மார்ச்-8, 2011 அன்று தேனி மாவட்டம்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
உலக மகளிர் தினக் கருத்தரங்கம்
பெரியகுளம் – கைலாசபட்டி திரவியம்
கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்
தலைவர் திருமிகு பா.செந்தில் குமரன்
தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்
திருமிகு தே.சுந்தர் அவர்கள் வரவேற்றுப்
பேசினார். நிறுவனத்தின் முதல்வர்
திருமிகு அழகு கணேசன் அவர்கள்
கருத்தரங்கத்தைத் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச்
செயலாளரும் கல்வியாளருமாகிய
திருமிகு எஸ்.சுப்பிரமணி பெண்ணுரிமை
குறித்தும் கற்றல் கற்பித்தலில் அறிவியல்
அணுகுமுறை குறித்து ஏராளமான
செயல்பாடுகளுடன் கருத்துரை வழங்கினார்.
மதுரை துளிர் அறிவியல் மைய இயக்குநர்
திருமிகு மு.தியாகராஜன் எளிய அறிவியல்
பரிசோதனைகளைச் செய்து காட்டினார்.
மாணவியரும் ஆர்வமாகப் பங்கேற்றனர்.
அறிவியல் இயக்க மாவட்டக் கருத்தாளர்
திருமிகு க.முத்துக்கண்ணன்
அறிவியலில் பெண்கள் என்ற தலைப்பில்
பேசினார். மாட்டச் செயலாளர் திருமிகு தே.சுந்தர்
அவர்கள் மாணவஆசிரியர்கள் படிக்க வேண்டிய
கல்விசார் புத்தகங்கள் பற்றி பேசினார்.
ரூ 1500க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
கல்லூரியின் சார்பாக அறிவியல் இயக்க
பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை
போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக
கல்லூரியின் விரிவுரையாளர் திருமிகு ஆறுமுகம்
நன்றி கூறினார்.
செய்தி – தே.சுந்தர்
பதிவர் - ஓவியா
No comments:
Post a Comment