முதல் பக்கம்

Nov 9, 2010

வெங்காயம்

Thu, 19 Aug 2010

*அன்பானவர்களே.*

*வணக்கம்.
வெங்காயத்தின் உள் பகுதி இப்பத்தான் உங்களுக்கு வருது.
கண்ணீர்
விடாம பாருங்க.

*வெங்காயம். விளையாட்டுக்கே.. அர்ப்பணம்.!
ஆதிகால கிரீசில், ஓட்டபந்தய வீரர்கள் ஏராளமான வெங்காயம்
சாப்பிடுவார்களாம்.
ஏன் தெரியுமா?
வெங்காயம் இரத்தத்தின் சமநிலையை, மிகவும்
லேசாக
வைத்திருக்குமாம்.
பின்
கிரீஸ் ரோமானியர்களின் கைகளுக்குள் அடக்கமானது.
விளைவு..?
ரோமானிய விளையாட்டு வீரர்கள்,முக்கியமாக, , புலி,சிங்கம் மற்றும் காளைகளுடன்
போரிட்டு மக்களை, குறிப்பாக அரச குடும்பங்களை மகிழ்விக்கும் வீரர்கள், தங்களின்
புஜங்களில் தசை நன்கு முறுக்கேறி சண்டையிடுவதற்கு வாகாக,
வெங்காய சாற்றை, கைகளின் மேற்புறம் தேய்த்துக்கொள்வார்களாம் .

எப்படி இருக்கு கதை.? இந்த
வெங்காயத்திற்கு இருந்த மவுசைப் பார்த்தீங்களாப்பா.!
ஏகப்பட்ட பந்தாதான்
இதுக்கு.!


*பிரமிடு
கட்டும். உழைப்பாளிக்கும். வெங்காயம்..!
எகிப்தில் பிரமிடுகள் கட்டிக்கொண்டு இருக்கும்போது, அதனைக் கட்டும்
தொழிலாளிகளுக்காக தினப்படி உணவு ரேஷனில் கொடுத்தனர். அந்த உணவில் கட்டாயம்
வெங்காயம் இருந்தது.வெங்க்காயம் கொடுத்தால். அவர்கள் பிரமிடு கட்டி முடிக்கும்வரை
உடம்புக்கு எதுவும் வராமல் இருக்கவும் உடல் நல்ல பலத்துடன் இருக்க வேண்டும்
என்பதற்காகவும்தான் நைல் நதியின் கடவுளுக்கு வெங்காயத்தைப் படைத்தனராம்.
பழைய
கிரேக்கத்தில், வெங்காயம் மட்டுமின்றி, பூண்டு மற்றும் வெங்காய வாசனையுள்ள லீக்
என்ற அடியில் வெள்ளையாய் இருக்கும் ஒரு தாவரத்தையும் உண்டனர். அங்கே வணிக
சந்தையின் ஒரு பகுதிக்கு பூண்டு என்னும் பொருள்பட
;டா ஸ்கோராடா என பெயர்
சூட்டியிருந்தனர்.
ராணுவ வீரர்களுக்கு கட்டாயமாய் வெங்காயம் உணவில் தரப்பட்டது.
அது சண்டையிடும் உணர்வை தூண்டிவிடும் என்றும் நம்பப் பட்டது.

*பிசாசை.. விரட்டும்.. வெங்காயம்..!
ரோமானியர்கள் வழக்கமே வேறாக இருந்தது.
அங்கே, ஏழைகளின் தினசரி வாழ்வில்
ரொட்டியும் வெங்காயமும் கட்டாயம் உண்டு. செல்வந்தர்கள், வெங்காயம் உண்பவர்களை
ஏளனமாகப் பார்த்தனர். இருந்தாலும் கூட வெங்காயத்தின் அந்த நெடி கலந்த
வாசனை, துர்தேவதைகளை
விரட்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர்.

*அருமருந்தான.. சமய.. சஞ்சீவி..!
பைபிளில் இஸ்ரேலியர்கள் வெங்காயம் பயன்படுத்தியது தொடர்பாக குறிப்பிடப்
பட்டு இருக்கிறது. பாலைவன உணவில் வெங்காயம் பற்றி சொல்லப் பட்டுள்ளது கி.மு 6 ம்
நூற்றாண்டில் வாழ்ந்த
இந்திய மருத்துவர் சரகர் எழுதியுள்ள
சரக சம்ஹிதா நூலிலும்,வெங்காயம் பேசப் படுகிறது. வெங்காயம்,சிறுநீர்
பிரிதலுக்கும், செரிமானத்துக்கும் , இதய நோய்களுக்கும், கண் மற்றும் மூட்டு
வியாதிகளுக்கும்,மருந்தாக சொல்லப் பட்டுள்ளது.
அது போலவே, முதல்லாம்
நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர், டையோஸ்கோரிடேஸ்(Dioscorides ),
வெங்காயத்தின்
பலவகையான, மருத்துவ குணங்கள் பற்றி சொல்லுகிறார். கிரேக்கர்கள் ஒலிம்பிக்
விளையாட்டின் போது,உடலுக்கு நல்ல பலம் தருவதிற்காக போட்டியின்போது எகிப்திய
ஓட்டப்பந்தய வீரர்கள், ஏராளமான வெங்காயம் உண்டனர், ஏராளsமான வெங்காய ஜூஸ்,( நாம
சாத்துக்குடி, ஆப்பிள் ஜூஸ் குடிக்கிறமாதிரி) குடித்தனர். வெங்காயத்தை உடம்பு,
கை, கால் தசைகளில் தேய்த்துக் கொண்டனர். ரோம் நகர பிளினி, என்ற
எழுத்தாளர், ரோமானியர்கள்
நல்ல தீர்க்கமான பார்வை கிடைக்க, உறக்கம் தூண்ட, வாய்ப் புண் ஆற, பல்வலி
போக, வயிற்றுப்போக்கு
நிற்க, முதுகுவலி குறைய என அனைத்து வியாதிகளுக்கும் வெங்காயம் சஞ்சீவியாக
உதவியது என்று குறிப்பிடு கிறார் . அந்த நாட்டின் வீட்டிலுள்ள தோட்டங்களில்,
வெங்காயம் வளர்த்தனராம்.

*வீட்டு..வாடகைக்கும்..வெங்காயம்..!
காலம் செல்ல செல்ல, மத்திய காலத்தில், வெங்காயம் பலவகையான நோய்களுக்கும்
மருந்தானது வெங்காயம்.
அப்போதிருந்த மூன்று முக்கிய காய்கறிகள், பீன்ஸ், முட்டைகோஸ்
மற்றும் வெங்காயமே. .தலைவலி, பாம்புக்கடி, ஏன் முடிகொட்டுதலுக்கும் கூட
வெங்காயம் பயன்பட்டது.அனைத்து மக்களும் எல்லாவற்றுக்கும்
வெங்காயத்தையேபயன்படுத்தினர்.ஒரு விஷயம் தெரியுமாப்பா..! அப்ப
ரோமாபுரியிலே,
வீட்டு வாடகையா மட்டுமில்லே, திருமண பரிசாகவும் கூட வெங்காயம்
கொடுக்கப்பட்டதாம்..! எப்படி இருக்கு கதை.?.!

*கொலம்பசும். .கண்டுபிடிப்பும்..!
கிறிஸ்டோபர் கொலம்பஸ் , ஹிஸ்பனியோலாவைக் கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று
1492 ல் கிளம்பியபோதுதான் வட அமெரிக்காவில்.போகிற போக்கில் வெங்காயத்தை
அறிமுகப் படுத்தினார்.1500களின் துவக்கத்தில் மருத்துவர்கள், பெண்களின்
மலட்டுத்தன்மைக்கும், நாய், பூனை,மாடு மற்றும் வீட்டு பாசமிகு
விலங்குகளின் சிகிச்சைக்கும்
கூட வெங்காயமே பயன்பட்டதாம்ப்பா.
_பேரா.சோ.மோகனா

No comments:

Post a Comment