தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி கிளையின் சார்பில் ஆகஸ்ட்,21,2011 அன்று இஸ்லாமிய மாணவர்களின் உண்டு உறைவிடப் பள்ளியில் ரைட் சகோதரர்கள், ஐசக் நியூட்டன் துளிர் இல்லங்களின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் வரவேற்றார். கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் தலைமையில் துவங்கியது. கிளைப்பொருளாளர் அ.சதீஸ் துளிர் இல்லச் செயல்பாடுகள் குறித்த அறிமுக உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றி விளக்கி பின்னர் மாணவர்களுக்கு எளிய குழு விளையாட்டுகள் மற்றும் ஓரிகாமி பயிற்சி அளித்தார்.மாவட்டக் கருத்தாளர் வி.வெங்கட்ராமன் நிறைவாகப் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சேசுராஜ் நன்றி கூறினார்.சுமார் 50மாணவர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment