பதிவு செய்த நாள் : மே 30,2010,02:28
கரூர்:
கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் இரண்டுநாள் மாநில கருத்தாளர்கள் பயிற்சி முகாம் நடந்தது. நிலவளம் பயன்படுத்துவோம்; வருங்காலத்துக்கும் காப்போம்' எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுகுறித்து பயிற்சியாளர்கள் பயிற்சியளித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க கரூர் மாவட்ட செயலாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார்.
அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சிவகுமார், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநில பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் மோகனரங்கன் தலைமை வகித்தார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநில ஒருங்கிணைப்பாளர் மாதவன் அறிமுக உரை நிகழ்த்தினார். அறிவியல் இயக்க மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
இயக்க பொருளாளர் ஸ்டீஃபன்நாதன், முகாமை துவக்கி வைத்தார். பரணிபார்க் கல்வி நிறுவனங்களின் செயலாளர் பத்மாவதி, கரூர் ரோட்டரி சங்க தலைவர் காளியப்பன், செயலாளர் முத்துசாமி, பாஸ்கரன், தீபம் சங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அறிவியல் இயக்க கரூர் மாவட்ட பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்
No comments:
Post a Comment