2011,ஆகஸ்ட்,20 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளையின் சார்பில் நாராயணத்தேவன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் மயில்சாமி அண்ணாதுரை, ஜான்லோக் பெயர்டு துளிர் இல்லங்கள் துவக்கவிழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.திருநாவுக்கரசு தலைமையேற்றுத் துவங்கிவைத்தார்.கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார்.மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றி விளக்கிப் பேசினார்.
முதல் பக்கம்
Aug 28, 2011
ரைட் சகோதரர்கள்,ஐசக் நியூட்டன் துளிர் இல்லங்கள் துவக்கம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி கிளையின் சார்பில் ஆகஸ்ட்,21,2011 அன்று இஸ்லாமிய மாணவர்களின் உண்டு உறைவிடப் பள்ளியில் ரைட் சகோதரர்கள், ஐசக் நியூட்டன் துளிர் இல்லங்களின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் வரவேற்றார். கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் தலைமையில் துவங்கியது. கிளைப்பொருளாளர் அ.சதீஸ் துளிர் இல்லச் செயல்பாடுகள் குறித்த அறிமுக உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றி விளக்கி பின்னர் மாணவர்களுக்கு எளிய குழு விளையாட்டுகள் மற்றும் ஓரிகாமி பயிற்சி அளித்தார்.மாவட்டக் கருத்தாளர் வி.வெங்கட்ராமன் நிறைவாகப் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சேசுராஜ் நன்றி கூறினார்.சுமார் 50மாணவர்கள் பங்கேற்றனர்.
2011,ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினப் போட்டிகளில் வெற்றிபெற்றோர் விபரம்
நண்பர்களே..
நமது தேனி மாவட்டத்தில் 2011ம் ஆண்டிற்கான ஹிரோஷிமா நாகசாகி நினைவு தின நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.ஆண்டிபட்டி,பெரியகுளம்,தேனி,போடிநாயக்கனூர்,கம்பம் ஆகிய ஐந்து கிளைகளின் சார்பில் நடைபெற்ற 4 பேரணிகள்,2 மனிதசங்கிலி இயக்கங்கள், 9 கருத்துரைகள்,ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் உள்ளிட்ட 19 நிகழ்ச்சிகளில் சுமார் 45 பள்ளிகள்,5 கல்லூரிகள்,95 ஆசிரியர்கள்,3750 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.மாவட்டந்தழுவிய அளவில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பேரியக்கமாக ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
அறிவியல் அமைதிக்கே என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை அறிவித்திருந்தது.6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான போரின் பிடியில் பிஞ்சுகள் என்ற தலைப்பிலான ஓவியப் போட்டியில் போடி,சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.காயத்ரி முதல் இடத்தையும் இராயப்பன்பட்டி புனித ஆக்ன்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.மதுவர்ஷா இரண்டாம் இடத்தையும் ஆண்டிபட்டி இலங்கை அகதிகள் முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மாணவர் க.கிஷோர்குமார் மற்றும் காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவி டி.திவ்யா ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
9முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இதுபோல் துயரம் இனிமேல் வேண்டாம் கட்டுரைப்போட்டியில் கூடலூர் என்.எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளியின் மாணவர் க.தினேஸ்குமார் முதல் இடத்தையும் கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபிக் உயர்நிலைப்பள்ளியின் மாணவர் பி.முகம்மது இத்ரிஸ் மற்றும் கூடலூர், விக்ரம்சாராபாய் துளிர் இல்ல மாணவன் மு.கெளதம் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவி எம்.கார்த்திகாதேவி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
கல்லூரி மாணவர்களுக்கான அன்னை பூமியில் அமைதி தவழட்டும் கவிதைப்போட்டியில் எஸ்.என்.கல்லூரி மாணவர் பி.எஸ்.கார்த்திகேயன் (பெரியகுளம்) முதல் இடத்தையும் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவியர் சி.யுவராணி, ந.சுகன்யாதேவி ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
ஆசிரியர்களுக்கான அணு ஆயுத போட்டியும் மானுடத்தின் தலைக்குனிவும் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் தேவாரம் அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எம்.பொட்டியம்மாள் முதல் இடத்தையும் மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி.மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ம.சீனிவாசன் இரண்டாம் இடத்தையும் தேனி கலை அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர் பி.சங்கரநாராயணன் மற்றும் காமயகவுண்டன்பட்டி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் டி.கற்பகம் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.பங்கேற்ற,பரிசுகள் பெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாடு அறிவியல் நடத்திய இந்த போட்டிகள் பாராட்டுச் சான்றிதழ்களுக்காகவும் பரிசுகளுக்காகவும் மட்டுமல்ல என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.. மிக நாகரிகமடைந்த ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சநிலையை அடைந்துவிட்ட நாம்,அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருக்கின்ற நாம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான வழிமுறைகளை இன்னும் கண்டறியவில்லை,அல்லது கடைப்பிடிக்கவில்லை.இந்நொடிப்பொழுதில் உலகின் பல்வேறு பகுதிகளில் உரிய மருத்துவ வசதியின்றி,சுகாதாரமின்றி, சத்தான உணவின்றி பச்சிளம் குழந்தைகள்,பெண்கள் என பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வறுமைக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். மின்சார வசதிகளோ,பேருந்துகளோ,மருத்துவமனைகளோ,பள்ளிகளோ, தொலைக்காட்சிகளோ,விதவிதமாக நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற செல்போன்களோ எட்டிப்பார்க்காத கிராமங்கள் எத்தனையோ இருக்கின்றன.. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கல்விக்காக,சுகாதாரத்திற்காக,மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்காக அன்றி பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஆயுதங்களைச் செய்து குவிப்பதற்காகவும்,வளமிக்க நாடுகளை அடிமைப்படுத்தவும்,பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்திற்கும் ஒதுக்குகின்றன.
எனவே ஆயுதங்களுக்காகவும்,போர்களுக்காகவும் செலவிடுகின்ற தொகையை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தினால் இந்த பூமி அனைத்து மக்களுக்குமான சொர்க்கமாக மாறும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது இல்லையா?
போர்களுக்கெதிராகவும் அணு ஆயுதங்களுக்கெதிராகவும் ஒன்றிணைவோம்..
அன்னை பூமியின் அழகை,அற்புதங்களை நேசிப்போம்.. அழியாது காப்போம்..
அறிவியல் ஆக்கத்திற்கே..அறிவியல் அமைதிக்கே..அறிவியல் உலகஒற்றுமைக்கே என்பதை உரத்துச்சொல்வோம்..
வருங்காலச் சந்ததி வாழட்டும் நிம்மதியாய்...
அன்புடன் தே.சுந்தர்.
9488011128
Aug 27, 2011
ஹிரோஷிமா தினக் கருத்தரங்கம்,தேனி
மிழ்நாடு அறிவியல் இயக்கம்,தேனி ஒன்றியக் கிளையின் சார்பாக ஆகஸ்ட்,6, 2011 அன்று மாலை தேனி,அல்லிநகரம் நகராட்சி துவக்கப் பள்ளியில் உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கிளைத் தலைவர் மா.மகேஷ் தலைமை வகித்தார்.கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றுப்பேசினார். தேசியகுழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஆய்வு ஒருங்கிணைப்பாளர் பேரா.எஸ்.மோகனா படக் காட்சிகளுடன் கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளரும் சிறுகதை எழுத்தாளருமான திரு.மா.காமுத்துரை வாழ்த்துரை வழங்கினார். கிளைப் பொருளாளர் அ.சதீஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில்முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
மாவட்டச் செயற்குழு கூட்டம்
பள்ளியில் தேனி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர்
பா.செந்தில் குமரன் தலைமை வகித்தார். மாவட்ட மாநாடு
குறித்த பரிசீலனை,மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு,
ஹிரோஷிமா,நாகசாகி தின நிகழ்வுகள், தேசிய குழந்தைகள்
அறிவியல் மாநாட்டு பணிகள், வேலைப் பகிர்வுகள் ஆகியவை
குறித்து விவாதிக்கப்பட்டது.
தேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 8வது
மாவட்ட மாநாடு குறித்த கருத்துகளை சதீஸ்,அம்மையப்பன்,
சிவாஜி,பேரா.எஸ்.மோகனா உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஒரு
மாநில மாநாட்டிற்கான தன்மையோடு நடைபெற்றதாக சில
நண்பர்கள் தெரிவித்தனர்.மாநாடு சிறப்பாக நடைபெற உழைத்த
கம்பம் கிளை நண்பர்கள் க.முத்துக்கண்ணன், வெங்கட்ராமன்,
மா.சிவக்குமார் மற்றும் முனைவர்.எஸ்.கண்ணன்,ஹ.ஸ்ரீராமன்,
தே.சுந்தர் ஆகியோருக்கு மாவட்டச் செயற்குழுவின் சார்பில்
பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. மாநாட்டின் போது சிறப்பாக
பக்களித்த அனைத்து கிளை பொறுப்பாளர்களுக்கும் நன்றிகள்
தெரிவிக்கப்பட்டது.
16வது மாநில மாநாடு,பிரதிநிகள் தேர்வுக்கான முன்மொழிவு,
மாவட்டத்தில் நடைபெற்ற பணிகள், தேசிய குழந்தைகள்
அறிவியல் மாநாட்டிற்காக செய்ய வேண்டியவை குறித்து விரிவாக
மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் பேசினார். கிளைச் செயல்பாடுகள்
குறித்து கிளைப் பொறுப்பாளர்கள் ஆர்.அம்மையப்பன், பெ.ஆண்டவர்,
க.முத்துக்கண்ணன்,மு.தெய்வேந்திரன் ஆகியோர் பேசினார்கள்.
தே.சுந்தர்,பா.செந்தில்குமரன்,செ.சிவாஜி,ஹ.ஸ்ரீராமன், முனைவர்.ஜி.
செல்வராஜ் ஆகியோரை புதிய மாநிலப் பொதுக்குழுவிற்கு பரிந்துரை
செய்வதென முடிவு செய்யப்பட்டது.
வெளியீடுகள் உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக
ஹ.ஸ்ரீராமனும், கல்வி உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக
வி.வெங்கட்ராமனும் அறிவியல் பிரச்சார உபகுழுவின் மாவட்ட
ஒருங்கிணைப்பாளராக தே.சுந்தர் ஆகியோர் செயல்படுவதென
ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தின்
இணையதள வலைப்பக்கமான www.tnsftheni.blogspot.com-ஐ தொடர்ந்து
புதுப்பிக்கும் பொறுப்பையும் திரு.ஸ்ரீராமன் கவனிப்பதென முடிவெடுக்கப்
பட்டது. மாவட்டப் பொருளாளர் செ.சிவாஜி நன்றி கூறினார்.
19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011
குழந்தைகளிடையே இயல்பாக உள்ள அறிவியல் மனப்பான்மையினையும் படைப்புத்திறனையும் வெளிக்கொண்டுவரும் விதமாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 1993ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப் பட்டுவருகிறது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை,தேசிய அறிவியல் தொழில்நுட்பம்,தகவல் பரிமாற்றக்குழு ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 18 ஆண்டுகளாக மாநில அளவில் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறது.
இந்த ஆண்டு 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. நிலவளம்-வளத்திற்காக பயன்படுத்துவொம், வருங்காலத்திற்கும் பாதுகாப்போம் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தலைப்புகளாக நிலத்தை அறிவோம்,நிலத்தின் செயல்பாடுகள், நிலத்தின் தரம்,நிலத்தில் மனிதனால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள், நிலவளத்தின் நிலைத்தகு பயன்பாடு, நிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய சமுக அறிவு ஆகியன அறிவிக்கப் பட்டுள்ளன.
மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பதுறைச் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த ஆய்வு புரிந்த குழந்தைகளுக்கு குழந்தை விஞ்ஞானியர் விருது இந்திய அரசின் குடியரசுத்தலைவர் அவர்களால் வழங்கப்படும்.தேர்வுசெய்யப்படும் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இரண்டாவது வாரம் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். அண்மையில் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தேசியக் கலைத்திட்டத்தில் கூட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குழந்தைகள் அறிவியல் கற்பதற்கான சிறந்த மேடை எனப் பாராட்டியுள்ளது.
மாவட்ட அளவிலான மாநாடு அக்டோபர் மாதம் பெரியகுளத்திலும் மாநில அளவிலான மாநாடு நவம்பர் மாதம் விருதுநகரிலும் தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27-31 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. நிலவளம்-வளத்திற்காக பயன்படுத்துவொம், வருங்காலத்திற்கும் பாதுகாப்போம் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தலைப்புகளாக நிலத்தை அறிவோம்,நிலத்தின் செயல்பாடுகள், நிலத்தின் தரம்,நிலத்தில் மனிதனால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள், நிலவளத்தின் நிலைத்தகு பயன்பாடு, நிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய சமுக அறிவு ஆகியன அறிவிக்கப் பட்டுள்ளன.
மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பதுறைச் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த ஆய்வு புரிந்த குழந்தைகளுக்கு குழந்தை விஞ்ஞானியர் விருது இந்திய அரசின் குடியரசுத்தலைவர் அவர்களால் வழங்கப்படும்.தேர்வுசெய்யப்படும் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இரண்டாவது வாரம் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். அண்மையில் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தேசியக் கலைத்திட்டத்தில் கூட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குழந்தைகள் அறிவியல் கற்பதற்கான சிறந்த மேடை எனப் பாராட்டியுள்ளது.
மாவட்ட அளவிலான மாநாடு அக்டோபர் மாதம் பெரியகுளத்திலும் மாநில அளவிலான மாநாடு நவம்பர் மாதம் விருதுநகரிலும் தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27-31 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டிற்கான விதிமுறைகள்:
- தேசிய அளவிலும் உலக அளவிலும் பாராட்டிப் பேசப்படும் இம்மாநாட்டில் 10முதல் 17 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்.
- ஆய்வு செய்யும் குழந்தைகளின் வயது டிசம்பர்,31 அன்று என்ன வயதோ அதுவே கணக்கில் கொள்ளப்படும்.ஆய்வுக்குழு உறுப்பினர்களின் அதிகபட்ச வயதின் அடிப்படையில் எந்தப்பிரிவென முடிவு செய்யப்படும்.
- 10முதல்13 வயதினர் வரை இளநிலை/கீழ்நிலை என்றும் 14 முதல் 17 வயது வரை முதுநிலை/மேல்நிலை என்றும் கருதப்படும்.
- பள்ளியில் பயில்வோர் மட்டுமின்றி இடைநின்ற குழந்தைகள்,குழந்தைத் தொழிலாளர்கள்,இரவுப்பள்ளிகள் மற்றும் துளீர் இல்லக் குழந்தைகளும் பங்கேற்கலாம்.
- இக்குழந்தைகளுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களாக பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்,கல்லூரி மாணவர்,அறிவியல் இயக்க ஆர்வலர்கள் என ஆர்வமுள்ள நண்பர்கள் செயல்படலாம்.
- வழிகாட்டும் ஆசிரியர்களாக செயல்படும் நண்பர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கதின் சார்பில் பயிற்சியளிக்கப்படும்.தேனி மாவட்டதில் இதற்கான பயிற்சி முகாம் செப்டம்பர் மாதம் 2வது வாரம் தேனியில் நடைபெறவுள்ளது.
- இளநிலை மாணவர்கள் 2500 வார்த்தைகளிலும்,முதுநிலை மாணவர்கள் 3500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆய்வு பதிவு செய்த உடனே சுமார் ஒரு பக்க அளவில் ஆய்வுச்சுருக்கம் எழுதி மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- குழந்தைகள் கட்டாயமாக மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழுவாகத்தான் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.தனிநபராக ஆய்வு செய்தல் கூடாது.
- பொதுவாக சோதனை முறையில் ஆய்வு செய்வதானால் அறிவியல் முறைப்படி செய்தல்வேண்டும்.
- ஆய்வின் கருத்து புதியதாக,எளியதாக,செயல்முறையுடன் கூடியதாக,கூட்டுச் செயல்பாட்டுடன் கூடியதாக இருக்கவேண்டும்.
- மேற்கொள்ளும் ஆய்வானது உள்ளூர் பிரச்சனைகளை மையமாக வைத்து தகவல்கள்,கணக்கெடுப்பு,சோதனைகள் போன்றவற்றை தங்களின் மாவட்டத்திற்கு உள்ளேயே செய்துகொண்டு வரவேண்டும்.மாவட்ட எல்லை தாண்டக்கூடாது.
- தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்கவேண்டும்.
- புள்ளி விபரங்கள் போதுமானதாக இருக்கவேண்டும்.
- புள்ளிவிபரம்,கணக்கெடுப்பு,நேர்காணலுக்கான வினாத்தாள் தயாரிக்கும்போது குறைந்தபட்சம் 20 வினாக்கள் இருக்கவேண்டும்.
- ஆய்வுக்காக நேர்காணல் செய்யும்போது குறைந்தபட்சம் 50 நபர்களையாவது சந்திக்கவேண்டும்.
- மனிதனின் மீதோ,மனிதன் குடிக்கும்,உண்ணும் எந்தப்பொருளின் மீதோ எவ்வித ஆய்வும் மேற்கொள்ளக் கூடாது.
- மருத்துவம்,மருந்துகள்,வியாதிகள் தொடர்பாகவும் எவ்வித ஆய்வும் மேற்கொள்ளக்கூடாது.
- ஆய்வறிக்கைக்காக இணையதளத்திலிருந்து தகவல்களை டவுன்லோடு செய்துகொண்டுவரக்கூடாது.
- ஆய்வறிக்கையை கையில் எழுதியோ,தட்டச்சு செய்தோ கொண்டுவரலாம்.
- ஆய்வறிக்கையில் அதிகபட்சமாக நான்கு புகைப்படங்கள்/அட்டைகள்/ விளக்கப்படங்கள் இருக்கலாம். கூடுதலான படங்களுக்கு எவ்வித கூடுதல் மதிப்பெண்களும் கிடையாது.
- கட்டாயமாக வி.சி.டி. அனுமதி கிடையாது.
- ஆய்வறிக்கைக்கான செலவு அதிகபட்சமாக ரூ.250 ஐ தாண்டக்கூடாது.
- ஆய்வறிக்கைக்காக தினசரி நாட்குறிப்பு பேணவேண்டும்.மாநாட்டின்போது சமர்ப்பிக்கவேண்டும்.
- ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 8 நிமிடங்கள் மட்டுமே.
மேலும் விபரங்களுக்கு...
தே.சுந்தர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
எண்,8. தளம்,2., ஸ்மார்ட் மொபைல்ஸ் மாடி
மோகனசுந்தரம் மருத்துவமனை அருகில்
குட்டியாபிள்ளைத்தெரு,கம்பம்-625516
அலைபேசி-9488011128,9944094428
மின்னஞ்சல்-sundar.tnsf@gmail.com
வலைப்பக்கம்-www.tnsftheni.blogspot.com
தே.சுந்தர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
எண்,8. தளம்,2., ஸ்மார்ட் மொபைல்ஸ் மாடி
மோகனசுந்தரம் மருத்துவமனை அருகில்
குட்டியாபிள்ளைத்தெரு,கம்பம்-625516
அலைபேசி-9488011128,9944094428
மின்னஞ்சல்-sundar.tnsf@gmail.com
வலைப்பக்கம்-www.tnsftheni.blogspot.com
Aug 23, 2011
கம்பம் நகரில் அறிவியல் திருவிழா:
தினத்தந்தி
கம்பம்,ஆகஸ்ட்,1,2011
தேனி மாவட்டம், கம்பம் நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 8-வது மாவட்ட மாநாடு மற்றும் குழந்தைகள் அறிவியல் திருவிழா ஏலவிவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார்.கிளைத்தலைவர் மா.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். துளிர் அறிவியல் மைய இயக்குனர் மு.தியாகராஜன்
தொடங்கிவைத்துப் பேசினார்.மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் செயலறிக்கை வாசித்தார்.மண்டலப் பொருளாளர் எஸ்.வெங்கடேஸ்வரி பொருளறிக்கை வாசித்தார். சர்வதேச வனவள ஆண்டு பற்றி கருத்தாளர் எஸ்.தினகரன் பேசினார்.மாநாட்டை வாழ்த்தி மொ.பாண்டியராஜன்,தலைமை ஆசிரியர் எஸ்.முருகேசன்,எஸ்.நந்தகோபால் ஆகியோர் பேசினர்.செ.சிவாஜி நன்றி கூறினார். குழந்தைகள் அறிவியல் திருவிழாவிற்கு ஸ்ரீராமன் தலைமை தாங்கினார்.கிளைச்செயலாளர் க.முத்துக்ண்ணன் வரவேற்றுப்பேசினார்.ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி முதல்வர் ஆர்.அனுசுயா அறிவியல் பாடத்தில்நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கினார்.அறிவியல் இயக்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.மோகனா,மதுரை காமராஜர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல்துறை பேராசிரியர்.எஸ்.கண்ணன்ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்,பதக்கங்கள் வழங்கினார்கள். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.புத்தக கண்காட்சி,பூமி வெப்பமயமாதல் படக்காட்சி போன்றவைகள் நடைபெற்றது.தேனி,போடி,பெரியகுளம்,ஆண்டிபட்டி,கம்பம் ஆகிய ஊர்களின் அறிவியல்இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..
ஹிரோஷிமா-நாகசாகி நினைவுதினப் போட்டிகள்:மாணவர்களுக்கு அழைப்பு
தினமணி
கம்பம்,ஆக,8
அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா-நாகசாகி
நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மாணவர்களுக்குபல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது.
நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மாணவர்களுக்குபல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவம் ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி
நகரங்கள் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதி மற்றும்
9-ந் தேதியில் நடத்திய அணுகுண்டுத் தாக்குதல்களில் ஏராளமானோர்
உயிரிழந்தனர். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படாமல் இருக்க,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் அமைதிக்கே என்ற
முழக்கத்தை வெளியிட்டுள்ளது. அதை நினைவுகூறும் வகையில்,
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்ப்டுகின்றன.
போரின் பிடியில் பிஞ்சுகள் என்ற தலைப்பில் 6,7,8 வகுப்புகளுக்கு
ஓவியப் போட்டியும் 9முதல் 12ம் வகுப்பு வரை இதுபோல் துயரம்
இனிமேல் வேண்டாம் என்ற தலைப்பில் 5 பக்கங்களுக்கு
மிகாமல் கட்டுரைப்போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு அன்னை பூமியில்
அமைதி தவழட்டும் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி(25 வரிகளுக்கு
மிகாமல்) ஆசிரியர்களுக்கு அணு ஆயுத போட்டியும் மானுடத்தின்
தலைக்குனிவும் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும்(5 பக்கங்களுக்கு
மிகாமல்) நடத்தப்படுகிறது. படைபுகளை ஆகஸ்ட் 19-க்குள் தே.சுந்தர்,
மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,குட்டியாபிள்ளை
தெரு,கம்பம் என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் என மாவட்ட அறிவியல்
இயக்கம் தெரிவித்துள்ளது.
நகரங்கள் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதி மற்றும்
9-ந் தேதியில் நடத்திய அணுகுண்டுத் தாக்குதல்களில் ஏராளமானோர்
உயிரிழந்தனர். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படாமல் இருக்க,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் அமைதிக்கே என்ற
முழக்கத்தை வெளியிட்டுள்ளது. அதை நினைவுகூறும் வகையில்,
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்ப்டுகின்றன.
போரின் பிடியில் பிஞ்சுகள் என்ற தலைப்பில் 6,7,8 வகுப்புகளுக்கு
ஓவியப் போட்டியும் 9முதல் 12ம் வகுப்பு வரை இதுபோல் துயரம்
இனிமேல் வேண்டாம் என்ற தலைப்பில் 5 பக்கங்களுக்கு
மிகாமல் கட்டுரைப்போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு அன்னை பூமியில்
அமைதி தவழட்டும் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி(25 வரிகளுக்கு
மிகாமல்) ஆசிரியர்களுக்கு அணு ஆயுத போட்டியும் மானுடத்தின்
தலைக்குனிவும் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும்(5 பக்கங்களுக்கு
மிகாமல்) நடத்தப்படுகிறது. படைபுகளை ஆகஸ்ட் 19-க்குள் தே.சுந்தர்,
மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,குட்டியாபிள்ளை
தெரு,கம்பம் என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் என மாவட்ட அறிவியல்
இயக்கம் தெரிவித்துள்ளது.
8வது மாவட்ட மாநாடு& குழந்தைகள் அறிவியல் திருவிழா:
தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 8வது மாவட்ட மாநாடு மற்றும் குழந்தைகள் அறிவியல் திருவிழா ஜுலை, 24ம் தேதி கம்பம், சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை வகித்தார்.ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். கம்பம் கிளைத்தலைவர் மா.சிவக்குமார் வரவேற்றார்.. மதுரை துளிர் அறிவியல் மையத்தின் இயக்குனர் திரு.மு.தியாகராஜன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் திரு.தே.சுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான வேலையறிக்கை மற்றும் பொருளறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். அதனைத்தொடர்ந்து அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.
முனைவர்.முகமது ஷெரிப்,முனைவர்.செல்வராஜ்,மு.தெய்வேந்திரன், அ.சதீஷ்,க.முத்துக்கண்ணன், ஆர்.அம்மையப்பன், எஸ்.மனோகரன், ஓவியா தனசேகரன், எஸ்.காளிதாஸ்,எஸ்.சேசுராஜ் உள்ளிட்ட நண்பர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் விவாதத்தின் மீதான தொகுப்புரை வழங்கினார்.. பின்னர், புதிய பொதுக்குழு,செயற்குழு,நிர்வாக குழு தேர்வு நடைபெற்றது. புதிய மாவட்டத்தலைவராக பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளராக தே.சுந்தர், மாவட்டப் பொருளாளராக செ.சிவாஜி ஆகியோரும் துணைத்தலைவர்களாக முனைவர்.மு.முகமது ஸெரீப், முனைவர்.ஜி.செல்வராஜ், முனைவர்.சி.கோபி ஆகியோரும் துணைச் செயலாளர்களாக ஹ.ஸ்ரீராமன்,கருணாநிதி,மு.தெய்வேந்திரன் ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.. புதிய நிர்வாகிகளுக்கு எழுத்தாளர் மொ.பாண்டியராஜன்,சி.பி.யூ.மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் துணைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் நன்றி கூறினார்.
பிற்பகல் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் திருவிழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் தலைமை வகித்தார். கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்ண்ணன் வரவேற்றார். கடந்த மார்ச்,2011 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த சுமார் 150 மாணவர்களுக்கு கம்பம் ஸ்ரீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர்.ஆர்.அனுசுயா சான்றிதழ்கள் வழங்கினார். வானியல் அற்புதங்கள் குறித்து கருத்துரை வழங்கிய பேரா.எஸ்.மோகனா வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்திப்பேசினார். முனைவர்.எஸ்.கண்ணன் சாதனை மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து வாழ்த்திப் பேசினார். இணை அமர்வுகளில் பல்லுயிரியம் குறித்து முனைவர்.ஜி.செல்வராஜ் அன்றாட வாழ்வில் வேதியியல் குறித்து முனைவர்.எஸ்.இராமநாதன் கணக்கும் இனிக்கும் தலைப்பில் வி.வெங்கட்ராமன் கருத்துரை வழங்கினர். எளிய அறிவியல் பரிசோதனைகளை பெ.ஆண்டவர்,காகிதக் கலைப் பயிற்சிகளை ஆர்.ராஜ்குமார் செய்துகாட்டினர்.. திண்டுக்கல் எம்.வீரையா குழந்தைகளுக்கான மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளைச் செய்துகாட்டி அறிவியல் விளக்கங்களையும் கூறினார். தொலைநோக்கியின் செயல்பாடுகள் பற்றி மதுரை இல.நாராயணசாமி விளக்கிக்கூறினார்..கம்பம் கிளைப் பொருளாளர் ஓவியா தனசேகரன் நன்றி கூறினார்.. மாவட்ட முழுவதுமிருந்தும் அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் தொண்டர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் என சுமார் 550க்கும் மேற்பபட்டோர் கலந்துகொண்டனர்..
-சுந்தர்.காலையில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை வகித்தார்.ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். கம்பம் கிளைத்தலைவர் மா.சிவக்குமார் வரவேற்றார்.. மதுரை துளிர் அறிவியல் மையத்தின் இயக்குனர் திரு.மு.தியாகராஜன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் திரு.தே.சுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான வேலையறிக்கை மற்றும் பொருளறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். அதனைத்தொடர்ந்து அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.
முனைவர்.முகமது ஷெரிப்,முனைவர்.செல்வராஜ்,மு.தெய்வேந்திரன், அ.சதீஷ்,க.முத்துக்கண்ணன், ஆர்.அம்மையப்பன், எஸ்.மனோகரன், ஓவியா தனசேகரன், எஸ்.காளிதாஸ்,எஸ்.சேசுராஜ் உள்ளிட்ட நண்பர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் விவாதத்தின் மீதான தொகுப்புரை வழங்கினார்.. பின்னர், புதிய பொதுக்குழு,செயற்குழு,நிர்வாக குழு தேர்வு நடைபெற்றது. புதிய மாவட்டத்தலைவராக பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளராக தே.சுந்தர், மாவட்டப் பொருளாளராக செ.சிவாஜி ஆகியோரும் துணைத்தலைவர்களாக முனைவர்.மு.முகமது ஸெரீப், முனைவர்.ஜி.செல்வராஜ், முனைவர்.சி.கோபி ஆகியோரும் துணைச் செயலாளர்களாக ஹ.ஸ்ரீராமன்,கருணாநிதி,மு.தெய்வேந்திரன் ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.. புதிய நிர்வாகிகளுக்கு எழுத்தாளர் மொ.பாண்டியராஜன்,சி.பி.யூ.மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் துணைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் நன்றி கூறினார்.
பிற்பகல் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் திருவிழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் தலைமை வகித்தார். கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்ண்ணன் வரவேற்றார். கடந்த மார்ச்,2011 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த சுமார் 150 மாணவர்களுக்கு கம்பம் ஸ்ரீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர்.ஆர்.அனுசுயா சான்றிதழ்கள் வழங்கினார். வானியல் அற்புதங்கள் குறித்து கருத்துரை வழங்கிய பேரா.எஸ்.மோகனா வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்திப்பேசினார். முனைவர்.எஸ்.கண்ணன் சாதனை மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து வாழ்த்திப் பேசினார். இணை அமர்வுகளில் பல்லுயிரியம் குறித்து முனைவர்.ஜி.செல்வராஜ் அன்றாட வாழ்வில் வேதியியல் குறித்து முனைவர்.எஸ்.இராமநாதன் கணக்கும் இனிக்கும் தலைப்பில் வி.வெங்கட்ராமன் கருத்துரை வழங்கினர். எளிய அறிவியல் பரிசோதனைகளை பெ.ஆண்டவர்,காகிதக் கலைப் பயிற்சிகளை ஆர்.ராஜ்குமார் செய்துகாட்டினர்.. திண்டுக்கல் எம்.வீரையா குழந்தைகளுக்கான மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளைச் செய்துகாட்டி அறிவியல் விளக்கங்களையும் கூறினார். தொலைநோக்கியின் செயல்பாடுகள் பற்றி மதுரை இல.நாராயணசாமி விளக்கிக்கூறினார்..கம்பம் கிளைப் பொருளாளர் ஓவியா தனசேகரன் நன்றி கூறினார்.. மாவட்ட முழுவதுமிருந்தும் அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் தொண்டர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் என சுமார் 550க்கும் மேற்பபட்டோர் கலந்துகொண்டனர்..
ஆண்டிபட்டி ஒன்றியக்கிளை மாநாடு
2011,ஜுலை 18 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
ஆண்டிபட்டி ஒன்றியக்கிளை மாநாடு ஆண்டிபட்டி மேலப்பேட்டை
இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கிளைத்தலைவராக எஸ்.மாதவன் செயலாளராகஆர்.அம்மையப்பன்,
பொருளாளராக கு.ரத்தினம் துணைத்தலைவராக சாமுவேல்மோகன்
துணைச்செயலாளராக ஜான்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் கலந்துகொண்டார்.
பெரியகுளம் ஒன்றியக்கிளை மாநாடு
2011,ஜுலை,2 அன்று பெரியகுளம் நெல்லையப்பர்
நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தின் பெரியகுளம் ஒன்றியக்கிளை மாநாட்டில்
கிளைத்தலைவராக எ.எஸ்.பாலகிருஷ்ணன் செயலாளராக
எஸ்.ராம்சங்கர், பொருளாளராக பெ.ஆண்டவர்
துணைத்தலைவராக எஸ்.எ.செல்வராஜ் துணைச்
செயலாளர்களாக எஸ்.மனோகரன், எம்.ஆனந்தகுமார் ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டனர்.மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன்
மாவட்டச் செயலாளர் திரு.தே.சுந்தர் கலந்துகொண்டனர்
தேனி ஒன்றியக்கிளை மாநாடு
2011,ஜுலை,1 அன்று தேனி அரசு ஊழியர் கட்டிடத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி ஒன்றியக்கிளை மாநாட்டில் கிளைத்தலைவராக மா.மகேஷ், கிளைச் செயளாளராக மு.தெய்வேந்திரன்,பொருளாளராக அ.சதீஷ் ஆகியோரும் துணைத் தலைவர்களாக எஸ்.சேசுராஜ், கார்ல்மார்க்ஸ், துணைச் செயலாளர்களாக செந்தில்மணி, முகமது ஆசிக் ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் செ.சிவாஜி கலந்துகொண்டனர்.
கம்பம் ஒன்றியக்கிளை மாநாடு
2011,ஜுன்,8ம் தேதி கூடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக்கிளை மாநாடு நடைபெற்றது. முனைவர்.இதயகீதன் சமச்சீர் கல்வி குறித்த கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு.தே.சுந்தர்,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ஸ்ரீராமன் கலந்துகொண்டனர். கிளைத்தலைவராக மா.சிவக்குமார், கிளைச்செயலாளராக க.முத்துக்கண்ணன்,பொருளாளராக ஓவியாதனசேகரன் ஆகியோரும் துணைத்தலைவர்களாக சி.பிரகலாதன், இன்பசேகரன் துணைச்செயலாளர்களாக இராஜசேகரன்,பிரகாஷ் ஆகியோரும் வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பாளராக
சி.பிரபாகரனும் தேர்வு செய்யப்பட்டனர். துளிர் இல்லக் குழந்தைகள்,ஆசிரியர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சி.பிரபாகரனும் தேர்வு செய்யப்பட்டனர். துளிர் இல்லக் குழந்தைகள்,ஆசிரியர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போடி ஒன்றியக்கிளை மாநாடு
2011,ஜுன்,6ம் தேதி போடி சூலப்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் போடி ஒன்றியக்கிளை மாநாடு நடைபெற்றது. பேரா.பொ. இராஜமாணிக்கம் எண்டோசல்பான் தடை எதற்கு என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். முனைவர்.எஸ்.கண்ணன், பா.செந்தில்குமரன், தே.சுந்தர், செ.சிவாஜி மற்றும் பொதுமக்கள்,பெண்கள்,மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.. கிளையின் தலைவராக எஸ்.காளிதாஸ், செயலாளராக ப.ஸ்ரீதர்,பொருளாளராக கோ.ஜெகதீசன் ஆகியோரும் துணைத் தலைவர்களாக எஸ்.சரவணன்,ராமதாஸ் துணைச் செயலாளர்களாக மு.தெய்வேந்திரன், செல்வேந்திரன் ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16வது மாநில மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16வது
மாநில மாநாடு கடந்த ஆகஸ்ட்,12ம் தேதி
மாலை திருநெல்வேலி வானவில் மண்டபத்தில்
துவங்கியது..
துவக்க நிகழ்ச்சியாக கல்வி உரிமைக் கருத்தரங்கம்
பேரா.என்.மணி தலைமையில் நடைபெற்றது.
திரு.அமலராஜன் முன்னிலை வகிக்க மாநிலச்
செயலாளர் திரு.எஸ்.சுப்ரமணி வரவேற்றுப் பேசினார்.
பட்டாசுத் தொழிற்சாலைகள், ஜவுளிக்கடைகள்,
பணிமனைகள் எனப் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்ற குழந்தைத்தொழிலாளர்களையும்
பேருந்து நிலையங்களிலும்,தெருவோரங்களிலும்
தேசத்தின் திசையெங்கும் தினப்பாட்டிற்கே
திண்டாடி பிச்சைக்காரர்களாக திரிகின்ற கோடிக்
கணக்காண குழந்தைகளையும் பள்ளிகளை நோக்கி
அழைத்து வருவதன் மூலமே கல்வி உரிமைச் சட்டம்
முழுமையடையும் என முனைவர்.ஆர்.இராமானுஜம்
தனது கருத்துரையில் கூறினார்..
எல்லாவற்றையும் கைபற்றிய தனியார்மயத்தின்
ஆக்டோபஸ் கரங்கள் கல்வியையும் விட்டுவைக்காத
கொடுமையை விளக்கினார் பேரா.பொ.இராஜமாணிக்கம்.
பாரதத்தாயின் எல்லா உறுப்புக்களையும் விற்றுவிட்ட
ஆட்சியாளர்கள் கல்வியையும் தனியாருக்கு
தாரைவார்த்து மூச்சையும் நிறுத்திய அவலத்தையும்
எடுத்துரைதார்.
சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தின் அறிவியல் பூர்வமான பங்களிப்பையும்
தொடர்முயற்ச்சிகளையும் பாராட்டிப்பேசினார் கல்வியாளர்
பிரின்ஸ் கஜேந்திரபாபு.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும்
தீர்மானிக்கின்ற கருவியாக,அனைத்துத் தரப்பினரும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அறிவியல் இயக்கத்தின்
சமச்சீர் கல்வி ஆய்வறிக்கை நடுநிலைத்தன்மையுடன்
இருந்ததை எடுத்துரைத்து சமச்சீர் கல்வி அமலாக்கம் குறித்து
தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பாகவும் அறிவியல்
இயக்கம் செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து எனக்கில்லையா கல்வி? குறும்படம்
குறித்த விவாதமேடை நடைபெற்றது.. திரைப்பட இயக்குனர்
பாரதி கிருஸ்ணகுமார் கலந்துகொண்டு கல்விகுறித்து
சிறப்பான உரையாற்றினார்..அதனையடுத்த இரண்டு நாட்களும்
திரளான பிரதிநிதிகளின் பங்கேற்போடு மாநாட்டு நிகழ்வுகள்
நடந்தேறின..
மாநாட்டின் முடிவில் புதிய மாநிலத்தலைவராக பேரா.என்.மணி
பொதுச்செயலாளராக எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், பொருளாளராக
எம்.இராதா தேர்வுசெய்யப்பட்டனர்.
நமது தேனி மாவட்டத்திலிருந்து செந்தில்குமரன்,ஸ்ரீராமன்,
சிவாஜி,சேசுராஜ்,அம்மையப்பன்,தெய்வேந்திரன்,முத்துக்கண்ணன்,
வெங்கட்ராமன், தனசேகரன்,சுந்தர் உள்ளிட்ட பத்து பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.அனைவருக்கும் நன்றிகள்..வாழ்த்துகள்..
அன்புடன் தே.சுந்தர்..
கல்பனா சாவ்லா துளிர் இல்லத்தின் துவக்கவிழா
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், போடி கிளையின் சார்பில் போடி மீனாட்சிபுரம் கிராமத்தில் கல்பனா சாவ்லா துளிர் இல்லத்தின் துவக்கவிழா கடந்த ஆகஸ்ட்,15ம் தேதி நடைபெற்றது. போடி கிளைச்செயலாளர் திரு.ஸ்ரீதர் தலைமை வகித்தார். துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு.தே.சுந்தர் துளிர் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசி காகிதக் கலைச் செயல்பாடுகளைச் செய்துகாட்டினார். மாவட்டப் பொருளாளர் திரு.சிவாஜி அறிவியல் இயக்கத்தின் பாடல்களைப் பாடினார். மாவட்டக் கருத்தாளர் திரு.வெங்கட்ராமன் குழந்தைகளுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்து காட்டினார். மாவட்டத் துணைச்செயலாளர் திரு.மு.தெய்வேந்திரன் தொகுத்து வழங்கினார்..நண்பர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.
Aug 8, 2011
பேரணி,மனிதச்சங்கிலி: தேனி கிளை
ஹிரோஷிமா நாகசாகி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி வட்டாரக் கிளையின் சார்பாக ஆகஸ்ட்,5,2011 காலை 11 மணிக்கு அன்னஞ்சி அரசுகள்ளர் உயர்நிலைப்பள்ளி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பேரணி மற்றும் மனிதச்சங்கிலி நடைபெற்றது. மக்களின் கவனத்தை ஈர்த்த இந்நிகழ்வில் 200க்கு மேற்பட்ட மாணவ,மாணவியர் பங்கேற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேனி வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு.ஜெயமணி மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் பங்கேற்றனர். கிளைத்தலைவர் மா.மகேஷ் கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் ஒருங்கிணைத்தனர்.
ஹிரோஷிமா தின கருத்தரங்கு,ஆண்டிபட்டி கிளை
ஆகஸ்ட் 5,2011 அன்று காலை 11.30 மணிக்கு
ஆண்டிபட்டி வட்டாரக் கிளையின் சார்பாக
ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
ஆதிக்கப்போரால் அதிர்ந்த உலகம் என்ற
தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு
உறுப்பினர் திருமிகு.மு.தியாகராஜன்
கருத்துரை வழங்கினார்.
மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர்
வெங்கட்ராமன் எளிய அறிவியல்
பரிசோதனைகள்
செய்து காட்டி பின்னர் விழுது இதழை
அறிமுகப்படுத்திப் பேசினார்.
பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர்,
ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கிளைச்செயலாளர் ஆர்.அம்மையப்பன்
துணைச்செயலாளர் ஜான்சன் ஒருங்கிணைத்தனர்.
சுமார் 400 மாணவியர் கலந்து கொண்டனர்.
பிற்பகலில் மேலப்பேட்டை இந்துநாடார்
உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்
அதே கருத்தரங்கம் நடைபெற்றது.
300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கலந்துகொண்டனர்.
ஆண்டிபட்டி வட்டாரக் கிளையின் சார்பாக
ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
ஆதிக்கப்போரால் அதிர்ந்த உலகம் என்ற
தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு
உறுப்பினர் திருமிகு.மு.தியாகராஜன்
கருத்துரை வழங்கினார்.
மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர்
வெங்கட்ராமன் எளிய அறிவியல்
பரிசோதனைகள்
செய்து காட்டி பின்னர் விழுது இதழை
அறிமுகப்படுத்திப் பேசினார்.
பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர்,
ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கிளைச்செயலாளர் ஆர்.அம்மையப்பன்
துணைச்செயலாளர் ஜான்சன் ஒருங்கிணைத்தனர்.
சுமார் 400 மாணவியர் கலந்து கொண்டனர்.
பிற்பகலில் மேலப்பேட்டை இந்துநாடார்
உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்
அதே கருத்தரங்கம் நடைபெற்றது.
300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)