முதல் பக்கம்

Aug 23, 2011

ஹிரோஷிமா-நாகசாகி நினைவுதினப் போட்டிகள்:மாணவர்களுக்கு அழைப்பு



தினமணி
கம்பம்,ஆக,8
 அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா-நாகசாகி 
நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 
மாணவர்களுக்குபல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது.
 அமெரிக்க ராணுவம் ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி
நகரங்கள் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதி மற்றும் 
9-ந் தேதியில் நடத்திய அணுகுண்டுத் தாக்குதல்களில் ஏராளமானோர்
உயிரிழந்தனர். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படாமல் இருக்க,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் அமைதிக்கே என்ற
முழக்கத்தை வெளியிட்டுள்ளது. அதை நினைவுகூறும் வகையில்,
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்ப்டுகின்றன.
போரின் பிடியில் பிஞ்சுகள் என்ற தலைப்பில் 6,7,8 வகுப்புகளுக்கு
ஓவியப் போட்டியும் 9முதல் 12ம் வகுப்பு வரை இதுபோல் துயரம் 
இனிமேல் வேண்டாம் என்ற தலைப்பில் 5 பக்கங்களுக்கு
மிகாமல் கட்டுரைப்போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு அன்னை பூமியில்
அமைதி தவழட்டும் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி(25 வரிகளுக்கு
மிகாமல்) ஆசிரியர்களுக்கு அணு ஆயுத போட்டியும் மானுடத்தின்
தலைக்குனிவும் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும்(5 பக்கங்களுக்கு
மிகாமல்) நடத்தப்படுகிறது. படைபுகளை ஆகஸ்ட் 19-க்குள் தே.சுந்தர்,
மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,குட்டியாபிள்ளை 
தெரு,கம்பம் என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் என மாவட்ட அறிவியல் 
இயக்கம் தெரிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment