முதல் பக்கம்

Mar 20, 2012

துளிர் இல்லங்களில் தேசிய அறிவியல் தினம்

ஆண்டிபட்டி கிளை:
பிப்ரவரி,28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஆண்டிபட்டி ஒன்றியக் கிளையின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைச் செயலாளர் ஆர்.அம்மையப்பன் வரவேற்றுப் பேசினார். மாவட்டத் துணைச் செயலாளர் டி.கருணாநிதி சி.வி.ராமன் மற்றும் கணிதமேதை ஸ்ரீனிவாச இராமானுஜம் குறித்து கருத்துரையாற்றினார். ஆசிரியர் காவேரி நன்றி கூறினார். 25 மாணவியர் கலந்துகொண்டனர்.
உத்தமபாளையம்:
கோம்பை-இரங்கநாதபுரத்தில் உள்ள சி.வி.ராமன் துளிர் இல்லத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் உத்தமபாளையம் கிளை அமைப்பாளர் குமரேசன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் துவக்கவுரையாற்றினார். மாவட்டத்துணைத் தலைவர் முனைவர்.மு.முகமது ஷெரீப் விஞ்ஞானி.சி.வி.ராமன் மற்றும் கணிதமேதை ஸ்ரீனிவாச இராமானுஜம் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து கருத்துரையாற்றினார். துளிர் இல்ல மாணவியர் தாங்கள் தயாரித்த எளிய அறிவியல் கருவிகளைப் பார்வைக்கு வைத்து விளக்கமளித்தனர். ஒருங்கிணைப்பாளர் தமிழரசி ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நண்பர்.தங்கப்பாண்டியன் நன்றி கூறினார். 40 மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர்.
ஆனைமலையன்பட்டி-வெள்ளக்கரடு சமத்துவபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் அறிவியல் தினக் கருத்துரை வழங்கினார். கருத்தாளர் சி.ஈஸ்வரன் அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். க.இராமச்சந்திரன் குழந்தைகளுடன் கலந்துரையாடலை நடத்தினார். மூன்று பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். சி.வி.இராமன் துளிர் இல்லமாக துவங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.
கம்பம்:
கூடலூர், விக்ரம் சாராபாய் துளிர் இல்லத்தில் நடைபெற்ற அறிவியல் தின நிகழ்ச்சியில் துளிர் இல்ல மாணவர் பொ.சுரேந்தர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன் துவக்கவுரையாற்றினார். கப்பல் பொறியாளர் திரு.செல்லப்பாண்டியன் மிதக்கும் இயந்திரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். மாவட்டக் கருத்தாளர் அ.செல்வன் வாழ்த்துரை வழங்கினார். 40 மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக துளிர் இல்ல மாணவர் யோகேஷ்கண்ணன் நன்றி கூறினார். அறிவியல் இயக்க நண்பர்கள் முரளி, சிவக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
கருநாக்கமுத்தன்பட்டி, அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் சி.வி.இராமன். அரிஸ்டாட்டில் துளிர் இல்லங்களின் சார்பில் அறிவியல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் சி.ஈஸ்வரன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் அறிவியல் தினக் கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உத்தமபாளையம் வட்டாரச் செயலாளர் த.முருகன் அறிவியல் திறனறிதல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்திப் பேசினார். துளிர் இல்ல மாணவர்கள் கிருஷ்ணமூர்த்தி, யோகேஷ் ஆகியோர் விஞ்ஞானிகள் சி.வி.இராமன் மற்றும் சீனிவாச இராமானுஜம் குறித்துப் பேசினர். மாணவியர் பவினா, கல்பனாதேவி உள்ளிட்ட மாணவியர் குழுவாக அறிவியல் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர். துளிர் இல்ல நண்பர் க.இராமச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 25பேர் கலந்துகொண்டனர்.
சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் நடந்த தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் அறிவியல் தினக் கருத்துரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஓவியாதனசேகரன் எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்துகாட்டினார். அறிவியல் இயக்க கருத்தாளர் கூடலூர்.பாஸ்கரன் மாணவர்களிடையே ஆர்வமூட்டும் செயல்பாடுகள் மற்றும் அறிவியல் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினார். சி.ஈஸ்வரன் கணிதமேதை இராமானுஜம் குறித்து பேசினார். க.இராமச் சந்திரன் நன்றி கூறினார். நியூட்டன் துளிர் இல்லம்,எடிசன் துளிர் இல்லம், ஐசக் அஸிமோ துளிர் இல்லம், கலிலியோ துளிர் இல்லம், எட்வர்டு ஜென்னர் துளிர் இல்லம் ஆகிய ஐந்து துளிர் இல்லங்களைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர்.
தேனி:
தேனி ரைட் சகோதரர்கள் துளிர் இல்லத்தில் நடந்த அறிவியல் தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் கலந்துகொண்டு விஞ்ஞானி.சி.வி.ராமன் மற்றும் கணிதமேதை ஸ்ரீனிவாச இராமானுஜம் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து கருத்துரையாற்றினார். மேலும் சைக்கிள், அனஷ்தீசியா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்கள் அனைவருக்கும் அறிவியல் தின பட அட்டை வழங்கப்பட்டது. 35 பேர் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

No comments:

Post a Comment