முதல் பக்கம்

Mar 20, 2012

நாட்டுநலப்பணித்திட்டமுகாமில் கருத்தரங்கம்


உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியின் சார்பில் எரசக்கநாயக்கனூரில் நடைபெற்ற நாட்டுநலப்பணித்திட்ட முகாமில் மார்ச்,20 அன்று மாலை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திறந்தவெளிக் கருத்தரங்கம் நடந்தது. அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் முனைவர்.மு.முகமது ஷெரீப் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் முகமது பாத்துமா வரவேற்றார். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் ஓவியாதனசேகரன் அறிவியலும் அன்றாட வாழ்வும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அறிவியல் இயக்க மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் அறிவியல் மனப்பான்மை குறித்துப் பேசினார். கல்லூரி மாணவியர், பள்ளிக்குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திட்ட அலுவலர் ஹபீப்ராணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment