முதல் பக்கம்

Nov 6, 2010

பறவைகளுக்கு குடிநீர் வழங்க அறிவியல் இயக்கம் பிரசாரம்

மார்ச் 22,2010,00:00
கம்பம்: 'பறவைகளின் குடிநீர் பிரச்னையை போக்க பால்கனி, மொட்டைமாடி, ஜன்னல் ஓரங்களில் பாத்திரங்களில் தண்ணீர் வைக்க மக்கள் முன்வரவேண்டும்' என, வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பிரசாரம் மேற்கொண்டுள்ளது.கோடையில் வனவிலங்குகளுக்கும், பறவைகளுக்கும் குடிநீர் பிரச்னை அதிகளவில் ஏற்படும். வனவிலங்குகளுக்கு தண்ணீர் பிரச்னையை தீர்க்க செயற்கை குளங்களை வனத்துறையினர் வெட்டி வைத்துள்ளனர். அதில், தண்ணீர் நிரப்பும் பணிகளை மேற்கொள்ளவும் தயாராகி வருகின்றனர்.

பொதுவாக கோடையில் பறவை இனங்களில் பல, குடிக்க தண்ணீரின்றி பலியாவது வழக்கம். புறா, கொக்கு, மைனா, சிட்டுக்குருவி உள்ளிட்ட பல சிறிய பறவை இனங்கள் தண்ணீரின்றி இறந்து போகும். தண்ணீரின்றி பறவைகள் பலியாவதை தடுக்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த ஆண்டு பிரசாரம் ஒன்றை துவக்கியுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட செயலர் சுந்தர் கூறுகையில், ''கோடையில் பறவை இனங்கள் பலியாவதை தடுக்க பொதுமக்கள், வீடுகளில் பால்கனி, மொட்டைமாடி மற்றும் ஜன்னல் ஓரங்களில் சிறிய பாத்திரங்கள் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் தண்ணீரை நிரப்பி வைக்க முன்வர வேண்டும். பறவைகள் அதை குடித்து உயிர் பிழைத்துக் கொள்ளும். கோடையின் தண்ணீர் பிரச்னையில் இருந்து பறவைகளை காப்பது நமது கடமை. இன்று உலக தண்ணீர் தினம். எனவே, இன்று முதலே இந்த நடைமுறையை பின்பற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும். இந்த கருத்தை வலியுறுத்தி குறுந்தகவல்கள் அனுப்புவது, துண்டு பிரசுரம் வெளியிடுவது போன்ற பணிகளில் இறங்கியுள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment