தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16வது
மாநில மாநாடு கடந்த ஆகஸ்ட்,12ம் தேதி
மாலை திருநெல்வேலி வானவில் மண்டபத்தில்
துவங்கியது..
துவக்க நிகழ்ச்சியாக கல்வி உரிமைக் கருத்தரங்கம்
பேரா.என்.மணி தலைமையில் நடைபெற்றது.
திரு.அமலராஜன் முன்னிலை வகிக்க மாநிலச்
செயலாளர் திரு.எஸ்.சுப்ரமணி வரவேற்றுப் பேசினார்.
பட்டாசுத் தொழிற்சாலைகள், ஜவுளிக்கடைகள்,
பணிமனைகள் எனப் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்ற குழந்தைத்தொழிலாளர்களையும்
பேருந்து நிலையங்களிலும்,தெருவோரங்களிலும்
தேசத்தின் திசையெங்கும் தினப்பாட்டிற்கே
திண்டாடி பிச்சைக்காரர்களாக திரிகின்ற கோடிக்
கணக்காண குழந்தைகளையும் பள்ளிகளை நோக்கி
அழைத்து வருவதன் மூலமே கல்வி உரிமைச் சட்டம்
முழுமையடையும் என முனைவர்.ஆர்.இராமானுஜம்
தனது கருத்துரையில் கூறினார்..
எல்லாவற்றையும் கைபற்றிய தனியார்மயத்தின்
ஆக்டோபஸ் கரங்கள் கல்வியையும் விட்டுவைக்காத
கொடுமையை விளக்கினார் பேரா.பொ.இராஜமாணிக்கம்.
பாரதத்தாயின் எல்லா உறுப்புக்களையும் விற்றுவிட்ட
ஆட்சியாளர்கள் கல்வியையும் தனியாருக்கு
தாரைவார்த்து மூச்சையும் நிறுத்திய அவலத்தையும்
எடுத்துரைதார்.
சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தின் அறிவியல் பூர்வமான பங்களிப்பையும்
தொடர்முயற்ச்சிகளையும் பாராட்டிப்பேசினார் கல்வியாளர்
பிரின்ஸ் கஜேந்திரபாபு.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும்
தீர்மானிக்கின்ற கருவியாக,அனைத்துத் தரப்பினரும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அறிவியல் இயக்கத்தின்
சமச்சீர் கல்வி ஆய்வறிக்கை நடுநிலைத்தன்மையுடன்
இருந்ததை எடுத்துரைத்து சமச்சீர் கல்வி அமலாக்கம் குறித்து
தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பாகவும் அறிவியல்
இயக்கம் செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து எனக்கில்லையா கல்வி? குறும்படம்
குறித்த விவாதமேடை நடைபெற்றது.. திரைப்பட இயக்குனர்
பாரதி கிருஸ்ணகுமார் கலந்துகொண்டு கல்விகுறித்து
சிறப்பான உரையாற்றினார்..அதனையடுத்த இரண்டு நாட்களும்
திரளான பிரதிநிதிகளின் பங்கேற்போடு மாநாட்டு நிகழ்வுகள்
நடந்தேறின..
மாநாட்டின் முடிவில் புதிய மாநிலத்தலைவராக பேரா.என்.மணி
பொதுச்செயலாளராக எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், பொருளாளராக
எம்.இராதா தேர்வுசெய்யப்பட்டனர்.
நமது தேனி மாவட்டத்திலிருந்து செந்தில்குமரன்,ஸ்ரீராமன்,
சிவாஜி,சேசுராஜ்,அம்மையப்பன்,தெய்வேந்திரன்,முத்துக்கண்ணன்,
வெங்கட்ராமன், தனசேகரன்,சுந்தர் உள்ளிட்ட பத்து பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.அனைவருக்கும் நன்றிகள்..வாழ்த்துகள்..
அன்புடன் தே.சுந்தர்..
No comments:
Post a Comment