முதல் பக்கம்

Dec 8, 2014

துளிர் திறனறிதல் தேர்வு-2014


டிசம்பர் 6 அன்று தேனி மாவட்டத்தில் 10 பள்ளிகளில் நடைப்பெற்றது.மொத்தம் 237 மாணவ மாணவியர் இத்தேர்வினை எழுதினர்….அந்தந்த கிளைகளுக்கு உடபட்ட நிர்வாகிகள் தேர்வினை சிறப்பாக வழிநடத்தினர்.எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.தேர்வெழுதிய அனைத்து மாண்வர்களுக்கும் துளிர் இதழ் ஜனவரி 2015 முதல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Nov 28, 2014

தேசிய குழந்தைகள் அறிவியல் தேனி மாவட்ட மாநாடு 2014

நிகழ்ச்சி துவக்கம்: மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய 22 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட  மாநாடு நவம்பர்,27 அன்று பெரியகுளம் சரஸ்வதி  நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டதுணைத்தலைவர் முனைவர் ஜி.செல்வராஜ தலைமை வகித்தார். பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியம்,பெரியகுளம் கிளைப் பொருளாளர் திருமிகு.எஸ்.ஏ.செல்வராஜ்,சரஸ்வதி நடுநிலைப்பள்ளி தாளாளர் திருமிகு.எம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச்செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் மாநாட்டைத் துவக்கிவைத்துப்பேசினார்.
இளம் விஞ்ஞானிகள் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்: அதனையடுத்து கம்பம், தேனி, கடமலை-மயிலை, போடி, பெரியகுளம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளி,துளிர் இல்லங்களில் இருந்து மாணவர்கள் வானிலை மற்றும் காலநிலையை புரிந்து கொள்வோம் எனும் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் முனைவர் எஸ்.பிரபு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயகத்தின் மாவட்ட தலைவர் திருமிகு.பா.செந்தில்குமரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த ஆறு ஆய்வுகளை தேர்வு செய்தனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்ட மாணவர்கள் வரும் டிசம்பர் 7,8,9 புதுக்கோட்டை மொளண்ட் ஜியோன் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மாநில அள்விலான மாநாட்டில் தேனி மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள உள்ளனர்.
தேர்வான ஆய்வுகள்: தமிழ் முதுநிலை பிரிவில் ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியரின் காலநிலைமாற்றமும் உணவுப்பழக்கவழக்கங்களும் (குழுத்தலைவர்:எம்.ஜெயச்சித்ரா) என்ற ஆய்வும் கம்பம் ஸ்ரீமுத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை வனப்பகுதியில் சுற்றுச்சூழல் மாறுபாடு(எஸ்.கொளதம்) என்ற ஆய்வும் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்ல மாணவர்களின் காலநிலை மாற்றமும் எம்பகுதி மக்களும்(பா.சரவணக்குமார்)என்ற ஆய்வும் தேர்வுசெய்யப்பட்டன.
தமிழ் இளநிலை பிரிவில் குண்டல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் காலநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளும்(பா.அபிநயா) என்ற ஆய்வும் பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் மண்புழு பற்றிய ஆய்வும் மழைஅளவும்(எஸ்.முகமது வாஹித்) என்ற ஆய்வும் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கல்குவாரியாக மாறும் மலையும் அதன் விளைவுகளும்(நா.ஜீவித்குமார்) என்ற ஆய்வும் தேர்வு செய்யப்பட்டன.   
நிறைவுரை:பெரியகுளம் ஒன்றிய கூடுதல் உதவித்தொடக்க அலுவலர் திருமிகு.மு.திலகவதி மற்றும் மாநிலச் செயலாளர் திருமிகு தே.சுந்தர் ஆகியோர் தேர்வான இளம்விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிப் பேசினர்.பெரியகுளம் கிளைச் செயலாளர் திருமிகு.எஸ்.ராம்சங்கர் நன்றியுரை வழங்கினார். மாவட்டப்பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி,மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு.எஸ்.ஞானசுந்தரி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.எம்.மணிமேகலை.ஓவியர் பாண்டி ஆகியோர் மாநாட்டினை ஒருங்கிணைத்தனர்.ஆசிரியர்கள், மாணவர்கள், இயக்கப்பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

Nov 20, 2014

பெரியகுளம் கிளைச்செயற்குழு


நவம்பர் 19 பெரியகுளம் கிளைச் செயற்குழுக்கூட்டம் பெரியகுலம் டிரயெம்ப் நடு நிலைப்பள்ளியில் மாலையில் நடைப்பெற்றது.கிளைத்தலைவர் ஏ.எஸ் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.செயலர் ஆர்.ரம்சங்கர் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயலர் வெங்கட் மற்றும் மாநிலச் செயலர் தியாகராஜன் கலந்து கொண்டு கிளைச்செயல்பாடுகள் குறித்து பேசினர்.உறுப்பினர் சேர்க்கையினை தீவிரப்படுத்த முடுவு எடுக்கப்பட்டது.கிளைச் செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்,கார்த்திக்கேயன் பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Nov 14, 2014

போடி கிளைச்செயற்குழு


நவம்பர் 13 போடி கிளை செயற்குழுக்கூட்டம் போடி பேருந்து நிலையம் அருகே மூட்டா அலுவலகத்தில் மாலையில் நடைப்பெற்றது.கிளைத்தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.செயலர் ஸ்ரீதர் வரவேற்பு ஆற்றினார்.மாவட்ட இணைச்செயலர் ஜேசுராஜ் கலந்து கொண்டு கிளைச்செயல்பாடுகள் குறித்து பேசினார். மாவட்ட துணைத்தலைவர் திருமிகு சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கிளைப்பொருளர் ஜெகதீசன் நன்றி வழங்கினார்.

Nov 10, 2014

மாவட்ட செயற்குழு கூட்டம் 7

நவம்பர் 9 ஞாயிறு அன்று தேனி ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடமியில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.அம்மையப்பன் தலைமை தாங்கினார். தேனி கிளை செயலாளர் தெய்வேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலைகளை மாவட்ட செயலர்.வி.வெங்கட் எடுத்துரைத்தார். கிளை செயற்குழு கூடுவதன் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போடி பெரியகுளம் கம்பம் கிளைகள் உடனடியாக கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.

மாவட்ட செயற்குழு கூட்டம் 7


தேனி மாவட்ட தமிழ்நாடுஅறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம் நவமபர் 9 ஞாயிறு அன்று தேனி ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடமியில் நடைப்பெற்றது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.அம்மையப்பன் தலைமை தாங்கினார். பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ் பாலசுப்ரமானியம் முன்னிலை வகித்தார்.தேனி கிளை செயலாளர் தெய்வேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலைகளை மாவட்ட செயலர்.வி.வெங்கட் எடுத்துரைத்தார்.கிளை செயற்குழு கூடுவதன் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.போடி பெரியகுளம் கம்பம் கிளைகள் உடனடியாக கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.உறுப்பினர் சேர்க்கை வலியுறுத்தப்பட்டது.திறனறிதல் தேர்வில் மாணவர்கள் எண்ணிக்கையினை கிளை வாரியாக அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது. மாவட்ட இணைச்செயலர் ஜேசுராஜ் நன்றியுரை வழங்கினார்.

Oct 28, 2014

மங்கள்யான்: விஞ்ஞானி சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் சார்பில் அக்டோபர் 27 திங்கள் கிழமை அன்று விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஒரே நாளில் மூன்று பள்ளிகளில் இந்நிகழ்ச்சிக்கு மிகச்சிறப்பாக திட்டமிடப்பட்டு இருந்தது. காலை 10 மணி அளவில் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளோடு விஞ்ஞான பிரச்சார் விஞ்ஞானி த.வி .வெங்கடேஷ்வரன் உரையாற்றினார். மதியம் சுருளிப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைப்பெற்றது.மாலை கூடலூர் என்.எஸ்.கே,பி,மேல்நிலைப்பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.மாநிலச் செயலர் தே.சுந்தர், மாவட்ட செயலர் வி.வெங்கட் பாளையம் கிளைத்தலைவர் திருமிகு வளையாபதி மற்றும் அறிவியல் இயக்க ஆர்வலர்கள் பெரோஸ் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.மங்கள்யான் செயற்கைகோள் தொடர்பாகவும் இந்திய அறிவியல் ஆய்வுகள் குறித்தும் விஞ்ஞானி விளக்கம் அளித்தார்.

Oct 14, 2014

வழிகாட்டி ஆசிரியர்களுக்கான NCSC பயிற்சி முகாம் 2-2014


தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அக்டோபர் 13 திங்கள் அன்று பெரியகுளம் சரஸ்வதி நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.பள்ளிதலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார். மாவட்டத்தலைவர் பா.செந்தில குமரன் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடர்பாக அறிமுகவுரை ஆற்றினார். மாநிலக்கருத்தாளர் திருமிகு.பேரா.சோ.மோகனா கலந்து கொண்டு மாநாட்டிற்கான கருப்பொருள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்தனர்.80 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.ஆசிரியர் ராஜா நன்றியுரை வழங்கினார்.

Oct 10, 2014

வழிகாட்டி ஆசிரியர்களுக்கான NCSC பயிற்சி முகாம் 1-2014


தேசிய குழந்தைகள அறிவியல் மாநாட்டிற்கான உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அக்டோபர் 9 வியாழன் அன்று கம்பம் நாகமணிஅம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஓவியர் பாண்டி தலைமை தாங்கினார்.பள்ளி முதல்வர் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் வரவேற்புரை ஆற்றினார். உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் வனஜா மேரி அறிமுகவுரை ஆற்றினார்.மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கலந்து கொண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடு தொடர்பாக அறிமுகவுரை ஆற்றினார். மாநிலக்கருத்தாளர் முனைவர் தினகரன் மற்றும் மாவட்ட இணைச்செயலர் திருமிகு.ஞானசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டிற்கான கருப்பொருள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்தனர்.60 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

Oct 7, 2014

இளம் விஞ்ஞானியர் விருது-குழந்தைகள் அறிவியல் மாநாடு-வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் அறிவிப்பு-2014

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

வணக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST, Govt. of India), தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC-Network, New Delhi) ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) கடந்த 21 ஆண்டுகளாக இளம் விஞ்ஞானியர் விருது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ மக்கள் அமைப்பு. அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்தது முதலாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள், குழந்தைமையக் கல்விக்கான முயற்சிகள், ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான வாசிப்பு முகாம்கள் என ஏராளமான அறிவியல், கல்வி விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

குழந்தைகள் பள்ளியில் படிக்கின்ற அறிவியலை வாழ்வியல் நடைமுறையோடு பொருத்திப் பார்த்து அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவுகின்ற இம்மாநாட்டில் இந்தியா முழுவதுமாக சுமார் 9 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று தங்களது ஆய்வுகளைச் சமர்ப்பித்து வருகின்றனர்.

மாவட்டத்திற்கு சராசரியாக 200 ஆய்வுகள் வீதம் மாநிலம் முழுவதும் 6000 ஆய்வுகள் வரையிலும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு ஆய்வுக்குழுவிற்கு 5 பேர் வீதம் 6000 ஆய்வுகளின் மூலம் 30,000 குழந்தைகள் ஆண்டுதோறும் இந்த ஆய்வுப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இம்முப்பதாயிரம் குழந்தைகள் மூலமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் இலட்சக்கணக்கான மக்களையும் சென்றடைகின்றது. மாவட்ட / மாநில / தேசிய அளவிலான மாநாடுகள் நடைபெறும் இடங்களில் ஒவ்வொரு குழந்தையும் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைவருடனும் ஒன்றாகக் கலந்து பழகும்போது இந்தியாவின் தேசிய ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை, நாட்டின் பன்முகத்தன்மையை நிச்சயம் உணரமுடியும்.

மேலும் கடந்த 6 ஆண்டுகளாக தெற்கு ஆசிய நாடுகளான நேபாளம், பூடான், பர்மா, மலேசியா, சிங்கப்பூர், தைவான் எனப் பல நாட்டு குழந்தைகளும் ஆசிரியர்களும் கூட பங்கேற்றுவருகின்றனர். அவர்களுடன் பழகும் வாய்ப்பையும் இம்மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் பெறுகின்றனர். 

மேலும் இம்மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் நாட்டின் முக்கிய விஞ்ஞானிகளுடன் நேரடியாகவும், வீடியோ கான்பரன்சிங் மூலமும் கலந்துரையாடுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாளாகக் கருதி கொண்டாடுகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் வாழ்வின் இலட்சியப் பயணத்திற்கு வித்திடுவதாக இம்மாநாடு அமைகிறது.



மாநாட்டின் மையக்கருப்பொருள்:

இந்த ஆண்டிற்கான மையக் கருப்பொருளாக வானிலை மற்றும் காலநிலையைப் புரிந்துகொள்வோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் ஏற்படக்கூடிய வெப்பம், மழையளவு, ஈரப்பதம், காற்றழுத்தம் இவைகளில் காணப்படும் மாறுபாடுகளை வானிலை என்றும் ஒரு மாதமோ அல்லது வருடமோ அல்லது குறிப்பிட்ட கால அளவின் வானிலைத் தொகுப்பை நாம் காலநிலை என்றும் குறிப்பிடுகின்றோம்.

வானிலை மற்றும் காலநிலையைத் தீர்மானிக்கும் இயற்கை காரணிகளாக உயரத்தையும் நில மற்றும் நீர் அமைப்புகள், அதில் அமைந்துள்ள தாவர விலங்கினங்களையும் குறிப்பிடுகிறோம். வானிலைக்கும் காலநிலைக்கும் இயற்கை காரணிகளுக்கும் பிரிக்க இயலாத தொடர்பு உண்டு. இதில் எங்கு மாற்றம் எங்கு நிகழ்ந்தாலும் பாதிப்பு நிச்சயம் இருக்கும். அனுகூலமான நிலை ஒரு காலத்தில் இருந்தாலும் மனிதத் தலையீடுகளால் ஏராளமான பாதிப்புகள் உண்டாகியிருக்கின்றது. அது நம் வாழ்வாதாரச் சூழலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் சூழலை, சூழலின் வானிலை மற்றும் காலநிலையைப் பற்றி புரிந்துகொள்ளும் விதமாகவும் எதிர்கால தலைமுறையினரிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவுமே இத்தலைப்பு மையக்கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொதுத் தலைப்பின் கீழ் 6 துணைத்தலைப்புகள் உள்ளன. அவை...

1. நம்மைச் சுற்றியுள்ள வானிலை மற்றும் காலநிலை..

2. வானிலை மற்றும் காலநிலையில் மனிதத் தலையீடுகளால் ஏற்படும் விளைவுகள்..

3. சூழல் மண்டலமும் வானிலை & காலநிலையும் ...

4. சமூகம், கலாச்சாரமும் வானிலை & காலநிலையும் ...

5. விவசாயமும் வானிலை & காலநிலையும் ...

6. ஆரோக்கியமும் வானிலை & காலநிலையும் ...



மாநாட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்:

இந்தியா முழுவதும் உள்ள 10-17 வயதுக்குழந்தைகள் அனைவரும் பங்கேற்கலாம். அரசு, தனியார், மெட்ரிக் என அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்கலாம். பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளும் இரவுப்பள்ளி மற்றும் துளிர் இல்லக் குழந்தைகள், சிறப்பியல்புக் குழந்தைகள், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகள் என அனைவரும் பங்கேற்கலாம். உரிய வயது மட்டுமே ஒரே தகுதி..

இம்மாநாட்டிற்கான் ஆய்வினை குழுவாக மேற்கொள்ள வேண்டும். ஒரு குழுவிற்கு 3 முதல் 5 பேர் வரை இருக்கலாம். ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 

வழிகாட்டி ஆசிரியராகச் செயல்படுபவர் ஆசிரியராகவோ, தன்னார்வலராகவோ, பெற்றோராகவோ கூட இருக்கலாம்.

ஆய்வு எப்பொழுதும் உள்ளூர் பிரச்சினைகள், தகவல்கள், செயல்பாடுகள் உள்ளதாய் இருக்கவேண்டும். ஒரு மாவட்டத்திற்குரியவர் அடுத்த மாவட்ட தகவல்களை எடுத்து ஆய்வு மேற்கொள்ளுதல் கூடாது.

ஆய்வு சோதனையாகவோ கணக்கெடுப்பு முறையாகவோ மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தியதாகவோ இருக்கலாம். ஆனால் உயிர்ப்பொருட்கள், ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் மற்றும் மனிதனின் உணவு, பானம் ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளுதல் கூடாது.

இந்நிகழ்வு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டி சிந்தனையை வளர்த்து அதற்கு அறிவியல் கண்ணோட்டத்தோடு உரிய வடிவம் கொடுக்கும் நல்ல வாய்ப்பை அளிக்கும் மாநாடே தவிர போட்டி அல்ல. 

10-13 வயதுடைய இளநிலை மாணவர்கள் 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 14-17 வயதுடைய முதுநிலை மாணவர்கள் 3500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும். ஆய்வறிக்கையை தட்டச்சு செய்தோ , கையெழுத்திலோ சமர்ப்பிக்கலாம்.

ஆய்விற்கான செலவு ரூ.250க்கு மிகாமல் இருக்க வேண்டும்.



வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்:

இந்த ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகச் செயல்பட விரும்பும் ஆசிரியர், பெற்றோர், ஆர்வலர்களுக்கான பயிற்சி முகாம் அக்.9 அன்று கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.



மாவட்ட / மாநில / தேசிய மாநாடு நடைபெறும் விபரம்:

தேனி மாவட்ட அளவிலான மாநாடு நவம்பர் இரண்டாவது வாரம் தேனியிலும் மாநில அளவிலான மாநாடு நவம்பர் இறுதியில் தஞ்சாவூரிலும் தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27-31 தேதிகளில் நடைபெற உள்ளது.


தேனி மாவட்டத்தின் இளம் விஞ்ஞானியர்:

நமது மாவட்டத்தில் கடந்து 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆய்வுகள் குழந்தைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டில் ஆர்.நிவேதா என்ற மாணவி (விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன் பட்டி) நாகலாந்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2009ஆம் ஆண்டில் ஷெரின் பர்கானா என்ற மாணவி (விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன் பட்டி) குஜராத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2010ஆம் ஆண்டில் செல்லத்துரை என்ற மாணவன் (எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி, கோம்பை) சென்னையில் நடைபெற்ற மாநாட்டிலும் 2011ஆம் ஆண்டில் பொ.சுரேந்தர் என்ற மாணவன் (விக்ரம் சாராபாய் துளிர் இல்லம், கூடலூர்) ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாநாட்டிலும் 2012ஆம் ஆண்டில் ஜெனிபர் பாத்துமா என்ற மாணவி (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்) வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டிலும் 2013ஆம் ஆண்டில் என்.லிசா என்ற மாணவி (அரசு மேல்நிலைப் பள்ளி, ஜி.கல்லுப்பட்டி) போபாலில் நடந்த மாநாட்டிலும் கலந்துகொண்டு குழந்தை விஞ்ஞானியர் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் விபரங்களுக்கு: 
 வி.வெங்கட்ராமன், மாவட்டச் செயலாளர்:8870703929
தே.சுந்தர், மாநிலச்செயலாளர்: 9488011128 

Sep 30, 2014

செப்.5 ஆசிரியர் தின போட்டி முடிவுகள் அறிவிப்பு -2014

அன்புடையீர், வணக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களுக்கான கவிதை, கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.. மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:

9-12 வகுப்பு மாணவர்களுக்கான என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர் கட்டுரைப்போட்டியில் சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.கிருபமதிவதனி முதலிடத்தையும் ஜி.கல்லுப்பட்டி புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.திவயதர்ஷினி இரண்டாமிடத்தையும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவன் அ.தீபக் ராஜ் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆசிரியர்களுக்கான வகுப்பறையில் வசந்தம் கட்டுரைப்போட்டியில் பழனிசெட்டிபட்டி ஆசிரியை கெ.மணிமாலா முதலிடத்தையும் கூடலூர் அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் தெ.அழகேசன் இரண்டாமிடத்தையும் சீலையம்பட்டி பாரதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை த.ச.பத்மாவதி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்கான இப்படித்தான் இருக்கவேண்டும் வகுப்பறை என்ற கவிதைப்போட்டியில் வீரபாண்டி தேனி கலை அறிவியல் கல்லூரி மாணவி ஈ.பாண்டீஸ்வரி முதலிடத்தையும் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவி ரேவதி விஸ்வநாதன் இரண்டாமிடத்தையும் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவி எ.அரபத் நிஷா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். ஆர்வலர்களுக்கான அரசுப்பள்ளிகள்: நேற்று இன்று நாளை கட்டுரைப்போட்டியில் ஆண்டிபட்டி ஜெ.எட்வர்டு இன்பராஜ் முதலிடமும் தேவாரம் இரா.வே.இளங்கோவன் இரண்டாமிடமும் மொட்டனூத்து துரை.சுப்ரமணியன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

வெற்றிபெற்ற, போட்டிகளில் பங்குபெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் தே.சுந்தர், மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச்செயலாளர் வெங்கட்ராமன், மாவட்டப்பொருளாளர் மஹபூப் பீவி, மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணன் ஆகியோரின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Sep 23, 2014

மாவட்ட பொதுக்குழு கூட்டம்: 1

செப்டமபர் 20 சனி அன்று மாலை தேனி கருணா பயிற்சி மையத்தில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார். தேனி கிளைச்செயலர் தெய்வேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். ஜூன் 23 2013 மாவட்ட மாநாட்டிற்க்குப்பிறகு தேனி மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலைகளை மாவட்ட செயலாளர் வி.வெங்கட் அறிக்கையாக சமர்ப்பித்தார்.பிறகு அறிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது.மாட்டத்தில் நடைப்பெற்ற வேலை குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.அனைத்து கிளைகளிலும் செயல்பாடுகளை எடுத்துச் செல்வதன் அவசியம் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநிலச் செயலர் தியாகராஜன், சுந்தர் ஆகியோர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து கருத்துகளை வழங்கினர். மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் குறித்து எடுத்துரைத்தனர்.முப்பதுக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்

Aug 21, 2014

துளிர் அறிவியல் வினாடி வினா-2014

ஆகஸ்ட் 20 புதனன்று மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி கம்பம் ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடைப்பெற்றது….15 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து நடு நிலை,உயர்நிலை,மேல்நிலை ஆகிய பிரிவுகளில் மாணவ,மானவியர் பங்கேற்றனர்.வினாடி வினாப்போட்டியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களூக்கான பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்திலேயே நடைப்பெற்றது.கம்பம் கிளைத்தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். கிளைச்செயலர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார்.கல்லூரி தாளாளரும் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான என்.எம்.இராமகிருஷ்ணன் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.கல்லூரி முதல்வர், மாநிலச் செயலர் தே.சுந்தர் மற்றும் மு.தியாகராஜன் மாவட்ட செயலர் வெங்கட் கூடலூர் கிளை பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Aug 15, 2014

ஹிரோசிமா- நாகசாகி நினைவு தின நிகழ்ச்சிகள்: 2014

அறிவியல் ஆக்கத்திற்கே அனும் குறிக்கோளை மையப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஹிரோசிமா நாகசாகி நினைவு தின நிகழ்ச்சிகள் தேனி மாவட்டத்தில் அறிவியல் இயக்கம் சார்பில் அனுசரிக்கப்படுகின்றன.கூடலூர் நகரக்கிளை சார்பில் கூடலூர் பூங்கா ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் நினைவு தினம் ஆகஸ்ட் 6 அன்று அனுசரிக்கப்பட்டது.கம்பம் கிளைச் செயலாலர் திருமிகு,க.முத்துக்கண்ணன் கூடலூர் கிளை பொருளாளர் திருமிகு,ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று அணு ஆயுதத்தின் கோரங்களை மாணவர்களுக்கு விளக்கினர். தேனி கிளைச் செயலாளர் திருமிகு.தெய்வேந்திரன் பெரியகுளம் கிளைகளில் டிரயம்ப்,எட்வர்டு மற்றும் பாரதியார் நடுநிலைப்பள்ளியில் மிகச்சிறப்பாக நிகச்சிகளை ஒருங்கிணைத்தார். கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியம் மற்றும் கிளை செயலாளர் திருமிகு.ராம்சங்கர் ஆகியோர் அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.போடி கிளை சார்பில் குண்டல்னாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போடிக்கிளைச் செயலர் ஸ்ரீதர் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.

Jun 17, 2014

மாவட்ட செயற்குழு கூட்டம் 6

ஜூன் 15 ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் சின்னமனூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு எம்.மணிமேகலை அவர்கள் தலைமை தாங்கினார். வேலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து கிளைகளையும் கூட்டுவது, உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது, தேசிய குழ ந்தைகள் அறிவியல் மாநாடு, துளிர் வினாடி வினா, துளிர் திறனறிதல் தேர்வு, ஹிரோஷிமா நாகசாகி நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிடல், கிளை நிகழ்ச்சிகளில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பது, பொறுப்பு கிளைகளின் செயல்பாடுகளை வழிகாட்டுவது ஆகியவை செயற்குழுவில் விவாதிக்கப்பட்டன.மாநிலச் செயலாளர்கள் திருமிகு.தியாகராஜன் மற்றும் சுந்தர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Jun 5, 2014

சுற்றுச்சூழல் தினம் 2014

கம்பம் கிளைக்கு உட்பட்ட சுருளிப்பட்டி அரசுகள்ளர் துவக்கப்பள்ளியில் சுற்றுச்சூழல் காப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. கமபம் கிளை செயலர் திருமிகு,முத்துக்கண்ணன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் தொடர்பாக குழந்தைகளுடன் கலந்துரையாடினார். சுந்தர் மற்றும் தனசேகரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

உலக சுற்றுச்சூழல் தினம்-2014

ஜூன் 5 சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னட்டு பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் காப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலர் திருமிகு.ஞான சுந்தரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பிஅனர் திருமிகு,மணிமேகலை ஆகியோர் செய்திரு ந்தனர்.

May 8, 2014

மாநில அளவில் மாற்றுக்கல்விக்கான வாசிப்பு முகாம்-மே,3,4,5-2014@ கூடலூர்


வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த பல ஆண்டுகளாக குழந்தைகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு, கல்வி குறித்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கருத்தரங்குகள் நடத்தி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தும் விதமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாநில அளவிலான வாசிப்பு முகாம்களை நடத்தி வருகிறது.கல்வி குறித்து ஏராளமான நூல்களை வாசிக்கவும் விவாதிக்கவும் கல்வியாளர்களோடு கலந்துரையாடவுமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக மாற்றுக்கல்விக்கான வாசிப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


10வது வாசிப்பு முகாம்: நமது தேனி மாவட்டம், கூடலூர் என்.எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் மாற்றுக்கல்விக்கான பத்தாவது வாசிப்பு முகாம் கடந்த மே,3,4,5 ( சனி, ஞாயிறு, திங்கள்) தேதிகளில் நடைபெற்றது. சனிக்கிழமை மாலை துவங்கிய இந்த முகாமிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் தே.சுந்தர் தலைமை வகித்தார். தேனி மாவட்டச்செயலாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றுப் பேசினார். அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் பேரா.என்.மணி துவக்கிவைத்துப் பேசினார். மாநிலச் செயலாளர் எல்.நீலா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெ.பாலசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இரண்டாவது நாள் 1955ல் கன்னடத்தில் சிரஸ்மரணா என்ற பெயரில் வெளிவந்து இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட நிரஞ்சனாவின் நினைவுகள் அழிவதில்லை என்ற புத்தகம் ஆசிரியர்களால் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. கல்வியாளர் பேரா.ச.மாடசாமி ஆசிரியர்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வுகளைத் தொடர்ந்து தொகுப்புரை வழங்கினார்.

அதனையடுத்து 2012 ஜூன்,30-ஜூலை 1 தேதிகளில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு மற்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு இணைந்து நடத்திய பொதுப்பள்ளி முறையைக் கட்டமைப்பதற்கான அகில இந்திய மாநாட்டில் முன்மொழியப்பட்ட சென்னை அறிக்கை வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் செயலாளர் பேரா.பெ.விஜயகுமார் சென்னை அறிக்கை குறித்த அறிமுக உரையாற்றினார். அறிமுக உரையை அடுத்து ஆசிரியர்கள் குழுவாக அமர்ந்து அறிக்கையை வாசித்து விவாதித்தனர். 

மூன்றாவது நாள் சென்னை அறிக்கை குறித்த விவாதக் கருத்துகளை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டனர். பொதுப்ப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு விவாதக் கருத்துகளின் மீதான தொகுப்புரை வழங்கினார். இறுதியாக மூட்டா அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பேரா.ஆர்.மனோகரன் நிறைவுரையாற்றினார். தேனி மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத்தின் கூடலூர் நகரத்தலைவர் மோகன், நகரச்செயலாளர் சூர்யபிரகாஷ், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி மற்றும் துளிர் இல்ல மாணவர்கள் ஒருங்கிணைப்பில் உதவினர்..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், புதுச்சேரி, ஈரோடு, கரூர், நாகைப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, நாமக்கல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 120 ஆசிரிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

Apr 30, 2014

மாவட்டசெயற்குழு கூட்டம்-5


ஏப்ரல் 28ம் தேதி(திங்கள்கிழமை) மாலை 5 மணி அளவில் பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலை அறிக்கை மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன் சமர்ப்பித்தார். அனைத்து கிளைகளையும் கூட்டுவது,உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது, மாநில அளவிலான மற்றுக்கல்விக்கான வாசிப்பு முகாம் திட்டமிடல், கிளை நிகழ்ச்சிகளில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பது,பொறுப்பு கிளைகளின் செயல்பாடுகளை வழிகாட்டுவது ஆகியவை செயற்குழுவில் விவாதிக்கப்பட்டன.மாநிலச் செயலாளர் திருமிகு.தியாகராஜன் கலந்து கொண்டார்..15 க்கும் மேற்பட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Mar 25, 2014

நிர்வாகக் குழு கூட்டம்: 3

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மார்ச் 24 திங்கள்கிழமை மாலை 6 மணி அளவில் தேனி அல்லி நகரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட இணைச்செயலர் திருமிகு ஜேசுராஜ் தலைமை தாங்கினார்.மாநிலச் செயலர் திருமிகு தியாகராஜன் மற்றும் திருமிகு.தே.சுந்தர்,மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி, ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பொறுப்பு கிளைகள் உடனடியாக கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.

Mar 23, 2014

மார்ச்-22 சர்வதேச தண்ணீர் தினம்

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பாளையம் ஒன்றியக்கிளைக்கு உடபட்ட அணைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மார்ச் 22 அன்று சர்வதேச தண்ணீர் தின கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு பாளையம் ஒன்றியக்கிளைத் தலைவர் திருமிகு வளையாபதி தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு.சத்யா முன்னிலை வகித்தார்.உடற்கல்வி ஆசிரியரும் தமிழ் நாடு அறிவியல் இயக்க ஆர்வலருமான திருமிகு. நவீன் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் ராமன் கல ந்து கொண்டு நீர் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் நீர் நிலைமைகளின் நிலை குறித்தும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கருத்துரை வழங்கினார்.படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது.

Mar 22, 2014

மார்ச் 21 உலக வன நாள் நிகழ்ச்சி-2

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தேசிய பசுமைப் படை சார்பாக கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் சர்வதேச காடுகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு.ஆ.ஜெகநாதன் தலைமை தாங்கினார். தேசிய பசுமைப் படையின் ஒருங்கிணைப்பாளர் திரு. ச.சுருளிராஜ் வரவேற்றார். மரக் கன்றுகள் நடுவது மற்றும் வன நாள் தொடர்பான கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக் கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன் ”எல்லா மரங்களும் போதி மரங்களே” எனும் தலைப்பிலும், மாவட்டச் செயலாளர் வி. வெங்கட் ராமன் “காடும் நீரும்” எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ். செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கூடலூர் நகரக்கிளை செயலாளர் தி. சூர்யப் பிரகாஸ் நன்றி கூறினார்.

மார்ச் 21 உலக வன நாள் நிகழ்ச்சி-1


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக் கிளை சார்பாக கம்பம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வன நாள் கருத்தரங்கம் மற்றும் கவிதைப் போட்டி மார்ச் 21 அன்று காலை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு. உபதி அந்தோனி அம்மாள் தலைமை தாங்கினார். கம்பம் ஒன்றியக்கிளை செயலாளர் க. முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வி. வெங்கட் ராமன் அவர்கள் “ மரம் நமக்கு வரம்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். காடுகளின் முக்கியத்துவம் குறித்தும் உலக நாடுகளில் காடுகளின் பரவல் குறித்தும் படக்காட்சி திரையிடப்பட்டது. கவிதைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியை. திருமதி. கீதா அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.இறுதியில் பள்ளி ஆசிரியை மு.வேணி நன்றி கூறினார்.

Mar 14, 2014

மார்ச் 14 ஐன்ஸ்டின் பிறந்த நாள் விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் முத்தலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐன்ஸ்டீன் பிறந்த நாள் விழா & கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு. வே.தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். திருமிகு..எஸ்.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஐன்ஸ்டீன் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் பா.சோமநாதன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியகிளைச் செயலாளர் திருமிகு. க.முத்துக்கண்ணன் ”ஐன்ஸ்டீன் வடித்த கண்ணீர்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். கூடலூர் கிளை பொருளாளர் ரா.ராஜ்குமார் “ஐன்ஸ்டீன் வாழ்வும் பணிகளும்” எனும் தலைப்பில் பேசினார். ஐன்ஸ்டீன் வாழ்வு மற்றும் சாதனைகள் தொடர்பான படக்காட்சிகள் திரையிடப்பட்டன. துளிர் இல்ல மாணவர் மு. கோபி நன்றி கூறினார். பள்ளி ஆசிரியர்கள் , 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Feb 28, 2014

தேசிய அறிவியல் தின விழா -2014

பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் ஒன்றியக்கிளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியப்போட்டிகள் கம்பம் நகராட்சி மெயின் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 9,10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பேச்சு,ஓவிப்போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் மிக ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் துவக்க உரை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கம்பம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமிகு.அங்கயர்க்கண்ணி பதக்கம் அணிவித்து பாராட்டினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை திருமிகு.எம்.சிந்தாமணி அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.அறிவியல் இயக்க ஆர்வலர். திருமிகு. செ.செல்லப்பாண்டியன் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் திருமிகு தே.சுந்தர் அவர்கள் தேசிய அறிவியல் தின கொண்டாட்டத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் திருமிகு.வி,வெங்கட்ராமன் அவர்கள் சர்வதேச படிகவியல் ஆண்டு -2014 குறித்து கருத்துரை வழங்கினார்.கம்பம் கிளை பொருளாளர் திருமிகு மொ.தனசேகரன் அவர்கள் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவியர் பாண்டி, நந்தகுமார், தி. சூரிய பிரகாஷ், ரா.ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து 180 க்கும் மேற்பட்ட மாணவர்களும், 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.அதே தினத்தன்று தேசியஅறிவியல்தினவிழா தேனி அன்னஞ்சி அரசு கள்ளர் உயர் நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் திருமிகு.பா.செந்தில் குமரன் அவர்களது ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.பல்வேறு அறிவியல் தலைப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் கல ந்துரையாடினர்.

Feb 24, 2014

பிப்ரவரி-28 தேசிய அறிவியல் தினம்-போட்டிகள்

வணக்கம்.. இந்தியர்களின் அறிவியல் சாதனையை இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னரே தனது இராமன் விளைவு எனும் அற்புத கண்டுபிடிப்பின் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறியவர் சர்.சி.வி.இராமன்.1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று வானம்,கடல் ஆகியவை நீல நிறமாக இருப்பதற்கான காரணத்தை தனது இராமன் விளைவு எனும் தத்துவத்தின் மூலம் சி.வி.இராமன் கண்டுபிடித்தார்.அவரது சாதனையை போற்றும் வகையில் பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக நாடு முழுவதும் வெகு சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.அறிவியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் தேசிய அறிவியல் தினத்தை தேனி மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெகு சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானித்துள்ளது.அதன் ஒரு பகுதியாக பள்ளி.கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய,கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.வகுப்புகள்,தலைப்புகள் பின்வருமாறு…..

ஓவியம்:  5,6,7,8 ம் வகுப்பு : அறிவியலும் சுற்றுச்சூழலும் : A4 அளவு சார்ட்


கட்டுரை: 9.10,11,12 ம் வகுப்பு : உள்ளூர் வளர்ச்சியில் அறிவியல் : 4 பக்கம் மிகாமல்

கட்டுரை: கல்லூரி :சமூக வளர்ச்சியில் அறிவியலின் பங்கு : 6 பக்கம் மிகாமல்

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:
வருகிற பிப்ரவரி 28(வெள்ளிக்கிழமை) 

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்படும்…..

மாணவர்கள் தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

க.முத்துக்கண்ணன்(தேசிய அறிவியல் தினம்-போட்டிகள்)

வார்டு-20 கதவு எண்-2,வ.உ.சி தெரு,

கூடலூர்.625518.தேனி மாவட்டம்..

அன்புடன் 

வி.வெங்கட்ராமன்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.தேனி மாவட்டம்.

கம்பம் கிளை செயற்குழு கூட்டம்

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை செயற்குழு கூட்டம் பிப்ரவரி 19 புதனன்று மாலை 7 மணி அளவில் கம்பம் மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.கிளையில் நடைப்பெற்ற வேலைகளை கிளைச் செயலர் க.முத்துக்கண்ணன் எடுத்துக்கூறினார்.கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக புத்தக விற்பனை மேற்கொண்டு வரும் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு நந்தகுமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நமது அறிவியல் வெளியீடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவது உணரப்பட்டது.பாரதி புத்தகாலாயம் மற்றும் மாநில மையத்தில் இருந்து புத்தகங்களை மேலும் கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.வருகின்ற பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கம்பம் கிளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு,ஓவிய போட்டிகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.மாநிலச்செயலாளர் தே.சுந்தர், மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,கிளைப்பொருளர் திருமிகு மொ.தனசேகரன்,கிளை இணைச்செயலாளர் ஓவியர் பாண்டி,கூடலூர் நகரக்கிளை செயலர் திருமிகு சூரியபிரகாஷ்,கிளை செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போடி கிளைச் செயற்குழு கூட்டம்

தேனி மாவட்டம் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் போடிகிளைச் செயற்குழு கூட்டம் 12-02-14 அன்று மாலை 5 மணி அளவில் போடி மூட்டா அலுவலகத்தில் நடைப்பெற்றது.போடி கிளைத் தலைவர் திருமிகு காளிதாஸ் தலைமை வகித்தார் மாவட்ட துணைத்தலைவர் திருமிகு சிவாஜி முன்னிலை வகித்தார்.செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலர் திருமிகு ஜேசுராஜ் கல ந்து கொண்டார்.கிளைப் பொருளாளர் திருமிகு ஜெகதீசன் உட்பட 10 கிளை உறுப்பினர்கள் செயற்குழுவில் கல ந்து கொண்டனர்.கிளை உறுப்பினர்களிடம் ஆயுள் சந்தா பெறுவது,தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகளை நடத்துவது, சர்வதேச படிக வரைவியல் ஆண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது வரும் மே மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான மார்றுக்கல்விக்கான வாசிப்பு முகாமை போடி கிளை மேற்பார்வையில் நடத்த மாவட்ட கிளையிடம் அனுமதி பெறுவது குறித்தும் பேசப்பட்டது….

அறிவியல் இயக்கத்தின் கூடலூர் கிளை துவக்க விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு கூடலூர் நகரக்கிளைத் துவக்க விழா கூடலூர் வி.கேன் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் திருமிகு தே.சுந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். கம்பம் ஒன்றியக்கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் வி.வெங்கட்ராமன் துவக்கவுரை வழங்கினார். மாநில செயலாளர் மு.தியாகராஜன் அவர்கள் ’’அறிவியல் இயக்கம் அன்று முதல் இன்று வரை’’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். கூடலூர் கிளையின் தலைவராக கு.மோகன் அவர்களும், துணைத்தலைவராக நா.கண்ணன் அவர்களும், செயலாளராக தி.சூர்யபிரகாஸ் அவர்களும், துணைச் செயலாளராக நவீன் அவர்களும், பொருளாளராக ரா.ராஜ்குமார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கம்பம் ஒன்றியக்கிளை செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி வாழ்த்துரை வழங்கினார். கம்பம் ஒன்றியக் கிளை செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் நன்றி கூறினார்.

கிளைச்செயலர்கள் கூட்டம்

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியக்கிளைச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 31(வெள்ளிக்கிழமை) அன்று தேனி புதிய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் திருமிகு பா செந்தில் குமரன் தலைமை வகித்தார்.மாவட்ட இணைச்செயலர் திருமிகு ஜேசுராஜ் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் கம்பம் கிளைச் செயலர் திருமிகு க.முத்துக்கண்ணன்,பெரியகுளம் கிளைச் செயலர் திருமிகு ராம்சங்கர்,போடி கிளைச் செயலர் திருமிகு ஸ்ரீதர்,கடமலை செயலர் திருமிகு இரத்தினசாமி மற்றும் பாளையம் கிளைத்தலைவர் திருமிகு வளையாபதி மாவட்ட செயலர் வி.வெங்கட் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநிலச் செயலாளர் திருமிகு தியாகராஜன் கல ந்து கொண்டு கிளைகளின் கட ந்த கால செயல்பாடுகளை மதிப்பிட்டு பேசினார்.கிளைச் செயற்குழுவை கூட்டுவது,உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது,தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது சர்வதேச மகளிர் தன நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவை குறித்து விரிவாக திட்டமிடப்பட்டது.

மாவட்டசெயற்குழு கூட்டம்-4

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஜனவரி 12ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர் திருமதி ஞானசுந்தரி முன்னிலை வகித்தார்.மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலை அறிக்கை செயற்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.உடனடியாக அனைத்து கிளைகளையும் கூட்டுவது,உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது,தேசிய அறிவியல் தினம்,சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுவது ஆகியவை செயற்குழுவில் விவாதிக்கப்பட்டன.மாநிலச் செயலாளர் திருமிகு.தியாகராஜன் மற்றும் தே.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வதேச படிகவியல் ஆண்டு-2014 குறித்து மாநிலக்கருத்தாளர் முனைவர் தினகரன் கருத்துரை ஆற்றினார்.செயற்குழு உறுப்பினர் ஓவியர் பாண்டி மாகடிகாரம் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.20 க்கும் மேற்பட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Feb 11, 2014

கூடலூர் நகரக்கிளை முதல் மாநாடு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு (பிப்ரவரி 10) கூடலூர் நகரக் கிளைத் துவக்க விழா கூடலூர் வி.கேன் பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி 10 அன்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் திருமிகு தே.சுந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். கம்பம் செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் வி.வெங்கட்ராமன் துவக்கவுரை வழங்கினார். மாநில செயலாளர் மு.தியாகராஜன் அவர்கள் ’’அறிவியல் இயக்கம் அன்று முதல் இன்று வரை’’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். கூடலூர் கிளையின் தலைவராக கு.மோகன் அவர்களும், துணைத்தலைவராக நா.கண்ணன், செயலாளராக தி.சூர்யபிரகாஸ், துணைச் செயலாளராக நவீன், பொருளாளராக ரா.ராஜ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கம்பம் செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி வாழ்த்துரை வழங்கினார். கம்பம் செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் நன்றி கூறினார்.

Feb 3, 2014

கிளைச்செயலர்கள் ச ந்திப்பு:

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியக்கிளைச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 31(வெள்ளிக்கிழமை) அன்று தேனி புதிய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் திருமிகு பா செந்தில் குமரன் தலைமை வகித்தார்.மாவட்ட இணைச்செயலர் திருமிகு ஜேசுராஜ் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் கம்பம் கிளைச் செயலர் திருமிகு க.முத்துக்கண்ணன்,பெரியகுளம் கிளைச் செயலர் திருமிகு ராம்சங்கர்,போடி கிளைச் செயலர் திருமிகு ஸ்ரீதர்,கடமலை செயலர் திருமிகு இரத்தினசாமி மற்றும் பாளையம் கிளைத்தலைவர் திருமிகு வளையாபதி மாவட்ட செயலர் வி.வெங்கட் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநிலச் செயலாளர் திருமிகு தியாகராஜன் கல ந்து கொண்டு கிளைகளின் கட ந்த கால செயல்பாடுகளை மதிப்பிட்டு பேசினார்.கிளைச் செயற்குழுவை கூட்டுவது,உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது,தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது சர்வதேச மகளிர் தன நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவை குறித்து விரிவாக திட்டமிடப்பட்டது.

Jan 17, 2014

கம்பம் கிளை செயற்குழு கூட்டம்:

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை செயற்குழு கூட்டம் ஜனவரி-9 வியாழனன்று மாலை 7 மணி அளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.கிளையில் நடைப்பெற்ற வேலைகளை கிளைச் செயலர் க.முத்துக்கண்ணன் எடுத்துக்கூறினார்.செயல்பாடுகள் குறித்து கிளை செயற்குழு உறுப்பினர்கள் விவாதித்தனர்.கிளை பொருளாளர் மொ.தனசேகரன் பொருளறிக்கை சமர்ப்பித்தார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,மாநிலச்செயலாளர் தே.சுந்தர் கிளை இணைச்செயலாளர் ஓவியர் பாண்டி,கிளை செயற்குழு உறுப்பினர்கள் நந்த குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ,ஸ்ரீராமன்,ஆசிரியர் சோமநாதன், உள்ளிட்டோர் கல ந்து கொண்டனர் உறுப்பினர் சேர்க்கை வலியுறுத்தப்பட்டது.

நிர்வாகக்குழு கூட்டம்-2:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் ஜனவரி 7-2014 செவ்வாய் மாலை 6 மணி அளவில் தேனி அல்லி நகரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி ,இணைச் செயலாளர்கள் எஸ்.ஜேசுராஜ்,தே.சுந்தர் மற்றும் எஸ்.ஞானசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநில செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பொறுப்பு கிளைகள் உடனடியாக கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.

ஆசிரியர் இணையக்கூட்டம் /கல்வியாளர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கல்வி உப குழு சார்பில் ஆசிரியர் இணையக்கூட்டம் டிசம்பர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பெரியகுளம் 10 ஆவது வார்டு துவக்கப்பள்ளியில் மாலை நடைபெற்றது.மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் இணைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ஞானசுந்தரி வரவேற்புரை ஆற்றினார்.கல்வியாளர் பேராசிரியர் விஜயகுமார் கலந்து கொண்டு ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.மாநிலச் செயளாளர் திருமிகு.தே.சுந்தர் மாவட்ட கல்வி உப குழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு க.முத்துக்கண்ணன் பெரியகுளம் கிளை செயலாளர் திருமிகு.ராம்சங்கர் உட்பட கிளை நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்,25 க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

ஐசான் வால்நட்சத்திரம் குறித்து பிரச்சாரம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 29 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கூடலூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு கம்பம் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு ராஜ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலை வகித்தார்.கம்பம் கிளைச் செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் கருத்தாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு ஐசான் வால் நட்சத்திரம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஐசான் வால் நட்சத்திரம் குறித்த படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது. கணினி ஆசிரியர் திருமிகு பிரபாகரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திரு ந்தார்.350 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.100 ரூபாய் அளவிற்கு புத்தக விற்பனையும் நடைப்பெற்றது…

ஐசான் வீதிப்பிரச்சாரம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 28 அன்று வியாழக்கிழமை மாலை 6 மணி அள்வில் கம்பம் நகரில் ஐசான்வால் நட்சத்திரம் குறித்த துண்டு பிரச்சுரமானது வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு வி நியோகம் செய்யப்பட்டது.இந்த அறிவியல் பிரச்சார பணியில் மாநிலச் செயலாளர் தே.சுந்தர்,மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி,கம்பம் கிளை கே.நந்தகுமார், மற்றும் கணித மேதை இராமாணுஜம் துளிர் இல்ல மாணவர்கள் பங்கேற்றனர்.ஐசான் குறித்து பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஐசான் வால் நட்சத்திரம் குறித்து பிரச்சாரம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 26 அன்று செவ்வாய் கிழமை அன்று காலை 10 மணி அளவில் போடி பங்கஜம் நடுநிலைப்பள்ளியில் ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு போடி கிளைச் செயலாளர் திருமிகு.ஸ்ரீதர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் முன்னிலை வகித்தார்.கம்பம் கிளைச் செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் கருத்தாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு ஐசான் வால் நட்சத்திரம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஐசான் வால் நட்சத்திரம் குறித்த படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது.25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 250 க்கும் மேற்பட்ட மாணவ்-மாணவியர் பங்கேற்றனர்.500 ரூபாய் அளவிற்கு புத்தக விற்பனையும் நடைப்பெற்றது…

Jan 12, 2014

நிர்வாகக்குழு கூட்டம்: 2

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் ஜனவரி 7-2014 செவ்வாய் மாலை 6 மணி அளவில் தேனி அல்லி நகரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி ,இணைச் செயலாளர்கள் எஸ்.ஜேசுராஜ்,தே.சுந்தர் மற்றும் எஸ்.ஞானசு ந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநில செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பொறுப்பு கிளைகள் உடனடியாக கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.