ, அவைகளை தங்கத்தைவிட பாதுகாப்பாக வைத்திருந்தார். அதனால்தான் , அவரது மறைவுக்குப் பின், அவைகளை முக்கிய அடிப்படை ஆவண்ங்களாக,  தொகுப்புகளாக,உலகுக்குத் தரமுடிந்தது. பித்தகராஸ் கல்வி நிறுவனத்தை, தியானோ செழுமையுடன் நடத்தினார்.
<span> </span>
 தியானோ-பித்தாகரஸ்...மகள்களின்.. சிறப்பு..!
    
பித்தாகரஸும், முதல் மகள் டாமோவும்
  தியானோவும் அவரது மகள்களும் குரோட்டனில்,மிகச் சிறந்த மருத்துவர்களாகவும் புகழ் பெற்று விளங்கினர். டாமோ, மைய்யா மற்றும் அறிக்நோட் என்ற இவரின் பெண்கள் பித்தாகரஸ் பள்ளியை பெருமையுடன் நடத்த உதவினர். இவர்கள் மூவரும தத்துவஞானிகள் தான். பித்தாகரசின் கொள்கைகளை,கருத்துக்களைப் பரப்பும் மையமாக பித்தாகரஸ் கல்வி நிறுவனம்  திகழ்ந்தது. . தியானோ ,பித்தாகரசின் மகளான டாமோதான், தன் தந்தையில் எழுத்துக்களை பத்திரமாக , பாதுகாத்து , மீண்டும் பதிப்பிக்க பெரும் உழைப்பை இந்த உலகுக்கு ஈந்தவர். இரண்டாவது மகள் மைய்யா,குழந்தைகளின் சத்து மிகுந்த உணவுத் தேவை,அவைகளுக்கிடையே உள்ள சமன நிலை, சகஜ நிலை பற்றி பதிவு செய்துள்ளார்.தியானோ,பித்தாகரசின் மூன்றாவது மகளான அரிக்னோட் சாகாவரம் பெற்ற எண்களின் இன்றியமையாமை பற்றியும், பிரபஞ்சம், சொர்க்கம், பூமி மற்றும் மதம்/சமயம் இவற்றுடன், அந்த எண்களுக்குள்ள தொடர்பு/காரணம் பற்றியும் எழுதி வைத்துள்ளார்.உலகிலுள்ள அனைத்து பொருள்களும் கணிதத்துடன் தொடர்பு கொண்டது; கணிதத்தின் மூலமே இவற்றை நன்கு கணிக்க/அறிய முடியும் என்றும் கூறுகிறார்.
   பித்தாகராஸ்.. பள்ளியின்.. நிர்வாகி..தியானோ..! 
    
தியானோ,பித்தாகராஸ் தம்பதியின்,  மகன்களில் ஒருவரான டேலஜெஸ்தான் ,பித்தகராஸ் பள்ளி அறிவு பூர்வமாய் வளர்ச்சி பெற மிகவும்  உதவினார். தியானோ கணிதம்,இயற்பியல்,  மருத்துவம், குழந்தை மனநலம் போன்றவை பற்றிய அடிப்படை புத்தகங்கள் எழுதியுள்ளார். .பித்தாகரசின் கல்வி நிறுவனம் அக்காலத்தில் கணிதம் போதித்ததுடன்,பித்தாகரசின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பும் கணிதம் மற்றும் தத்துவத்தின் மையக்கூடமாக விளங்கியது. தியானோவின் உழைப்பும், ஒப்படைப்பு உணர்வும் இன்றி, பித்தாகரசின் கருத்துக்கள் மத்தியதரைக்கடல் பகுதியில் பாதிப்பை/தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது;பரவி இருக்கவும் வாய்ப்பில்லை என வரலாற்றுப் பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திறமையின்..மொத்த..உருவான.. தியானோ..!
     தியானோவும், அவரது இரு பெண்களும் அற்புதமான, திறமைமிகு மருத்துவர்கள். பித்தாகரசின் கருத்துப் படி, மனித உடல் என்பது, இந்த 
பிரபஞ்சத்தின் சிற்றுருவே / நுண்ணளவே என்பதுதான்..!அக்கால மருத்துவரான,  யூரிபோன் ( Euryphon ) னிடம், தியானோவும், அவரின் இரண்டு பெண் மக்களும்,குழந்தை உருவாக்கம் பற்றி கூறும்போது, 7 வது மாதத்துக்குப் பிறகு, கரு உயிருடன் இருக்கும்; பிறந்தால் காப்பாற்றலாம் என்று வாதிட்டனர்.இந்த நிறுவனத்தில், பலரை ஆழ்ந்த அறிவுடன், பிடிப்புடன் உருவாக்கினார் தியானோ. எனவேதான், பித்தாகரசின் கணித நிறுவனம், தியானோ மற்றும் அவர்களின் இரண்டு பெண்களுக்குப் பின்னரும், சுமார்  200 ஆண்டுகள் , ஆல்போல தழைத்து, அருகுபோல  வேர்விட்டு, நீடித்து 
வாழ்ந்தது.கி.மு 5 ம் நூற்றாண்டிலும் கூட, அந்த நிறுவனத்தில் பெண் ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தனராம். 
      ஆசிரியர்..மாணவர்..கூட்டு வாழ்க்கையும்..பதிவும்..!
பித்தாகரஸ் பள்ளியில் ஆலோசனை
     பித்தாகரசின் நிறுவனத்தில், ஆசிரியர்களும், மாணவர்களும் ஒரு சமூகமாக வாழ்ந்தது மட்டுமின்றி, ஒன்றாக அமர்ந்து,பல விஷயங்களை விவாதித்து அதனையே முடிவாக எழுதினாராம். அவர்கள் பதிவு செய்தவை அனைத்தும், பித்தாகரசின்  பெயராலேயே வெளியிடப்பட்டனவாம். பித்தகராஸ் தேற்றத்தை எழுதியவர் தியானோதான் என்றும் சொல்லப்படுகிறது. பித்தாகராஸ் தேற்றம் என்பது, சதுரத்தில்  பக்கங்களின் கூட்டுத்தொகை/அதன் இரண்டு /செங்கோண முக்கோணங்களின் கூட்டுதொகையே பரப்பு என்பதை தெரிவிப்பதாகும்.அனைவரும் கூட்டாக செயல்பட்டு எழுதியதால், யார் எந்த விஷயத்தை, எந்த தேற்றத்தை, எந்த தகவலை எழுதினார்கள் என்பதை தனித்தனியாக குறிப்பிட்டு நாம் அறியமுடியாமல் போய்விட்டது. மேலும் தியானோதான், பித்தாகரசின் நிறுவனத்துக்கு முழுப் பொறுப்பு என்பதால், அவரின் பதிவும் இங்கு அதிகமாகவே இருந்ததாம். பித்தாகராஸ் எழுதிய எந்த அசலான எழுத்தும், பதிவும்,வரைவுகளும் எதுவுமே நமக்கு நேரிடையாக கிடைக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி, எழுதிய பிளாட்டோ மற்றும் ஹெரடோடஸ் ( Plato and Herodotus ) மூலமாகத்தான், பித்தாகராஸ்.தியானோ மற்றும் அவரின் பெண்களின் சாதனைகள், எழுத்துக்கள், திறமையால் உலகுக்குத் தெரிய வருகின்றன. அந்த நிறுவனத்தில் வாழ்ந்த அனைவருமே, பொது சொத்தாகவே,கருதப் பட்டனர்.  
 தியானோவின்.. பதிவுகள் ..!  
நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி,  தியானோவின் படைப்புகள், குறிப்புகள் எதனாயஸ்,சூய்தாஸ், டையோஜீன்ஸ்,லார்டியஸ் மற்றும் இம்பிளிகஸ் ( Athenaeus, Suidas, Diogenes Laertius and Iamblichus ) போன்றவர்கள் மூலமே தெரியவருகின்றன. அவைகளில், பித்தாகரசின் வாழ்க்கை வரலாறு, தங்க சராசரி தேற்றம், எண் தியரி,முதன்மை எண்கள், விண்வெளியியல், பிரபஞ்சத்தின் உருவாக்கம் பெண்களுக்கான அறிவுரை, ஒழுக்கநெறி, கடமை உணர்ச்சி, நேர்மை,பித்தாகரசின் தத்துவஞான கருத்துக்கள் என ஏராளமான படைப்புத்  தொகுப்புகளை   உருவாக்கியுள்ளார்.ஆனால் எந்த ஒன்றிலும் தியானோவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவலே இல்லை.சாமோஸ் மற்றும் குரோட்டன் நகர்களில் கணிதம் கற்றுத் தந்த தியானோ,இயற்கையில் பூக்கள் மற்றும் இலைகளில் காணப்படும் அமைப்புகளை கவனித்து, அதில் அடங்கிக் கிடக்கும் கணிதத்தின் தொடர்பும், உறவும் தெரிந்துகொண்டார். அதன் தொடர்பாக 'தங்க சராசரி/ விகிதம்' (golden mean/golden mean ratio) என்ற அற்புதமான கணிதவியல் புத்தகம் எழுதினர். 
  தியானோவின்... தங்க சராசரி..விகிதம்..!
தங்க விகிதம்
தங்க செவ்வகம்.. தங்க விகித சராசரி
தங்க விகிதம்
    தியானோவின் ஆவணங்களிலேயே, மிகவும் முக்கியமானதும், சுவையானதும் தங்க சராசரி விகிதம் (golden mean/golden mean ratio)தான். அதுதான்,  தங்க சராசரி  விகிததத்தின் மூலக் கோட்பாடு (the principle of the Golden Mean ) என்று கூறப்படுகிறது. இது  கணித ஜியோமிதியின் பை (pie ,π=3.14159 ....) என்பதைப் போன்றே, மாறாதது. இது, கூறுபடா எண் (irrational number) என்று சொல்லப் படுகிறது. இதுவும் கூட கிரேக்கத்திலும், நமது வழக்கிலும் கூட இது பை,(Phi- Φ ) என்றே அழைக்கப் படுகிறது. இதுதான் இயற்கை அமைப்பிலுள்ள தொடர்புகளையும், உறவுகளையும் எளிமையாக விளக்குகிறது. இதனுடைய தசம எண் சுமாராக, 1.6180 என்பதே..!  அதுவே, நம் அன்றாட வாழ்விலும், கணிதத்திலும் பயனுள்ளதுமான பல தகவலைத் தந்துள்ளது. அதற்காக, உலகம் அவருக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளது.
தியானோவின்..தங்க விகித...பயன்பாடு..உலகுக்கு..!
எகிப்திய கட்டிடத்தில் தங்க விகிதம்

சனிக் கோளில் தங்க விகிதம்

      தியானோவின் தங்க சராசரி விகிதம் ( Phi  ) என்பது  கலை மற்றும் கட்டிடக்கலையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தியானோ தொகுத்துத் தந்துள்ள, தங்க சராசரி விகிதத்தை அடிப்படையாக வைத்தே, எகிப்தியர்களும், கிரேக்கர்களும் பெரிய பெரிய கட்டிடங்களும், நினைவகங்களும், அரச மாளிகைகளும் எழுப்பினர் என வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயற்கையில் அமைந்துள்ள செடிகளின் வளர்ச்சி அமைப்பைக் கவனிக்கும்போது அவை, தங்க சாராசரி விகிதம் மற்றும் தங்க செவ்வக அமைப்பிலேயே இருப்பதை இப்போது மக்கள் அறிகின்றனர். இயற்கையின் அமைப்பில் உருவான நத்தை, நாட்டிலஸ் (nautilus)ஓடு, சூரியகாந்தி மற்றும் பல கள்ளியின் இலை அமைப்புகள் சுற்றியும், எதிர் சுற்றிலும் காணப்படுவது தங்க சராசரி விகிதமே..! அது மட்டுமல்ல,
பனிக்கட்டியில், தங்க விகிதம்

தங்க விகிதம்

மரத்தின் அமைப்பில், தங்க விகிதம்

மோனோலிசா முகத்தில் தங்க விகிதம்

தங்க விகிதம்
 நமது கை, முகம்,உடல், இலை , செடி, ,மலர், மரம்,மரவட்டை, சிலந்தி வலை, பூச்சியின் அமைப்பு, தேன்கூடு மற்றும் பால்வழி மண்டலம் உட்பட,அனைத்து விஷயங்களின் அமைப்பும், இந்த கணித தங்க சராசரி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளன என்றால், ஆச்சரியமான தகவல் அல்லவா? பின்னர் உருவான பைபோனாச்சி எண் அமைப்பும் (IN nature , there is a  special relationship between the Golden Mean and Fibonacci Numbers (0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, ... etc, each number is the sum of the two numbers before it).இதனை சார்ந்த்ததே..! 
தியானோவின்..வானவியலில்..கணிதமும்..இசையும்..!
  

பால்வழி மண்டலம்
  தியானோ , சுமார் 2 ,500 ஆண்டுகளுக்கு முன்பே. பிரபஞ்சம் பற்றிய கருத்தை மிகத் தெளிவாக எழுதி,பதிவு செய்து வைத்துள்ளார் . அது தொடர்பாக, தீவிர நம்பிக்கையுடன், விவாதமும் செய்தார்.  சூரியன், சந்திரன், சனி, வியாழன், செவ்வாய், வெள்ளி, புதன் , பூமி , பூமியின் மையம் மற்றும் விண்மின்கள் அடங்கிய 10  அடர்வான கோளங்கள்அடங்கியது தான் பிரபஞ்சம் என அந்தக் காலத்திலேயே கணித்தவர், தியானோ என்ற பெண் கணிதவியலாளர்தான் . மேலும் சூரியன் , சந்திரன், சனி,வியாழன், செவ்வாய், வெள்ளி மற்றும் புதன் அனைத்தும் மையத்தில் உள்ள ஒரு நெருப்பு பந்தை சுற்றிவருகின்றன என்றும் கூறினார். விண்மின்கள் என்பவை நகராமல் நிலையாக இருக்கின்றன என நம்பினார். தியானோவின் கொள்கை/கருத்துப்படி, இந்த மைய நெருப்பு பந்துக்கும்,அதனைச் சுற்றி வரும் கோளங்களுக்கும் இடையேயுள்ள தொலைவு என்பது, இசையின் சுரவரிசைக்கு இடையேயுள்ள இடைவெளியை, ஒத்த  கணித பரிமாணம் உள்ளது என்ற அற்புதமான கருத்தையும் வெளிப்படுத்தினா

No comments:

Post a Comment