தமிழ்நாடு அறிவியல் இயக்கம், போடி கிளையின் சார்பில் போடி மீனாட்சிபுரம் கிராமத்தில் கல்பனா சாவ்லா துளிர் இல்லத்தின் துவக்கவிழா கடந்த ஆகஸ்ட்,15ம் தேதி நடைபெற்றது. போடி கிளைச்செயலாளர் திரு.ஸ்ரீதர் தலைமை வகித்தார். துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு.தே.சுந்தர் துளிர் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசி காகிதக் கலைச் செயல்பாடுகளைச் செய்துகாட்டினார். மாவட்டப் பொருளாளர் திரு.சிவாஜி அறிவியல் இயக்கத்தின் பாடல்களைப் பாடினார். மாவட்டக் கருத்தாளர் திரு.வெங்கட்ராமன் குழந்தைகளுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்து காட்டினார். மாவட்டத் துணைச்செயலாளர் திரு.மு.தெய்வேந்திரன் தொகுத்து வழங்கினார்..நண்பர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment