காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் கூட்ர்ரோடு ஜெ.சி.போஸ் துளிர் இல்ல மாணவர்கள் உலக வன தினம்(மார்ச் 21), உலக நீர் தினம்(மார்ச் 22) ஐ முன்னிட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சார பயணம் நெல்வாய் கூட்ரோட்டிலிருந்து காலை 10.00 மணியளவில் மங்கலம் ஊராட்சி துணைத்தலைவர் திரு தினகரன் மற்றும் வார்டு உறுப்பினர் திரு அக்பர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தனர்,
36 மாணவர்களும், 21 மாணவிகளும் சைக்கிள் பிரச்சாரத்தில் பங்கு பெற்றனர். 11 கிராமங்கள், குன்றுகளுடன் கூடிய காடு, இரண்டு புகழ்பெற்ற பறவைகள் சரணாலயங்களில் (கரிக்கிலி, வேடந்தாங்கல்,) பிரச்சாரம் தொடர்ந்தது.
இடையிடயே காடுகளைப்பற்றிய விளக்கங்களும், நீரின் அவசியமும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
காடுகளைப்பற்றி வேடந்தாங்கள் வன பாதுகாபு அலுவலர் அவர்களும், நீரின் அவசியம் பற்றி காஞ்சி மாவட்ட நீர் உரிமை பாதுகாபு ஒருங்கிணைப்பாளர் திரு. திருமலை அவர்களும் விளக்கினர். மாணவர்கள் காடு, நீர் ஆகியவற்றின் அவசியத்தை மேலும் உணர்ந்தனர்.
மாணவர்கள், அட்டை வாசகங்களுடன் பொதுமக்களிடம் இவற்றின் அவசியத்தை விளம்பரப்படுத்தினர். மொத்தம் 30 கி.மீ. பயணம் மாலை 5.00 மணிக்கு முடிவுற்றது. மாணவர்களுக்கும் புது அனுபவமும் மகிழ்சியும் கிடைத்ததாக தெரிவித்தனர்.
அன்புடன்
கெ. முனுசாமி.
ஜெ.சி.போஸ் துளிர் இல்ல வழிகாட்டி ஆசிரியர்
No comments:
Post a Comment