செப்டம்பர்,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி கிளை மற்றும் த.மு.எ.க.ச. ஆசிரியர் கிளை ஆகியவை இணைந்து தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் செப்.5 மாலை எனக்கு இல்லையா கல்வி? ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.. த.மு.எ.க.ச.ஆசிரியர் கிளையின் தலைவர் ப.மோகன் குமார மங்கலம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றார். பின்னர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் ஆவணப்படம் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.முனைவர்.வனராசா இதயகீதன் விவாதக் கருத்துகளைத் தொகுத்துப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் செ.சிவாஜி, சேசுராஜ், வெங்கட்ராமன், அம்மையப்பன், ஓவியாதனசேகரன் ,ஸ்ரீதர்,ஜெகதீசன், வாஞ்சிநாதன்,சதீஸ் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் நன்றி கூறினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மிகச்சிறப்பானதொரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்ட மகிழ்ச்சியோடு அனைவரும் விடைபெற்றனர்.
No comments:
Post a Comment