தேசிய அறிவியல் தினம்
பிப்ரவரி 28- தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களின் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
தேசிய அறிவியல் தினத்தன்று அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் பேரணி நடைபெற்றது. பேரணியைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன் துவக்கி வைத்தார்.
அறிவியல் நாட்டிற்கே ,, அறிவியல் மக்களுக்கே,,
அறிவியல் வளர்ச்சிக்கே,,, அறிவியல் அமைதிக்கே,,,
அறிவியல் உலக ஒற்றுமைக்கே,,,
என்ற முழக்க்ங்களுடன் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சுமார் 300 மாணவர்கள் வலம் வந்தனர். மாவட்டக் கருத்தாளர் திருமிகு க,முத்துக்கண்ணன் அறிஞர்கள் வாழ்வில் ஆச்சர்யங்கள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திருமிகு தே.சுந்தர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு ப.மோகன்குமாரமங்கலம் ஆகியோரும் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்
தகவல் – தே.சுந்தர்
பதிவர் – ஓவியா
நாள் - 09/03/11
No comments:
Post a Comment