முதல் பக்கம்

Nov 4, 2010

பள்ளிகளை தத்தெடுக்க அறிவியல் இயக்கம் திட்டம்

பதிவு செய்த நாள் :
ஜூன் 05,2010,05:04
திருப்பூர்:கடந்தாண்டு மேற்கொண்ட பள்ளி தத்தெடுப்பு முயற்சிக்கு உரிய பலன் கிடைத்ததை அடுத்து, இந்தாண்டு மேலும் நான்கு பள்ளிகளை தத்தெடுக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம்முடிவு செய்துள்ளது.உடுமலை ராஜேந்திரன் வீதி அரசு மேல்நிலைப்பள்ளி,கடந்தாண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற் றும் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்சார்பில் தத்தெடுக்கப்பட்டது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
எழுத இருந்த, படிப்பில் மிகவும் பின்தங்கிய
45 மாணவர்களை தத்தெடுத்தனர்.
தமிழ் உரைநடை, இலக்கணம், கணிதம்,
அறிவியல் போன்ற பாடங்களுக்கு
சிறப்பு ஆசிரியர்களை நியமித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.அதன் பயனாக, 30 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதனால், கடந்தாண்டை விட இப்பள்ளியில் 20 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதனால், வரும் ஆண்டுகளில் அதிக பள்ளிகளை தத்தெடுக்க அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது.இந்தாண்டு, கூடுதலாக நான்கு பள்ளிகளை தத்தெடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment