இன்று 16 .09 .11 அன்று,பழனி,, நகராட்சி மேனிலைப் பள்ளி, கலை அரங்கத்தில், பள்ளி குழந்தைகளுக்கான, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, வழிகாட்டி ஆசிரியருக்கான பயிற்சிப் பட்டறையை தமிழ் நாடு அறிவியல் இயக்கம்,பழனி கிளை நடத்தியது. நகராட்சி மேனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு. மனோகரன் தலைமையில், பழனி கிளைத் தலைவர்,ஆசிரியர் திருமிகு. S . பிரபாகரன் ,வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிப் பட்டறையை துவக்கி வைத்தார்.கிளை இணைச் செயலர். திருமிகு. சாயிலதாராஜ்,தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பற்றி பேசினார். திண்டுக்கல் மாவட்ட அறிவியல் இயக்க செயலர் திருமிகு. முத்துக்குமார் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றி அறிமுக உரை ஆற்றினார். தமிழ் நாடு அறிவியல் இயக்க துணைத் தலைவரும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளருமான, பேரா. சோ. மோகனா, இந்த ஆண்டின் கருப்பொருளான நிலவளங்கள் பற்றியும், அதனை எப்படி செய்வது என்று பற்றியும் கருத்துரை ஆற்றினார். தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர். திருமிகு. தியாகராஜன் அறிவியல் மாநாட்டில் ஆய்வு செய்ய வேண்டிய தலைப்பு களையும், அதன் வழி முறைகளையும், நிலமும் பாரம்பரிய அறிவும் என்பது பற்றி விளக்க உரையாற்றினார். திருப்பூர் மாவட்ட அறிவியல் இயக்கத் தலைவர்.திருமிகு. ஈஸ்வரன், அறிவியல் ஆய்வுகள் செய்வது குறித்து கூறினார். பட்டறையில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகளும் மற்றும் 25 வழிகாட்டி ஆசிரியர்களும் அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வு செய்யும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பட்டறையை சிறப்பித்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் பேரா. ராமகிருஷ்ணன், பழனி கிளைச் செயலர், பேரா. ராமலிங்கம், மற்றும் செயற்குழு உறுப்பினர் திருமிகு.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் திருமிகு,தர்மராஜ் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூற பட்டறை இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment