முதல் பக்கம்

Feb 27, 2012

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் திறனறிதல் போட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெரியகுளம் கிளையின் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி,25,2012-சனிக்கிழமையன்று பெரியகுளம் வி.எம்.நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறனறிதல் போட்டி நடைபெற்றது. ஒன்றியம் முழுவதுமிருந்து 44 நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 6,7,8 வகுப்பு மாணவர்கள் 1160 பேரும் ஆசிரியர்கள் 88 பேரும் கலந்துகொண்டனர். தேர்வு இரண்டு மணிநேரம் நடைபெற்றது. அந்தந்த வகுப்பிற்குரிய அறிவியல் பாடங்களிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகக்  கண்காட்சி மற்றும் அன்றாட வாழ்வில் வேதியியல் குறித்த போஸ்டர் கண்காட்சியும் நடைபெற்றது. பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன். கிளைச் செயலாளர் எஸ்.இராம்சங்கர், கிளைப்பொருளாளர் பெ.ஆண்டவர் மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள் எஸ்.எ.செல்வராஜ், வி.ரமேஷ், கார்த்திகேயன் மற்றும் சிவா ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.சேசுராஜ், வி.வெங்கட்ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.மனோகரன், முத்துமணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Feb 26, 2012

அன்புள்ள சாந்தி அக்கா...


அன்புள்ள சாந்தி அக்கா...
உங்களுக்கும் எனக்கும்
அப்படியொன்றும்
நெடுங்கால நட்பென எதுவுமில்லை..
இருந்தாலும்..
என்னை எப்போதும் பார்த்தாலும்
சிரித்த முகத்தோடு நீங்கள் கேட்பீர்கள்
"என்ன தம்பி நல்லா இருக்கீங்களா..?
அப்பா.. அம்மா எப்படி இருக்காங்க..?"



சிலரைப் பார்த்ததும்
சென்று பேசத் தோன்றும்..
சிலரைப் பார்த்ததுமே
ஓடி ஒளியத் தோன்றும்..
உங்களைப் போன்ற ஒருசிலருடன் மட்டுமே
எப்போதும் இருக்கத் தோன்றும்!

 
அன்புள்ள சாந்தி அக்கா...

மகப்பேறுக்காக வந்த
மகள் திரும்பிச் சென்று
சில நாட்களே ஆகின்றன..
பொறியியல் படிப்பை-மகன்
படித்து முடிக்க
சில மாதங்களே இருக்கின்றன..

எத்தனை கனவுகளுடன்
நின்றிருந்தாயோ..
மதுரை-பெரியார் நிலையத்தில்..
பேருந்து வடிவத்திலா
வரவேண்டும் பேரதிர்ச்சி..!

உங்க ஊரான புதுப்பட்டியில்
உடல்-என்னிரு கண்முன்னால்
எரிந்து கொண்டிருந்தாலும்
ஏற்கமுடியவில்லை
உன் இறப்பை.. உன் இழப்பை..!





அன்புள்ள சாந்தி அக்கா...

காரியமாற்றுவதற்குப் பதிலாக
வெறும் காரணங்களை மட்டுமே
கைப்பை நிறைய வைத்துக்கொண்டு திரியும்
பல நண்பர்களுக்கு மத்தியில்..
சொந்த ஊதிய உயர்வுக்குக் கூட
போராடத் தயங்கும்
பல்லாயிரம் பெண்களுக்கு மத்தியில்..

பத்துப் பதினைந்து ஆண்டுகளாய்..
துளியென்றும் சமமென்றும்
அறிவியல் இயக்கமென்றும்
மாதர்களின் சங்கமென்றும்
நீயாற்றிய அரும்பணிகள்
அளவிலா.. அளவிலா...!

ஏழாம் வகுப்பு மட்டுமே
படித்த உன்னிடம்-நாங்கள் படித்திட
ஏராளமுண்டு அன்பு அக்கா..

அழுது சிவந்த விழிகளோடு
விலகி நின்று வியந்துபார்த்தனர்
இரத்த உறவுகளாய் வந்தவர்கள்..

சாந்தி அக்கா...
சாந்தி அம்மா...
சாந்திமா...
சாந்தி தோழர்...-என
எத்தனையோ உறவுகளைச் சொல்லி
யார் யாரோ அழுகிறார்களே என்று..!
அத்தனையும் உந்தன் இயக்க உறவுகள்..!

ஆயிரமாயிரம் பேர் எதிர்நின்றாலும்
ஆர்ப்பரித்துப் பேசும் நம் நண்பர்களால்
உனக்கான
இரங்கல் கூட்டத்தில் ஏனோ
இரண்டிரண்டு வார்த்தைகளுக்கு மேல்
பேசவே முடியவில்லை...
பக்குவமான தலைவர்களையும்கூட
பச்சிளம் குழந்தைகள் போல
அழவைத்து விட்டாய்..!

இனி உனது பணிகள்-எமது பணிகள்..
அது இயக்கமாக இருந்தாலும்..
இல்லை குடும்பமாக இருந்தாலும்..!

வீடு திரும்பியும்
விலகாத நினைவுகளோடு..
சுந்தர்


--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Feb 23, 2012

தேசிய அறிவியல் தின போட்டி முடிவுகள்-2012


தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பிப்ரவரி,28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.. மாவட்டம் முழுவதுமிருந்து 24 பள்ளிகள் மற்றும் 7 கல்லூரிகளைச் சேர்ந்த 290 பேர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் ஐந்து படைப்புகளும் ஆசிரியர்கள்/ ஆர்வலர்கள்/ பெண்களுக்கான போட்டிகளில் முதல் மூன்று படைப்புகளும் தேர்வு செய்யப்பட்டன. மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் எஸ்.இராம்சங்கர், க.முத்துக்கண்ணன் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்..
 
தேர்வான மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தேசிய அறிவியல் தினத்தன்று அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.. மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு:94880 11128

குறிப்பு: சில பள்ளி, கல்லூரிகளிலிருந்து கிடைத்த படைப்புகள் சரியான பிரிவுகளில் அனுப்பப் படவில்லை. மேலும் அறிவிக்கப்பட்ட தலைப்பிற்கு பொருத்தமாக இல்லை. மேற்சொன்ன சில காரணங்களினால் சில படைப்புகளைத்  தேர்வு செய்ய இயலவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டிகளில் வெற்றிபெற்றோர் விபரம் பின்வருமாறு:

6,7,8 மாணவர்கள்: ஓவியப்போட்டி:
தலைப்பு-எங்கும் ஆற்றல் எதிலும் ஆற்றல்
பெயர்
வகுப்பு
பெற்ற இடம்
பள்ளி
வி.கிஷோர் குமார்
8
முதல் இடம்
ரங்ககிருஷ்ணா நடுநிலைப் பள்ளி,பெரியகுளம்..
பி.தேவிபாலா
7
இரண்டாம் இடம்
டிரையம்ப் நடுநிலைப்பள்ளி, பெரியகுளம்
சி.ஆனந்தராஜ்
7
மூன்றாம் இடம்
ஊராட்சி ஒன்றியநடுநிலைப்
பள்ளி, சருத்துப்பட்டி
ம.கௌதமன்
6
நான்காம் இடம்
அரசு நடுநிலைப் பள்ளி, தப்புக் குண்டு
ச.தினேஷ்குமார்
8
ஐந்தாம் இடம்
பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி,போடிநாயக்கனூர்



9,10,11,12 மாணவர்கள்: கட்டுரைப்போட்டி:
தலைப்பு-மனித வாழ்வின் முன்னேற்றத்தில் ஆற்றலின் பங்கு
பெயர்
வகுப்பு
பெற்ற இடம்
பள்ளி
பி.அருண்குமார்
9
முதல் இடம்
அரசு உயர்நிலைப்பள்ளி, முருகமலை நகர்
கா.பிரசாந்த்
11-இ
இரண்டாம் இடம்
நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி
கா.நாகூர் சாகிப்
11-ஆ
மூன்றாம் இடம்
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி,கோம்பை
வி.ஜெயலட்சுமி
12
நான்காம் இடம்
மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனி
பொ.சுரேந்தர்
11-ஆ
ஐந்தாம் இடம்
என்.எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளி,கூடலூர்


ஆசிரியர்கள்/ஆர்வலர்கள்: கதை/புகைப்பட போட்டி
தலைப்பு- எல்லாம் ஆற்றல் மயம்
பெயர்
பணி
பெற்ற இடம்
கல்லூரி
பி.சங்கரநாராயணன்
விரிவுரையாளர்
முதல் இடம்
தேனி கலை அறிவியல் கல்லூரி,வீரபாண்டி
கவிஞர்.எம்.பி.புதியவன்
ஆசிரியர்
இரண்டாம் இடம்
அரசு கள்ளர் மேல் நிலைப் பள்ளி, உத்தமபுரம், கம்பம்
மொ.தனசேகரன்
ஆசிரியர்
மூன்றாம் இடம்
அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளி
சுருளிப்பட்டி


பெண்கள்: சொலவடை தொகுத்தல்
தலைப்பு: பெண்கள் வாழ்வில் சொலவடை
பெயர்
பணி
பெற்ற இடம்
நகரம்/கிராமம்
எஸ்.உமாவதி
சுய உதவிக்
குழு றுப்பினர்

முதல் இடம்
பெரியகுளம்
எஸ்.சுபா
சுய உதவிக்
குழு றுப்பினர்

இரண்டாம் இடம்
கம்பம்
கே.மலர்விழி
சுய உதவிக்
குழு றுப்பினர்
மூன்றாம் இடம்
ஆண்டிபட்டி


கல்லூரி மாணவர்கள்: கவிதைப்போட்டி:
தலைப்பு- ஆற்றலை அறிவோம்.. ஆற்றலால் உயர்வோம்..
பெயர்
வகுப்பு
பெற்ற இடம்
கல்லூரி
ச.கார்த்திகேயன்
பி.எட்.
முதல் இடம்
வி.பி.ஆர். கல்வியியல் கல்லூரி,கோடாங்கிபட்டி
கே.ஹசீனா நஹத்
பி.எஸ்.சி.
இரண்டாம் இடம்
ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி,கம்பம்
ரா.அரவிந்த் குமார்
டி.சி.இ.
மூன்றாம் இடம்
அரசு பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி, கோட்டூர்
ச.ஆர்த்தி
பி.எட்.
நான்காம் இடம்
சௌராஷ்ட்ரா கல்வியியல் கல்லூரி, வீரபாண்டி
பா.நந்தினி
பி.எஸ்.சி.
ஐந்தாம் இடம்
தேனி கலை அறிவியல் கல்லூரி,வீரபாண்டி