முதல் பக்கம்

Mar 25, 2011

எளிய அறிவியல் பரிசோதனைகள் மற்றும் ஓரிகாமி பயிற்சி

மார்ச் 19,2011 சனிக்கிழமையன்று 
காலை 10.30 மணிக்கு சீலையம்பட்டி
இந்து நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு 
அறிவியல் இயக்கம் சார்பில் 
மாணவர்களுக்கான எளிய அறிவியல் 
பரிசோதனைகள் மற்றும் ஓரிகாமி பயிற்சி
நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் திருமிகு சண்முகநாதன் 
தலைமையேற்று துவங்கி வைத்தார்.
மதுரை துளிர் அறிவியல் மைய 
ஒருங்கிணைப்பாளர் திருமிகு 
மு.தியாகராஜன் ஏராளமான எளிய 
அறிவியல் பரிசோதனைகளைச் செய்துகாட்டினார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக 
சுற்றுச்சூழல் துறைப் பேராசிரியர் எஸ்.கண்ணன் 
எது அறிவியல்என்ற தலைப்பில் பேசினார்.
அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் 
திருமிகு தே.சுந்தர் அவர்கள் ஓரிகாமி பயிற்சி 
அளித்தார்.
மாணவர்கள் ஆரிவமுடன் பங்கேற்று 
செய்து பார்த்தனர். சுமார் 300 மாணவர்கள் 
கலந்துகொண்டனர்.புத்தக் கண்காட்சி
நடைபெற்றது.அன்றைய தினம் ரூ.800 க்கு 
புத்தக விற்பைனை நடைபெற்றது.
அறிவியல் இயக்க நண்பர்கள் திருமிகுஸ்ரீதர் 
மற்றும் திருமிகு ஈஸ்வரன் ஆகியோர் கண்காட்சி 
ஏற்பாடுகளைச் செய்தனர்.
செய்தி – தே.சுந்தர்
பதிவர் - ஓவியா

No comments:

Post a Comment