முதல் பக்கம்

Mar 10, 2012

சமம் அமைப்பின் மாநில பயிற்சி முகாம், மதுரை


சமம் இயக்கம் சார்பில் மார்ச்,2,3 ஆகிய தினங்களில் மதுரை மூட்டா அரங்கத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் ”நுண் நிதி நிறுவனங்களும் சுய உதவிக்குழுக்களும் என்ற தலைப்பில் மாநிலக் கருத்தரஙகம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 200 பெண்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கில் நபார்டு வங்கியின் உதவிப்பொது மேலாளர் திரு.ஆர்.சங்கர் நாராயணன் நுண் நிதி ஒரு பரந்த பார்வை என்ற தலைப்பில் உரை ஆற்றித் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச்செயலரும் சென்னை பாரத ஸ்டேட் வங்கி ஊரக சேவைப்பிரிவு மேலாளரும் ஆன திரு டி.தாமஸ் பிராங்கோ நுண்நிதிச்சட்டம்குறித்துப் பேசினார்.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் என்.லலிதா “நுண் கடன் உதவிகளும் சுய உதவிக்குழுக்களும்என்ற தலைப்பில் உரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கப் மாநிலப்பொருளாளர் திருமிகு.ராதா முருகேசன், சமம் குழுக்களும் நுண் நிதி நிறுவனஙகளும் என்ற தலைப்பில் பேசினார்.

இக் கருத்தரங்கத்திற்குப் பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம் தலைமை வகித்தார். தீபம் மாவட்டச்செயலர் பி.பத்மா வரவேற்புரை ஆற்றினார். சம்ம இயக்க மாநில ஒருங்கிணைப்பாளார் ஜான்சிலிபாய் நோக்க உரை ஆற்றினார்.ஏக்தா சார்பில் அனிதா அவர்களும், உழைக்கும் பெண்கள் சார்பில் பாண்டிச்செல்வி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தீபம் மாவட்டத்த் தலைவர் முத்துலட்சுமி நன்றியுரை நிகழ்த்தினார்.

சுய உதவிக்குழுக்களுக்கான கடன் வசதிகளை பொதுத்துறை வங்கிகளே செய்ய வேண்டும், குறைந்த வட்டியில் கடன் தர வேண்டும், அதிக வட்டி வாங்கும் தனியார் நுண்நிதி நிறுவனஙகளைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கருத்தரஙகம் தனியார் நுண் நிதி நிருவனஙகளின் கொடுமைகளை அரசிடமும் மக்களிடம் விரிவாக எடுத்துச்செல்லப் பல்வேறு இயக்கங்களைத் திட்டமிடும் கருத்தரஙகமாக நடத்தப்பட்டது. 

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், சூழல் மற்றும் ஊரக வளர்ச்சி மையமும் இக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தன. நமது தேனி மாவட்ட சமம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ் உள்ளிட்ட மூன்று நண்பர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment