முதல் பக்கம்

Mar 10, 2012

குருதியில் மலர்ந்த சர்வதேச பெண்கள் தினம்..!மார்ச் 8..

சரிபாதி..பெண்கள்..சமமானவர்களா..?


 மார்ச் 8 , சர்வதேச மகளிர்  தினம்..!  
உலகில் உருவாகும் உயிரினங்களில் நிச்சயமாய் சரிபாதி சதவீதம் பெண்கள்தான். ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஆணுக்குக் கிடைக்கும் அத்துணை உரிமையும் கிடைத்துவிடுகிறதா?  அந்த உரிமைகளைப் பெற, உயிரினங்கள் என்ற அடிப்படை உரிமைகள் பெற போராடிப் பெற்ற தினம்தான் பெண்கள் தினம்.  உலகின் பெரும்பாலான நாடுகளில் சர்வதேச பெண்கள் தினத்திற்கு விடுமுறை தினம்தான். உலகம் முழுவதிலும் உள்ள பெண்களின் சாதனைகளுக்கும், உழைக்கும் பெண்களின் போராட்டத்திற்கும்  மரியாதை தருவதற்காகவும், பாலின சமத்துவ முன்னேற்றத்திற்காகவும், நீதி, சமாதானம் போன்றவற்றில் கிட்டிய வெற்றிக்காகவும்,பெண்களின்றி எதுவும் நிறைவு பெறாது என்பதனை நினைவு கூறும்பொருட்டும்  உருவான தினம் இது. ஆனால் இப்போது கல்வி, உழைப்பு, பொருளாதாரம், பாலியல் என பன்முகத் தளங்களில் பெண் வர்க்கம் பாதிப்பும், சுரண்டலுக்கும் உள்ளாகிறது.  இப்போது கிடைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச விடுதலையைத் தக்க வைக்க வேண்டியது கால்த்தின் கட்டாயம்.

    சர்வதேச பெண்கள் தினம்..! 

 பெண்களின் பொருளாதார, அரசியல், சமூக சாதனைகளை முன்னிறுத்தி பல நாடுகளில் இதனை கொண்டாடுகின்றனர். கிழக்கு ஐரோப்பா,ரஷ்யா போன்ற நாடுகளில் அவர்களின் கலாச்சாரத்துடன் இணைத்து, பெண்களுக்கு மரியாதை செய்யும் முகமாக விடுமுறை நாளாக அனுசரிக்கின்றனர்.  பல நாடுகளில் கலாச்சாரத் தளங்களை ஒன்றிணைத்து, பெரிய அரசு, அரசியல் நிகழ்வாக நடத்தப்படுகிறது  சர்வதேச மகளிர் தினம், இன்று இந்தியாவில் பெரும்பாலும் அதன் உண்மை நிலை இழந்துவிட்டது. ஏதோ ஒப்புக்காக, டான்ஸ், பாட்டு, கோலப்போட்டி, அழகுப் போட்டி,  என்று பெண்களை கேலிக்கூத்தாக்கி, கேளிக்கை கொண்டாட்டமாக வணிக நோக்குடன் கொண்டாடப் படுகிறது. போராட்ட களத்தில், உயிர்ப் பலி கொடுத்து, போராட்ட உணர்வுடன் பிறந்தது, சமூக விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு சமர்ப்பணத்துடன் இந்த ஆண்டு சரிவ தேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவோம். சர்வதேச மகளிர் தினம். இதனையும் கூட, ஏதோ காதலர் தினம் போல சொல்பவர்களைப் புறந்தள்ளுவோம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஒரு வேதனை என்னவென்றால், இந்தியா போன்ற நாடுகளில், அரசின் ஆணைக்குப் பயந்து,  இப்போது அனைத்து அரசு அலுவலகங்கள் , கல்வி நிறுவனங்கள், தன்னார்வ இயக்கங்களால் அத்து மீறிய விளம்பரத்துடன் மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது .

பெண்மையும்.. ஆண்மையும்.! 

மரபணுவும், உடலியல் வேறுபாடும், பெண் ஆண் உருவத்தை நிர்ணயம் செய்கின்றன. ஆனால் பெண்மை, ஆண்மை என்ற சமூகக் கருத்தாக்கம்  சமூகத்தினரால் வழி வழியாக உருவாக்கப்பட்டதொன்றாகும். இதன் பின்னணியைப் பார்த்தால் அது  தாய்வழிச் சமூகத்தைப் புறந்தள்ளி, நிலவுடைமை சமுதாயமும்,அதன் ஆதிக்க சக்திகளும் ஏற்படுத்திய தாக்கத்தால், ஆணுக்கு முக்கியம் தரும் ஆணாதிக்க உணர்வும், பெண்ணினத்தின் மீதான அடக்கு முறையும், உருவானது. ஆணாதிக்க உணர்வு எனப்து ஆண்களிடம் மட்டுமல்ல, இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் உள்ளங்களிலும் ஆழ்ந்து பதிந்து கிடக்கிறது. அதன் வெளிப்பாடு பல இடங்களிலும் பிரதி பலிக்கிறது. இங்கு பெண்கள் அழகுப் பெட்டகங்களாக, பாரம்பரியத்தைப் பாதுக்காக்க பிறப்பெடுத்தவர்களாக,  தொலைக்காட்சித் தொடர்களின் அடிமைகளாக, உடலும், உழைப்பும் சுரண்டப்படுவதை அறியாதவர்களாக உருவாக்கப்படும் அவலத்தை நாம் துடைத்தெறிய சர்வ தேச மகளிர் தினததை சரியான பார்வையில் அனுசரிப்போம்.
   உரிமையின்...பின்னணி..! 
 1912 ல் நியூயாக்கில் நடந்த போராட்டம்.

உலகைக் குலுக்கிய மார்ச் 8 ம் நாள் போராட்டம் முடிந்து 102 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பின்மு, பெண்கள் மீது குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களும், பாலியல் பிரச்சினைகளும், நாகரிகம் முன்னேறிய  நாட்டில் நவீன முறையில் நடக்கிறது. இந்தப்பின்னணியில் . சர்வதேச மகளிர் தினத்தின்  பின்னணியை ஆராய்ந்தால், அது மிகவும் ஆச்சரியம் தருவதாகவும், சுவையாகவும், வியப்பளிப்பதாகவும், அதிர்ச்சி  தருவதாகவும்,வேதனை மிகுந்ததாகவும், போராட்ட உணர்வைத் தூண்டுவதாகவும்  உள்ளது. மெல்லியலாள் என வர்ணிக்கப்படும் ஒடுக்கப்பட்ட பெண்ணினமே, ஒடுக்கும் ஆண் துணையின்றி, தனியே நின்று போராடிப் பெற்ற உரிமைகள் ஏராளம்; ஏராளம். . இதில் எண்ணிலடங்கா உயிர் தியாகங்களும் உண்டு..! உயிரை காவு கொடுக்காமல் போராட்டமா? இரத்தம் சிந்தாமல் வெற்றியின் தடமா? இல்லவே இல்லை! எந்த சரித்திரமும் நமக்கு அதனைக் காட்டவில்லை. எனவே  இதில் பெண்களின் போராட்டமும் விதி விலக்கில்லை. இன்று உலகம் முழுவதும், போராட்ட குணம் மிக்க பெண்களின் அமைப்புக்கள் மகளிர் தினத்தை அதே உணர்வுடன்தான் கொண்டாடுகின்றன.

பூவும்...போராடும்..!  

ஆயத்த ஆடைப்பணியில் 1903   புரட்சி என்றதும், நம் நினைவுக்கு வருவது ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி, பிரெஞ்சு புரட்சி, ஐரோப்பிய புரட்சி, கியூபப் புரட்சி போன்றவையே..! அடுப்பங்கரையில் கரண்டி பிடித்த கரங்கள், போர்க்கொடி ஏந்தி, கோரிக்கை முழங்கி, தெருவில் இறங்கி போராடி,தொழிற்சாலையை முற்றுகையிட்டு, வெற்றி வாகை சூடியது  பலருக்குத் தெரியாது. அமெரிக்காவில், அமெரிக்க பெண்களிடம் புரட்சி விதை போட்டது நியூயார்க்கின் ஜவுளி மாவட்டத்தில் உள்ள  பஞ்சாலை தொழிற்சாலையின், சாதாரண பெண்களே..!பெண்கள் புரட்சியின் பூர்வீகம்/தாய்வீடு அமெரிக்காதான். அமெரிக்காவில் தோன்றி,உலகம் முழுவதும் பரவிய இயக்கம்தான் பெண்களின் தொழிற்சாலைப் புரட்சி. உலக வரலாற்றில் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாதது. அவர்களின் இரண்டாம் இடத்தைத் தவிர்த்து, தோள் கொடுத்து மேலேற்றி, வெற்றியில், பல உயிர்களின் இரத்தக் கறைபடிந்த வெற்றிக்காவிய வீரவரலாறுதான்  சர்வதேச மகளிர்தினம். அமெரிக்காவில் நடந்த இருபெரும் பஞ்சாலைப் போராட்டங்களுக்கு மரியாதை தருவதற்காகவும், உலக உழைக்கும்  பெண்களின் பணியை மதிப்பதற்காகவும் உருவானதுதான் சர்வதேச மகளிர் தினம். 1857 ல் அதிகமான பணிப் பளுவுக்காவும்  ,கூலி உயர்வுக்காகவும்,நியாயமான வாழ்க்கைத் தரத்திற்காகவும், நடைபெற்ற போராட்டம்தான் இந்த தினத்தை பெற்றுத்தந்தது. 1908 ல் பெண்களில் ஓட்டுரிமை வேண்டியும்   பரிணாமம்  பெற்றது. 
  நசுக்கும்.. கரங்கள்..கீழ் ..பூவினம்.!
போராட்ட களத்தில் தையல் தொழிலின் தையல்கள்
அமெரிக்க போராளிகளின் போராட்டம் 1800 களில் பரபரப்பாக பேசப்பட்டது. நியூயார்க்கில் உள்ள ஜவுளி மாவட்டத்தில், ரஷ்யா, இத்தாலி, போலந்து போன்ற ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பணி புரிந்தனர்.அவர்கள் ஒரு நாளில் 15 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தனர். அது மட்டுமல்ல. அவர்கள் பயன்படுத்தும் ஊசி, நூல், மின்சாரம், நாற்காலி மற்றும் கைப்பெட்டி போன்றவைக்கும் அவர்கள் கூலியிலிருந்தே பணம் எடுத்துக்கொள்ளப்படும். தாம்தாக வந்தாலோ, கழிப்பறையில் அதிக நேரம் ஆனாலோ அபராதம் விதிக்கப்படும். பெண்கள் ஆசைப்பட் எதுமே இல்லை. என்ற உணர்வுடன் அவர்கள் இருந்தார்கள்..உலகில் எங்கு எந்த போராட்டம் நடந்தாலும் அது ஆண்களை மையப்படுத்தியே இருந்தது. பெண்களின் பங்கேற்பும், பணிச்சுமையும், கருத்தும் ஆண்களுக்கு ஒப்பாக எண்ணப் படாத காலம் அது..! (இப்போதும் கூட அப்படித்தானே  பெரும்பான்மையான  இடங்களில் உள்ளது)
    சக போராளிகளின் பாராமுகம்:! 
பணி புரியும் ஆண் வர்க்கமும், பெண்களின் பணிப் பளுவை, கஷ்டத்தை, வேதனையை பாராமுகத்துடன் கீழே தள்ளியது. தொழிற்சாலை முதலாளிகளாலும், சக ஆண் தொழிலாளர்களாலும் வேதனைப் படுகுழியில் தள்ளப்பட்டனர் பெண் தொழிலாளிகள்.இவர்கள் மனம் தாங்களே மனம் நொந்து, தங்களுக்கு ஒரு தீர்வினைத் தேடுவதற்காக , தங்களின் உரிமையை கேட்பதற்காக ஓர் அமைப்பை உருவாக்கினர். இந்த நிலை,1820 களில் புதிய இங்கிலாந்தில் "தையல் தொழிலாளிகளிடையே"   நிகழ்ந்ததுதான் அதிசயமும், வியப்பளிக்கும் விஷயமுமாகும்.நல்ல வாழ்நிலை, நியாயமான கூலி, குறைவான பணி நேரம் மூன்றையும் கோரிக்கைகளாக முன் வைத்தனர். அத்துடன், தங்களின் அமைதியான வாழ்வுக்காக துளியூண்டு போழுபோக்கும் கேட்டு தெருவில் இறங்கிப் போராடினார்கள் நம் சகோதரிகள்,. அவர்களின் உணர்வு, வேதனை, நியாயம் அப்போது நியாயமாக கவனிக்கப் படவில்லை. காவலர்களால் பலமாக கவனிக்கப் பட்டது ; அடித்து, உதைத்து, உடைத்து நொறுக்கப்பட்டது..
பூங்கொடியா..போர்க்கொடியா ..?  
உழைக்கும் பெண்களின் போராட்டம் பிறந்த  இடம், அமெரிக்க மான்சூசெட் நகரின் லோவெல் மில்லில் பணி புரியும்  பஞ்சாலைத் தொழில்  பெண்களிடம்தான்.இதன் காரணம் என்ன தெரியுமா? இளம் பெண்கள், வெறும் 3 டாலர் பணத்திற்காக வாரம் முழுதும்  81 மணி நேரம் உழைத்தனர். உழைப்பின் கால்பங்கு பணம் உறைவிடத்திற்கே பறிபோனது.  ஆண்களின் பணி துவக்க நேரம் காலை மணி 7 . ஆனால் பெண்கள் விடிகாலை 5 மணிக்கே வேலைக்கு வந்து விடவேண்டும். ஏன் தெரியுமா? பெண்கள் பலவீனமானவர்களாம்  . ஆற்றல்/சக்தி குறைந்தவர்களாம். எனவே சாப்பிட்ட பின், அவர்களால் சரியாக வேலை பார்க்கமுடியாது என எண்ணிய முதலாளிகள், உணவு உட்கொள்ளுமுன்பே பணிக்கு 
வரவழைத்தனர். இது எப்படி இருக்கு? மேலும் பெண்களின் பணி நேரம் ஆண்களைவிட அதிகம் என்பது மட்டுமல்ல, கூலியும்  குறைவு..!  
உலகப்..பெண்கள்..சங்கமமான..சங்கம்..!
பெண்களின் கூலி பல நிலைகளில் வெட்டப்பட்டது லோவெல் மில்லில்தான். மனம் கொதித்த பெண்கள் 1834 ல் கூலி உயர்வு கோரி வெளிநடப்பு செய்தனர். ஆனால் ஆள் பலமும், பண பலமும் கொண்ட அதிகார  வர்க்கம் இறங்கி வரவில்லை; அடிபணிய வைத்தது.நீண்ட நாள் போராட்டத்திற்குப் பின் வேறு வழியின்றி பணிக்கு திரும்பினர்.போராடிய பெண்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் 1836 ல் வெளிநடப்பு. நகரின் தெருக்களில் பாடிக்கொண்டே அணிவகுப்பு செய்தனர். என்ன பாட்டு அது? "சுறுசுறுப்பான சுட்டிப்பென்கள் , தொழிற்சாலை இரும்புக் இயந்திரங்களால் நசுக்கப்பட்டு, ஒடுங்கி, சிதைந்து, செத்துப் போவது பாவமில்லையா? இது நியாயமா..?" என்ற பாட்டுதான்.  1844 ல், லோவெல் உழைக்கும் பெண்கள் மறுசீரமைப்புக் கழகம் தோன்றியது. மீண்டும் அமைப்புரீதியான போராட்டம் நடத்தினர் அதன் முதன்மைக் கோரிக்கையே, ஒரு நாளுக்கு 10 மணி நேர பணி என்பதே..!.
மகளிர்..தின..கரு..!    

 உலகம் முழுவதும்,உள்நாட்டுப் போர்களைத் தொடர்ந்து பெண்களின் விதவைத் தன்மை அதிகரித்தது. ஆயிரக்கணக்கான பெண்களை உழைப்பு நாடி தொழிற்சாலைகளுக்குத் துரத்தியது. ஆண்களோ,தங்களுக்குப் போட்டியாக பெண்கள் பணிக்கு வருவதாக கருதினர். எனவே பெண்களை தேசிய தொழிற் சங்கத்திலிருந்து விலக்கி வைத்தனர். பெண்கள் தங்களுக்குள் தனியாக அல்லாடி, போராடிக்கொண்டிருந்த தோல் தொழில், குடைத் தொழில்,தையல் ஆடைத்தொழில்,இயந்திரத் தொழில்,குடை தயாரிக்கும் தொழில், துணி துவைப்பவர்கள் என அனைத்து தொழில்களிலும்  ஈடுபட்டிருந்த  அனைத்து உழைக்கும் பெண்களும்  ஒன்றாகத் திரண்டனர். புகழ்பெற்ற தொழிற்சங்க அமைப்பாக அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக "சர்வதேச ஆடைப் பணியாளர்கள் சங்கம்" உருவானது. 1857 ல்,மார்ச்  8 ம் நாள், ஆயத்த ஆடை நெய்யும் பெண்கள் பணி மேம்பாடு ,10 மணி நேர வேலை, சம உரிமை என மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பேரணி, முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மிகக் கொடூரமான வேலை முறைக்கும், குறைந்த சம்பள்த்திற்கும் எதிர்ப்பு தெரிவிததனர். முதலாளிகளால் ஏவப்பட்ட காவலர்கள், பெண்களையும், குழந்தைகளையும் நசுக்கினர்.போராட்டம் ஒடுக்கப்பட்டது. மீண்டும் இரண்டு வருடங்கள் கழித்து பெண்கள் தங்கள் சங்கத்தைப் புதுப்பித்தன்ர். பின்னரும் அதே மார்ச் 8 ம் நாள் போராட்டங்கள் நடைபெற்றன.
  எலும்பை குலுக்கும் குளிரிலும், வெடித்த போராட்டம்.! 
<photo21></photo21>
அமெரிக்க சரித்திரத்தில் பெண்கள், அதுவும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து சர்வதேச பெண்கள் ஆடைப் பணியாளர் சங்கம் நிறுவினர். பெண்களின் நிலையோ,ஆலைகளில் பரிதாபம்..! எந்நேரமும் தீ பிடிக்கும் அபாயம், ஒளியைத் தேடும் அறைகள், செவியை செவிடாக்கும் இயந்திர ஒலி, மோசமான சூழல், இவற்றில் பின்னிப் பிணைத்து உழைத்தனர். அதிகார வர்க்கம் தொட்டதிற்கெல்லாம் அபராதம் விதித்தது. குலேபகாவலி  படத்தில் வரும் குனிஞ்சா வரி,நிமிர்ந்த  வரி, இட்லி வரி, சட்னி வரி போலத்தான் இங்கும், பேசினால், சிரித்தால்,பாடினால்,துணி கறையானால் என அனைத்திற்கும் அபராதம்தான். நொந்து நூலானார்கள் சகோதரிகள். இதன் விளைவாக, 1903 ல்,சர்வதேச பெண்கள் தொழிற்சங்க இயக்கமும் பற்றிக் கொண்டது.சட்டை தைக்கும் தொழிலாளர்கள் 20 ,000 பேர் திரண்டனர். உலகின் மிகப் பெரிய, மிகவும் நீண்ட காலம் தொடர்ந்த பெண்களின் போராட்டம் இது. எலும்பைக் குலுக்கும் குளிரிலும் 13 வாரங்கள், போராட்டம் தகித்தது.இவர்களில் பெரும்பாலோர் 13 -25 வயதுக்குட்பட்ட பெண்கள்.
    நீதியின்...மறு பக்கம்..பேரம் ..!
முற்றுகைப் போராட்டத்தின் போது, காவலர்கள் பெண்களை  அள்ளிச் சென்றனர்.அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது,நீதியரசர் அவர்களைப் பார்த்து,"ஆண்டவன் உங்களை நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுபடவும், உழைக்கவும், அதன் பின் வயிற்றை நிரப்பவுமே, உங்களைப் படைத்துள்ளான். நீங்கள் இயற்கைக்கும் ,கடவுளுக்கும்  எதிராக செயல்படுகிறீர்கள்..!" என்றார்.போராட்டம் நொறுக்கப்பட்டது. அடுத்த ஆண்டும் போராட்ட களத்தில் பெண்கள்..!காரணம் ஆபத்துக் காலத்தில் வெளியேர்றும் கதவு பூட்டப்பட்டதால், கிடங்கு தீப்பற்றி சுமார் 146 தொழிலாளிகளின் உயிரை தீக்கங்கு குடித்தது; சாம்பலாயினர். இவர்களில் பெரும்பாலோர் 13-25 வயது பெண்பிள்ளைகள.அவர்கள் அனைவரும்  உடல் கரிக்கட்டையாய் மாறியதுதான்..! ஆனால் இந்த உயிர்களின் விலையும் 75 டாலர் என அதிகார வர்க்கம் பேரம் பேசி முடித்தது. 
 கிளாரா ஜெட்கினும்...மகளிர்..தினமும். !  
அமெரிக்க உழைக்கும்பெண்கள் கதையில் அடிக்கடி, மதர் ஜோன்ஸ், எல்லார்வ் ஃப்ளூர் முள்ளாணி, சொஜர்னர் ட்ரூத் எல்சபெத், ஹர்ப்ளின் பொன்ற இயக்கம் சார்ந்த வீரப் பெண்மணிகள் மூலமாகத்தான் அடையாளம் காண்முடிகிறது.1880 ல் பஞ்சாலைப் பெண்கள் மீண்டும் அணி வகுத்தனர், வீதியில் இறங்கினர், முதல் சர்வதேச பெண்கள் தினம் பிப்ரவரி 28, 1908 ல் அமெரிக்கா முழுவதும் அதிகார பூர்வ அரசு விடுமுறை தினமாக் அறிவிக்க்ப்பட்டது. அதுவும் கூட உயிர் நீத்த பெண்களின் நினைவாக உருவானது. பின் 1910-ல் கோபன் ஹேகனில், ஜெர்மனின் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவரும். சர்வ தேச அளவில் பெருமையுடன் பேசப்பட்டவருமான,சோசலிசவாதியான 'கிளாரா ஜெட்கின்'தான் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து போராட வேண்டி, ஒரு வரைவுத்திட்டததை மார்ச் 8 ம் நாளில்முன் மொழிந்தார். அதனை அந்த மாநாடு ஏற்றுக்கொண்டது. பெண்ணுரிமை இயக்கத்தை மதிப்பதற்கும், உலகெங்கிலும் உள்ள பெண்கள் வாக்களிப்பதற்கும் உரிமை கோரிய அந்த நாள் பெண்களின் பொன்னான நாள். அந்த மார்ச் 8 ம் நாளை கோபன்ஹேகன் மாநாடு சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று உலகம் சர்வ தேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.ஆனாலும் கூட 1913 வரையிலும் சர்வ தேச பெண்கள் தினத்தை வேறு வேறு தினங்களில் நடத்தினர்.
   வரலாறு எழுதிய வர்க்கப் போராட்டம்..!
1911-1915 வரை சோசலிஸ்டுகளின் உதவியுடன். பல ஐரோப்பிய நகரஙகளில் சர்வ தேச பெண்க்ள் தினத்தன்று பெண்களின் ஊர்வலங்களையும், அணிவகுப்புகளையும் நடத்தி வந்தனர். தொழிலாளர் தினமான், மே 1 ம் தேதிக்கு இணையாக பெண்கள் தினம் விளங்கியது.1911 ல் 1,000,000 மக்களை இணைத்த மாநாடும், பேரணியும் நடந்தது.தலைமை தாங்கியவர் கிளாரா ஜெட்கின் தான்.ஐரோப்பிய அரசுகளுக்கு கிளாரா ஜெட்கின் சவாலாகவும், சிம்ம சொப்பனமாகவும்தெரிந்தவர். .இவரை ஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் மிகப் பெரிய மாந்திரிகர்/மந்திரவாதி  என அதிகார வர்க்கம் வருணனை செய்தது. ஒரு பெண்ணைக் கண்டு, ஐரோப்பிய அரசு மிரண்டது என்றால் , எத்துணை பெண்கள் சக்தி அவர் கையில் இருந்திருக்கும்? சுமார்100 ஆண்டுகளுக்கு முன், உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த பெண்களும், சாதி, மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் என்ற அனைத்து வேறுபாடுகளையும் உடைத்து, வெற்றிகண்டு, வரலாறு  எழுதிய வர்க்கப் போராட்டம்தான் மார்ச் 8 ..!
   ரொட்டியும்..ரோஜாவும்..!  
புரட்சிகர 1917 ன் மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தினம்
1908 ,ல் பெண்கள் ரொட்டியும், ரோஜாவும் வேண்டி கோரிக்கை வைத்து போராடினர். ரொட்டி உயிர் வாழ்தலுக்காகவும், ரோஜா அமைதிக்காகவும் வைத்தனர். இந்த போராட்டங்களில் நாம் அறிந்தவர், தெரிந்தவர் மிகச் சிலரே..! தெரியாதவர், மறைக்கப்பட்டவர், மறைந்துபோனவர், மறந்து போனவர், பெயர் தெரியாதவர்.. என ஏராளமான பெண்கள் உண்டு.  1917 ல் நடந்த பெண்கள் தினமதான் ரஷ்யப்புரட்சிக்கு முடிவு கட்டியது. பெண்கள பசி,குளிர், யுத்தததின் அடையாளங்கள் விவசாயப் பெண் தொழிலாளர்கள் பொறுமையை வெடிக்கச் செய்தன. இராணுவ வீரர்களின் மனைவிகள், எங்கள் குழந்தைகளுக்கு ரொட்டி வேண்டும், எங்களின் கணவர்கள் கந்தகத்திலிருந்து எழுந்து வர வேண்டும் என்று போராடினர். மார்ச் 8-12 பரவிய கலவரங்களில் பெண்கள் தின வேலை நிறுத்தம் இரண்டறக் கலந்தது. ஜார் மன்னன் வலுக்கட்டாயக்மாக பதவி இறக்கம் செய்யப்பட்டார். 1917, மார்ச் 8 ன்   ரஷ்யாவின் பெட்ரோகிரேடு உழைக்கும் பெண்கள் தினத்திற்கு சரித்திரத்தில் என்றும் நீங்காப் புகழ் உண்டு.
  இன்றும் தொடரும் பிரச்சினைகள்..!



அன்று தொடங்கிய போராட்டத்தின் வேர்கள் இன்று ஆலமரமாய் பரவி நிற்கின்றன. அன்றைய போராட்டத்தின் கோரிக்கைகள் இன்றும் கூட பொருத்தமாகவே உள்ளன. அதே அவல் நிலைகல் இன்றும் தொடருகின்றன. வாக்குரிமை இருப்பினும் தீர்மானிக்கும் திறன் பெண்களிடம் கிட்டவில்லை. 33% சத இடஒதுக்கீடு இன்னும் எட்டாக் கனிதான். இந்தியத் தொழிலாளிகளில் 93%பேர் முறைசாராத் தொழிலாளிகள். இதில் கணிசமானவர்கள் பெண்கள். இவர்களுக்கும் நவீன தாராளமயக் கொள்கையால், நிரந்தரப் பணிகள் உடைந்து ஒப்பந்த காஷூவல் பணிகளாகிவிட்டன. எந்த விதநிரந்தர ஏற்பாடும் இல்லை.. வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகிவ்ருகிறது. ஆனால் வேலைக்கு வரும் பெண்களில் எண்ணிக்கை பெருகுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலததால், பணி நேரம் 12 மணியாக அதிகரிக்கிறது. சங்க உரிமை மறுக்கப்படுகிறது. கூலிக்கோ உத்திரவாதம் இல்லை. பணியிடங்களில் பாலியல் தொல்லைகள், சம்பளப்பிரச்சினை என பிரச்சினைகள் தொட்ர்ந்த வண்ணம் உள்ளன. பென்கள் மீதான வன்முறைகள் புதிய மற்றும் பல கோர வடிவங்களில் மோதுகின்றன..
  சமூகக் கட்டமைப்பில் பெண்கள்..!

நம் இந்திய நாட்டின் ஜான்சிராணி, கேப்டன் லட்சுமி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், ஜானகி அம்மையார்,பாப்பா உமாநாத் என ஏராளம் பேர் பெண்களின் உரிமைக்காக உழைத்தவர்கள் உள்ளனர். ஆனால் எழுத்திலும், மக்கள் மனத்திலும் நின்றவர் குறைவானவர்களே..! தன் முகமே தெரியாமல், உயிர்த் தியாகம் தந்து தான், காலச்சக்கர சுழற்சியில் மகளிர் உரிமை பெறப்பட்டது. ஆனால் இன்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மைய அரசு பெண்களுக்கு 33 % கொடுப்பதிற்கு, குரங்கும் அப்பமும் கதையாக வேலை செய்கிறது..!.இன்னொரு பக்கம் , இந்த சமூக கட்டமைப்பில், பெண்களின் மூளைப் பெட்டகத்தை அஞ்சறைப் பெட்டியிலிருந்து அகல விடாமல் பார்த்துக் கொள்ள அனைத்து முயற்சி களையும் மேற்கொள்கிறது. இதற்கிடையில் நாம் பெண். ஆண் உழைக்கும் வர்க்கப் போராட்டத்தில் உழைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களின் சர்வதேச ஒற்றுமையை முன்னெடுத்து செல்வோம். அப்பொதுதான்  ண்கள் சுயமாக ,அறிவியல் அலசலுடன், சிந்தித்து செயல்பட அனுமதிக்கபடும்போதுதான், உண்மையான பெண் உரிமை கிட்டும்.   .





பேரா.சோ.மோகனா



--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

No comments:

Post a Comment