தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் கிளையின் சார்பில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லக்குழந்தைகளின் கனவு-படைப்பிதழ் இன்று-மார்ச்,25,2012-வெளியிடப்பட்டது. கிளைத்தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். துளிர் இல்ல மாணவர் பூபேஸ் கண்ணன் வரவேற்றார். கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன், துளிர் இல்ல மாணவர் பொ.சுரேந்தர் ஆகியோர் இதழின் நோக்கம் பற்றி பேசினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் படிப்பும் படைப்பும் என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். மாவட்டக்கருத்தாளர் அ.செல்வன் இதழை வெளியிட்டார். மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர் சி.பிரகலாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முரளி, இராஜேஷ், இராஜ்குமார், இராஜசேகர், சுரேஷ்கண்ணன், பாஸ்கர் உள்ளிட்ட நண்பர்களும் 30 மாணவர்களும் கலந்துகொண்டனர். மாணவர் க.அஜித்குமார் நன்றி கூறினார். மாணவர் க.தினேஷ்குமார் தொகுத்து வழங்கினார்.
--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI
No comments:
Post a Comment