முதல் பக்கம்

Sep 24, 2011

மாணவர்களுக்கு பாராட்டு விழா


பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2010,22:44

கூடலூர் : கோவையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அண்மையில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தின் சார்பாக கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்ல மாணவர்கள் சந்தியப்பிரவீன், ஹரிபிரசாத், சரத்குமார், கார்த்திக் கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பராட்டு விழா கூடலூர் வீகேன் பயிற்சி மையத்தில் நடந்தது. பொறுப்பாளர் சுரேந்தர் வரவேற்றார். விவசாய அலுவலர் தெய்வேந்திரன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீராமன், துளிர் இல்ல ஆலோசகர் பிரகலாதன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முத்துக்கண்ணன், பாஸ்கரன், வெங்கட்ராமன், ராஜசேகர், ரேணுகாதேவி ஆகியோர் செய்திருந்தனர்

ஹிரோசிமா-நாகசாகி நினைவு தின போட்டி

தினமலர் – 2011 ஆக. 6

கம்பம்:அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹிரோசிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தர் கூறியிருப்பதாவது : ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா-நாகசாகி நகரங்கள் மீது நடந்த அணுகுண்டு தாக்குதலில் லட்சக்கணக்கில் மக்கள் பலியானார்கள். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் வராமல் இருக்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "அறிவியல் அமைதிக்கே' என்ற முழக்கத்தை வெளியிட்டுள்ளது. அதை நினைவு கூறும் வகையில்,மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. "போரின்
பிடியில் பிஞ்சுகள்' என்ற தலைப்பில், 6,7,8 வகுப்புகளுக்கு ஓவியப்போட்டியும், 9 முதல் 12 ம் வகுப்பு வரை "இதுபோல் துயரம் இனிமேல் வேண்டாம்' என்ற தலைப்பில் 5 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு "அன்னை பூமியில் அமைதி தவழட்டும்' என்ற தலைப்பில்
கவிதை போட்டி (25 வரிகளுக்கு மிகாமல்), ஆசிரியர்களுக்கு "அணு ஆயுதப்
போட்டியும் மானுடத்தின் தலைகுனிவும்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் (5 பக்கங்களுக்கு மிகாமல்) நடத்தப்படுகிறது. படைப்புகளை ஆகஸ்ட் 19க்குள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குட்டியாபிள்ளை தெரு, கம்பம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அறிவியல் திருவிழா

பதிவு செய்த நாள் : மே 23,2011,22:16 IST
 
கூடலூர் : சர்வதேச பல்லுயிர்மை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கோடை அறிவியல் திருவிழா கூடலூர் என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 2011ம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாகவும், வன ஆண்டாகவும் ஐ.நா., சபை அறிவித்திருப்பதால், வேதியியலையும், வன வளத்தையும் மையக் கருத்தாக வைத்து விழா நடந்தன. ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமையில், தலைமை ஆசிரியர் கதிரேசன் முன்னிலையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் வரவேற்றார். மாணவர்களுக்கு எளிய வேதியியல் பரிசோதனைகள் செய்து காட்டப்பட்டது. அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், தமிழாசிரியர் பிரகலாதன், துளிர் அறிவியல் மைய இயக்குனர் தியாகராஜன், செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் சின்னச்சாமி, பிரகாஷ், சீனிவாசன் பங்கேற்றனர்.

அறிவியல் இயக்கக் கருத்தரங்கம்

First Published : 15 May 2011 01:26:22 PM IST
கம்பம், மே 14: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், பள்ளி குழந்தைகளும் தண்டனைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.கம்பம் ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்தில், அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பா.செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தே.சுந்தர் வரவேற்றார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார்.குழந்தைகளும் தண்டனைகளும் என்ற தலைப்பில், கல்வியாளர் அ.அமல்ராஜும், மொ.பாண்டியராஜனும் கருத்துரையாற்றினர். இதில், தண்டனை குறித்தும், இதனால் மாணவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், வகுப்பறை அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.கருத்தரங்கில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.

Sep 19, 2011

பருவநிலை மாற்றம்: கல்லூரியில் கருத்தரங்கம்

First Published : 09 Sep 2011 12:09:49 PM IST


கம்பம், செப். 8: தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் புதன்கிழமை பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலிருந்தும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் சார்பில், பருவ நிலை மாற்றத்தினால் காடுகளின் இன்றைய நிலை என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் ஆட்சிமன்ற குழுத் தலைவர் மு. ஷேக் மைதீன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான மு. தர்வீஸ் மைதீன் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் மு. ஹவுது முகைதீன் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் எஸ். மோகனா சிறப்புரையாற்றினார். எஸ்.மோகனா பேசியதாவது: உலக அளவில் பருவநிலை மாற்றங்களில் காடுகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. 2005-10 ஆகிய கால கட்டத்தில் இந்திய காடுகளின் தூரம் 750 சதுர கிலோ மீட்டர் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், நமது நாட்டில் மட்டும் காடுகளின் பரப்பு அதிகரித்திருப்பது நன்மை ஏற்படக் கூடியதே, இருப்பினும், இன்றைய சூழலில் இந்த வளர்ச்சி போதாது, இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றார். கருத்தரங்கில், கம்பம் ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரி, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, போடி சி.பி.ஏ கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

குழந்தை விஞ்ஞானியர் விருது: 19-வது தேசிய குழந்தைகள் மாநாடு ஆய்வு தலைப்புகள் அறிவிப்பு



கம்பம்,செப்.4-

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வருகிற டிசம்பர் மாதம்27-ந் தேதி முதல் 31 -ந் தேதி வரை நடைபெறும் தேசிய குழந்தைகள் மாநாட்டில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு ஆய்வு தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு குழந்தை விஞ்ஞானியர் விருது வழங்கப்படுகிறது.

குழந்தைகள் தேசிய மாநாடு

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை, தேசிய தகவல்மற்றும் அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்ற குழு ஆகிய மத்திய அரசு நிறுவனங்கள்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஆண்டு தோறும் தேசிய குழந்தைகள் மாநாடு நடத்துகின்றன.

ராஜஸ்தான் மாநிலதலைநகர் ஜெய்ப்பூரில் வருகிறடிசம்பர் மாதம் 27 -ந்தேதி முதல் 31 -ந் தேதிமுடிய 19-வது ஆண்டாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது.மாநாட்டின் கருப்பொருளாக நிலவளத்தை வளத்திற்காக பயன் படுத்துவோம், வருங் காலத் திற்காகவும் பாதுகாப் போம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

துணைத்தலைப்புகளாக நிலத்தை அறிவோம், நிலத் தின் செயல்பாடுகள், நிலத்தின் தரம், நிலத்தில் மனிதனால் மேற்கொள்ளப்படும் செயல் பாடுகள், நிலவளத்தின் நிலத்தகு பயன்பாடு, நிலத்தை பயன்படுத்துவது பற்றிய சமூக அறிவு ஆகியவைகள் அறிவிக் கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு

மாநாட்டில் கலந்து கொள்ள 10 வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகள் இளை யோர் குழு என்றும், 14வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள் மூத்தோர் குழு என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகள் மற்றும் முறை சாரா கல்வி படிக்கும் இரவு பள்ளி, குழந்தை தொழிலாளர் களுக்கான இரவு பள்ளி, துளிர் இல்ல குழந்தைகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள லாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பயிற்சி முகாம்

மாநாட்டில் கலந்து கொள் ளும் மாணவ-மாண விகளுக்கு, ஆய்வு செய்யவும் வழிகாட்ட வும் நெறியாளர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில்வழிகாட்டும் நெறியாளர்களுக்கான பயிற்சி முகாம் தேனி யில் நடைபெற உள்ளது. பயிற்சி முகாமில் மாநில மாவட்ட கருத்தாளர் கள், பேராசிரியர் கள் கலந்து கொண்டு பேசு கிறார்கள். பயிற்சி முகாமில் ஆய்விற்கான பதிவுபடிவம், கையேடுகள் போன்றவைகள் வழங்கப் படுகிறது.

ஆய்வுகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் சமர்ப்பிக்க லாம். மாவட்ட அளவில் அக்டோபர் மாதம் பெரிய குளத்திலும், மாநில அளவில் நவம்பர் மாதம் விருதுநகரிலும் மாநாடு, நடைபெறுகிறது. தேசிய அளவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சிறந்த ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கும் குழந்தைகளுக்கு குழந்தை விஞ்ஞானியர் விருதினை குடி யரசு தலைவர் வழங்குகிறார்.

மாநாட்டில் பங்கேற்கவும், விதி முறைகள் பற்றியும் தெரிந்து கொள்ள தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக் கம், குட்டியா பிள்ளை தெரு, கம்பம், என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

வன உயிரின புகைப்பட கண்காட்சி


First Published : 05 Sep 2011 11:54:04 AM IST
தேனி, செப். 4: தேனி அருகே உள்ள அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் வனம் அறக்கட்டளை சார்பில் சர்வதேச காடுகள் ஆண்டை முன்னிட்டு சனிக்கிழமை வன உயிரின புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. ÷இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சுந்தர் முன்னிலை வகித்தார். கிளைத் தலைவர் தெய்வேந்திரன் வரவேற்றார். ÷வன உயிரினங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட வன அலுவலர் வி.கணேசன் திறந்துவைத்தார். வனம் அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், மதுரை காமராஜர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் எஸ்.கண்ணன், அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ÷நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மோகன் குமாரமங்கலம், ஜேசுராஜ் ஆகியோர் செய்திருந்தனர். ÷கிளைப் பொருளாளர் சதீஷ் நன்றி கூறினார்.

குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி பயிற்சி முகாம்

10 Sep 2011 09:27,
 தேனி, செப். 9: தேனி அருகே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற உள்ள குழந்தை விஞ்ஞானியர் விருதுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்த மாவட்ட அளவிலான ஆசிரியர் வழிகாட்டி பயிற்சி முகாம் சனிக்கிழமை (செப். 10) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தர் கூறியதாவது:÷மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை, தேசிய தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றக் குழு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெறவுள்ள குழந்தை விஞ்ஞானியர் விருதுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்த மாவட்ட அளவிலான வழிகாட்டி பயிற்சி முகாம் அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இந்த முகாமை கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குநர் பாண்டுரங்கன் தொடங்கி வைக்கிறார். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அறிவியல் இயக்க மாநில கருத்தாளர்கள் பங்கேற்று குழந்தை விஞ்ஞானியர் விருதுக்கான விதிமுறைகள், ஆய்வு வழிமுறைகள், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் விதம் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

அறிவியல் இயக்க கருத்தரங்கு

First Published : 15 Aug 2011 10:23:00 AM IST
  தேனி, ஆக. 14: தேனி அல்லிநகரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை சார்பில் ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தின கருத்தரங்கு நடைபெற்றது.தேனி வட்டாரத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜ் முன்னிலை வகித்தார். கிளை செயலர் தெய்வேந்திரன் வரவேற்றார்.மாவட்டத் தலைவர் செந்தில்குமரன், செயலர் சுந்தர், எழுத்தாளர் காமுத்துரை, பேராசிரியர் மோகனா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொதுக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீராமன், சிவாஜி, வட்டார பொருளாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி, ஊஞ்சாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட அனு ஆயுத எதிர்ப்பு ஊர்வலத்தை, தேனி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமணி தொடங்கி வைத்தார்.

தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு-2011 தென்மண்டல பயிற்சி முகாம்,ஆண்டிபட்டி


தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 6வது தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டிற்கான தென்மண்டல பயிற்சிமுகாம் செப்டம்பர்,18,2011 அன்று ஆண்டிபட்டி எஸ்.கே.எ.பள்ளியில் ஆண்டிபட்டி கிளையின் ஒருங்கிணைப்பில் ஒருநாள் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி கிளையின் தலைவர் எஸ்.மாதவன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றுப்பேசினார். ஆசிரியர் இணையத்திற்கான தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் ஆசிரியர் அறிவியல் மாநாட்டின் நோக்கம், ஆசிரியர் இணையம் அமைக்கவேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்த அறிமுகவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலக் கருத்தாளர் முனைவர்.எஸ்.தினகரன் மாநாட்டின் மையக்கருத்து, கற்றல் கற்பித்தலின் நுணுக்கங்கள், வகுப்பறைகளில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான கருத்துரையாற்றினார்.கல்வியாளர்.திரு.மொ.பாண்டியராஜன் ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய சில முன்மாதிரி ஆய்வுகள் குறித்துப் பேசினார். நெல்லை மாவட்டச்செயலாளர்  திரு.கணபதி அறிவியல் கல்வியும் ஆசிரியர்களும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் திரு.மு.தியாகராஜன் நிறைவுரையாற்றினார். ஆண்டிபட்டி கிளைச்செயலாளர் ஆர்.அம்மையப்பன் நன்றிகூறினார். இராமநாதபுரம்,திருநெல்வேலி,விருதுநகர்,மதுரை,தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த முப்பது நண்பர்கள் கலந்துகொண்டனர். மதுரையில் செப்டம்பர் 21ந் தேதியும், திருநெல்வேலியில் அக்டோபர் 9ந் தேதியும் ஆசிரியர் இணையக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

வினாடி-வினா: தேனி பள்ளிகள் சாதனை


தினமலர் – 12 h முன்


கம்பம் : மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டிகளில், தேனியை சேர்ந்த பள்ளிகள் அதிக பரிசுகளை தட்டிச்சென்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டிகள், கம்பம் ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடந்தன. மாவட்ட துணை தலைவர் பேராசிரியர் முகமது ஷரீப் தலைமை வகித்தார். கிளை தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அனுசுயா போட்டிகளை துவக்கி வைத்தார். தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 6,7,8 வகுப்புகளுக்கான போட்டிகளில் முதல்பரிசையும், கூடலூர் என்.எஸ்.கே.பி. பள்ளி இரண்டாம் பரிசும், கம்பம் முக்திவிநாயகர் நடுநிலைப்பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றனர். 9,10 க்கான போட்டிகளில், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், கூடலூர் என்.எஸ்.கே.பி. பள்ளி இரண்டாம் பரிசையும், தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றது. பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான போட்டியில், கே.கே.பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், கூடலூர் என்.எஸ்.கே.பி. பள்ளி இரண்டாம் பரிசும், தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை, மாநில துணை தலைவர் சோபனா, துணை செயலாளர் தியாகராஜன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கண்ணன் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

அறிவியல் இயக்க பயிற்சி

  பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011,01:12 IST

கூடலூர் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கூடலூர் வ.உ.சி.நடுநிலைப்பள்ளியில் அறிவியல் இயக்கப்பயிற்சி நடந்தது. தலைமை ஆசிரியை வனிதாமணி துவக்கி வைத்தார். அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்தும் விதத்தில், எளிய அறிவியல் பரிசோதனைகள், விஞ்ஞானக் கதைகள், விழிப்புணர்வு பாடல்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன. அறிவியல் இயக்க கிளைச் செயலாளர் முத்துக்கண்ணன், மாவட்ட கருத்தாளர் வெங்கட்ராமன், செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர்கள் பேரணி


First Published : 13 Aug 2011 11:39:01
போடி, ஆக. 12:÷போடியில், ஹிரோஷிமா-நாகசாகி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.÷தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போடி கிளை சார்பில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டால் ஏற்பட்ட பேரழிவை நினைவுகூரும் வகையில் பேரணி நடைபெற்றது. பேரணியை போடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செலின் மேரி தொடங்கி வைத்தார்.÷போடி மூவேந்தர் நடுநிலைப் பள்ளி, சூலப்புரம் மற்றும் போ.அம்மாபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 6,7,8 வகுப்புகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பேரணி வ.உ.சி. சிலை, தேவர் சிலை, பஸ் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலக சாலை வழியாக சென்றது. ÷பேரணியை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மரிய ஜோசப் நிறைவு செய்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க போடி கிளைப் பொருளாளர் கொ.ஜெகதீசன் மற்றும் கி.பரணிபாபு ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் சுந்தர் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். ÷கிளைச் செயலாளர் ப.ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Sep 16, 2011

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு .

 இன்று 16 .09 .11 அன்று,பழனி,, நகராட்சி மேனிலைப் பள்ளி,  கலை அரங்கத்தில், பள்ளி குழந்தைகளுக்கான,  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு,  வழிகாட்டி ஆசிரியருக்கான  பயிற்சிப் பட்டறையை  தமிழ் நாடு அறிவியல் இயக்கம்,பழனி கிளை  நடத்தியது.   நகராட்சி மேனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு. மனோகரன் தலைமையில், பழனி கிளைத் தலைவர்,ஆசிரியர் திருமிகு. S . பிரபாகரன் ,வழிகாட்டி ஆசிரியர்  பயிற்சிப் பட்டறையை  துவக்கி வைத்தார்.கிளை இணைச் செயலர். திருமிகு. சாயிலதாராஜ்,தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பற்றி பேசினார். திண்டுக்கல் மாவட்ட அறிவியல் இயக்க செயலர் திருமிகு. முத்துக்குமார் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றி அறிமுக உரை ஆற்றினார். தமிழ் நாடு அறிவியல் இயக்க துணைத் தலைவரும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளருமான, பேரா. சோ. மோகனா, இந்த ஆண்டின் கருப்பொருளான நிலவளங்கள் பற்றியும், அதனை எப்படி செய்வது என்று பற்றியும் கருத்துரை ஆற்றினார். தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர். திருமிகு. தியாகராஜன் அறிவியல் மாநாட்டில் ஆய்வு செய்ய வேண்டிய தலைப்பு களையும், அதன் வழி முறைகளையும், நிலமும் பாரம்பரிய அறிவும் என்பது பற்றி விளக்க உரையாற்றினார். திருப்பூர் மாவட்ட அறிவியல் இயக்கத் தலைவர்.திருமிகு. ஈஸ்வரன், அறிவியல் ஆய்வுகள் செய்வது குறித்து கூறினார். பட்டறையில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகளும் மற்றும் 25 வழிகாட்டி ஆசிரியர்களும் அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வு செய்யும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பட்டறையை சிறப்பித்தனர்.  கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் பேரா. ராமகிருஷ்ணன், பழனி கிளைச் செயலர், பேரா. ராமலிங்கம், மற்றும் செயற்குழு உறுப்பினர் திருமிகு.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் திருமிகு,தர்மராஜ் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூற பட்டறை இனிதே நிறைவுற்றது.

தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு-பயிற்சி முகாம்

 6வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சி முகாம் தென்மண்டல அளவில் வருகின்ற செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது. தென்மண்டலத்தில் உள்ள மாவட்டங்களிலிருந்து ஆர்வமுள்ள இரண்டு நண்பர்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச்செயலாளர் திரு.மு.தியாகராஜன்,முனைவர்.எஸ்.தினகரன், கல்வியாளர்கள் திரு.அ.அமலராஜன், திரு.மொ.பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகின்றனர். கடந்த மாநாடுகளில் பங்கேற்ற நண்பர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
இடம்:எஸ்.கே.ஏ.மெட்ரிக் பள்ளி, பேருந்து நிலையம் அருகில்
           ஆண்டிபட்டி,தேனி மாவட்டம்
நேரம்:காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
அன்புடன்..
தே.சுந்தர்
மண்டல ஒருங்கிணைப்பாளர்
ஆசிரியர் இணையம்(தெற்கு)
94880 11128/88707 03929

எளிய அறிவியல் பரிசோதனைகள்

ஜூன்,28,2011 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,கம்பம் கிளையின் சார்பாக கூடலூர் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டக் கருத்தாளர் வி.வெங்கட்ராமன் குழந்தைகளுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்துகாட்டினார். அறிவியல் விஞ்ஞானிகளின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களைக் கூறினார். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் ,தொண்டர் பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் திருமிகு.குட்டியம்மாள்,திருமிகு.ராஜேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

எளிய அறிவியல் பரிசோதனைகள்

ஜூன்,24,2011 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,கம்பம் கிளையின் சார்பாக கூடலூர் வ.உ.சி.நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு.வனிதாமணி தலைமை வகித்தார். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டக்கருத்தாளர் வி.வெங்கட்ராமன் குழந்தைகளுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்துகாட்டினார். அறிவியல் விஞ்ஞானிகளின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களைக் கூறினார். 130 மாணவர்கள் ,பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்கத் தொண்டர் ராஜ்குமார் நன்றிகூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் திரு.அருண்பிரசன்னா செய்திருந்தார்.

துளிர் இல்லங்கள் துவக்கம்

ஜூன்,25,2011 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,கம்பம் கிளையின் சார்பாக கூடலூர் வீகேன் பயிற்சி மையத்தில் மூன்று துளிர் இல்லங்கள் துவங்கப்பட்டன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். விக்ரம்சாராபாய் துளிர் இல்லம், சலீம் அலி துளிர் இல்லம், மேரி கியூரி துளிர் இல்லம் ஆகிய மூன்று துளிர் இல்லங்கள் துவங்கப்பட்டன. அதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக முறையே முத்துக்கண்ணன்,வெங்கட்ராமன்,பாஸ்கர் ஆகியோர் செயல்படுவதென முடிவெடுக்கப்பட்டது. மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் கலந்துகொண்டார்.

துளிர் இல்லம் களப்பயணம்

ஜூலை 16,2011 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,கம்பம் கிளையின் சார்பாக கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லம் மாணவர்கள் சின்னமனூர் பகுதியில் விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரிப்பதற்காக களப்பயணம் மேற்கொண்டனர். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் மாணவர்களை வழிநடத்திச்சென்றார். குறிப்பாக வாழை விவசாயத்தில் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரிக்க விவசாயிகள் கையாளும் உத்திகளைத் தெரிந்துகொண்டனர். விவசாயி திரு.ஜெய்கணேஷ் மாணவர்களுக்கான விளக்கங்களை அளித்தார். சுமார் பதினைந்து மாணவர்கள் பங்கேற்றனர். 

புகைப்படக் கண்காட்சி & கருத்தரங்கம்

சர்வதேச வனவள ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி கிளையின் சார்பில் வனம் அறக்கட்டளையோடு இணைந்து செப்டம்பர் 3,2011 அன்று பிற்பகல் அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சேசுராஜ் முன்னிலை வகித்தார். தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட வன அலுவலர் திரு.கணேசன் கண்காட்சியைத் துவங்கிவைத்துப் பேசினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல்துறைப் பேராசிரியர் முனைவர்.எஸ்.கண்ணன், வனம் அறக்கட்டளையின் தலைவர் திரு.சி.பி.ராஜ்குமார்,வனம் கருத்தாளர் திரு.எஸ்.ராம்குமார் ஆகியோர் காடுகள் உலகின் கருப்பை,மரங்கள் தரும் வரங்கள் ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி கிளைப் பொருளாளர் அ.சதீஸ் நன்றி கூறினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன்,கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் உள்ளிட்ட அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்களும் மாணவர்களும் திரளாகப் பங்கேற்றனர்.வன உயிரினங்கள் பற்றிய அரிய புகைப்படங்களின் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டுச் சென்றனர்.

ஹிரோஷிமா தினக் கருத்தரங்கம் & பாராட்டு விழா

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,கம்பம் கிளையின் சார்பாக ஆகஸ்ட்,7,2011 அன்று காலை கூடலூர் வீகேன் பயிற்சி மையத்தில் ஹிரோஷிமா தினக் கருத்தரங்கம் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது. கிளைத்தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். திரு.கருப்புச்சட்டை நடராஜன் முன்னிலை வகித்தார். கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் துவக்கவுரையாற்றினார். மாவட்டக்கருத்தாளர்கள் திரு.செல்வன் திரு.ராஜசேகரன் திரு.வெங்கட்ராமன் ஆகியோர் போரும் அமைதியும்,நல்லதோர் வீணை செய்தே, ஐன்ஸ்டீன் வடித்த கண்ணீர் என பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இன்பசேகரன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து பனை,பூ,ஏரி ஆகிய காட்சிக்கவிதைகள் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் நிறைவுரையாற்றினார். கிளைப் பொருளாளர் ஓவியாதனசேகரன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத் தொண்டர்கள் ராஜ்குமார், பாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 40 மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஐந்து துளிர் இல்லங்கள் துவக்கம்

  செப்டம்பர்,14 அன்று மாலை சுருளிப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் துளிர் இல்லங்களின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 88 பேர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன், கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.நியூட்டன் துளிர் இல்லம்,எடிசன் துளிர் இல்லம், ஐசக் அஸிமோ துளிர் இல்லம், கலிலியோ துளிர் இல்லம், எட்வர்டு ஜென்னர் துளிர் இல்லம் ஆகிய ஐந்து துளிர் இல்லங்கள் துவங்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் துளிர் இல்ல உறுப்பினர் படிவத்தை நிரப்பிக் கொடுத்தனர். துளிர் இல்லத்திற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டு விடைபெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைப் பொருளாளர் ஓவியாதனசேகரன் செய்திருந்தார்.

சி.வி.ராமன் துளிர் இல்லம் துவக்கம்

செப்டம்பர்,11 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளையின் சார்பில் கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் சி.வி.ராமன் துளிர் இல்லம் துவங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சி.ஈஸ்வரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பற்றிய அறிமுக உரையாற்றினார். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் துளிர் இல்லச்செயல்பாடுகள் பற்றி பேசினார். மாணவர்களுக்குள் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். துளிர் இல்லச் செயலாளர் கருப்பையா நன்றி கூறினார். 28 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்-2

19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதுமுள்ள நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் செப்டம்பர்,15 அன்று தேனி பங்களாமேடு, நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமைவகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான மாவட்ட ஒருக்கிணைப்பாளருமாகிய தே.சுந்தர் வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயலாளர் திரு.மு.தியாகராஜன் கருத்துரையாற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் நன்றிகூறினார்.மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் உட்பட 40 நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011 வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்,தேனி

தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் அன்னஞ்சி,அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் இன்று(10.09.2009) பிற்பகல் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன்,மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சேசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தே.சுந்தர் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் துவக்கிவைத்துப் பேசினார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல்துறைப் பேராசிரியர் எஸ்.கண்ணன்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் முனைவர்.ஜி.செல்வராஜ் ஆகியோர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மையத்தலைப்பு, துணைத்தலைப்புகள், ஆய்வு முறை, சமர்ப்பிக்கும் முறை,குழுச்செயல்பாட்டின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் கருத்துரைகளை வழங்கினர். மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி நன்றி கூறினார்.

பத்து பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட 40பேர் கலந்து கொண்டனர்.ஆர்வமுள்ள பள்ளிகள் ஆய்வுத்தலைப்புக்களை தேர்வு செய்து மாநாட்டிற்கான பதிவுப்படிவத்தை வருகின்ற செப்டம்பர் 15க்குள் தே.சுந்தர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, 203/1,நாராயணத்தேவன்பட்டி-625521 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 9488011128.

ஆசிரியர் தினச் சிறப்பு நிகழ்ச்சி

செப்டம்பர்,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி கிளை மற்றும் த.மு.எ.க.ச. ஆசிரியர் கிளை ஆகியவை இணைந்து தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் செப்.5 மாலை எனக்கு இல்லையா கல்வி? ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.. த.மு.எ.க.ச.ஆசிரியர் கிளையின் தலைவர் ப.மோகன் குமார மங்கலம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றார். பின்னர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் ஆவணப்படம் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.முனைவர்.வனராசா இதயகீதன் விவாதக் கருத்துகளைத் தொகுத்துப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் செ.சிவாஜி, சேசுராஜ், வெங்கட்ராமன், அம்மையப்பன், ஓவியாதனசேகரன் ,ஸ்ரீதர்,ஜெகதீசன், வாஞ்சிநாதன்,சதீஸ் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என  40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் நன்றி கூறினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மிகச்சிறப்பானதொரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்ட மகிழ்ச்சியோடு அனைவரும் விடைபெற்றனர்.

மாவட்ட அளவில் துளிர் அறிவியல் வினாடி-வினா-2011

செப்டம்பர் 7,2011 அன்று பிற்பகல் கம்பம் ஸ்ரீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத்தலைவர் முனைவர்.முகமது ஷெரீப் தலைமை வகித்தார். கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார்,ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றுப் பேசினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர்.ஆர்.அனுசூயா அவர்கள் நிகழ்ச்சியைத் துவங்கிவைத்துப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் பேரா.எஸ்.மோகனா வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்திப் பேசினார். மாவட்ட அளவில் நடைபெற்ற ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் திரு.தியாகராஜன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஆய்வு ஒருங்கிணைப்பாளர் முனைவர். எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்தனர். கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார். வணிகவியல் துறைப் பேராசிரியர் எம்.சி.சாந்தி அறிவியல் இயக்கத் தொண்டர்கள் ராஜ்குமார்,பாஸ்கர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இயற்பியல்,வேதியியல்,உயிரியல்,காடுகள்,தமிழ்,பொது அறிவு ஆகிய ஆறு தலைப்புகளில் கேள்விகள் இடம்பெற்றன. மாவட்டம் முழுவதிலுமிருந்து 18 பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

6,7,8 பிரிவில் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வி.ஹேமந்த்ரா,ஜி.எம்.என்.ஜெய அஸ்வதி,எம்.சத்யசெல்வன் ஆகியோர் முதலிடத்தையும் கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எம்.தினேஷ்குமார், என்.சந்தோஷ் குமார்,எ.சந்தோஷ் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் கம்பம் ஸ்ரீமுக்தி வினாயகர் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆர். மஹாலட்சுமி, எஸ்.ஜெயஸ்ரீ,ஆர்.ஹரிணி ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

9,10 பிரிவில் தேனி மேலப்பேட்டை இந்துநாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்.காயத்ரி, எஸ்.அபிராமி,எம்.ஹரிணி ஆகியோர் முதலிடத்தையும்  கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கே.கெளதம்,எஸ்.முஹமது வாசிம்கான்,ஆர்.எம்.கெளதம்ராஜ் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் டி.ராம்குமார்,எஸ்.யுவஸ்ரீ, அஸ்லிடோமி ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

11,12 பிரிவில் கே.கே.பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் எம்.மதுமதி, எம்.சுமதி, வி.கீர்த்தனா ஆகியோர் முதலிடத்தையும் கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பி.சுரேந்தர், எம்.சுபாஷ், ஜி.முகேஷ் கண்ணன் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்.சத்யமூர்த்தி, எஸ்.பிரசன்னா கோவிந்த், இஜாஸ் அகமது ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் வருகின்ற அக்டோபர் 8,9 தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான வினாடி-வினாப் போட்டிகளில் பங்கேற்கலாம். வாழ்த்துகளுடன் தே.சுந்தர்..

மாவட்டச் செயற்குழு கூட்டம்


செப்டம்பர்,10,2011 அன்று மாலை 5 மணிக்கு தேனி-அன்னஞ்சி அரசு கள்ளர் உயர் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் மாநில மாநாட்டு நிகழ்வுகளையும் மாநிலச் செயற்குழு முடிவுகளையும் எடுத்துரைத்தார்.
ஆகஸ்ட் 12,13,14 தேதிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16வது மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது.நமது மாவட்டத்தின் 10 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பெரியகுளம் பகுதியி-லிருந்து பா.செந்தில்குமரன், ஆண்டிபட்டியிலிருந்து ஆர்.அம்மையப்பன், தேனியிலிருந்து மு.தெய்வேந்திரன், எஸ்.சேசுராஜ்,போடியிலிருந்து செ.சிவாஜி, கம்பம் பகுதியிலிருந்து தே.சுந்தர், ஹ.ஸ்ரீராமன், க.முத்துக்கண்ணன், வி.வெங்கட் ராமன்,ஓவியா தனசேகரன் ஆகியோர் மாநாட்டு நிகழ்வுகளில் மிகச்சிறப்பாக பங்கெடுத்தனர். பல்வேறு தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெற்றன. புதிய மாநிலத் தலைவராக பேரா.எஸ்.மணி, பொதுச்செயலாளராக எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், பொருளாளராக மு.இராதா ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். நமது மாவட்டத்திலிருந்து மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக தே.சுந்தர்,பா.செந்தில்குமரன்,செ.சிவாஜி, ஹ.ஸ்ரீராமன் மற்றும் முனைவர்.ஜி.செல்வராஜ் ஆகிய ஐந்து பேர் தேர்வுசெய்யப் பட்டுள்ளனர்.
மாநில மாநாட்டு இணை அமர்வுகளில் பங்கேற்ற நண்பர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். செப்டம்பர்,4,2011 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக் கொடுத்துள்ளது. மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆசிரிய இணைய கல்வி இதழான விழுது ஆசிரியர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் இணையத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாவட்டச்செயற்குழுவிற்கு பிறகு நடைபெற்ற வேலைகள்.. போடி கிளையின் சார்பில் ஆகஸ்ட் 10ந் தேதி 5 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்,ஆசிரியர்கள் உட்பட சுமார் 250 பேர் கலந்து கொண்ட பேரணி போடியில் நடைபெற்றுள்ளது.போரும் அமைதியும் என்ற தலைப்பில் சூலப்புரம் பள்ளியில் பள்ளிக்குழந்தைகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. போடி மீனாட்சிபுரத்தில் துளிர் இல்லம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.-(சிவாஜி)
கம்பம் கிளையின் சார்பில் ஹிரோஷிமா தினக் கருத்தரங்கம்,இரண்டு துளிர் இல்லங்கள் துவக்கம்,800 குழந்தைகள் கலந்துகொண்ட மனிதச்சங்கிலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. தேனி கிளையின் சார்பில் துளிர் இல்லங்கள் துவக்கம், சர்வதேச வனவள ஆண்டை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி,கருத்தரங்கம்,ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. பெரியகுளம்,ஆண்டிபட்டி கிளைகளின் சார்பில் மாவட்ட அளவிலான ஹிரோஷிமா நாகசாகி நினைவு தினப் போட்டிகளில் தங்கள் பகுதி பள்ளிகளை பங்கேற்கச் செய்துள்ளன..
மாவட்ட மையத்தின் சார்பில் ஹிரோஷிமா நாகசாகி நினைவு தினப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன.அதில் ஏராளமான பள்ளி,கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர். அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டி கம்பத்தில் நடைபெற்றது. 17 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் பங்கேற்றனர். மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கள்ளர் பள்ளிகளின் இணை இயக்குநர் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோரிடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமிற்கான சுற்றறிக்கை பெறப்பட்டுள்ளது.செப்டம்பர் 10 அன்று பிற்பகல் பயிற்சிமுகாமும் நடந்து முடிந்துள்ளது.
செயற்குழு முடிவுகள்..
துளிர் அறிவியல் திறனறிதல் போட்டியில் ஒவ்வொரு கிளையும் தங்களது பகுதியிலிருந்து திரளான குழந்தைகளைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள்,செயற்குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்களுடன் இணைந்து செயல்படவேண்டும்.மாவட்டத்திற்கான இலக்கு 3000 குழந்தைகள்.
மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை பெரியகுளம் பகுதியில்,அக்டோபர் இறுதியில் நடத்துவது.பெரியகுளம் கிளைக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிப்பது.
ஆண்டிபட்டியில் தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டிற்கான பயிற்சி முகாம் செப்.18ல் நடத்துவது.
வட்டாரக்கிளைகள் தங்களது பகுதியில் பள்ளிக்கிளைகளையும் கிராமக் கிளைகளையும் அமைத்திட உரிய முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தன்னுடைய இயல்பான பணிகளுடன் மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள்,சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலும் தலையிட்டு மக்களுக்கு அறிவியல் பூர்வமான உண்மைகளை எடுத்துச்சொல்ல வேண்டும். அந்த வகையில் வைகை அணை-நீராதாரம் மாசுபடுதல் குறித்த ஆய்வை மேற்கொள்வது. மாவட்டச் செயலாளர், தேனி கிளைச்செயலாளர், ஆண்டிபட்டி கிளைச்செயலாளர்,மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்து.மணிகண்டன் ஆகியோரைக் கொண்ட குழு ஒத்த சிந்தனையுள்ள மற்ற நண்பர்களையும் இணைத்துக்கொண்டு செயல்படுவது.
நண்பர்களே..
நம்மால் எதுவும் முடியும்..
நம்பிக்கையுடன்..

தே.சுந்தர்

Sep 9, 2011

செப்டம்பர் 8,சர்வதேச எழுத்தறிவு தினம்


* * நண்பர்களே, வணக்க்ம். இன்று சர்வதேச எழுத்தறிவு தினம். சர்வதேச ஐக்கிய நாடுகளின் கல்வி,அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) )1965ம் ஆண்டு, நவம்பர் 17 ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ம் நாள், சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்தது. 1966ல் முதல் சர்வதேச எழுத்தறிவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் குறிக்கோள் என்ன தெரியுமா? ஒவ்வொரு தனி மனிதர், குழுக்கள் & சமூகத்திடம் எழுத்தறிவின் முக்கியத்தை வலியுறுத்தி அதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கொ அமைப்பு சர்வதேச சமூகத்தின் எழுத்தறிவு மற்றும் முதியார் கற்றலின் அவசியத்தின் உணர்த்துவதே..இதன் குறிக்கோள்

* * "*எழுத படிக்க மட்டும் கற்றுக்கொடுப்பது கல்வியல்ல. வெறும் தகவல் தொகுப்பாக மக்களை மாற்றுவது கல்வியின் பணியல்ல. மாறாக ஒட்டு மொத்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் விருப்பு, வெறுப்பன்றி, விசாரணை செய்வதும், அநீதியைக் களைவதும், முறையற்ற பகிர்வுப் பரவலை அனைவருக்குமானதாக மாற்றுவதும்தான் கல்வியின் நோக்கம்**" -----**பாவ்லொ பிரையர்.*

இன்றைய கல்வி முறை என்பது அதிகார வர்க்கத்தின் கல்வியாகவே உள்ளது. இதில் கலைத்திட்டம்,பாட திட்டம், பாட நூல்கள் அனைத்தும் சமூகத்தின் ஆதிக்க சக்தியினரே திட்டமிடுகின்றனர். அதில் அவர்கள் தமக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை உணர்வுடன் திட்டமிட்டு வடிவமைக்கப் பட்டவை. ஆசிரியர் தகவல்களை அறிவைத் தருதல் என்ற பெயரில் மாணவர்களிடம் திணித்தலே, இன்று கல்வியாக கருதப்படுகிறது. அதுதால் நடந்து கொண்டும் இருக்கிறது.இக்காலக் கல்விமுறை எடுத்துக்கூறுதல் என்ற நோயால அவதிப்படுகிறது. இங்கு கல்வி என்பது சேமிப்பு முறை.இதில் ஆசிரியர்கள் சேமிப்பாளர்கள். மாணவர்கள் சேமிப்பு பெட்டிகள்.ஆசிரியர்கள் வகுப்பறையில் அதிகார தொனியில் கொட்டுவதை அப்படியே மனப்பாடம் செய்து, தேர்வின் போது வாந்தி எடுப்பது/மறு உற்பத்தி செய்வதே இன்றைய கல்வியின் நடைமுறை.
இக்காலகல்வி,ஆளும்வர்க்கத்திற்கு சேவகம்செய்யும் பணியாளனாக/கருவியாக மாறிவிடுகின்றது.இன்றைய வகுப்பறைகளில் உரையாடல் நடக்கவில்லை. மாணவர்கள்/குழந்தைகள் எதுவும் பேசாமல் வகுப்பறையிலிருந்து ஆசிரியர் பேசி அம்பாரமாய் குவித்த வார்த்தைகளை
மட்டும் பிள்ளைகள் தங்கள் பைகளில் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு போகிறார்கள். வகுப்பறையில் கல்வி அமைப்பில் உறைந்து கிடக்கிறது பயமுறுத்தும் மௌனம். 
ஆனால் *இது
உடைபட வேண்டிய மௌனம்*.குழந்தைகளின் குரல்களை விடுவிக்கப்படவேண்டியது இன்றைய வகுப்பறை, ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் மற்றும் சமூகத்தின் கடமையாகும்.நம் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் நிறைய பேரை பெயிலாக்க வேண்டும் என்பதற்காகவே நடக்கிறது. நீங்கள் உற்று நோக்கினால், முதல் வகுப்பில் 6 பிரிவு இருக்கும். ஆனால் 12 ம் வகுப்பில் 1 பிரிவு மட்டுமே இருக்கும்.இந்தியாவில் உள்ள 90% கல்விக்கூடங்களின் நிலை இதுதான். ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். முதல் வகுப்பில் சேர்ந்த பிள்ளைகள் எங்கே ஓடிவிட்டனர். 
அவர்களைத் துரத்தியது யார்?
ஆசிரியர், கல்வி முறை, அதிகாரவர்க்கம் மற்றும் சமூக அமைப்புகளே..!எப்படி..
பெயிலாகி விட்டார்கள். அவர்களுக்கு படிப்பு வரவில்லை எனறு முத்திரை
குத்திவிடுகிறோம். படிப்பு வராது என்ற விஷயம் எங்கேயாவது இருக்கிறதா?
அறிவியல்ரீதியாக அப்படி எதுவும் இல்லை; நிரூபணம் செய்யப்படவும் இல்லை.அறிவியல் இயக்கம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிந்த/அறிந்த தகவல், ஆசிரியர்களின் அணுகுமுறை,புரியாத பாட திட்டம் போன்றவையே இதன் முதன்மைக் காரணிகள்.பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சுவையான முறையில் போதிப்பும் பாடதிட்டமும் தற்போதைய கல்வி முறை தரவில்லை என்பது தான் உண்மை.ஒரு வாய் பல காதுகள்..இதுதான் நம் வகுப்பறையை ரத்தினச் சுருக்கமாகச் சித்தரிக்கும் வர்ணனை.. ஆதர்ச வகுப்பறையின் அடையாளம்.கொஞ்சம் கவனித்துப் பார்த்தால்,கேட்கும் காதுகள் தனித்தியங்க, துறுதுறுக்கும் கைகளும், கால்களும் பல விஷயங்களை செய்து கொண்டிருக்கும். அண்டையில் சீட்டு பரிமாற்றம், சீண்டுதல், என பலப்பல செயல்கள். ஒன்றும் இல்லையெனில் ஜன்னலுக்கு வெளியே பார்வை. அதுவும் அனுமதிக்கப் படாதபோது உடல் மட்டும் வகுப்பறையில், உள்ளம் கனவுலகில். ஒரு சிறு புள்ளி விபரம்.: சுமார் 90% மாணவர்கள், வகுப்பு நேரங்களில் 1/3 பங்குக்கு குறைவான நேரமே.. தாங்கள் கவனிப்பதாய் தெரிவிக்கின்றனர்.
சார்..
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்,
அனுப்பினேன்.
"சார்"
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர,
உள்ளேயே ஈரம்.
வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்! .(.புகழேந்தி)
*எங்கும் அதிகார மணம் கமழும் வகுப்பறைதான்.. இன்றைய கல்வி முறை*.
இது உடைபட்டது.. அறிவொளிக் கல்வியில்தான். படிக்க வந்தோர் எங்களுக்கு
படிப்பித்தனர். கற்போம், கற்பிப்போம் என்ற வாசகத்தின் முழுமையும் உணர்ந்த காலம் அது.தமிழகத்தில் 10 மாவட்டங்களில் எழுத்தறிவு இயக்கம் 1990-95 களில் சாதனை படைத்தது.அதற்கு முக்கிய காரணம் அங்கு பணியாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர்களான, புதுக்கோட்டையில் திருமிகு ஷீலாராணி சுங்கத், சிவகங்கை. திருமிகு.குத்சியா காந்தி, விருதுநகர் திருமிகு. ஞானதேசிகன் போன்றோரே.அறிவொளி இயக்கத்தில் முக்கியமான விஷயம். 1. படிக்காதவர் மனத்தில் நாம் படிக்காதவராக இருப்பது என்ற உணர்வை உண்டுபண்ணுவது.2. படித்தவர்களின் மனத்தில், நம்மைச் சுற்றி இத்தனை பேர் கல்லாதவராக இருப்பது நமக்கு அவமானம். அவர்களை படிக்க வைக்க வேண்டிய சமூகக் கடமை நமக்கும் இருக்கிறது என்ற உணர்வைத் தூண்ட வைத்தல்.இது தழிழக எழுத்தறிவு இயக்கத்தில் நடந்தது. மக்கள் ஏராளமாய் படித்தனர். பின்னர் அரசியல் இதில் நுழைந்தது. காணாமல் போய்விட்டனர் புதிய கற்றோர். இன்றைய பள்ளிக்கல்வி வார்த்தையான அம்மா என்ற துவக்கத்தை விட, பட்டா, படி என்பது அவர்களுக்கு எழுதவும் புரிந்து கொள்ளவும் எளிதாய் இருந்தது.கோலம் போடும் கைகள், எளிதில் அ, ஆ வன்னா எழுதின. புத்தகம் கையில் எடுத்துவிடு, புத்தொரு ஆயுதம் ஆயிடும் உனக்கது, புத்தகம் கையில் எடுத்துவிடு என்பது நடைமுறைஆயிற்று. அனுபவ பங்கீடும் இவைகட்கு உதவி செய்தன.இப்படிப்பட்ட கல்வியைத்தான் எழுத்தறிவு தினம் வலியுறுத்துகிறது.

எழுத்தறிவு பற்றிய ஒரு பாடல்..
அறிவியல் இயக்க நண்பர்கள் உருவாக்கியது: 

புத்தகம் பேசுது, புத்தகம் பேசுது,
புத்தகம் பேசுது
கடந்த காலத்தை
நிகழ் காலத்தை
எதிர்காலத்தை..
ஒவ்வொரு நொடிப்பொழுதை..
புத்தகம் பேசுது... புத்தகம்)
உலகை மனிதரை,
இன்பத்தை துன்பத்தை
அழகிய மலரை அணுகுண்டை
வெற்றியை தோல்வியை
நேசத்தை நாசத்தை
புத்த்கம் பேசுது.. 3 முறை..
புத்தக்ம் பேசும் பேச்சுக்கள் யாவும்
காதினில் கேட்கலையா.. உன்
காதினில் கேட்கலையா?
புத்தகம் ஏதோ
சொல்ல தவிக்குது
உன்னிடம் வந்து
இருக்கத் தவிக்குது..
புத்தக்ம் உன்னை
மடியில் கிடத்தி
ராஜா ராணி
கதைகள் சொல்லும்.
E= MC2
E= MC2
புத்தகங்களில்
அறிவியலின் குரல்
ஓங்கி ஒலிக்கும்
ஞானம் சுரக்கும்.
புத்தகங்களில்
அடடா
எத்தனை பேருலகம்..
புத்தகம் ஏதோ சொல்லத் தவிக்குது..
 
 
* * எழுத்தறிவு என்பது சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கான திறவுகோல். இந்தியாவில் எழுத்தறிவு விகிதல் 2011, 74.04%. இதில் ஆண்கள்: 84.14%; பெண்கள்: 65.46%.ஆனால் இந்த எழுத்தறிவு நம்மை ஒடுக்கி நம் முதுகை வினாக்குறியாக மாற்றிய ஆங்கிலேயர் நம் நாட்டை நம்மிடம் ஒப்படைத்த போது 1947 ல் வெறும் 12% மட்டுமே இருந்தது இன்று அது 6 மடங்காக உயர்ந்திருக்கிறது.ஆனாலும்கூட, உலக எழுத்தறிவு தரத்திற்கு இணையாக மாறவில்லை. உலக எழுத்தறிவு 84%. இருப்பினு உலகில் அதிக எழுத்தறிவற்றவர்கள் வாழும் நாடு இந்தியாதான்.இந்த 74%மும் கூட எழுத்தறிவு இயக்கம் வந்த பின் தான் இந்த அளவுக்காவது எண்ணிக்கையின் விகிதம் உயர்ந்தது.
-மோகனா
-

Sep 8, 2011

உலக புத்தக தினம்... ஏப்ரல்23...!



*உலக புத்தக தினம்*
 புத்தகம் பேசுது, புத்தகம் பேசுது, புத்தகம் பேசுது..
 உலகை, மனிதரை,
 இன்பத்தை, துன்பத்தை
அழகியமலரை, அணுகுண்டை,
வெற்றியை, தோல்வியை
தேசத்தை, நாசத்தை..
புத்தகம் பேசுது,புத்தகம் பேசுது,
புத்தகம் பேசுது....! ..
(அறிவியல் இயக்க பாடல் )

                     

 காலம் நம் கையில்தானே..
எதிர்காலம் நம்கையில்தானே..! ......
சின்னஞ் சிறிய கருந் தீவில் - நாம்
தன்னந் தனியே இருந்தாலும் - ஒரு
 புத்தகம் நம் கையில் கிடைத்தால் - நம்
 தனிமையும் தவிப்பும் தானாக விலகும்
 காலம் நம் கையில் தானே...!....
(அறிவொளி பாடல்)


 * உலக புத்தகதினமும்... காப்புரிமை தினமும்...!*

   நாம் காலம் காலமாக புத்தகம் படிக்கிறோம்..! புத்தகம் எழுதப் படுகிறது..!
புத்தகங்களை சேமிக்கும் இடத்தை நூலகம் என்கிறோம். ஆனாலும் கூட, புத்தக படிப்பை
ஊக்குவிக்க, ஓர் தூண்டுதல் தேவையாயிருக்கிறது. அதற்காக, யுனெஸ்கோ என்ற உலக
கல்வி நிறுவன அமைப்பு மக்களிடையெ புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை
ஊக்குவிக்கவும், அதற்காக அதிக புத்தகங்களை வெளியிவும் முடிவு செய்தது.  அதன்
அடிப்படையில் தொடர்ந்து   உலகம் முழுவதும் 1995 முதல் ஏப்ரல் 23 உலக புத்தக
தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக வந்ததிரு ஒரு காரணம்
உண்டு. உலகம் முழுவதும் இந்த நாளில் புத்தகத்தையும், அதை உருவாக்கியவர்களையும்
மரியாதை செய்கின்றனர். உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில்
பிறந்தோ/மறைந்தோ இருக்கின்றனர்.**
**
முக்கியமாக,  ஐரோ ப்பாவில் வாழ்ந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர்,  உலக
மக்கள் வியக்கும் ரசிக்கும் உலகின் தலை சிறந்த சோக காவியம் லியா அரசன்,  காதல்
காவியம் ரோமியோ ஜுலியட்' ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும்,
மச் அடோ அபவுட் நத்திங்   (Much Ado About Nothing)  என்ற நகைச்சுவை
நாடகத்தையும் எழுதினார். இவர் பிறந்ததும், உலகைவிட்டு மறைந்ததும்..ஏப்ரல்  23
ல் தான்.அது போலவே, 1923 , ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 23 ம நாள் இறந்த, பிகுல்டி
செர்வேண்டிசின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடு வதாக சொல்லப் படுகிறது.

   **
**
*வில்லியம் ஷேக்ஸ்பியர்*

**
**
*ஜான் மில்டன்*

**
**
*ஷேக்ஸ்பியரின் சிலை*

*வாழ்க்கைப் போராட்டத்தில்.. வென்ற இலக்கியவாதிகள்..!*

* *   வில்லியம் ஷேக்ஸ்பியரும், ஜான் மில்டனும் ஆங்கில இலக்கியத்தின் இரு
கண்களாகப் போற்றப் படுகின்றனர். ஆனால், இவர்களின் இளமைக்காலத்தைப் புரட்டிப்
பார்த்தால், கதை வேறு மாதிரி இருக்கிறது.  கல்விக் கூடத்தில் சரியாகப் போதனை
பெற முடியாமல், சமூக நீதிகளும், சமூக காரணங்களும், இவர்கள் இருவரையும்,ஓட
ஓட விரட்டி விட்டன. "கல்வி அனைவருக்குமானது;புத்தகம்  பொதுவானது " என துண்டு
பிரசுரம் கொடுத்ததிற்காக , மில்டன் சிறைச்சாலையை சந்திக்க நேரிட்டது. அவருக்கு
இந்த வெளி உலகை காண முடியவில்லை. அக உலகின் கண்கள் மட்டுமே அவருக்கு
திறந்திருந்தன.இந்த நிலையிலும்,கல்வி மேல், மீளாக் காதல் கொண்டவர் மில்டன்.
எனவே, சிறைக் கம்பிகளுக்கிடைஎயும், மற்றவர் வாசிக்க கேட்டு, மேதையானார். உலகப்
புகழ் பெற்ற கவிதையான, "பாரடைஸ் லாஸ்ட் (Paradise lost) என்ற அழியா நூலை
உருவாக்கினார். இது போலவேதான், வில்லியம் ஷேக்ஸ்பியரும் அரச மொழி என்று
போற்றப்பட்ட லத்தினை எதிர்த்து, தனது தாய் மொழியான ஆங்கிலத்தை இலக்கியத்தில்
நுழைப்பதற்காகவே, பல காவியங்கள் புனைந்தவர். வாசிப்பின் லயிப்பில் மனம்
ஈடுபட்டு , தூக்கத்தைத் துறந்தவர்..!

**
**
*இஷாங்கோ எலும்பு*
* *

* *
**
*குரோமேக்னன் மனிதனின் பதிவு*
*முதல் புத்தகம்..குகையும்..எலும்புகளும்..!*

*  *  இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைபேசிகளும்,
மின்னஞ்சலும், முக்கியமாக தொலைக் கட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும்
பழக்கத்தை பிடுங்கிவிட்டன..! ஆனால் புத்தகம்தான், நிரந்தரமாய் நிலைத்து
..சுவையும், இன்பமும், ரசனையும தரவல்லது.  படிப்பதன் ஆழ்ந்த அருமையான சுவை
என்பது, வலைத் தளத்தில்நிச்சயமாக  கிடைக்காது. ! புத்தகம் என்பது ஒருவரின்
சொத்து..! எழுத்துக்களின் முதல் பதிவு..! குகைச் சுவர்களிலும், இஷாங்கோ
(Ishango) எலும்புகளிலும் , சுமார் 37,000    ஆண்டுகளுக்கு முன்பே, இவை
நிகழ்ந்து விட்டன.  பின்னர் களிமண் கலவைகளிலும், பாப்பிரஸ் மரப்பட்டைகளிலும்
எழுதப் பட்டன. அவை அனைத்துமே புத்தகங்கள்தான்..! வரலாற்றுப் பதிவுகள்தான்..!

    **
**
*புத்தகமும் ரோஜாவும் பரிசாக*

*எழுத்தாளர் தினம்...புத்தக தினம்..! *

*  *
**
*பார்சிலொனாவில் புத்தக தினத்தன்று, புத்தகத்துடன் ரோஜா மலர் கொடுக்கப்
படுகிறது.*

**
**

* *காதலர்கள் தமக்குத் தரும் ரோஜாப் பூக்களுக்குப் பதிலாக, பெண்கள் தங்களின்
காதலர்களுக்கும் புத்தகத்தையே பரிசாகத் தந்தனராம். 1616 ம ஆண்டில், ஏப்ரல் 23 ,
உலக இலக்கிய தினமாக கருதப் பட்டு, ஒவ்வொரு புத்தகம் விற்கும்போதும், அதனுடன்
ஒரு ரோஜாப் பூவினை, காட்டலோனியா என்ற ஊரில்  அன்பளிப்பாகத் தந்தனராம்.அது
போல, 1616,ஏப்ரல் 23 ம்  நாள் உலகின் புகழ் பெற்ற
எழுத்தாளர்களான, ஷேக்ஸ்பியர்,செர்வேண்டிஸ்,இன்கா கார்கிலாசோ ,  (William
Shakespeare, Miguel de Cervantes, Inca Garcilaso de la Vega )    போன்றோர்
இறந்தனர். ஏப்ரல் 23 ம் நாளில்  மாரிஸ் , ஹால்டோர் லேக்சனஸ், விளாதிமிர்
நொபொகோவ், ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா (Maurice Druon, Haldor
K.Laxness, Vladimir Nabokov, Josep Pla and Manuel Mejía Vallejo) போன்ற
எழுத்தாளர்களும் இந்த உலகத்தைப் பார்வையிடப்  பிறந்தனர். புத்தக தினத்தில்
அனைவரும் புத்தகம் வாங்க வேண்டும் என உறுதி மொழி எடுக்க வேண்டும். : "மனிதனின்
கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே..! " என , 20௦ ம்  நூற்றாண்டின்
சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

 கூறியுள்ளார்.

 *  நாகரிக ..வரலாறு..!*

   **
**
உலகின் உருவாக்க வரலாறு சுமார், 450 கோடி, ஆண்டுகளுக்கு முற்பட்டது. உயிரினம்
350 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது. மனித இனத்தின் சரித்திரம் மற்றும்
பரிணாமத்தின் வயது 50 இலட்சம் ஆண்டுகள்..! நாம் பல நிலைகளைக் கடந்துதான் இன்று
"வெள்ளையும் சொள்ளையுமாக" நாகரீக மனிதர்களாய் பரிணமித்துள்ளோம் .ஆதி மனிதன்
காடுகளிலும் மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்திருக்கிறான். சக்கரம் சுழலத்
துவங்கிய பின்னர்தான், மனித தொழில் நுட்பத்தின் பரிணாமத்தின் முதல் அத்தியாயம்
துவங்கியது. ..! ஆனால் அதற்கு முன்பே, மனிதன் தன கருத்துகளை, எண்ணங்களை பதிவு
செய்யத் துவங்கிவிட்டான்.பலப் பல வகைகளில்...! எத்தனை ஆண்டுகளுக்கு முன்
இருக்கலாம் என எண்ணுகிறீர்களா..? அண்ணாச்சி சுமார் 40 ,000 ஆண்டுகளுக்கு
முன்னால்தான்..!   .

   **
**


 *முதல்..பதிவு..! *

   நண்பா..! குகைகளில் எழுதத் தொடங்கு முன்பே, எலும்புகளில் பதிவு
செய்துவிட்டனர். ஆம், இதைச் செய்ததும் ஒரு பெண்ணே என தற்போது தெரிய
வந்துள்ளது.அதுதான் உண்மை..!.. அது பபூன் குரங்கின் கை எலும்பில்தான் அது
நிகழ்ந்தது; பெண்கள் குறியீடாக மாதத்தின் நாட்களை, தனது மாதவிடாயை, வானில்
நிலவு வந்து போகும்  காலக் கெடுவுடன் தொடர்புடையதாக, குறித்து வைத்துள்ளனர்.
"லேபோம்பா" (Lebombaa ) எனற இடத்தில் கிடைத்த எழும்பி,அதன் பெயரிலே  லேபோம்பா
என்றே அழைக்கப்பட்டது. ! அதன் வயது என்ன தெரியுமா? சுமார் 37,௦௦௦000 ஆண்டுகள்.!
இந்த எலும்பில் 29 கோடுகள்/பட்டைகள் உள்ளன. இஷாங்கோ என்ற இடத்தில் கிடைத்த
எலும்பின் பெயர்" இஷாங்கோ எலும்பு". இதன் வயது 20,000  -25,000  ஆண்டுகள்.இதில்
3 வரிசையில் எண்கள் பற்றி "டாலி( Tally )" குறியீட்டில் பதிவு  செய்துள்ளனர்
அக்கால பெண்கள்/மனிதர்கள்..!  இதில் 6 மாத சந்திர காலண்டர்
பொறிக்கப்பட்டுள்ளது. "அண்ணாச்சி, கிராமத்தில் பால், மோர் மற்றும் காய்கறி
விற்கும் பெண்கள் நம் வீட்டின் சுவரில் கரிக் கோடு போடும்
விஷயங்கள்..மண்டைக்குள் ஓடுகின்றதா.?".

   *பயம் ...வந்தது..!*

   **
**
*புத்தகப் புழுவா?*
எலும்பில் எழுதிய மனிதன், மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ்
மரபட்டைகள், ஆடு மற்றும் கன்றுகுட்டியின் தோள்கள், மரபட்டைகள், களிமண், மண்
ஓடுகள் மற்றும் பேப்பர்கள் என, எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம்
பெற்று, இன்று மின்னஞ்சலில், வலைதளத்தில், e-எழுத்தாக மாறியுள்ளது. இதன் மூலம்
எழுத்துகள் பதித்த புத்தகம் காணாமல் போய்விடுமோ இன்று..  என்ற
அச்சம்,நம்மிடையே  பிறந்துள்ளது..உலகில்..!

   * காலப் பதிவுகள்..மனிதப்..பரிணாமத்தில்...! *

  - * *கி.மு..1,00,000  -40,000 ...பேச்சு பிறந்தது.
  - கி.மு.30,000ஆண்டுகளுக்கு முன்...  
  குகை ஓவியம்/கிறுக்கல்கள்-ஐரோப்பாவில்...

  - கி.மு.. 20,000  -6,500  
விலங்குகளின் எலும்பில்  எழுத்து-- பிரான்சில்

  - கி.மு ..5,500 - 4.,500 
எழுத்துப் பதிவின்  துவக்கம் --ஆப்ரிக்கா

  ஆப்பிரிக்காவில் எழுத்துப் பதிவு
  *
  - கி.மு ..3,500 -3,000 
சுமேரியப் படப் பதிவு * சுமேரிய எழுத்துக்கள்
  *
  - கி.மு ..3,000 - 2,800  
எகிப்தின் களிமண்-பதிவுகள் *
  எகிப்திய பாப்பிரஸ் எகழுத்துக்கள்
  *
  - கி.மு ..2,500                                     உலகில் கிழக்குப்
  பகுதி நோக்கி கியுனிபாரம்  எழுத்துக்கள் பரவுதல் *
  குயூனிபாரம் எழுத்துக்கல்
  *
  - கி.மு ..2,500                                     சிந்துசமவெளி
  நாகரிகம், எழுத்து மற்றும் படப்  பதிவுகள்
  - *
  சிந்துசமவெளி.. மொகஞ்சதாரா
  சிந்து நாகரிக எழுத்துக்கள்
  *
  - கி.மு ..2,100                            களிமண்
  எழுத்துக்கள்-எலும்பு   எழுத்துக்கள் கண்டுபிடிப்பு *
  மண்டையோட்டில் எழுத்துப் பதிவு
  *
  -  கி.மு ..1,500௦௦                                     சீனர்களின்
  குறியீட்டு எழுத்துப் பதிவு *
  பழங்கால சீன எழுத்துக்கள்
  *
  - கி.மு ..1,400                                     உகாரிட் பதிவுகள்
  - கி.மு ..1,100 - 900                             நவீன எழுத்துக்கள் *
  நவீன தமிழ் எழுத்து
  பழங்கால தமிழ் எழுத்து
  - கி.மு ..8,000   கிரேக்க நவீன எழுத்துக்கள்

அலெக்சாண்டிரியா நூலகமும், தாலமியும்*

*  நூலக...பிறப்பு...!*


*அலெக்ஸ்சாண்டிரியா நூலகத்தின் உட்பகுதி*


*அலெக்ஸாண்டிரியா நூலகத்தில். பல மொழிகளின்பதிவு*

*அலெக்சாண்டிரியா நூலகம் உட்பகுதி*

*     * எகிப்தின் அலெக்சாண்டிரியாவில், கி. மு 247ல் உலகின் மிக பெரிய நூலகம்
இருந்ததாம்.  சுமார் 7,00,000க்கும் மேற்பட்ட ஆட்டுத்தோல் புத்தகங்கள் அங்கு
இருந்தனவாம்; 5,000  மாணவர்கள் படித்தனராம்.  நாம் பயன் படுத்தும்
காகிதத்தை சீனர்கள் கண்டு பிடித்தாலும், புத்தகபுரட்சியைப்  செய்தவர்கள்
அரேபியர்கள்தான். முகம்மதியர்களிடமிருந்தே..  பேப்பர் புத்தக பரிமாணம்
துவங்கியது. 8 ம் நூற்றாண்டில், மொராக்கோவில் 100 புத்தக கடைகள் இருந்தனவாம்.
இந்தியாவில் கி.பி, 2 ம் நூற்றாண்டில் ஆந்திராவில் நாகர்ஜுன  அரசன் உருவாக்கிய
நூலகம்"நாகார்ஜுன வித்யா பீடம்". இந்த நூலகத்தில்  பல விலங்குகளின் வடிவில் 5
மாடிகளும், 1500 அறைகளும் இருந்தன.கி.பி  7 ம் நூற்றாண்டில் 68 ,700  பனை ஓலை
நுல்களும், 36,௦058 பாப்பிரஸ் சுருள் புத்தகங்களும் இருந்தன.

 *கருத்துக்களின் ....விதை...நூலகம்..!*


*புத்தகக் குவியல்*

தமிழ் நாட்டு நூலக வரலாற்றில் பிதாமன் இராமாமிர்தம் ரங்கநாதன்  ..!
இவர்தான் "சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை" என்று அழைக்கப்பட்டு, மரியாதை
செய்யப் படுபவர்.  1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால்
உருவாக்கப்பட்டது. 1931 ல், அக்டோபர் 21 ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு
மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேலவாசலில், நடமாடும் நூலக வண்டிப் பயணம் தொடங்கப்
பட்டது. அங்கு 72 கிராமங்களில், 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்
பட்டது..! இதில் 3,782 புத்தகங்கள், 20,000 தடவைகளுக்கு மேல், மக்களுக்குக்
கொடுத்து, திரும்பப் பெறப்பட்டன. ! ஆனால்   இன்று அரசுப் பள்ளிகளில் கூட நூலகம்
இல்லாத நிலைமை..! மனித நாகரிக வளர்ச்சியின்   பதிவு நூலகமே..!


மனிதன் வரலாற்றுக்குரியவன்  ..! நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும்
மனிதனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள்,
சந்தோஷங்கள், சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும்
கல்விப் பொருளாக, புத்தகங்களாக மாற வேண்டும்..! அத்தகைய உள்ளடக்கம் கொண்ட
கல்விதான் மக்களை விடுதலை செய்யும்.

  " மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப் படவில்லை. ! அவன் வார்த்தகளால்,
செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கை களால் கட்டமைக்கப்
படுகின்றான். "--பாவ்லோ பிரையர்

       இந்த வேலையைச் செய்வது புத்தகங்கள் மட்டுமே..!


*Silverwood Primary School P 1 pupils enjoy World Book Day.*

*பள்ளியில் உலக் புத்தக தினம் கொண்டாடும் மலர்கள்*


*தாயிடமிருந்து புத்தகம் பறித்து படிக்கத் துடிக்கும் வாண்டு*
அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள்..!

  குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் ,மற்றும்  உறவினர்கள் அனைவருக்கும்
இன்று புத்தகங்கள் பரிசளியுங்கள்...! குழந்தைகளுக்கு வாசிக்க கற்றுக்
கொடுங்கள்.!

அயல் நாடுகளில் நூலகத்தில் குழந்தைகள் அமர்ந்து படிக்கவும், புத்தகம்
எடுக்கவும் வசதிகள் உள்ளன. நம் ஊரில் பெரியவர்கள் படிக்கவே நூலகம் ஒவ்வொரு
ஊரிலும் தேவை..@

   உலக நாயகனான சார்லி சாப்ளின், ஒவ்வொரு புதிய படம் நடிக்க
ஒப்புக்கொள்ளும்போதும், அதன் முன் பணத்தில் முதல் 100 டாலருக்கு புத்தகம்
வாங்குவாராம். **
*சார்லி சாப்ளின்*

  "ஒரு புத்தகத்தை திறக்கும்போது, உலகினை நோக்கிய ஒரு சன்னலைத்
திறக்கிறோம்"...தோழர் சிங்காரவேலர்.

*வாசிக்கும் மலர்கள்*
 "வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்
பட்டது புத்தகம் மட்டுமே"..மார்க் ட்வைன்

*பெர்னார்டு ஷா*
ஒரு நல்ல வாசகனைக் கொண்டே, ஒரு நல்ல புத்தகம் அடையாளம் கட்டப்
படுகிறது"..ஜார்ஜ் பெர்னாட்ஷா

 "ஒருவர் மூளைக்கும் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை  மற்றொரு மூளைக்குள் கொண்டு
செல்லும் தேனீக்கள்தான் புத்தகம்" --ஜேம்ஸ் ரஸ்ஸல்

      *"புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்..!" 

* *

 
_பேரா.சோ.மோகனா

Sep 3, 2011

துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகள்-2011

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும் பள்ளியில் கற்ற அறிவியலை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்கவும் ஆண்டு முழுவதும் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றது. குழந்தைகள் அறிவியல் மாநாடு, கோடை அறிவியல் திருவிழாக்கள்,துளிர் அறிவியல் மேளாக்கள்.மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள், எளிய அறிவியல் பரிசோதனைகள் மற்றும் எளிய அறிவியல் கருவிகள் செய்வதற்கான பயிற்சிகள்,துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டிகள் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிகழ்ச்சிகள் தமிழகத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் நாள்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது..

அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகளுக்கான பணிகள் இந்த ஆண்டும் துவக்கப் பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்கும் பள்ளிகள்,மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. உதாரணமாக கடந்த 2008ம் ஆண்டில் 12525ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2009ல் 15311 ஆகவும் 2010ல் 19831 ஆகவும் அதிகரித்துள்ளதன் மூலமே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் இப்போட்டிக்கான வரவேற்பை அறியமுடியும். இந்த ஆண்டும் உங்களின் பேராதரவுடன் மிகச்சிறப்பாக நடைபெறும் என நம்புகிறோம்..

போட்டிக்கான விதிமுறைகள்:
1. ஆறாம்வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். 6-8 வகுப்புகள் வரை இளநிலை என்றும் 9-12 வகுப்புகள் வரை மேல்நிலை என்றும் இருபிரிவுகளாகத் தேர்வுகள் நடைபெறும். ஐ.டி.ஐ.,பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வி வகுப்புகளில் முதலிரண்டு ஆண்டுகளில் பயில்வோறும் இதில் பங்கு கொள்ளலாம்.

2. இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.100/-(ரூபாய் நூறு மட்டும்) செலுத்திப் பதிவுசெய்து கொள்ளவேண்டும். பதிவுசெய்யும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு காலத்திற்கு ரூ.84 மதிப்புள்ள துளிர் அறிவியல் மாத இதழ்கள் மாதந்தோறும் அனுப்பிவைக்கப்படும். ஜந்தர் மந்தர் (ஆங்கிலம்) இதழ் வேண்டுவோர் பதிவுக்கட்டணமாக ரூ.150/-(ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்)செலுத்தவேண்டும்.

3. இப்போட்டி 26.11.2011 சனிக்கிழமையன்று ஒரே நாளில்,ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் எழுத்துத் தேர்வாக நடைபெறும்.மாணவர்கள் எழுத்துத்தேர்வில் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் வினாத்தாள் அமையும். வினாக்கள் பொது அறிவியலாகவும் துளிர் அறிவியல் செய்திகளாகவும் அறிவியல் விழிப்புணர்வுத் தகவல்களாகவும் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வுத் திறனை வெளிக்கொணரும்வகையிலும் இருக்கும்.

4. வினாக்கள் 4 விடைகளிலிருந்து 1 விடையைத் தெரிவு செய்யும் வகையிலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிற்கான பங்கேற்கப் பயிற்சியளிக்கும் வகையிலும் இருக்கும்.

5. பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரணகாரிய அறிவையும் அறிவியல் குறித்த புரிதலையும் தெளிவுபடுத்துவதாக இருக்கும்.

6. வினாக்கள் தமிழ்,ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் இருக்கும்.எனவே ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களும் பங்கேற்கலாம்.

7.எழுத்துத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

8. மாவட்ட அளவில் முதலிடம் பெறும் இரு மாணவர்களுக்கு (இளநிலை மற்றும் முதுநிலை) அறிவியல் பயிலரங்கில் பங்கேற்கும் வாய்ப்பும் சிறப்புப்பரிசும் வழங்கப்படும்.

9. இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர்கள்,பள்ளி முதல்வர்கள்/தலைமையாசிரியர்கள் பூர்த்தி செய்த படிவத்துடன் நுழைவுக்கட்டணத்தை வங்கி வரைவாக அல்லது பணவிடையாக மாநில ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். வங்கி வரைவு துளிர்,சென்னை என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும்.(DD in favour of Thulir, Payable at Chennai)

10. இப்போட்டிக்கான முதல் பதிவுப்பட்டியல் 30.09.2011க்கு முன்னரும் இரண்டாம் மற்றும் இறுதிப்பட்டியல் 28.10.2011க்கு முன்னரும் உரிய வங்கிவரைவு மற்றும் பங்கேற்பாளர் பட்டியல்-முழு முகவரியுடன் மாநில ஒருங்கிணைப்பாளரின் தஞ்சாவூர் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

11.ஐம்பது பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகள் தேர்வுமையமாகச் செயல்படலாம்.

பள்ளிகளுக்கான பரிசுகள்:
100 மாணவர்களுக்கு மேல் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று அறிவியல்  மென்தட்டுகள்(சி.டி.)

200 பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு..
முதல் பரிசு -ரூ.5000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்.
இரண்டாம் பரிசு -ரூ.3000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்
மூன்றாம் பரிசு -ரூ.2,000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்

பள்ளிகளுக்கான பரிசுகள் உயர் அளவு பதிவுகளின் அடிப்படையில் தேர்வு
செய்யப்படும்.இதற்கு துளிர் மற்றும் ஜந்தர்மந்தர் பதிவுகள் சேர்த்துக் கணக்கில்
கொள்ளப்படும்.

இப்போட்டிகள் குறித்த அதிக விபரங்கள் தேவைப்படுவோர் மாநில ஒருங்கிணைப்பாளரையோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளரையோ தொடர்பு கொள்ளலாம்.

மாநில ஒருங்கிணைப்பாளர்                          மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
முனைவர்.அ.வள்ளிநாயகம்                     தே.சுந்தர்,மாவட்டச் செயலாளர்
132சி,முனிசிபல் காலனி 6வது வீதி,         தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தஞ்சாவூர்-613007                               எண்.8,தளம்.2,ஸ்மார்ட் மொபைல்ஸ் மாடி,
போன்-04362-240784                                    குட்டியாபிள்ளைத்தெரு,கம்பம்-625516
செல்-94438 65864                                                செல்:9488011128, 8870703929