முதல் பக்கம்

Mar 17, 2011

‘வனவளம் காப்போம்' கருத்தரங்கம் & மாணவர்களுக்கான பாராட்டு விழா

மார்ச்-15, 2011 செவ்வாய்க்கிழமையன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச வனவள ஆண்டினை முன்னிட்டு 'வனவளம் காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் கூடலூர் வ.உ.சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வ.உ.சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு ஐ.வனிதாமணி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு க.முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார்.
வனவளம் காப்போம் என்ற தலைப்பில் அறிவியல் இயக்க மாவட்டக் கருத்தாளர் கவிஞர் ஓவியா தனசேகரன் பேசினார். பல்லுயிர்ப்பெருக்கத்தின் அவசியம் குறித்து மாணவர்களோடு கலந்துரையாடினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திருமிகு தே.சுந்தர் நினைவுப் பரிசுகளை வழங்கி புத்தக வாசிப்பு குறித்துப் பேசினார். அறிவியல் ஆர்வலர் திருமிகு. பிரகலாதன் அவர்கள் மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். பள்ளியின் ஆசிரியர் திருமிகு சிவமூர்த்தி நன்றி கூறினார். மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டணர்.
செய்தி – தே.சுந்தர்
பதிவர் - ஓவியா

No comments:

Post a Comment