செப்டம்பர் 7,2011 அன்று பிற்பகல் கம்பம் ஸ்ரீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத்தலைவர் முனைவர்.முகமது ஷெரீப் தலைமை வகித்தார். கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார்,ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர்.ஆர்.அனுசூயா அவர்கள் நிகழ்ச்சியைத் துவங்கிவைத்துப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் பேரா.எஸ்.மோகனா வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்திப் பேசினார். மாவட்ட அளவில் நடைபெற்ற ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் திரு.தியாகராஜன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஆய்வு ஒருங்கிணைப்பாளர் முனைவர். எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்தனர். கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார். வணிகவியல் துறைப் பேராசிரியர் எம்.சி.சாந்தி அறிவியல் இயக்கத் தொண்டர்கள் ராஜ்குமார்,பாஸ்கர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இயற்பியல்,வேதியியல்,உயிரியல்,காடுகள்,தமிழ்,பொது அறிவு ஆகிய ஆறு தலைப்புகளில் கேள்விகள் இடம்பெற்றன. மாவட்டம் முழுவதிலுமிருந்து 18 பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
6,7,8 பிரிவில் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வி.ஹேமந்த்ரா,ஜி.எம்.என்.ஜெய அஸ்வதி,எம்.சத்யசெல்வன் ஆகியோர் முதலிடத்தையும் கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எம்.தினேஷ்குமார், என்.சந்தோஷ் குமார்,எ.சந்தோஷ் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் கம்பம் ஸ்ரீமுக்தி வினாயகர் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆர். மஹாலட்சுமி, எஸ்.ஜெயஸ்ரீ,ஆர்.ஹரிணி ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
9,10 பிரிவில் தேனி மேலப்பேட்டை இந்துநாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்.காயத்ரி, எஸ்.அபிராமி,எம்.ஹரிணி ஆகியோர் முதலிடத்தையும் கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கே.கெளதம்,எஸ்.முஹமது வாசிம்கான்,ஆர்.எம்.கெளதம்ராஜ் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் டி.ராம்குமார்,எஸ்.யுவஸ்ரீ, அஸ்லிடோமி ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
11,12 பிரிவில் கே.கே.பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் எம்.மதுமதி, எம்.சுமதி, வி.கீர்த்தனா ஆகியோர் முதலிடத்தையும் கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பி.சுரேந்தர், எம்.சுபாஷ், ஜி.முகேஷ் கண்ணன் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்.சத்யமூர்த்தி, எஸ்.பிரசன்னா கோவிந்த், இஜாஸ் அகமது ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் வருகின்ற அக்டோபர் 8,9 தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான வினாடி-வினாப் போட்டிகளில் பங்கேற்கலாம். வாழ்த்துகளுடன் தே.சுந்தர்..

No comments:
Post a Comment