முதல் பக்கம்

Nov 4, 2010

மாசுபடாத தீபாவளியாக கொண்டாட அறிவியல் இயக்கம் பிரசாரம்

தினமலர்
பதிவு செய்த நாள் :நவம்பர் 03,2010,21:52
சின்னமனூர் :
தீபாவளி பண்டிகையை
சுற்றுச்சூழல் மாசுபடாத,
சப்தமில்லா பண்டிகையாக
கொண்டாட
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
சார்பில்
பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
தீபாவளி பண்டிகையில்
பங்கு பெறும்
சில பட்டாசு வகைகளால்
அதிகளவில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
பட்டாசின் கார்பனால்
காற்றில் நச்சுப்பொருள்கள் கலக்கிறது.
அதிகப்படியான
ஒலி அலைவரிசையினை
கொண்ட பட்டாசுகளால் காற்றில்
ஒலியின் அளவு அதிகரித்து
பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பண்டிகைகாலங்களில் சுவாகாளாறு,
உயர் ரத்த அழுத்தம், தோல் வியாதிகள்,
தலைவலி ஆகியவை ஏற்படுகிறது.
நம்மாள் கொண்டாடப்படும் இதன்
விளைவுகளை நாமே தான் அனுபவிக்கின்றோம்.
எனவே இந்த பாதிப்புகளை போக்கி
சுற்றுச்சூழல் மாசுபடாத,
சப்தமில்லாத தீபாவளியாக கொண்டாட வேண்டும்.
அதற்கு முடிந்தளவு
பட்டாசு வகைகளை குறைத்து
இனிப்புடன் முடித்துக்கொள்ளலாம்.
பட்டாசுகள் என்றால் மத்தாப்பு,
பூந்தொட்டிகள்
சப்தம் இல்லாத கலர் வெடிகள்
உள்ளிட்டவைகளையும்,
மறு சுழற்சியாகக்கூடிய பேப்பர்களை
கொண்ட வெடிகளையும் பயன்படுத்தலாம்
என
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
சார்பில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தினர் இது தொடர்பான
துண்டு பிரசுரங்களை பொது இடங்களில்
வினியோகித்து வருகின்றனர்.
பள்ளிகளில் இறைவணக்க நேரங்களில்
மாணவர்களை உறுதிமொழி எடுக்கச்செய்தும்
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment