முதல் பக்கம்

Mar 2, 2012

மார்ச்,8-உலக மகளிர் தினத்தை முன்னிட்டு போட்டிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த முப்பது ஆண்டுகளாக அறிவியல் பிரச்சாரம், அறிவொளி, அறிவியல் வெளியீடுகள், சுற்றுச்சூழல் பணிகள் என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிவருகின்ற அதேவேளையில் பெண்கள் மேம்பாட்டிற்கென தனி உபகுழுவை அமைத்து அவர்களுக்கு பயிற்சிகளையும் வழிகாட்டுதலையும் வழங்கிவருகிறது. மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏதேனும் ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், சுய உதவிக்குழு பெண்களுக்கும் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு சின்னத்திரையும் பெண்களும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பின்வரும் தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 ஆர்வமுள்ளவர்கள் தங்கள் படைப்புகளை வருகின்ற மார்ச்,19ஆம் தேதிக்குள் எஸ்.சேசுராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,81/பரமேஸ்வரி காம்பவுண்ட், ஜெகநாதன் தெரு,தேனி-625513 செல்: 98656 53430, 94880 11128 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றிபெறுபவர்களுக்கு மாநில அமைப்பின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

வ.எண்
வகுப்பு/
பிரிவினர்
போட்டி
தலைப்பு
அளவு
1.
6,7,8
ஓவியம்
சின்னத்திரைக்கு நான் கொடுக்கும் விளம்பரம்..

A3 சார்ட் பேப்பர்-
48×34செ.மீ.
2.
9,10,11,12
கட்டுரை
தொலைக்காட்சியால் தொலைந்து போகிறோம்..

5 பக்க அளவில்...
3.
கல்லூரி
கட்டுரை
சின்னத்திரையா?
சிலந்தி வலையா?

5 பக்க அளவில்...
4.
சுய
உதவிக்குழு
கட்டுரை
பெண்களின் கண்களென்ன கொட்டுகின்ற அருவியா!

5 பக்க அளவில்...


     மேலும் கிளைத்தொடர்புகளுக்கு...
ப.ஸ்ரீதர்_கிளைச்செயலாளர்_போடி_94425 20042
ஆர்.அம்மையப்பன்_கிளைச்செயலாளர்_ஆண்டிபட்டி_94865 05818
எஸ்.ராம்சங்கர்_கிளைச்செயலாளர்_பெரியகுளம்_99525 11460
மு.தெய்வேந்திரன்_கிளைச்செயலாளர்_தேனி_97914 57385
க.முத்துக்கண்ணன்_கிளைச்செயலாளர்_கம்பம்_  99440 94428

தே.சுந்தர்_மாவட்டச்செயலாளர்_தேனி_94880 11128
 அன்புடன்.. எஸ்.சேசுராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

No comments:

Post a Comment