தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் கிளையின் சார்பில் மார்ச்,8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். அறிவியல் இயக்க மாவட்டக் கருத்தாளர் எஸ்.தேவராஜன் புல்லாங்குழல் இசையுடன் நிகழ்ச்சியைத் துவங்கினார். மாவட்டக் கருத்தாளர் பாஸ்கரன் பண்டைய இலக்கியத்தில் பெண்பாற்புலவர்களின் பெருமை குறித்தும் மாவட்டக்கருத்தாளர் இராஜசேகரன் சொலவடைகள் சொல்லும் பெண்ணியம் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர் ஜெயமுருகன் திறனறிதல் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் நிறைவுரையாற்றினார். துளிர் இல்ல மாணவர் பொ.சுரேந்தர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment