தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 8வது மாவட்ட மாநாடு மற்றும் குழந்தைகள் அறிவியல் திருவிழா ஜுலை, 24ம் தேதி கம்பம், சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை வகித்தார்.ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். கம்பம் கிளைத்தலைவர் மா.சிவக்குமார் வரவேற்றார்.. மதுரை துளிர் அறிவியல் மையத்தின் இயக்குனர் திரு.மு.தியாகராஜன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் திரு.தே.சுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான வேலையறிக்கை மற்றும் பொருளறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். அதனைத்தொடர்ந்து அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.
முனைவர்.முகமது ஷெரிப்,முனைவர்.செல்வராஜ்,மு.தெய்வேந்திரன், அ.சதீஷ்,க.முத்துக்கண்ணன், ஆர்.அம்மையப்பன், எஸ்.மனோகரன், ஓவியா தனசேகரன், எஸ்.காளிதாஸ்,எஸ்.சேசுராஜ் உள்ளிட்ட நண்பர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் விவாதத்தின் மீதான தொகுப்புரை வழங்கினார்.. பின்னர், புதிய பொதுக்குழு,செயற்குழு,நிர்வாக குழு தேர்வு நடைபெற்றது. புதிய மாவட்டத்தலைவராக பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளராக தே.சுந்தர், மாவட்டப் பொருளாளராக செ.சிவாஜி ஆகியோரும் துணைத்தலைவர்களாக முனைவர்.மு.முகமது ஸெரீப், முனைவர்.ஜி.செல்வராஜ், முனைவர்.சி.கோபி ஆகியோரும் துணைச் செயலாளர்களாக ஹ.ஸ்ரீராமன்,கருணாநிதி,மு.தெய்வேந்திரன் ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.. புதிய நிர்வாகிகளுக்கு எழுத்தாளர் மொ.பாண்டியராஜன்,சி.பி.யூ.மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் துணைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் நன்றி கூறினார்.
பிற்பகல் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் திருவிழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் தலைமை வகித்தார். கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்ண்ணன் வரவேற்றார். கடந்த மார்ச்,2011 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த சுமார் 150 மாணவர்களுக்கு கம்பம் ஸ்ரீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர்.ஆர்.அனுசுயா சான்றிதழ்கள் வழங்கினார். வானியல் அற்புதங்கள் குறித்து கருத்துரை வழங்கிய பேரா.எஸ்.மோகனா வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்திப்பேசினார். முனைவர்.எஸ்.கண்ணன் சாதனை மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து வாழ்த்திப் பேசினார். இணை அமர்வுகளில் பல்லுயிரியம் குறித்து முனைவர்.ஜி.செல்வராஜ் அன்றாட வாழ்வில் வேதியியல் குறித்து முனைவர்.எஸ்.இராமநாதன் கணக்கும் இனிக்கும் தலைப்பில் வி.வெங்கட்ராமன் கருத்துரை வழங்கினர். எளிய அறிவியல் பரிசோதனைகளை பெ.ஆண்டவர்,காகிதக் கலைப் பயிற்சிகளை ஆர்.ராஜ்குமார் செய்துகாட்டினர்.. திண்டுக்கல் எம்.வீரையா குழந்தைகளுக்கான மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளைச் செய்துகாட்டி அறிவியல் விளக்கங்களையும் கூறினார். தொலைநோக்கியின் செயல்பாடுகள் பற்றி மதுரை இல.நாராயணசாமி விளக்கிக்கூறினார்..கம்பம் கிளைப் பொருளாளர் ஓவியா தனசேகரன் நன்றி கூறினார்.. மாவட்ட முழுவதுமிருந்தும் அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் தொண்டர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் என சுமார் 550க்கும் மேற்பபட்டோர் கலந்துகொண்டனர்..
-சுந்தர்.காலையில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை வகித்தார்.ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். கம்பம் கிளைத்தலைவர் மா.சிவக்குமார் வரவேற்றார்.. மதுரை துளிர் அறிவியல் மையத்தின் இயக்குனர் திரு.மு.தியாகராஜன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் திரு.தே.சுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான வேலையறிக்கை மற்றும் பொருளறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். அதனைத்தொடர்ந்து அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.
முனைவர்.முகமது ஷெரிப்,முனைவர்.செல்வராஜ்,மு.தெய்வேந்திரன், அ.சதீஷ்,க.முத்துக்கண்ணன், ஆர்.அம்மையப்பன், எஸ்.மனோகரன், ஓவியா தனசேகரன், எஸ்.காளிதாஸ்,எஸ்.சேசுராஜ் உள்ளிட்ட நண்பர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் விவாதத்தின் மீதான தொகுப்புரை வழங்கினார்.. பின்னர், புதிய பொதுக்குழு,செயற்குழு,நிர்வாக குழு தேர்வு நடைபெற்றது. புதிய மாவட்டத்தலைவராக பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளராக தே.சுந்தர், மாவட்டப் பொருளாளராக செ.சிவாஜி ஆகியோரும் துணைத்தலைவர்களாக முனைவர்.மு.முகமது ஸெரீப், முனைவர்.ஜி.செல்வராஜ், முனைவர்.சி.கோபி ஆகியோரும் துணைச் செயலாளர்களாக ஹ.ஸ்ரீராமன்,கருணாநிதி,மு.தெய்வேந்திரன் ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.. புதிய நிர்வாகிகளுக்கு எழுத்தாளர் மொ.பாண்டியராஜன்,சி.பி.யூ.மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் துணைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் நன்றி கூறினார்.
பிற்பகல் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் திருவிழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் தலைமை வகித்தார். கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்ண்ணன் வரவேற்றார். கடந்த மார்ச்,2011 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த சுமார் 150 மாணவர்களுக்கு கம்பம் ஸ்ரீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர்.ஆர்.அனுசுயா சான்றிதழ்கள் வழங்கினார். வானியல் அற்புதங்கள் குறித்து கருத்துரை வழங்கிய பேரா.எஸ்.மோகனா வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்திப்பேசினார். முனைவர்.எஸ்.கண்ணன் சாதனை மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து வாழ்த்திப் பேசினார். இணை அமர்வுகளில் பல்லுயிரியம் குறித்து முனைவர்.ஜி.செல்வராஜ் அன்றாட வாழ்வில் வேதியியல் குறித்து முனைவர்.எஸ்.இராமநாதன் கணக்கும் இனிக்கும் தலைப்பில் வி.வெங்கட்ராமன் கருத்துரை வழங்கினர். எளிய அறிவியல் பரிசோதனைகளை பெ.ஆண்டவர்,காகிதக் கலைப் பயிற்சிகளை ஆர்.ராஜ்குமார் செய்துகாட்டினர்.. திண்டுக்கல் எம்.வீரையா குழந்தைகளுக்கான மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளைச் செய்துகாட்டி அறிவியல் விளக்கங்களையும் கூறினார். தொலைநோக்கியின் செயல்பாடுகள் பற்றி மதுரை இல.நாராயணசாமி விளக்கிக்கூறினார்..கம்பம் கிளைப் பொருளாளர் ஓவியா தனசேகரன் நன்றி கூறினார்.. மாவட்ட முழுவதுமிருந்தும் அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் தொண்டர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் என சுமார் 550க்கும் மேற்பபட்டோர் கலந்துகொண்டனர்..
No comments:
Post a Comment