முதல் பக்கம்

Mar 24, 2012

துளிர் இல்லக் குழந்தைகள் வாசிப்பு முகாம்


மார்ச்,23,2012 அன்று காலை முதல் மாலை வரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், போடி ஒன்றியக்கிளையின் சார்பில் துளிர் இல்லக்குழந்தைகளுக்கான வாசிப்பு முகாம் சூலப்புரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மீனாட்சிபுரம், சிலமலை மற்றும் சூலப்புரம் ஆகிய மூன்று கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட துளிர் இல்லக் குழந்தைகள் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்க மாவட்ட துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் குழந்தைகளுக்கான சில கதைகளைச் சொல்லி துவக்கவுரையாற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்துகாட்டினார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் குழந்தைகளுக்கான செயல்பாடுகளைச் செய்தார். குழந்தைகள் தனித்தனியாகவும் பின்னர் குழுக்களாகவும் புத்தகங்களை வாசித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். சுவாரசியமான சில படங்களும் திரையிடப்பட்டன. துளிர் இல்ல மாநில ஒருங்கிணைப்பாளர் அ.அமலராஜன் நிறைவுரையாற்றினார். போடி ஒன்றியக்கிளைச் செயலாளர் ப.ஸ்ரீதர் நன்றி கூறினார். மாவட்டப்பொருளாளர் எஸ்.சிவாஜி, நாகராஜ், பாண்டி உள்ளிட்ட நண்பர்களும் கலந்துகொண்டனர்.


--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

No comments:

Post a Comment