முதல் பக்கம்

Nov 13, 2010

வெறிச்சோடியது சிதம்பரம்

 
16 Jan 2010 04:39:14 AM IST



 
சிதம்பரம்,ஜன.15:​ 108 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட சூரிய கிரகணத்தையொட்டி சிதம்பரம் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
​ சிதம்பரம் நகரில் காலை முதல் வெயில் சுட்டெரித்தது.​ பின்னர் பகல் 10.30 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது.​ கிரகணத்தை முன்னிட்டு பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால்,​​ சிதம்பரம் நகரம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெறிச்சோடியிருந்தது.​ மக்கள் தங்களது வீட்டின் மொட்டை மாடிகளில் நின்று சூரிய கிரகணத்தை கருப்பு கண்ணாடி மூலம் பார்த்தனர்.
​ கிரகணம் முடிந்த பின்னர் 3 மணிக்கு மேல் நகரில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது.​ குறிப்பாக நடராஜர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை கூட்டம் அலைமோதியது.​ மேலும் அங்குள்ள சிவகங்கை திருக்குளத்தில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலையும்,​​ மாலையும் பொதுமக்கள் தங்கள் மூதாதையருக்கு சிரார்த்தம் கொடுத்து குளத்தில் குளித்தனர்.
​ கிரகணத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் காலை 8 மணிக்குள் உச்சிகால பூஜை வரை,​​ 3 பூஜை கால பூஜைகள் பொதுதீட்சிதர்களால் நடத்தி முடிக்கப்பட்டன.​ ஆனால் நடராஜர் கோயில் பிற்பகல் 12 மணி வரை திறக்கப்பட்டிருந்தது.​ பின்னர் மாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது.​
நெய்வேலியில்...
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை சார்பில் கங்கண சூரிய கிரகண காட்சியை நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகிலுள்ள மைதானத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இதற்காக 1000 சிறப்பு கண்ணாடிகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
அறிவியல் கருத்துக்கு எதிராக பரப்பப்படும் கருத்துக்களுக்கு விடையளிக்கும் விதமாக அறிவியல் இயக்க விழிப்புணர்வு நடைபெற்றது.
​ முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு நெய்வேலிக் கிளைசெயலர் தாமோதரன் தலைமை வகித்தார்.​ மாவட்டச் செயலர் சிவக்குமார்,​​ மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பி.நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment