முதல் பக்கம்

Mar 31, 2012

கிளைக்கூட்டம், தேனி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி ஒன்றியக்கிளைக்கூட்டம் இன்று-மார்ச்,31- மாலை தேனியில் புதுவிதமாக தேநீர் விருந்துடன் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு, மாவட்டச் செயற்குழு முடிவுகள், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வுகள், புதிய ஆர்வலர்களைக் கொண்டுவருதல் மற்றும் உலகப் புத்தக தினம் நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.. செயலாளர் மு.தெய்வேந்திரன், பொருளாளர் அ.சதீஷ் மற்றும் ஜெயமுருகன், சேசுராஜ், முகமது ஆசிக் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்..
-தகவல்: தெய்வேந்திரன்

Mar 30, 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போடி ஒன்றியக்கிளைக் கூட்டம்

இன்று -மார்ச்,30- மாலை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போடி ஒன்றியக்கிளைக் கூட்டம் போடி-தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு முடிவுகள், மாநிலச் செயற்குழு, தொண்டர்கள் பயிற்சி முகாம், உலக புத்தக தின ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிளைத்தலைவர் காளிதாஸ், செயலாளர் ப.ஸ்ரீதர் மற்றும் பேரா.ஆர்.பாண்டி, எஸ்.சிவாஜி, மு.தெய்வேந்திரன் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.

--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

கிளைச் செயற்குழு-பெரியகுளம்

இன்று -மார்ச்,27-மாலை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளையின் செயற்குழுக் கூட்டம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் எஸ்.ராம்சங்கர், பொருளாளர் பெ.ஆண்டவர் மற்றும் கிளை நண்பர்கள் செல்வராஜ், இரமேஷ், நவநீதன், ஜெயராமன் ஆகியோரும் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திறனறிதல் போட்டி பாராட்டுவிழா, கிளை நிதி மேம்பாடு, சுய உதவிக்குழுக்கள் துவங்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Mar 25, 2012

தேசிய அறிவியல் தினம்-மாநில அளவில் போட்டி முடிவுகள் அறிவிப்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பிப்ரவரி,28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.. தேனி மாவட்டம் முழுவதுமிருந்து 24 பள்ளிகள் மற்றும் 7 கல்லூரிகளைச் சேர்ந்த 290 பேர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் ஐந்து படைப்புகளும் ஆசிரியர்கள்/ ஆர்வலர்கள்/ பெண்களுக்கான போட்டிகளில் முதல் மூன்று படைப்புகளும் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன. மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் எஸ்.இராம்சங்கர், க.முத்துக்கண்ணன்  ஆகியோர் மாவட்ட அளவிலான போட்டிகளை ஒருங்கிணைத்தனர்..

மாநில அளவில் போட்டி முடிவுகள்:

மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தர்மபுரி, வடசென்னை, தென்சென்னை, தேனி உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 5000 பேர் கலந்துகொண்ட அறிவியல் தினப்போட்டி படைப்புகளுக்கான மதிப்பீடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது. மாநில அளவில் தேர்வானவர்கள் பற்றிய விபரம் பின்வருமாறு:

6,7,8 மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

பெயர்
பெற்ற இடம்
வகுப்பு
பள்ளி
மாவட்டம்
பா.தேவிபாலா
முதல் இடம்
7
டிரையம்ப் நடுநிலைப்பள்ளி,
பெரியகுளம்
தேனி மாவட்டம்

பி.அமிர்தவள்ளி
இரண்டாம் இடம்
8
தேவி மெட்ரிக்குலேசன் பள்ளி, பழனி
திண்டுக்கல்

த.நிதர்ஷனா
மூன்றாம் இடம்
7
மாண்ட்போர்டு பள்ளி
காட்டூர்
திருச்சி
94860 65722

சி.ஆனந்தராஜ்
நான்காம் இடம்
7
ஊராட்சி ஒன்றிய ந.பள்ளி, சருத்துப்பட்டி
தேனி மாவட்டம்

கே.பிரியதர்ஷன்
ஐந்தாம் இடம்
8
பெல் மெட்ரிக்.பள்ளி
கைலாசபுரம்
திருச்சி
0431-2552620









9,10,11,12 மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி

பெயர்
பெற்ற இடம்
வகுப்பு
பள்ளி
மாவட்டம்
எம்.ஹரி
முதல் இடம்
12
ஜோதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி,இளம்பிள்ளை
சேலம் மாவட்டம்
88252 99244
பி.பிரீத்தி
இரண்டாம் இடம்
11
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கலசபாக்கம்
திருவண்ணாமலை
சி.சௌந்தர்யா
மூன்றாம் இடம்
10
அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி,வையம்பட்டி
திருச்சி
97880 40128
ஈ.ஹரிணி
நான்காம் இடம்
9
பெல் மெட்ரிக். பள்ளி கைலாசபுரம்
திருச்சி
0431-2552620
டி.கலையரசி
ஐந்தாம் இடம்
11
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கலசபாக்கம்
திருவண்ணாமலை




கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி

பெயர்
பெற்ற இடம்
வகுப்பு
நிறுவனம்
மாவட்டம்
ச.கார்த்திகேயன்
முதல் இடம்
பி.எட்.
வி.பி.ஆர்.கல்வியியல் கல்லூரி,கோடாங்கிபட்டி
தேனி மாவட்டம்
99658 80364
ஜெ.சங்கீதா
இரண்டாம் இடம்
பி.எட்.
மதர் தெரசா கல்வியியல் கல்லூரி, பழனி
திண்டுக்கல்
ச.ஆர்த்தி
மூன்றாம் இடம்
பி.எட்.
சௌராஷ்ட்ரா கல்வியியல் கல்லூரி
வீரபாண்டி
தேனி மாவட்டம்
81484 61015
பி.மகாலட்சுமி
நான்காம் இடம்
பி.எஸ்.சி.
கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி, சிவபுரம்
புதுக்கோட்டை
94423 89027
கே.ஹசினா நஹத்
ஐந்தாம் இடம்
பி.எஸ்.சி.
ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, கம்பம்
தேனி மாவட்டம்


ஆசிரியர்/ஆர்வலர்களுக்கான சிறுகதைப்போட்டி

பெயர்
 பெற்ற இடம்
பணி
நிறுவனம்
மாவட்டம்
செ.லிபினா ஹென்சி
முதல் இடம்
ஆசிரியர்
ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி
திருக்கோகரணம்
புதுக்கோட்டை
மாவட்டம்
எஸ்.மாலதி
இரண்டாம் இடம்
ஆர்வலர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
சேலம் மாவட்டம்
81487 77077
எம்.பி.புதியவன்
மூன்றாம் இடம்
ஆசிரியர்
அரசு கள்ளர் மேல்நிலை
பள்ளி, உத்.புரம், கம்பம்
தேனி மாவட்டம்
99420 80277

சுய உதவிப் பெண்களுக்கான சொலவடைப் போட்டி

பெயர்
பெற்ற இடம்
பணி
குழு
மாவட்டம்
என்.நிர்மலா
முதல் இடம்
உறுப்பினர்
லிங்கபைரவி சுய உதவிக்குழு
ஊஞ்சக்காடு
விருதுநகர் மாவட்டம்
ச.உமாவதி
இரண்டாம் இடம்
உறுப்பினர்
கிராம விடியல் சுய உதவிக்குழு
பெரியகுளம்
தேனி மாவட்டம்


அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. தங்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் விரைவில் மாவட்ட அமைப்புகளின் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தேசிய அறிவியல் தினப்போட்டிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சேதுராமன் (மாநிலச் செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) தெரிவித்துள்ளார்.
-தே.சுந்தர், மாவட்டச் செயலாளர், த.அ.இ., தேனி மாவட்டம்

துளிர் இல்லக் குழந்தைகளின் கனவு-படைப்பிதழ் வெளியீடு

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் கிளையின் சார்பில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லக்குழந்தைகளின் கனவு-படைப்பிதழ் இன்று-மார்ச்,25,2012-வெளியிடப்பட்டது. கிளைத்தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். துளிர் இல்ல மாணவர் பூபேஸ் கண்ணன் வரவேற்றார். கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன், துளிர் இல்ல மாணவர் பொ.சுரேந்தர் ஆகியோர்  இதழின் நோக்கம் பற்றி பேசினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் படிப்பும் படைப்பும் என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். மாவட்டக்கருத்தாளர் அ.செல்வன் இதழை வெளியிட்டார். மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர் சி.பிரகலாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முரளி, இராஜேஷ், இராஜ்குமார், இராஜசேகர், சுரேஷ்கண்ணன், பாஸ்கர் உள்ளிட்ட நண்பர்களும் 30 மாணவர்களும் கலந்துகொண்டனர். மாணவர் க.அஜித்குமார் நன்றி கூறினார். மாணவர் க.தினேஷ்குமார் தொகுத்து வழங்கினார்.

--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Mar 24, 2012

துளிர் இல்லக் குழந்தைகள் வாசிப்பு முகாம்


மார்ச்,23,2012 அன்று காலை முதல் மாலை வரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், போடி ஒன்றியக்கிளையின் சார்பில் துளிர் இல்லக்குழந்தைகளுக்கான வாசிப்பு முகாம் சூலப்புரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மீனாட்சிபுரம், சிலமலை மற்றும் சூலப்புரம் ஆகிய மூன்று கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட துளிர் இல்லக் குழந்தைகள் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்க மாவட்ட துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் குழந்தைகளுக்கான சில கதைகளைச் சொல்லி துவக்கவுரையாற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்துகாட்டினார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் குழந்தைகளுக்கான செயல்பாடுகளைச் செய்தார். குழந்தைகள் தனித்தனியாகவும் பின்னர் குழுக்களாகவும் புத்தகங்களை வாசித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். சுவாரசியமான சில படங்களும் திரையிடப்பட்டன. துளிர் இல்ல மாநில ஒருங்கிணைப்பாளர் அ.அமலராஜன் நிறைவுரையாற்றினார். போடி ஒன்றியக்கிளைச் செயலாளர் ப.ஸ்ரீதர் நன்றி கூறினார். மாவட்டப்பொருளாளர் எஸ்.சிவாஜி, நாகராஜ், பாண்டி உள்ளிட்ட நண்பர்களும் கலந்துகொண்டனர்.


--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Mar 21, 2012

நான் படிச்ச புத்தகம்-2


மகளிர் தின வாழ்த்துச்சொல்லி அறிவியல் இயக்க நண்பர் ஒருவர் புத்தகம் ஒன்றை பரிசளித்தார். எங்களது பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் மட்டுமில்லாமல் பயிற்சி ஆசிரியைகளுக்கும் வழங்கப்பட்ட அந்தப் புத்தகத்தின் தலைப்பு.. நமக்கான குடும்பம்!

தலைப்பே ஆர்வத்தைத் தூண்ட, சரி நமக்கான குடும்பத்தில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள், பார்ப்போம் என முதல் பக்கத்தினை திருப்பினேன். ஆரம்பமே அமர்க்களம்.. ஒரு ஆண் எதற்காக திருமணம் செய்து கொள்கிறான்? ஒரு பெண் எதற்காக திருமணம் செய்து கொள்கிறாள்? என்ற கேள்விகள் மேலும் ஆர்வத்தைத் தூண்ட வேகம் கூடியது.. தமிழகம் அறிந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் இந்த புத்தகத்தினை படிக்கவும் முடிக்கவும் நாம் திட்டமிடத் தேவையில்லை. முடித்தபிறகுதான் நம்மால் வைக்கவே முடியும்..

நாம் பெண்களாய் பொறந்துவிட்டோம்.. இப்படித்தான் இருக்கவேண்டும்-என பெண்களே ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று? என்ற ஆசிரியரின் கேள்வி நம்மை இன்னும் விரைவாகப் படிக்கச் செய்கிறது. சிந்திக்க தூண்டுகிறது.. ஒவ்வொரு மதமும் கூட பெண்கள் ஆணுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதை நியாயப்படுத்துவதை எண்ணும்போது நம்முள் எழுகின்ற கோபத்திற்கு அணைபோட முடியவில்லைதான்..

நாடாளுமன்றத்திற்கு முதன்முதலாக ஒரு பிரெஞ்ச்ப் பெண் போட்டியிடுகிறார். அவரை அந்தச் சமூகம் பழித்தது. ஒரு பெண் எப்படி அரசியல் வேலை செய்யமுடியும்? என்று ஏசினர். அந்தப்பெண் அமைதியாகக் கேட்டார். பெண்ணாக நான் பயன்படுத்த முடியாத ஆணின் எந்த உறுப்பைக் கொண்டு அரசியல் வேலை நடக்கிறது என்பதை விளக்குங்கள்.. நான் ஒதுங்கிக் கொள்கிறேன்..- இக்கேள்வி பிரெஞ்சு சமூகத்திற்கு மட்டுமல்ல, பெண் என்பவள் ஆண்களுக்குப் பிறகுதான் என்று எண்ணுகின்ற அத்தனை ஆண்களுக்கும் ஒரு சவுக்கடியாக இருந்திருக்கும் என்பதை நாம் இந்த இடத்தில் விளக்கவேண்டியதில்லை..

ஒரு பெண் திருமணம் என்று வரும்போது வரதட்சனையோடு வந்தால் மட்டுமே விரும்பப்படுபவளாக மாறுவது எதனால்? ஆணுக்குச் சமமாக பல சமயம் கூடுதலாகவே பெண் படித்து வேலைக்குப் போய் சம்பாத்தியம் செய்தாலும் பெண்ணுக்கே உரிய கடமைகளில் இருந்து விடுதலையே இல்லை.. ஏன்? இப்படி இந்தப் புத்தகம் முழுவதும் நிறைந்துகிடக்கும் கேள்விகள் நம் மண்டைக்குள் வண்டு நுழைந்தது போல குடைந்துகொண்டே இருக்கின்றன.. நீங்களும் அவசியம் படியுங்கள்! படிக்கச் செய்யுங்கள்!! (பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.. விலை.ரூ.5 மட்டுமே..)
-பிரியா

நான் படிச்ச புத்தகம்-1


சமீபத்தில் ஒரு புத்தகம் வாசித்தேன்.. எடுத்தவுடன் உள்ளடக்கத்தினை பார்த்தேன்.. வித்தியாசமாக இருந்தது. நோஞ்சானும் புத்தகமும்-இது முதல் தலைப்பு. அடுத்து அடிமைக்குழந்தை, அதிக பிரசங்கி, நேரக்கஞ்சன், வெண்டைக்காய்ப் பிரியன் இப்படி பத்து தலைப்புகள்..

சரி, அந்த நோஞ்சான் யாரெனப் பார்ப்போம் என அதைப் படித்தேன். வேறு யாருமல்ல, நம்ம நியூட்டன் தான். புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்து சொன்னார் அல்லவா, அதே நியூட்டன். மிக நோஞ்சானாக இருந்த அவர் ஒருநாள் தன்னிடம் வம்பிழுத்த முரட்டுப்பையனை ஒரே அடியில் நிலைகுலையச் செய்து பள்ளி முழுவதும் கதாநாயகனாக அறிமுகமாகிறார். புத்தகங்களில் இன்று எதை வாசித்தோம், நாளை எதை வாசிக்கவேண்டும் எனக் குறிப்பெடுத்து படிக்கும் பழக்கம் அவருக்கு சிறுவயதிலேயே இருந்ததை அறியும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வகுப்பறையில் குழந்தைகளின் தோற்றம் மற்றும் உடலமைப்பை வைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது என்ற சிந்தனையும் நம்முள் எழுகிறது.

அடிமைக்குழந்தை என்ற தலைப்பில் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற விஞ்ஞானியின் கதையைப் படித்தபோது பிறப்பு தரித்தரமானாலும் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அவரைச் சொல்லலாம் எனத்தோன்றியது. உருவ அமைப்பினைக் காரணமாகக் காட்டி அவருக்கு கல்லூரியில் சேர்க்கை மறுக்கப்பட்ட தகவல் நம்மைக் கலங்க வைக்கிறது.

அதிகப் பிரசங்கி என்ற தலைப்பில் ஒரு கதை. டிஸ்லெக்சியா என்ற நோயால் கற்றலில் பின்தங்கிய ஒரு சிறுவன். ஆசிரியர்களால் மக்கு, மரமண்டை எனத் துரத்தப்பட்ட அந்தச் சிறுவன்தான் இன்று உலகமே போற்றுகின்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். என்னே நம் கல்விக்கூடங்களின் தொலைநோக்குப் பார்வை! கணிப்பு!

இப்படி நேரக்கஞ்சனாக விளங்கிய பெஞ்சமின் பிராங்ளின், ஐந்து வயது வரை பேச்சு வராத குழந்தையாக இருந்து பின்னாளில் கணிதமேதையாக திகழ்ந்த சீனிவாச இராமானுஜம்-இப்படி பத்து விஞ்ஞானிகளின் கதைகளை குழந்தைகள், ஏன் ஆசிரியர்களும் கூட விரும்பிப் படிக்கும் வகையில் வெளிவந்துள்ள புத்தகம் இளம் பருவத்தில் விஞ்ஞானிகள். 

இந்தப் புத்தகத்தினை வாசித்து முடிக்கும் போது முயற்சி தவறினாலும் நாம் ஒருபோதும் முயற்சிக்கத் தவறக்கூடாது என்ற உத்வேகம் நமக்குள் நிச்சயம் உருவாகும். எழுத்தாளர்.மொ.பாண்டியராஜன் அவர்களால் மிக அருமையாக எழுதப்பட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
-பிரியா