விலங்கு ..மனிதன்..!
மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு என்பது உணவைச் சமைத்து உண்பதும், மனித இனத்தின் தகவல் பரிமாற்ற மொழியும்தான். முக்கியமாக சமைப்பது என்பது, மொழியையும் விடவும் கூட தனித்துவமானதாக, சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் எந்த விலங்கும் உணவை சமைத்து உண்பதில்லை.கிடைப்பதை அப்படியே விழுங்கி வைக்கிறது. மனிதன் மட்டுமே விலங்கினத்தில் உணவை சமைத்து உண்கிறான்.மொழி/குரல்வளம் விஷயத்தில், மற்ற விலங்குகள், தொடர்புக்காக, மிரட்ட, தன் உணர்வைக்காட்ட குரைக்கின்றன,கனைக்கின்றன, உறுமுகின்றன, ஊளையிடுகின்றன/ ஏதாவது ஓர் ஒலியை எழுப்பி தனது இருப்பிடம் குறித்து தகவல் தருகின்றன. இதுதான் இயற்கை. சமைத்து உண்பது இயற்கைக்கு மாறுபட்ட ஒன்று.
சமைத்தலும், கலாச்சாரமும்..!
எந்த விலங்குக்கும் உணவை சமைப்பது பற்றிய எந்தவித எண்ணமும் இல்லை , சமைப்பதும் இல்லை .என்பது தெளிவாகவே தெரிகிறது. அப்படி எதுவுமே இல்லை. நாம்தான், மனித இனம்தான், கொதிக்க வைக்கிறோம், சுடுகிறோம், பொரிக்கிறோம், வறுக்கிறோம்,இத்யாதி..இத்யாதி எல்லாம் செய்கிறோம். இந்த விஷயம்தான் நாகரிகத்தின் இதயமாக வரலாற்றில் உலவி வருகிறது. எனவே உணவுக்கும், சமைத்தலுக்கும் , கலாச்சாரத்திற்கும் இடையே ஒரு மெல்லிய் பாவு நூல போன்ற நெருங்கிய நூலிழைக்கண்ணியான தொடர்பு உருவாகி இருக்கிறது.இந்த தொடர்பை நிரூபணம் செய்யும் விஷயமும் தகவலும் இதுவேதான்.. இதனை அடித்தளமாக வைத்தே,வரலாறும் எழுதப்பட்டுள்ளது. நாகரிகமும், உணவுப்பழக்கமும், இதற்கிடையே உள்ள உறவு முறையும்தான் ஓர் இடத்தின் அரசியல், பொருளாதாரம், உடல்நலம், இனம், தகவல் தொடர்பு போன்றவற்றின் மூலம் நாகரிகம்/கலாச்சாரத்தை நிர்ணயித்து அதனைப் பதிவு செய்யும் காரணிகளாக இருந்திருக்கின்றன.
குயூநிபாரம்..பதிவு.!
மனித நாகரிகம் பிறந்ததும், நாகரிகத்தொட்டில் என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுவதும் மெசபடோமியாதான்.( இன்றைய ஈராக்). மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்வது என்பதும் பழங்கால மத்திய கிழக்கு நாடுகளில்தான் பெரும்பாலும் நடந்தது. அங்கு குயூநிபாரம் என்ற எழுத்து முறை கண்டுபிடிக்கப்பட்டது, இதில் கிட்டததட்ட முக்கோண வடிவிலான நீண்ட குச்சி ஒன்றின் மூலம் , பச்சைக் களிமண் பலகையில் கருத்துக்களை பதிவு செய்வார்கள். பின்னர் இதனைக் காயவைத்து தீயில் சுட்டு எடுப்பார்கள் . இதுதான் குயூநிபாரம் எழுத்து முறையாகும். இம்முறை மூலம் பலவகையான மொழிகள் கி.மு 4,000- 100 வரை எழுதப்பட்டன. இந்த எழுத்து முறையை கி.மு 5,000 களில் துவக்கியவர்கள் மெசபடோமியாவைச் சேர்ந்த சுமேரியர்கள்தான். அந்த எழுதுபொருளின் பெயர் ஸ்டைலஸ் (stylus)என்பதே.
C001/8605 Cuneiform clay tablet and stylus. Reproduction of a typical cuneiform clay tablet showing a wooden stylus, (though often a reed was used) being used to write in cuneiform letters and numbers. The late-Assyrian form characters depicted here have been copied from a Neo-Babylonian stela (about 900-800BC) from Babylon, now in the British Museum. SHEILA TERRY/SCIENCE PHOTO LIBRARY
அதனை மாற்றி மாற்றிப் பதித்து வார்த்தைகள், வரிகள் உருவாக்கி. அதனைப் படித்தனர்.இதனை சுமேரியர்கள், அக்காடியன்கள், பாபிலோனியர்கள், எலாமைத்ஸ், ஹிட்டிட்ஸ் மற்றும் அசிரியன்கள் பயன்படுத்தினர். உலகில் அகர வரிசை எழுத்து முறை வரும் வரை (கி.பி முதலாம் நூற்றாண்டு வரை), இந்த் வகை எழுத்து முறையே அனைத்து இடங்களிலும் எழுதும் முறையாக பயன்பட்டது. .
துவக்க காலத்தில் பச்சை இலை தழைகளையும்.பழங்களையும் உண்ட மனிதன் எப்போது சமைத்து உண்ணத் தொடங்கினான் என்பது துல்லியமாகத் தெரியவில்லை. அதில்தான் மனிதனின் தேடல் இருக்கிறது. இனறைய நவீன நாகரிகத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதில் முக்கியமானது, பழைய காலத்தையும், அதன் வயதையும் கூட துல்லியமாக அறிவியல் மூலம் கண்டுபிடிக்க முடிவதுதான்.. எப்படி ஒரு குழந்தையின் உடலிலுள்ள டி என் ஏ வை எடுத்து அதன் மூலமாக அந்தக் குழந்தையின் பெற்றோரைக் கண்டறிய முடியுமோ அப்படியே, அது போலவே, நமக்கு கிடைக்கும் பொருள்களிலிருந்து அதன் காலத்தையும் அறிவியல் மூலம் கண்டறிய முடிகிறது என்றால் வியப்பான மற்றும் மகிழ்வான செய்திதானே..! சில சமயம் கிடைக்கும் பொருள்களிலிருந்து அந்த காலத்தின் காலநிலையையும் கூட அறியமுடிகிறது.
சமையல். .எப்போது?
சமைத்தல் என்ற செயல் எப்போது துவங்கியது என்று சரியாகத் தெரியவில்லை. துவக்க கால மனிதன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் முதன் முதலில் எப்படியோ மாமிசத்தை நெருப்பிலிட்டு உண்டிருக்கிறான். பின் சுட்டிருக்கிறான்.. அவன் கொன்ற விலங்கு காட்டுத்தீயில் மாட்டி சுடப்பட்டு இருக்கலாம். அப்படி சுடப்பட்ட மாமிசம் பல்லுக்கு மிக மெதுவாக இருந்ததுடன், நாவுக்கும் சுவையாகவும் இருந்திருக்கிறது. அது மட்டுமா? அந்த மாமிசம் வழக்கமான பச்சை மாமிசத்தைவிட, மிக எளிதில் சீரணமும் ஆகிவிட்டது. ஆனாலும் கூட, அவர்கள் நெருப்பை வெளிச்சத்திற்கும், வெப்பத்திற்குமே மட்டுமே நீண்ட காலம் பயன் படுத்தினர். சமைப்பதிற்கு ரொம்ப காலம் வரை நெருப்பின் பக்கம் கூட உணவு எட்டிப்பார்க்கவில்லை.நெருங்கவில்லை.; பயன்படுத்தப்படவில்லை.இதெல்லாம் வரலாற்றுக்கு முற்பட்ட கால கட்டங்கள்.
வளம் மிக்க மத்திய கிழக்கின் பிறைநிலத்தில்தான் முதன் முதல் விவசாயம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது..இந்தப்பகுதிதான் மனித நாகரிகத்தின் தொட்டில்.. இனறைய போர்க்களமான ஈராக் தான் அன்றைய நாகரிகம் வளர்ந்த இடம். அப்பகுதி யூப்ரடிஸ் , டைக்கிரிஸ் நதிகளுக்கிடையே இருந்ததால் வளமானதாக இருந்தது.விவசாயம் செய்யப்பட்டது. எங்கு விவசாயம் நடந்ததோ அங்கே பயிர் வகைகளுடன், நாகரிகமும் சேர்ந்தே வளர்ந்தது. மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மிளகு, தானியம், பொன்னாங்கண்ணிக்கீரை , சுரை,பாகல் போன்றவைகளைப் பயிரிட்டனர் . அப்போது எகிப்தில் பெரிய பிரமிடுகளைக் கட்டிய எகிப்தியர்கள், உண்வில் பூண்டு, வெங்காயம் போன்றவை இருந்தன. அதே சமயத்தில் அங்கிருந்த சீதோஷ்ணநிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
சமைப்பது என்பது பொதுவாக நெருப்பைப் பயன்படுத்தி செய்வதாகும் . . சமைக்கும முறையும், அதற்குப்பயன்படுத்தப்படும் உட்பொருட் களும்,
உலகம் முழுவதுக்கும் வேறுபடுவதுடன், அவை அப்பகுதியின் கிறது அத்துடன் அது கலாச்சாரத்தைப் பறைசாற்றுவதாகவும், அவர்களின் பொருளாதாரச் சூழல் மற்றும் இயற்கைச் சூழலியலைக் குறிப்பதாகவும் கூட உள்ளது. சமைத்தலில் உள்ள மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நெருப்பைக்கண்டுபிடித்ததும், அதனைக் கட்டுப்படுத்தியதும்தான். முதல் சமையல்காரர் என்பவர் தற்செயலாக எதிர்பாராமல்தான் உருவாகி இருப்பார். அது பெண்ணா, ஆணா, என்பதும் தெரியவில்லை. ஆனால் சமைத்து உணவை உண்பது என்பதை மனிதன் தவிர வேறு எந்த விலங்கும் செய்யவில்லை. இந்த் சமையல்தான் மனிதனின் பரிணாமப் பாத்திரத்தில் பெரும் பங்கு வகிப்பதாகும். பெரும்பாலான மனிதவியலாளர்கள் கருதுவது போல, மனிதன் தீயைப் பயன்படுத்தி சமைப்பது என்பது சுமார் 2,50,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது. ஆனால் . விவசாயத்தின் வளர்ச்சியும், வணிகம் மற்றும் போக்குவரத்துக்கு இடையிலான கலாச்சார இணைப்பு போன்றவையும் உணவுக்கான புதிய உட்பொருள்களைத் தந்தன. புதிய புதிய கண்டுபிடிப்புகளும்,தொழில்நுட்பங்களும் சமைக்கும் வகைகளை விரிவுபடுத்தி உள்ளன. மனித நாகரிகப் பிறப்பின் பிற்காலத்தில் செய்யப்பட்டமண் பானைகளும், நீரைக் கொதிக்க வைப்பதும் புதிய சமையல் முறையை அறிமுகப் படுத்தியது. இன்று பல்வேறு வகை உணவுகளை சமையல்கலை களத்தில் இறக்கி உள்ளது.
என்னதான் இதுவரை நடந்திருந்தாலும், யார் முதலில் சமைத்தது என்றோ எந்த கால கட்டத்தில் சமைப்பது உருவானது என்பது பற்றிய தகவல் சரிவரத் தெரியவில்லை.ஆனால் வானரவியலாளரான ரிச்சர்ட் வ்ரான்காம் (Primatologist Richard Wrangham ), சமைக்கும் கலை சுமார் 1 ,800,000 -2 ,300,000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார். ஆனால் மனிதவியலாளர்கள், 2 ,50,000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சமைப்பது பற்றி மனிதன் உருவாக்கினான் என்று கூறுகின்றனர். நமது ஆராய்ச்சியாளர்களோ சுமார் 40,000 - 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் மனித சமைக்க கற்றுக்கொண்டான் என்று கூறுகின்றனர்.
அனுபவம்..அறிவியல்..!
E438/0065 Early use of fire. Illustration of Homo erectus using fire to cook meat. At upper right, a Homo erectus man is igniting a stick from a tree that has been struck by lightning. This could be the way that man learnt to harness fire. The name Homo erectus translates to "erect man". The erect standing H. erectus stood 1.68 metres tall, perhaps more. Living 1.8 million years to 200,000 years ago, it was the first human type to spread from Africa to Asia. They had a mixed diet and were nomadic hunter-gatherers. CHRISTIAN JEGOU PUBLIPHOTO DIFFUSION/ SCIENCE PHOTO LIBRARY
எது எப்படியோ, எப்போது மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்தான், எப்போது உருவாக்கினான் என்பது சரிவரத் தெரியாததால், சமைக்கத் துவங்கியது எப்போது என்பதும் சரியாகத் தெரியவில்லை. முதன் முதலில் எதிர்பாராமல் நெருப்பில் சுட்டதுதான் நடந்திருக்கவேண்டும். அந்த அனுபவத்தின் விளைவாக ஒரு குச்சியில் பறவையோ, விலங்கையோ மாட்டி அதனை நெருப்பில் சுட்டுத் தின்றிருப்பார்கள். அப்போதுதான், பச்சை மாமிசத்தைவிட சுட்டது மிகச் சுவையாய் இருந்ததை உணர்ந்திருப்பார்கள்.அதன்பின்னர் தான், அந்த மாமிசத்தைப் பிளந்து சுட்டால், சீக்கிரம் வேகும் எனபது அறியப்பட்டிருக்கும். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஓர் அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைந்தது.அறிவியலாக இருந்தாலும் சரி, சமையலாக இருந்தாலும் சரி.. இதுதான் வகைப்பாடு. எல்லாவற்றையும் விட இது சமையலுக்கு மிக மிக முக்கியம்.உயிர் காக்கும் உணவாயிற்றே இன்றும் கூட, சமைப்பதும், அதன் ருசியை வாசனை மூலம் சொல்வதும்கூட அனுபவத்தில் விளைந்தது தான்...இதுதான் சமையல் பிறந்த கதை..!
நம் பாட்டியைக் கேட்டால், இப்போதுள்ள பெண்டுகள், சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை என நக்கல் அடிக்கின்றனர்.குறைபட்டு கொள்கின்றனர். இன்று சமையல் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.. ஏராளமான சமையல் குறிப்புகள், சமையல் புத்தகங்கள் வந்து விட்டன. அதனை வாங்கி வைத்துக் கொண்டால், சமைப்பது எளிது என்றும் பெரும்பாலோர் கருதுகின்றனர். அது உண்மையும் கூட.. நெசம்மாவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப் படுவதில்லையா?.. அதெல்லாம் இல்லை. பழங்காலத்திலும் கூட இந்த சாதாரண விஷயங்களெல்லாம் கூட பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. சமையலின் கதையை, வரலாற்றை பழங்கால கற்படிமங்கள் கதைக்கின்றன என்ற உண்மையை, நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்.
இதோ..உங்களுக்காக , சமையலின் சரித்திரம்
உலகின்.. பழமையான..சமையல் ..புத்தகம்..! இப்படிப்பட்ட சமையல் குறிப்பு எத்தனை ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கும்.. யாராவது உத்தேசமாக சொல்ல முடியுமா? . உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஒன்றை நம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபித்துள்ளனர். ஆனால் அது உலகின் மிகப் பழமையான சமையல் கலைகளை சுமந்து, பாபிலோனிலிருந்து கிடைத்திருக்கிறது.அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள் ஆனால் அது இன்றுள்ள புத்தகம் போல காகித தாளில் இல்லை. ஆதிகால களிமண் பலகைகளால் ஆனது.அந்த புத்தகம் என்பது அந்தக் காலத்திய சுட்ட களிமண். அப்படிப்பட்ட களிமண் பலகைகள் மூன்று கிடைத்துள்ளன. அந்த சுட்ட களிமண் பலகையில் குயூநிபாரம் எழுத்துக்களில், அந்தக் கால மெசபடோனியர்களின் மொழியான அக்காடியன் என்ற செமிடிக்(Akkadian, an Semitic language spoken) மொழியில் குறித்து வைக்கப்பட்டுள்ளது. அதில் பலவகையான பாஸ்தா தயாரிப்பது, (அதான் நம்ம நூடுல்ஸ் மாதிரிதாம்பா )என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் பழங்கால பாபிலோனுக்கு சொந்தமானவை.
நாம் பழங்கால நாகரிக மக்களான எகிப்தியர்கள், போனிசினியன்கள், ஹிப்ரூக்களின் உணவு பொருட்கள், உணவு முறை பற்றி அறிந்துள்ளோம்.ஆனால் அவர்களின் சமையல் குறிப்பு பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் யேல் பலகலைக்கழகத்தின் கோதிக் ஸ்டைல் நூலகத்தில் உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம், பழங்கால சமையல் கலையின் திறமையின் மேல் ஒளியை அள்ளி வீசிக்கொண்டு,ஓர் இருட்டு அறையில் படுத்திருக்கிறது.அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதால் , அவை யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. மெசபடோமியாவைச் சேர்ந்த சின்ன களிமண் பலகைகளில் உலகின் பழங்கால சமையல் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன என்று, பாபிலோனியன் பலகைகள் மற்றும் இலக்கியங்கள் சேகரிக்கும் பேராசிரியர். வில்லியம்.வ.ஹாலோ(William W.Haalo) சொல்கிறார்..
பாபிலோனிய பெரிய களிமண் பலகையின் அளவு7 " X 9 .5 " .அதில் குட்டி குட்டியாய் குயூநிபாரம் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளதும் இருக்கிறது.அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, அதில் சுமார் 35 வகை மெசபடோமியன் உணவு வகைகளுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள், புறா, வெள்ளாட்டின் மண்ணீரல், கோழி சமையல், டர்னிப்பு போன்றவற்றின் சூப் தயாரிப்பது தொடர்பாய் அனைத்து தகவல்களும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிகி சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான் ஏனென்றும், மேலும் சுமார், 4,000 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நவீன சமையல் குறிப்பை நாங்கள் நினைத்துப்பார்க்கக்கூட தயாராக வில்லை, ஆனால் அப்படி இருப்பதுதான உண்மை, என்று,,அசிரியன்கள் பற்றி ஆராயும் பிரெஞ்சு நாட்டின் ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கிறார்.
. அரிதான சமையல் பொருட்கள்..!
இந்த சமையல் குறிப்புகள் செய்யத்தக்கதாகவும், முக்கியமாய் தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கின்றன. இந்த குயூநிபாரம் இலக்கிய காலத்துக்கு முன் இவை வந்திருக்க வாய்ப்புஇல்லை என்று ஹாலோ (Mr. Hallo ) தெரிவிக்கிறார் . அவற்றில் ஏராளமாய் கொழுப்பும் எண்ணெயும் இருந்ததாக ஹாலோ சொல்கிறார். மேலும் அனைத்து உணவிலும் வெங்காய குடும்ப பொருள்கள் இருந்தன. ஆனால் உப்பு மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது.இந்த களிமண் பலகைகள், பல பத்தாண்டு கால சேமிப்பாக இருந்தாலும் கூட, அவற்றைப் பற்றிய முழுமையான தகவல்கள், 5ஆண்டுகளுக்கு முன்தான் தெளிவாகத் தெரியவந்தது.இவை விசேஷ கால சிறப்பு சமையல்களாக இருக்கலாம் என்றும், மேல் தட்டு வர்க்கத்தினருக்கான உணவு வகை என்றும் தெரிகிறது.அவை அனைத்தும் அரிதான சமையல் பொருட்களைக் கொண்டே தயாரிககப்பட்டுள்ளன .
ச்மையல்..பொருட்கள்..!
களிமண் பலகையிலுள்ள மாமிசத்தில் மாட்டுக்கறி, வெள்ளாடு, செம்மறியாட்டுக்கறி, பன்றிக்கறி , மான்கறி மற்றும் கோழி போன்றவையும் முட்டையும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் ஆமை சிப்பிகள் போன்றவை மீனுடன் சேர்த்து சமைத்து உண்ணப்பட்டது. பலவகை தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் திராட்சை , அத்திப்பழம், பேரீச்சை, மாதுளை போன்றவையும் உண்ணப்பட்டன. தேனும், பேரிச்சை,திராட்சை சாறு போன்றவை இனிப்பு பொருள்களாக பயன்பட்டன. ஏழைகளுக்கு பார்லியில் செய்த ரொட்டியும், செல்வந்தர்களுக்கு இனிப்பும் வாசனையும் உள்ள மெதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டது.
களிமண் பலகை ஒவ்வொன்றிலும் சமையல் குறிப்புகள் உள்ள தகவல்களே காணப்படுகிறன. முன்றிலும் மொத்தமாக 35 வகையான சமையல் குறிப்புகள் உள்ளன. . இவை பழைய பாபிலோனிய காலத்தின் இடைப்பகுதியில் தொகுக்கப் பட்டதாகும்.இதுதான் உலகிலேயே மிகப் பழமையான சமையல் கலை புத்தகம்.இதன் வயது சுமார்3 ,710 ஆண்டுகள் இந்த களிமண் சமையல் புத்தகத்திலுள்ள விஷயங்களை மாற்றி எழுதி, மொழியாக்கம் செய்தவர், ஜீன் போட்டாரோ மற்றும் தெரசா லேவாண்டர் பாகன் ஆவார்கள். இதனை கடந்த 2004 ல், மெசபடோமிய சமையல் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது.காரணம் என்ன தெரியுமா? இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் உண்மையாகவே, அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் ஏதும் அறிய மாட்டோம்.அதிலுள்ள சமையல் முறை என்பது. சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு எனபதும் அதில் காணவில்லை. ஆனாலும் கூட, அந்த குயூனிபாரம் எழுத்துக்களைப் படித்து அதன் பொருளும் உணர்ந்து சமைத்தும் பார்த்துவிட்டனர். இப்போதுள்ள நமது சமையல் வல்லுநர் குயூநிபாரம் உணவு வகைகளை இப்போது கிடைக்கும் கோழியில் முயற்சியும் செய்து பார்த்தார்.
அந்த சமையல் குறிப்புகளிலிருந்து அங்கு நிலவிய செல்வசெழிப்பும் , துல்லியமாக திட்டமிட்டு உட்பொருள்கள் இணைத்து சமைக்கப்பட்டதும், திறமையாக சமையல் செய்யப்பட்டதும் தெளிவாகத் தெரிய வருகிறது.. இவையெல்லாம் நம்மை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயங்கள்தான். இதில் முக்கியமாக, 4,000 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு பொருட்கள் சேர்த்து சமைத்தனரா என்பதும நமது கற்பனைக்குகூட எட்டாத விஷயமாகவே உள்ளது. நம்மை வியக்க வைக்கிறது. அனைத்து சமையல் குறிப்பிலும் பூண்டு, வெங்காயம், வெந்தயம் சேர்த்திருக்கின்றனர். பழங்கால சமையல் குறிப்புகளில், வாசனைக்காக, கடுகு, சீரகம், மல்லி, புதினா, சைப்ரஸ் காய்கள், சேர்த்திருக்கின்றனர். கொஞ்சம் கெட்டியாக இருப்பதற்கு மாவுப் பொருள்கள், அரைத்த பார்லி, மெதுவான தன்மைக்கு நீர் சேர்ப்பது என்ற அனைத்து வகை கலைகளிலும் கை தேர்ந்தவராக இருக்கின்றனர். சிலசமயம், உணவு மெதுவாக இருக்க, பால், பீர் மற்றும் இரத்தம் போன்றவற்றையும் சேர்த்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. .
மெசபடோமியாவியால் கிடைத்துள்ள மூன்று களிமண் பலகைகளில் 25 வகையான சமையல் குறிப்புகள் இருக்கின்றன. இவற்றில் 21 வகை மாமிச உணவு தயாரிப்பது பற்றியும், மீதமுள்ள 4 வகைகளே, தாவர உணவு தயாரிப்பது தொடர்பான பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பில் அதில் சேர்க்கப்பட்ட பொருள்களின் பட்டியலும் அழகாக குறித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் எதனை முதலில் போடவேண்டும், எத்தனைப் பின்னால் போடவேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவற்றி அளவோ, சமைக்கும் நேரமோ போடப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும்போது, அவை கை தேர்ந்த சமையல்களை வல்லுநரால்தான் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதும் தெரிய வருகிறது.
இந்தியாவில்..இல்லையா சமையல்?
அதெல்லாம் சரி. இப்படிப்பட்ட சமையல் கலை கண்டுபிடிப்பு மெசபடோமியாவில்தான் இருந்திருக்க வேண்டுமா? நம் இந்தியாவிலும் மக்கள் வாழ்ந்தனரே.. அவர்களும் க்கூட இதனைக் கண்டுபிடித்திருக்கமல்லவா என நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது. உண்மைதான். கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் பதிவுகள் இல்லையே..நண்பா..! வரலாற்றுப் பதிவின் படி.. பாபிலோனிய சமையல் களிமண் ப்லகைப் புத்தகம்தான் உலகின் முதல் சமையல்கலை பதிவு..
புதிய.. கண்டுபிடிப்பு..நீர் .. சமையலும்.. சுவையும்.. ! நண்பா அதில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் ,எல்லா உணவிலும் கறி, கோழி,காய்கள்,தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. உங்களுக்கெல்லாம் ஒரு அற்புதமான, ஆச்சரியமான, சுவையான விஷயம் சொல்லலமா. அதுதான் நீரில் சமைப்பது.? இது என்னப்பா அதிசயம். நாம் சாதரணமாய் செய்வது தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. நீரில் சமைப்பது என்பது, சமையல் அறிவியலில் புதுமை கலந்த ஓர் முக்கியமான மைல் கல். அதுவரை மக்கள், நேரடியாய் நெருப்பில் போட்டு சமைத்தனர்; பின், சுட்டனர் ; பிறகு பாத்திரத்தில் போட்டு வதக்கினர் ;பாத்திரத்தில் போட்டு, வறுத்தனர். ; , நெருப்பு தணல்/ தீயில் வாட்டினர்;லேசாக புரட்டி புரட்டி வாட்டினர். இதெல்லாம் போக நீரில் போட்டு சமைப்பது, சுவையான , வசதியான சமையலாகும். நீரில் போடு வதன் மூலம், உணவின் சுவை கூடுகிறது. அதன் மணத்தை அதிகரிப்பதும் , சமையலை வளமாக்குவதும், பல வகை உணவுகள் செய்வதும் இதன் மூலம் அதிகரிக்கின்றது. இந்த சுவையை வறுத்தல் சுடுதல், புரட்டுதல் மூலம் செய்ய முடியாது. எனவே நண்பர்களே,, தண்ணீரில் உணவுக்கான பொருட்களை போட்டு , வேக வைத்து உண்பது என்பது நவீன புதிய முறை. இதனை பாபிலோனியர்கள், தான் துவக்கி வைத்ததுடன், மறக்காமல், வெகு புத்திசாலித் தனத்துடன் சுட்ட களிமண் பலகையில் பதிவும் செய்துள்ளனர் என்றால் பாராட்டும் அம்சம்தானே.
.24வது களிமண் பலகையில் உள்ள உணவு வகை பலதரப்பட்டதாக உள்ளது..அதிலுள்ள உணவுகள்:
- சாறு & தேனி (12 வகைகள்)
- எண்ணெய்& கொழுப்பு வகைகள் (53வகைகள்)
- நறுமண்ப்பொருட்கள்(1, மற்ற பலகையிலும் உள்ளது )
- கொட்டைகள் (12 வகைகள்()
- பால் பொருட்கள்..(34)
- தானியங்கள் (8)
- எம்மர் & கோதுமை(10)
- பார்லி(67)
- ஸ்ட்ரா (10)
- பழங்கள் (30)
- உப்பு & இனிப்பு வகைகள் (12)
- தர்ப்பூசணி & பூசணி (8)
--
DISTRICT SECRETARY
TNSF@THENI
No comments:
Post a Comment