தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - மதுரை மாநகர் கிளையும் தீபம் மகளிர்
மேம்பாட்டு இயக்கமும் இணைந்து சர்வதேச மகளிர் தினவிழாவை நடத்தியது. விழாவிற்கு டாக்டர் எழில் மாநகர் கிளைத் தலைவர் தலைமை தாங்கினார். தீபம் மாவட்டத் தலைவர் முத்துலட்சுமி அவர்கள் முன்னிலை வகித்தார். 108வது சர்வதேச பெண்கள் தினத்தை அறிமுகப்படுத்தி மாவட்ட தீபம் ஆலோசகர் பிரேமலதா அறிமுக உரை நிகழ்தினார். அதைத் தொடர்ந்து கூடு வாசிப்பரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சாலைச் செல்வம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். தீபம் மாவட்டச் செயலாளர் பத்மா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக மாநகர் கிளை உறுப்பினர் வஜிஹா நன்றி கூறினார். முன்னதாக மாநகர் கிளை பொருளாளர் வெண்ணிலா விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவிற்கான ஏற்பாட்டை மாநகர் செயலாளர் பாண்டியராஜன் மற்றும் நாராயணன், தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI
No comments:
Post a Comment