முதல் பக்கம்

Nov 13, 2010

வண்ணப் பூக்களின் தூதுவர்கள்.!


வண்ணப் பூக்களின் தூதுவர்கள்.!
நமக்கெல்லாம் வண்ணத்துப் பூச்சிகள் என்றால் கொள்ளை ஆசைதான். அனைவருக்கும் வண்ணத்துப் பூச்சிகளாய் சிறகடித்துப் பறக்கவும் ஆசைதான். சிறகில்லையே நான் பறந்து வர.. என்னுயிரே உன்னை தொடர்ந்து வர என்று பாடவேண்டியதுதான்.ஆனால் எதனை பேருக்கு இதன் பூர்விகம் தெரியும். இதன் சுவையான பழக்க வழக்கங்கள் தெரியும். நண்பர்களே..
வண்ணத்துப் பூச்சிகள் என்ற இனம் இரவுப்பூச்சி அல்லது பட்டுப்பூச்சி என்ற இனத்திலிருந்துதான் உருவானது. இவை சுமார், 150,000௦௦௦ வருடங்களுக்கு முன்னால் பூக்கும் தாவரங்கள் உருவான போது உருவானவை. அப்போதுதான் இப்போதுள்ள கண்டங்களின் உருவெடுத்தன. அது கிரடேசியஸ் காலம் எனப்படும் சாக்பீஸ் காலம் ஆகும்
உலகில் இதுவரை இருப்பதாக கூறப்படும் வண்ணத்துப் பூச்சிகளின் இனங்கள் 45,000௦௦௦ வகைகள் .அண்டார்டிகா தவிர அனைத்து வெப்ப பகுதிகளிலும் இவை பரவலாக காணப்படுகின்றன.பொதுவாக, பறந்து செல்லும் இனங்கள் அழிவிலிருந்து தப்பித்து விடுவதால், அவை புதை படிமங்களாகும் வாய்ப்பு குறைவு.. ஆனாலும்கூட, சுமார் 50வண்ணத்துப் பூச்சியின் புதைபடிமங்கள் கிடைத்துள்ளன.நம்மில் பெரும்பாலோர் வண்ணத்துப் பூச்சியின் வாழ்நாள் மிக குறுகியது என்றே நினைக்கிறோம். ஆனால், முதிர்ந்த வண்ணத்துப் பூச்சிகள் ஒரு வாரத்திலிருந்து, ஒரு வருடம் வரை கூட, அவற்றின் இனத்துக்கு தகுந்தாற்போல் வாழுகின்றன.வண்ணத்துப் பூச்சியின் கம்பளிப் புழு வாழ்நாள் நீண்டதாக இருக்கும்.இல்லையெனில், கூட்டுப் புழு பருவம் அல்லதுமுட்டை பருவம் நீண்டதாகவும்/செயலற்ற தாகவும் , குளிரிலிருந்து தப்பித்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.
வண்ணத்துப் பூச்சி என்பதற்கு மெல்லிய இறகுகள் என்றுதான் பொருள் இவற்றின் இறகுகளில், ஆயிரக்கணக்கான குட்டி குட்டி நுண்ணிய செதில்கள் வரிசையாக அடுக்கப்பட்டு உள்ளன. வண்ணத்துப் பூச்சியின் சிறகில் உள்ள நிறமும், அடுக்கும், வரிசையும், டிசைனும்,ஒவ்வொரு இனத்துக்கும் தனித் தனியானவையே. அவைதான் வண்ணத்துப் பூச்சியை வண்ண மிகு அழகு களஞ்சியமாக திகழவைக்கின்றன. ஒரு சதுர இன்ச்சில் சுமார், 125,000௦௦௦ எண்ணிக்கையிலான செதில்கள் ,நம்ம கிராமத்து ஓட்டு வீட்டில் ஓடுகள் அடுக்கி இருக்குமே அதே போல , அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. இயற்கையின் அற்புதமான கைவண்ணம் இது.! இதனை இன்னும் யாரும் செயற்கையாக செய்ய முடியவில்லை!!. செய்யவும் வில்லை. !
இங்கே பாருங்கள்,, இதோ ABCD என்ற ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி காணப்படும், வண்ணத்துப் பூச்சியின் செதில்களை. !வண்ணத்துப் பூச்சியின் உடல் வெப்ப நிலை, வெளி வெப்பத்துக்கு தகுந்தாற் போல் மாறும்.காற்றிலுள்ள வெப்பம், 16 -42 *பாகை என்று இருந்தால் மட்டுமே, இவைகளால் பறக்க முடியும். அதே போல உடல் வெப்பமும் 28 -38 பாகை* இருந்தால்தான் பறக்க முடியும். வெப்பம் அதற்கு கிழே குறைந்தால், இவை பறப்பதில்லை. உங்களுக்கு ஒரு விஷயம், நண்பா! வண்ணத்துப் பூச்சியின் முதிர்ந்த கம்பளிப் புழு, முட்டையிலிருந்து வெளிவந்ததைவிட 27,000௦௦௦ மடங்கு பெரிதாக வளரும். அதை மனித வளர்ச்சியுடன், ஒப்பிட்டால், நம் கதையை யாரும் எண்ணிப் பார்க்க கூட முடியாது. மனித குழந்தை பிறக்கும்போது, 4 கிலோ என வைத்துக்கொள்வோம்.. இதே வேகத்தில் நாம் வளர்ந்தால், நம் எடை எவ்வளவு இருக்கும் தெரியுமா? சுமார், 110,000௦௦௦ கிலோ அம்மாடியோ ! .
ஒரு வண்ணத்துப் பூச்சியின் எடை , இரு ரோஜா இதழ்கள் அளவுதான். அந்த எடையுள்ள பூச்சி, கிட்டத்தட்ட ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பறக்கும் திறன் உள்ளது.உங்களுக்கு ஒரு விஷயம்.. இந்த கம்பளி பூச்சி,, புலி ஜாதி என்று கூட சொல்லலாம். ஆமாம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது, என்ற ஒரு பழமொழி உண்டல்லவா? அது போல, கம்பளி பூச்சி தான் வழக்கமாக தின்னும், இலை கிடைக்காவிட்டால், பட்டினி கிடந்தது உயிர் விட்டாலும் உயிர் விடுமே தவிர, வேறு ஒரு மாற்று உணவை ஒரு போதும் உண்ணாது.சில வண்ணத்துப் பூச்சிகள் முதிர்ந்த பின்னர் உணவே அருந்துவதில்லை, அது கம்பளிப் புழுவாக இருந்தபோது உண்ட உணவே அதற்கு முதிர்ந்ததும் போதுமானதாக உள்ளது.
பொதுவாக பெண் வண்ணத்துப் பூச்சிகள் ஆணைவிட பெரியதாக இருக்கும் உலகத்திலேயே மிகச் சின்ன வண்ணத்துப் பூச்சி மேற்கு பிக்மி நீலம் ( western pygmy blue ). இதன் இறக்கையை விரித்தால், சுமார் 1 .5 செ.மி தான். மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி, ராணி அலெக்சாண்டிரியாவின் பறவை இறகு ( queen Alexandriya 's bird wing ). இதன் இறகின் அகலம், சுமார், 28 செ .மி .இவைகளுக்கு, மெல்லுவதற்கு இவை வாய் கிடையாது. உணவு எல்லாம் உறிஞ்சு குழல் மூலமே . !இவை தேன் குடிக்காத போது, உறிஞ்சு குழாயை, நாம் ஹோஸ் பைப் சுருட்டி வைப்பது போலவே சுருட்டி வைத்திருக்கும். பெரும்பாலான வண்ணத்துப் பூச்சிகள் தேன் குடித்தாலும், சில வகைகள், மரத்தின் சாறு, அழுகிய பழங்கள், மகரந்தம், பறவைகளின் எச்சம், விலங்குகளின் சாணம், இறந்த விலங்குகள் போன்ற வற்றிலிருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. முதிர்ந்த வண்ணத்துப் பூச்சிகள், நீர் நிலைகள், ஈரமான மண், மணல் இவற்றின் மீது அமர்ந்தும் உறிஞ்சு கின்றன. இதன் மூலம் இவை தாது உப்புக்களை எடுத்துக்கொள் கின்றன. இவைகளின் சுவை
உணரும் பகுதி இவைகளின் பாதங்களே.
வண்ணத்துப் பூச்சியிலுள்ள சிறகுகளின் அமைப்பும், வண்ணமும், அதன் இணை தேடவே பயன்படுகிறது. இணை தேட இவை வட்ட மிட்டு பறக்கின்றன.ஒரு கம்பளி புழுவின் உடலில், 1,000௦௦௦ தசைகள் உள்ளன. இதுவே, இது வேகமாக நகர்ந்து செல்ல உதவுகிறது. ஓர் இடத்திலுள்ள வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை அவ்விடத்தின் சுழல் நிலைமையை நிர்ணயிக்க வல்லது.மொனார்க் வகை வண்ணத்துப் பூச்சிகள், கிரேட் ஏரியிலிருந்து, மெக்சிகோ வளைகுடாவுக்கு, சுமார் 2 ,400 கி.மீ பயணம் செய்கிறது. மீண்டும் அது வசந்த காலத்தில் வடக்கு நோக்கி அதே தூரம் பயணிக்கிறது.
காலம் காலமாக, ஆஸ்திரேலிய, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ளவர்கள், வடக்கு, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கர்களும் கூட வண்ணத்துப் பூச்சிகளை உண்கின்றனர். காரணம் பூச்சிகளிலுள்ள புரதம்,மற்றும் தாதுப் பொருட்கள்தான் .
வண்ணத்துப் பூச்சி, சிறகுச் செதில்களின் அரிச்சுவடி...
வண்ணத்து பூச்சிகளின் கூட்டம்
மொனார்க் வண்ணத்து பூச்சியின் கம்பளி.. புழு..

--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642

No comments:

Post a Comment