..பேரா.சோ. மோகனா
..நினைவும், மன ஆசையும்..!
நம்மில் யாராவது உலகம் நாளைக்கு இல்லாவிடில் என்று என்றைக்காவது நினைத்துப் பார்த்து இருப்போமா? அல்லது அது தொடர்பாக கற்பனையாவது செய்திருப்போமா? இல்லை என்பதே உண்மை..! அப்படி எல்லாம் நடந்தால், எதற்கு நம் குழந்தைகளை, நாளைக்கு நல்ல வேலைக்கு போவார்கள் என எண்ணி படிக்க வைக்க போகிறோம்.. அது வேண்டாங்க,, நாம எதுக்கு வேலைக்குப் போகணும்..எதுக்கு சம்பாதிக்கணும், எதுக்கு சொத்து சேக்கணும்.. எப்போதும் பணம் பணம்னு அலையணும் ..! ஒண்ணும் வேண்டாமே.. பேசாம வெந்தத தின்னு , விதி வந்தா சாகலாம்னு கிடக்கலாமே..! உலகம் 2012 ல் அழியப்போகிறதா என்று கேட்டுக்கொண்டே நாளைக்கு எப்படிபுதிய திட்டம் போட்டு , புதிய முறையில் பணம் வரும் வழிக்கு வகை பண்ணுவது என்று சம்பாதிப்பதிற்கு மனம் அலை பாய்கிறது. என்பதுதான் 100 % உண்மை..!
நிசமா..,உலகம் ..அழியுமா..!
நண்பர்களே,, எனக்கு ஒரு சந்தேகம்.. நிஜமாகவே.. நீங்கள் அப்படி உலகம் அழிந்துவிடும் என்ற எண்ணத்திலா கேட்கிறீர்கள்..! இல்லவே இல்லை. அப்படி எதுவும் நடக்காது, நடக்கவும் கூடாது,,நம்பமுடியவில்லை இல்லை என்று யாரவது பாடமாட்டர்களா, சொல்லமாட்டார்களா என்ற ஆசைதான் அனைவருக்கும். நிச்சயமாய் அப்படி உலக அழிவு நடக்காது நண்பர்களே..!இந்த உலகம் டிசம்பர் 21 ம்நாள் 2012 ல் அழியப்போகிறது என்ற புரளியை ஒரு கூட்டம் கிளப்பி விட்டுக் கொண்டு இருக்கிறது." புவியின் உருவம், அமைப்பு இல்லாமல் போகப் போகிறது.எதிர்கால திட்டமிடலை நிறுத்துங்கள்..புதிய வீடு வாங்க வேண்டும் என்று கவலைப் படாதீர்கள் ..!இன்னும் ரெண்டு ஆண்டுக்கு சந்தோஷமா இருந்துட்டுப் போங்க என்று சொல்லும் கூட்டம் ஒன்று இருக்கிறது..இவர்களுக்கும் கூட அப்படியெல்லாம் நடக்காதுங்க என்று மனசுக்குள் ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். ..!
நினைவும்..நிஜமும்.. !
ஏன் இந்த பைத்தியக்காரத்தனமான பேச்சுக்கள் ? இதற்கு முன்பும் கூட இப்படிப்பட்ட முன்கணிப்புகள், உங்கள் முன் கி.பி. 2000த்தில் உலாவி வந்தது.உலகம் ஒட்டு மொத்தமாய் அழியப் போகிறது என பயத்துடன், 2000ம் ஆண்டு பிறக்கும் தினத்தன்று சிலர் வயிற்றில் புளியை கரைத்து , துங்காமல் இருந்தனர். ஆனால் நடந்தது என்ன? 2000ம் ஆண்டு அது பாட்டுக்கு வந்துட்டு,தேமே என்று வந்த சுவடு தெரியாமல் ஓடியே போய்விட்டது. ஆனால் அப்போது, இத்தாலியில் 2000ம் ஆண்டு பிறந்ததும் ஏதோ இனம் தெரியாத ஒன்று வந்து நம்மை புரட்டிப்போட்டு அழிக்கப் போகிறது என்று நம்பிய, இளம் பாதிரியாரும் , அவரின் சீடர்கள் 20பேரும் விடம் அருந்தி இறந்தனர் என்பதுதான், 2000ம் ஆண்டின், ஜனவரி 2 ம் நாள் தினசரிகளில் தலைப்புச் செய்தியாக வந்தது என்பதுதான் வேதனையான உண்மை..
நூறாண்டு .. காலம் .. வாழ்க..!
2000ம் ஆண்டு என்பது ஆயிரம் ஆண்டுகளின் மடங்கு,அது ஒரு பக்கம் இந்த 2012 க்கு அப்படி என்ன மகத்துவம் வந்தது. எல்லோரும் உலகம் அழியப்போககிறது என்று பயந்து நடுங்கி சாகின்றனர். மாயன் நாகரிகம் 3, 000 ஆண்டுகளுக்கு முந்தையது. அவர்கள் நாகரிகத்தில் சிறந்தவர்கள் மாயன் காலண்டர் 2012 ல் முடிகிறது.இதில் மதம், அறிவியல் ஜோதிடம்,வரலாற்று காரணங்களை, ஒன்றாக இணைத்து , கடைந்து பார்த்தால் நமக்கெல்லாம் ஒரு உண்மை நிதர்சனமான உண்மை தெரிகிறது, மாயன் காலண்டர் 2012 ல் முடிகிறது என்பதுதான். அதேபோல முன்பு 10வது கோள் வந்து மோதி உலகம் உடைந்து நொறுங்கி விடும் என பயந்து நடுங்கினோம். அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த சல சலப்பு அடங்கி 10ஆண்டுகள் ஆனது. அதற்குள் இப்படி ஒரு புரளி,, 2012 ல் முக்கால்வாசி உலகம் அழியப்போகிறது என..!அப்படி எதுவும் நடக்காது.. நீங்கள் நல்ல உடல் நிலையில் இருந்தால் , இன்னும் நீண்ட ஆயுளுடன் 100 ஆண்டுக்காலத்துக்கு மேல் இருப்பீர்கள்.. !
மாயன் ..காலண்டர்..சொன்னது..!
மாயன் காலண்டர் என்பது, மிக முன்னேறிய நாகரிகமான மாயன் நாகரிகத்தில், பெண்களால், கி.மு, 2500ஆண்டுகளில் கணிக்கப்பட்டது. மாயன்களின் பேரரசு மெக்சிகோவின் தென்பகுதியிலிருந்து கவுதமாலா வரை பரவி இருந்தது. அதிசயப்படத்தக்க அளவு, மாயங்கள் நகரங்களை நிர மாணித்தனர். நகரத்திட்டம் தீட்டினர். பிரமிடுகளுக்கு பெயர் போனவர்கள். நுணுக்கமான பெரிய கட்டிடங்கள் கட்டுவதில் வல்லவர்கள். மத்திய அமெரிக்க கலாச்சாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியவர்கள். மாயன் கள்.நாகரிகத்தில் மட்டுமின்றி, மற்ற உள்நாட்டு தவகல்களிலும், பழங்குடி அமைப்புகளிலும் கூட சிறந்து விளங்கியவர்கள். இன்றும் கூட குறிப்பிட்ட அளவு மாயன் கள் வாழ்கின்றனர். பழங்கால நாகரிகங்களை கடை பிடிக்கின்றனர்.
ஹாப்.. காலண்டரும்.., உலக.. அழிவும்..!. .
மாயன்கள் பலவிதமான காலண்டர்களைப் பயன்படுத்தினர்; ஆன்மா சுழற்சிக்குள் பின்னிப் பிணைந்து, நேரத்தைப் பார்த்தனர். காலண்டரை நேரடி பயன்களான, சமூக, விவசாய, வணிக, நிர்வாக பணிகளிலுள்ள பழக்க வழக்கங்கள், ஆழமான மத நம்பிக்கை களில் பயன்படுத்தி இருந்தனர். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஆன்மாவுடன் பாதுகாவலராய் பயன்படுத்தினர்.
இது இன்று நாம் பயன்படுத்தும் கிரிகாரியன் காலண்டருடன் பெரிதும் முரண்படுகிறது. முக்கால்வாசி மாயன் காலண்டர் குறுகியது. அவர்களின் சல்க் காலண்டரில், வருடத்திற்கு 260 நாட்கள், ஹாப் காலண்டரில் 365 நாட்கள். இதில்தான், குளிர் கால நீண்ட இரவு பற்றி கூறப்பட்டுள்ளது.இதிலுள்ள நீண்ட கால காலண்டரின் அடிப்படையில் தான் , டிசம்பர் ௨௧ம் நாள் உலக அழிவு என்று குறிப்படப்பட்டுள்ளது. இதனைப் படித்து விட்டுத்தான் டிசம்பர் 21 ல் உலகம் 2012ல் அழியும் என்ற பீதியை சமீப காலமாக சிலர் கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர். மேலும் சுமேரியர்கள் கண்டுபிடித்த நிபுரு என்ற கோள் வந்து நம் பூமிமீது மோதி பூமி அழியப் போவதாய் ஒரு கற்பிதம் உலவிக்கொண்டு இருக்கிறது. அவ்வளவுதான். இது ஒரு சுவாரசியமான கற்பனை. அம்புட்டுதாம்பா. நீ ஒன்னும் பயப்படவேண்டாம். எதுவும் நடக்காது. அதுக்கு மேலே எதுவும் இல்லே. ,
..கதையும் ..வதந்தியும்..!
செசாரியா சிட்சின் என்பவர் சுமேரியர்களின் மெசபடோமியா நாகரிகம் பற்றி ஒரு கதை எழுதியுள்ளார். அதில் “12 வது கோள், சொர்க்கத்தின் படிக்கட்டுகள், குறித்த நாட்களில் முடிவு” என்று பல புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் அவர், நிபுரு என்ற கோள் சூரியனை 3 ,600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.. சிட்சினின் சுமேரிய கருதுகோள்படி, அனுன்னாகி என்ற நாகரிகமான வேற்றுகிரகவாசிகள் விண்வெளியில் இருந்து அடிக்கடி பூமிக்கு விருந்தினர்களாக வருகின்றனர் என்றும் நல்ல புருடாவை, கதையாக அவிழ்த்து விட்டுள்ளார்.இந்த புத்தகங்களைப் படித்த பின்பு, நான்ச்லிடன் என்ற மனநோயாளி உருவாகி விட்டார். அவர் தன வலைத்தளத்தில் , வானில் சீட்டா ரெடிகுலியைச் சுற்றிக் கொண்டிருக்கும் கற்பனைக் கோள் மூலம் பூமிக்கு ஆபத்து என்று கூறுகிறார். நிபுரு மே 2003 ல் மோத வேண்டியது தவறிவிட்டது , கட்டாயமாய் 2012 ல் டிசம்பர் 21 ம் நாள், குளிர்கால நீண்ட இரவில் மோதல் நிகழும், பிறகு மனித இனம் இருக்கவே இருக்காது என அறிவிக்கிறார்.
மின்வலைப் .. புரளி..!
நிபுருவின் மேல் விடாத நம்பிக்கை கொண்ட பட்டாளம் மாயன் புராணம் மற்றும் புதிர்களைப் பற்றி புகைப்படம்,வீடியோ போன்ற விஷயங்களில் சில மாய வேலைகள் செய்தனர் பின் வலைத்தளத்தில் photo shopping செய்து அது உண்மைதான் என்று நம்ப வைக்க முயற்சி செய்கின்றனர். நிபுரு பல ஆண்டுகள் சூரியனின் பின்னால் ஒளிந்திருக்கிறது என ஒரு கதையை அவிழ்த்து விடுகின்றனர். மின்வலையில் அனுப்பப்படும் புகைப்படங்களை , பார்க்கும் மக்கள் நம்பிவிடுவதுதான்,.இப்படி உலகம் 2012 ல் அழிந்து விடும் என தகவலை பரப்புவதற்கு காரணங்கள்.புகைப்படம் எடுப்பதில் விற்பன்னர்கள் , சில பிம்பங்களை சூரியனின் நிஜ பிம்பத்திற்கு எதிரில் சில மாய பிம்பங்களை நடன மாட விட்டு சில தந்திர படங்கள் தந்து மக்களை நம்ப வைக்கின்றனர். இதுதான் 2012ல் உலகம் அழிந்து விடுமா என்பதன் பின்னணி.
பல. கற்பனைகளில்.உலக..அழிவு..!
கிறித்துவ புனித நூல் கருத்துப்படி, நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடக்கும் கடைசிப் போரில், 2012 ல் உலகம் அழிந்துவிடும் என்று கருதப்படுகிறது.அது போல இன்னொரு கருத்து: பூமி காந்தப் புலத்தால் சூழப்பட்டு உள்ளது. இதுதான் சூரியனின் கதிர்வீச்சிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது இதில் நமக்கு தெரியாத தகவல் என்னவென்றால், அதன் வடக்கு தெற்கு துருவங்கள், 75, 000 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் மாறுகிறது என்பதுதான் . இப்போது, 45,000 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் 30,000ஆண்டுகள்தான் பாக்கி.!.ஒவ்வொரு ஆண்டும், பூமியின் துருவம் 30 -40கி.மீ நகருவதாக அறிஞர்கள் சொல்லுகின்றனர். ஆனால் முன் எப்போதையும் விட, துருவ நகர்வு வெகு வேகமாக நடப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால் காந்தப்புலன் அழிந்து போகலாம்,, பூமியில் இதனால் பாதிப்பு வரலாம் என்றெல்லாம் ஏதாவது கதைத்துக் கொண்டு இருக்கின்றனர். அப்படி எதுவும் நடக்காது..நண்பா..! நாம் கேள்விப்பட்டதில்லையா, விண்கற்கள் வந்து மோதப்போகிறது. அப்படி, இப்படி என்று..!இது மாதிரி கதைகள், 1977 , 1990, 2000, 2003 என வந்தது, இப்போது 2012 ல் தொடருகிறது.. இனியும் தொடர்ந்து , இது போன்ற புரளிகள் வந்து கொண்டே தான் இருக்கும். ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருப்பார்களே..! நீங்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கப்போகிறீர்கள்.. ஆனால் எதுவும் நடக்காது. 2012,டிசம்பர் 21 ம் நாள் இரவு படுத்து தூங்கி, 22ம் நாளைப் பார்க்க நாம் இருப்போம்,,! நமக்கு ஏதேனும் விபத்து, இதய பாதிப்பு வராதவரை..!
அரசு.. மறைத்ததோ .. என.. புரட்டு..!
சில குழப்பவாதிகள், சில ஜோதிட நம்பிக்கைவாதிகள், அரசு என்னமோ உலகம் அழியப்போகும் விஷயத்தை ரகசியமாக வைத்துள்ளதாக வேறு கதையை பரப்பி விடுகிறார்கள் .நிபுரு உண்மையானால், உலகம் முழுவதும் உலவிக் கொண்டு இருக்கும் செயற்கைகோள்கள் , எப்போதும் வானத்தையே நோக்கிக்கொண்டு இருக்கும் வானவியலாளர்கள், தொடர்ந்து வான் நிகழ்வுகளை கண்காணித்து கொண்டு இருக்கும் மனிதர்கள் இதையெல்லாம் பார்க்கமாட்டார்களா. எப்படி வானில் சுழலும் ஒரு பொருளை ரகசியமாக வைத்திருக்க முடியும்..? . அப்படி ஏதாவது தெரிந்தால், அவர்கள் இந்த நிபுரு, குபுரு பற்றி எல்லாம் நமக்கு சொல்ல மாட்டார்களா.? நமக்கு, இந்த விஷயங்கள் எல்லாம் பொய், போலி ,மாயை என்று தெரிந்தும் கூட , நமக்கெல்லாம் இதனை பரப்புவதில் மனசுக்குள் ஒரு சின்ன ஆசைதான்.! பொதுவாக நம் மக்களுக்கு வதந்தி பரப்புவது என்றாலே அல்வா சாப்பிடுவது போல்தான்.. அப்படி ஏதாவது நடந்தால், நமக்கெல்லாம் எப்படி இருக்கும்.!.பயந்து பயந்தே செத்துவிடுவோம். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ஊழிக்காலமாக இருக்குமே. ! நடக்காது என்று தெரிந்ததினால்தான் நமக்கு இந்த சவடால் , சண்டியர்த்தனம் , சால்ஜாப்பு எல்லாம். !!! நமக்கு எப்போதுமே, இப்படி வதந்தி, புரளி பரப்புவதில்உள்மனசுக்குள் ஓர் அலாதியான இன்பம் உண்டே. !
நம்..புருடாவும்..பயமும்..!
எப்படி இந்த உலக அழிவு பற்றி கதைக்க ஆரம்பித்தார்கள் தெரியுமா.. ? எல்லாவற்றிகும் ஒரு பின்புலம் உண்டல்லவா.. அதுபோல் இதன் காரணி, 2012 என்று வந்த திரைப்படம்தான். தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும் வெளியிட்டு, மக்களை நல்ல கலக்கு கலக்கி, காசையும் நல்லா கலக்கி எடுத்துட்டாங்களே..நாம காச கொடுத்துட்டு, பயத்த வெலைக்கு வாங்கி இருக்கிறோம். அவ்வளவுதான். அதனால்தான். நாம போற பக்கம் எல்லாம், வயது, கல்வி வித்தியாசம் இன்றி, அனைவரும், என்ன 2012 ல் உலகம் அழியப்போவுதாமே உண்மையா என வினா எழுப்புகிறார்கள்..
திரைப்படம்..2012..!
2012 என்ற கொலம்பியா கம்பெனி படத்தின் சாராம்சம் என்ன தெரியுமா? படத்தில் உலகம் அழியப்போவதை தெரிந்த பண பலம் உள்ள சிலர், ஏராளமான பணத்துடன் கப்பலில் ஏறி பயணிக்கின்றனர். அங்கும்கூட ஏழைகள் அம்போ என்று விடப்படுகின்றனர். அங்கு ஏராளமான இயற்கைச் சீற்றங களை சந்தித்த பின்பு ஒரு இடம் வந்து சேருகின்றனர். அதுதான், மனிதன் முதலில் பரிணமித்த ஆப்பிரிக்க கண்டம்.. ரொம்ப சினிமாத்தனத்துடன் எடுத்த படம். நாமும். உலகம் அழியுமா, நாம் காப்பாற்றப்பட மாட்டோமா, என்ற ஆதங்கத்துடன், பார்த்து , அந்த உணர்வுகளை வெளியிடச் செய்த படம்.
No comments:
Post a Comment