முதல் பக்கம்

Aug 27, 2011

மாவட்டச் செயற்குழு கூட்டம்


 ஆகஸ்ட்,6,2011 அன்று தேனி,அல்லிநகரம் நகராட்சி துவக்கப்
பள்ளியில் தேனி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர்
பா.செந்தில் குமரன் தலைமை வகித்தார். மாவட்ட மாநாடு
குறித்த பரிசீலனை,மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு,
ஹிரோஷிமா,நாகசாகி தின நிகழ்வுகள், தேசிய குழந்தைகள்
அறிவியல் மாநாட்டு பணிகள், வேலைப் பகிர்வுகள் ஆகியவை
குறித்து விவாதிக்கப்பட்டது.
  தேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 8வது
மாவட்ட மாநாடு குறித்த கருத்துகளை சதீஸ்,அம்மையப்பன்,
சிவாஜி,பேரா.எஸ்.மோகனா உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஒரு
மாநில மாநாட்டிற்கான தன்மையோடு நடைபெற்றதாக சில
நண்பர்கள் தெரிவித்தனர்.மாநாடு சிறப்பாக நடைபெற உழைத்த
கம்பம் கிளை நண்பர்கள் க.முத்துக்கண்ணன், வெங்கட்ராமன்,
மா.சிவக்குமார் மற்றும் முனைவர்.எஸ்.கண்ணன்,ஹ.ஸ்ரீராமன்,
தே.சுந்தர் ஆகியோருக்கு மாவட்டச் செயற்குழுவின் சார்பில்
பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. மாநாட்டின் போது சிறப்பாக
பக்களித்த அனைத்து கிளை பொறுப்பாளர்களுக்கும் நன்றிகள்
தெரிவிக்கப்பட்டது.
 16வது மாநில மாநாடு,பிரதிநிகள் தேர்வுக்கான முன்மொழிவு,
மாவட்டத்தில் நடைபெற்ற பணிகள், தேசிய குழந்தைகள்
அறிவியல் மாநாட்டிற்காக செய்ய வேண்டியவை குறித்து விரிவாக
மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் பேசினார். கிளைச் செயல்பாடுகள்
குறித்து கிளைப் பொறுப்பாளர்கள் ஆர்.அம்மையப்பன், பெ.ஆண்டவர்,
க.முத்துக்கண்ணன்,மு.தெய்வேந்திரன் ஆகியோர் பேசினார்கள்.
 தே.சுந்தர்,பா.செந்தில்குமரன்,செ.சிவாஜி,ஹ.ஸ்ரீராமன், முனைவர்.ஜி.
செல்வராஜ் ஆகியோரை புதிய மாநிலப் பொதுக்குழுவிற்கு பரிந்துரை
செய்வதென முடிவு செய்யப்பட்டது.
  வெளியீடுகள் உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக
ஹ.ஸ்ரீராமனும், கல்வி உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக
வி.வெங்கட்ராமனும் அறிவியல் பிரச்சார உபகுழுவின் மாவட்ட
ஒருங்கிணைப்பாளராக தே.சுந்தர் ஆகியோர் செயல்படுவதென
ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தின்
இணையதள வலைப்பக்கமான www.tnsftheni.blogspot.com-ஐ தொடர்ந்து
புதுப்பிக்கும் பொறுப்பையும் திரு.ஸ்ரீராமன் கவனிப்பதென முடிவெடுக்கப்
பட்டது. மாவட்டப் பொருளாளர் செ.சிவாஜி நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment