தினத்தந்தி
கம்பம்,ஆகஸ்ட்,1,2011
தேனி மாவட்டம், கம்பம் நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 8-வது மாவட்ட மாநாடு மற்றும் குழந்தைகள் அறிவியல் திருவிழா ஏலவிவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார்.கிளைத்தலைவர் மா.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். துளிர் அறிவியல் மைய இயக்குனர் மு.தியாகராஜன்
தொடங்கிவைத்துப் பேசினார்.மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் செயலறிக்கை வாசித்தார்.மண்டலப் பொருளாளர் எஸ்.வெங்கடேஸ்வரி பொருளறிக்கை வாசித்தார். சர்வதேச வனவள ஆண்டு பற்றி கருத்தாளர் எஸ்.தினகரன் பேசினார்.மாநாட்டை வாழ்த்தி மொ.பாண்டியராஜன்,தலைமை ஆசிரியர் எஸ்.முருகேசன்,எஸ்.நந்தகோபால் ஆகியோர் பேசினர்.செ.சிவாஜி நன்றி கூறினார். குழந்தைகள் அறிவியல் திருவிழாவிற்கு ஸ்ரீராமன் தலைமை தாங்கினார்.கிளைச்செயலாளர் க.முத்துக்ண்ணன் வரவேற்றுப்பேசினார்.ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி முதல்வர் ஆர்.அனுசுயா அறிவியல் பாடத்தில்நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கினார்.அறிவியல் இயக்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.மோகனா,மதுரை காமராஜர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல்துறை பேராசிரியர்.எஸ்.கண்ணன்ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்,பதக்கங்கள் வழங்கினார்கள். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.புத்தக கண்காட்சி,பூமி வெப்பமயமாதல் படக்காட்சி போன்றவைகள் நடைபெற்றது.தேனி,போடி,பெரியகுளம்,ஆண்டிபட்டி,கம்பம் ஆகிய ஊர்களின் அறிவியல்இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..
No comments:
Post a Comment