முதல் பக்கம்

Mar 20, 2012

மாவட்டச் செயற்குழுக் கூட்டம், மார்ச்,19-2012


தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மார்ச்,19,2012(திங்கள் கிழமை) மாலை அல்லிநகரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. பேருந்து விபத்தில் இறந்த அறிவியல் இயக்க மாநிலச்செயலாளர் விருதுநகர் சாந்தி அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழுக் கூட்டம், பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி பரிசீலனை, அறிவியல் தின நிகழ்ச்சிகள், மகளிர் தின நிகழ்ச்சிகள், உலக புத்தக தினம், கிளை நிகழ்வுகள், துளிர் இல்லங்கள் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன், மாவட்ட துணைச்செயலாளர் தெ.கருணாநிதி, ஆண்டிபட்டி கிளைச் செயலாளர் ஆர்.அம்மையப்பன், போடி செயலாளர் ப.ஸ்ரீதர், கம்பம் செயலாளர் க.முத்துக்கண்ணன், பெரியகுளம் செயலாளர் எஸ்.இராம்சங்கர், தலைவர் எ.எஸ்.பாலசுப்ரமணியன், தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன், மாவட்ட சமம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ், கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.மனோகரன், முத்துமணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் நிறைவுரையாற்றினார். மாவட்டப்பொருளாளர் எஸ்.சிவாஜி நன்றி கூறினார்.

விவாதக் குறிப்புகளில் இருந்து:
  • மாநிலச் செயற்குழுக் கூட்டம் மே 11,12 தேதிகளில் பெரியகுளத்தில் நடத்துவது.
  •  பெரியகுளத்தில் அதற்கான திட்டமிடல் கூட்டம் நடத்தி விரிவாக விவாதிப்பது.
  • பள்ளிமேலாண்மைக் குழு பயிற்சியில் அறிவியல் இயக்க கருத்தாளர்களின் பங்கேற்பு பாராட்டிற்குரியது. மேலும் அமைப்பிற்கு பயன்தரும் வகையில் திட்டமிட்டுச் செயலாற்றவேண்டும்.
  • அனைத்து ஒன்றியங்களிலும் கருத்தாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். புதியவர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது. பயிற்சிக்கு முன்னதாக கருத்தாளர்களுக்கான கூட்டத்தினை மாவட்ட, கிளை அமைப்புகள் நடத்தி வழிகாட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக கொண்டு சென்றிருக்கமுடியும்.
  • அறிவியல் தினத்தினை முன்னிட்டு கம்பம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் பகுதிகளில் துளிர் இல்ல நிகழ்ச்சிகளும் பெரியகுளத்தில் 1200 மாணவர்கள் கலந்துகொண்ட மாபெரும் நிகழ்ச்சியும் நடந்துள்ளது.
  • உலக புத்தக தினத்தை முன்னிட்டு துளிர் இல்லங்கள் மற்றும் கிளைகளில் வாசிப்பு இயக்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடத்துவது.
  • தானே புயல் நிவாரண நிதிக்கு போடி கிளை சிறப்பான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது பாராட்டிற்குரியது.
  • அடுத்த மாவட்டச் செயற்குழுவிற்கு முன்னதாக பின்வரும் எண்ணிக்கையில் துளிர் இல்லங்களைக் கிளைகள் துவங்குவது. பெரியகுளம்-10, ஆண்டிபட்டி-5, தேனி-5, போடி-5, கம்பம்-15, உத்தமபாளையம்-5.
  • அடுத்த மாவட்டச் செயற்குழு கூட்டத்தை போடிநாயக்கனூரில் நடத்துவது..

No comments:

Post a Comment