குழந்தை இறப்பின் உலகத் தலைநகர்.. இந்தியா..!
ஒவ்வொரு நாளும் இந்தியாவில்,5,௦௦௦000 குழந்தைகள்,எளிதில் தடுக்கக்கூடிய வியாதியினால், தன முதல் பிறந்த நாளை காணாமல் இந்த பூமியை விட்டு மறைந்து விடுகின்றன. world vision என்ற தன்னார்வ அமைப்பு , நடத்திய கணக்கெடுப்புப்படி, ஒவ்வொரு ஆண்டும், இந்திய மண்ணிலிருந்து, ௫ வயது நிரம்பு முன்னரே, 1 ,950,000௦௦௦ குழந்தைகள் மடிந்து போகின்றன.இந்த பச்சிளம் பாலகர்களை கொஞ்சம் காசு செலவு செய்தாலே காப்பாற்றி விடமுடியும். இந்த வகையில் இந்தியா உலக அரங்கில் முதலிடம் வகிப்பதென்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம். ஆனால், இன்னொரு பக்கம், நம் இந்தியா கிரிகெட்டுக்காக கோடி கணக்கில் செலவு செய்கிறது.IPL க்காக கோடி கோடியாய் ஊழலில் சிக்கித் தவிக்கிறது.
பிறந்த சிசுக்கள் தன பிறந்த நாளைப் பார்க்காமல் இறந்து போவதன் காரணி,, என்ன தெரியுமா.? வெறும் வயிற்றுப்போக்கு, நிமோனியா, மற்றும் பிறந்தவுடன் தாக்கும் சாதாரண நோய்கள்தான். இவைகளில் முன்றில் இரண்டு இறப்பை, மிகச் சாதாரண நடவடிக்கைகளான, வாய்வழி உப்பு சர்க்கரை நீர் தருதல், தடுப்பூசி, கொசுவலை வைத்தல் முலமே காப்பாற்றி இருக்க முடியும்.என தன்னார்வல இயக்கங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அடியை ஒற்றியே, காங்கோ, நைஜீரியா நாடுகளும் இருக்கின்றன. இந்த 3 நாடுகளும்தான், தாய்சேய் உடல்நலத்திற்காக வெறும் 3 %க்கும் கீழ் செலவு செய்கின்றன.
வேர்ல்ட் விசியன் நிர்வாகியான, ரேனி ஜகோப், "இயற்கைப் பேரிடர் மூலம் ஏற்படும் இறப்பை நாம் தடுத்து நிறுத்துவது கூட கடினமாக இருக்கலாம். அது எதிர்பாராது, ஆனால் தினந்தோறும் 5,௦௦௦000 சிசுக்கள் மடிவது என்பது அநியாய மானது. , கொடுமையானது, மன்னிக்க முடியாதது. 20 நொடிக்கு ஒரு குழந்தையில் உயிர் பறிக்கப்படுகிறது. இது, உலகில், மனித மற்றும் குழந்தை உரிமை மீறல்
பிரச்சினையாகும். " என்கிறார். இந்தியாவில் அரசு நினைத்தால் இதனை தடுக்க முடியும்.. ஏனினில் ஒரிசாவில் குழந்தை இறப்பு 10 %, ஆனால் கேரளாவில் 1 % தான்.எனவே. அரசால்,இதனைதாய் செய் நல பாதுகாப்பு மூலம் தடுக்கலாம் .உத்திர பிரதேசம் மற்றும் பீகாரில் சிசு மரணம், தமிழ் நாடு , கேரளாவை விட அதிகம். பீகாரில் முன்றில் ஒரு பங்கு குழந்தைக்கு குறைவாகவே தாய்ப்பால் குடிக்கின்றன. 50 % குழந்தைகள், சத்து போதாமையால் தவிக்கின்றன. இங்கேதான், இந்தியாவிலேயே அதிகமான குழந்தை இறப்பு , 1000 பிறப்புக்கு, 85 இறப்பு நிகழ்கிறது. சாதாரண தடுப்பு நடவடிக்கைகள் மூலமே 90 % வயிற்றுப்போக்கு, 62 % நிமோனியா, 100 % தட்டம்மை, 92 % மலேரியா, 44 % HIV, 50 % பிறந்த உடன் உண்டாகும் பிரச்சினைகள்,வைட்டமின் A மற்றும் Zinc கொடுப்பதன் மூலம் தடுக்கலாம் என்று உலக நல நிறுவனம் சொல்கிறது. .
இந்தியாவில் பிறந்த 24 மணி நேரத்துக்குள் மூச்சை நிறுத்தும் ஜீவன்கள் 40,௦௦௦000.இது உலக அளவில் 25 %.இந்தியாவில் தலித் மக்களிடம் தான் அதிக குழந்தை இறப்பு நடக்கிறது. தாழ்த்தப்பட்டோர்;88 %,பழங்குடிகள்,97.55 %, OBC :72.3 %. மற்ற சாதியினர்:59 .2 % இந்தியா பொது நலத் திட்டத்திற்காக செலவு செய்வதில் உலக அரங்கில் 171 இடத்தில் இருக்கிறது.
உலகிலேயே, ஆஸ்திரேலியாவில்தான் மிக குறைவான குழந்தை இறப்பு 4 .2 க்கும் கீழ் உள்ளளது. இங்கே, தாய்சேய் நலத்திற்கு செய்யப்படுவது.18 .7 %, அமெரிக்காவில் 16 %. இந்தியாவில். 2 .3 % இந்திய அரசு எதிர்கால குடிமக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.
--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642
No comments:
Post a Comment