முதல் பக்கம்

Mar 4, 2012

மண்டல துளிர் இல்ல பயிற்சி முகாம்கள்-பரிசீலனைக் கூட்டம்

இன்று (மார்ச்,4-ஞாயிற்றுக்கிழமை)தேனி மாவட்டம் கம்பத்தில்,  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள மண்டல மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சிகள் பற்றிய பரிசீலனைக்கூட்டம் நடந்தது. தென்மண்டல பயிற்சி முகாம் தேனியிலும் கிழக்கு மண்டல பயிற்சி முகாம் சென்னையிலும் வடக்கு மண்டல பயிற்சி முகாம் தஞ்சையிலும் நடந்து முடிந்துள்ளது. அனைத்து பயிற்சிகளும் மிகச்சிறப்பாக நடைபெற்றதாகவும் மொத்தம் மாவட்டங்கள் பங்கேற்றதாகவும் கருத்தாளர்கள் தெரிவித்தனர். 

அதன் விளைவாக தேனி, விருதுநகர், மதுரை, ஈரோடு, தஞ்சை, நெல்லை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் புதிதாக நிறைய துளிர் இல்லங்கள் துவங்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் விரைவில் பதிவுசெய்யப்படவேண்டும். மதுரை, நெல்லை மற்றும் விருதுநகரில் மாவட்ட அளவிலான பயிற்சிமுகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. வாய்ப்புள்ள மாவட்டங்கள் உடனடியாக பயிற்சிகளைத் திட்டமிடவேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்கள் பற்றிய விபரங்களை மாவட்டச் செயலாளர்கள் மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளருக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.. 

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பரவலாக துளிர் இல்லங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. துளிர் இல்ல அனுபவங்களை துளிர் இதழுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அறிவியல் இயக்கத்தின் குழந்தைகளுக்கான அனைத்து நிகழ்வுகளிலும் துளிர் இல்ல குழந்தைகளைப் பங்கேற்கச் செய்யவேண்டும். துளிர் இல்ல குழந்தைகளை ஒருங்கிணைப்பதற்கென கிளைகள், மாவட்டம், மண்டலம், மாநிலம் என பல்வேறு நிலைகளில் நிகழ்ச்சிகளைத் திட்டமிடவேண்டும் ஆகியன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. 

கூட்டத்தில் அறிவியல் இயக்க மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன், மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் அ.அமலராஜன், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன், கருத்தாளர்கள் மொ.பாண்டியராஜன், இல.நாராயணசாமி, தேனி மாவட்டச்செயலாளர் தே.சுந்தர், மதுரை.காமேஷ், தேனி மாவட்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் க.முத்துக்கண்ணன், நெல்லை.கணேஷ் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.

--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

No comments:

Post a Comment