தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பிப்ரவரி,28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.. தேனி மாவட்டம் முழுவதுமிருந்து 24 பள்ளிகள் மற்றும் 7 கல்லூரிகளைச் சேர்ந்த 290 பேர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் ஐந்து படைப்புகளும் ஆசிரியர்கள்/ ஆர்வலர்கள்/ பெண்களுக்கான போட்டிகளில் முதல் மூன்று படைப்புகளும் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன. மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் எஸ்.இராம்சங்கர், க.முத்துக்கண்ணன் ஆகியோர் மாவட்ட அளவிலான போட்டிகளை ஒருங்கிணைத்தனர்..
மாநில அளவில் போட்டி முடிவுகள்:
மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தர்மபுரி, வடசென்னை, தென்சென்னை, தேனி உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 5000 பேர் கலந்துகொண்ட அறிவியல் தினப்போட்டி படைப்புகளுக்கான மதிப்பீடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது. மாநில அளவில் தேர்வானவர்கள் பற்றிய விபரம் பின்வருமாறு:
6,7,8 மாணவர்களுக்கான ஓவியப்போட்டி
பெயர் | பெற்ற இடம் | வகுப்பு | பள்ளி | மாவட்டம் | ||
பா.தேவிபாலா | முதல் இடம் | 7 | டிரையம்ப் நடுநிலைப்பள்ளி, பெரியகுளம் | தேனி மாவட்டம் | ||
பி.அமிர்தவள்ளி | இரண்டாம் இடம் | 8 | தேவி மெட்ரிக்குலேசன் பள்ளி, பழனி | திண்டுக்கல் | ||
த.நிதர்ஷனா | மூன்றாம் இடம் | 7 | மாண்ட்போர்டு பள்ளி காட்டூர் | திருச்சி 94860 65722 | ||
சி.ஆனந்தராஜ் | நான்காம் இடம் | 7 | ஊராட்சி ஒன்றிய ந.பள்ளி, சருத்துப்பட்டி | தேனி மாவட்டம் | ||
கே.பிரியதர்ஷன் | ஐந்தாம் இடம் | 8 | பெல் மெட்ரிக்.பள்ளி கைலாசபுரம் | திருச்சி 0431-2552620 | ||
9,10,11,12 மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி
பெயர் | பெற்ற இடம் | வகுப்பு | பள்ளி | மாவட்டம் |
எம்.ஹரி | முதல் இடம் | 12 | ஜோதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி,இளம்பிள்ளை | சேலம் மாவட்டம் 88252 99244 |
பி.பிரீத்தி | இரண்டாம் இடம் | 11 | அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கலசபாக்கம் | திருவண்ணாமலை |
சி.சௌந்தர்யா | மூன்றாம் இடம் | 10 | அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி,வையம்பட்டி | திருச்சி 97880 40128 |
ஈ.ஹரிணி | நான்காம் இடம் | 9 | பெல் மெட்ரிக். பள்ளி கைலாசபுரம் | திருச்சி 0431-2552620 |
டி.கலையரசி | ஐந்தாம் இடம் | 11 | அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கலசபாக்கம் | திருவண்ணாமலை |
கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி
பெயர் | பெற்ற இடம் | வகுப்பு | நிறுவனம் | மாவட்டம் |
ச.கார்த்திகேயன் | முதல் இடம் | பி.எட். | வி.பி.ஆர்.கல்வியியல் கல்லூரி,கோடாங்கிபட்டி | தேனி மாவட்டம் 99658 80364 |
ஜெ.சங்கீதா | இரண்டாம் இடம் | பி.எட். | மதர் தெரசா கல்வியியல் கல்லூரி, பழனி | திண்டுக்கல் |
ச.ஆர்த்தி | மூன்றாம் இடம் | பி.எட். | சௌராஷ்ட்ரா கல்வியியல் கல்லூரி வீரபாண்டி | தேனி மாவட்டம் 81484 61015 |
பி.மகாலட்சுமி | நான்காம் இடம் | பி.எஸ்.சி. | கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி, சிவபுரம் | புதுக்கோட்டை 94423 89027 |
கே.ஹசினா நஹத் | ஐந்தாம் இடம் | பி.எஸ்.சி. | ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, கம்பம் | தேனி மாவட்டம் |
ஆசிரியர்/ஆர்வலர்களுக்கான சிறுகதைப்போட்டி
பெயர் | பெற்ற இடம் | பணி | நிறுவனம் | மாவட்டம் |
செ.லிபினா ஹென்சி | முதல் இடம் | ஆசிரியர் | ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி திருக்கோகரணம் | புதுக்கோட்டை மாவட்டம் |
எஸ்.மாலதி | இரண்டாம் இடம் | ஆர்வலர் | தமிழ்நாடு அறிவியல் இயக்கம் | சேலம் மாவட்டம் 81487 77077 |
எம்.பி.புதியவன் | மூன்றாம் இடம் | ஆசிரியர் | அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி, உத்.புரம், கம்பம் | தேனி மாவட்டம் 99420 80277 |
சுய உதவிப் பெண்களுக்கான சொலவடைப் போட்டி
பெயர் | பெற்ற இடம் | பணி | குழு | மாவட்டம் |
என்.நிர்மலா | முதல் இடம் | உறுப்பினர் | லிங்கபைரவி சுய உதவிக்குழு ஊஞ்சக்காடு | விருதுநகர் மாவட்டம் |
ச.உமாவதி | இரண்டாம் இடம் | உறுப்பினர் | கிராம விடியல் சுய உதவிக்குழு பெரியகுளம் | தேனி மாவட்டம் |
அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. தங்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் விரைவில் மாவட்ட அமைப்புகளின் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தேசிய அறிவியல் தினப்போட்டிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சேதுராமன் (மாநிலச் செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) தெரிவித்துள்ளார்.
-தே.சுந்தர், மாவட்டச் செயலாளர், த.அ.இ., தேனி மாவட்டம்
No comments:
Post a Comment