தேனி,கைலாசபட்டி திரவியம் கல்வியியல் கல்லூரி:
2010 நவம்பர் 16 செவ்வாய்க்கிழமையன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேனி,கைலாசபட்டி திரவியம் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம் மற்றும் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது.திரவியம் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் திருமிகு.ஆர்.அழகுகணேசன் தலைமையேற்றுத் துவக்கிவைத்தார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் வரவேற்று புத்தக வாசிப்பு பற்றிய அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாளர் முனைவர்.எஸ்.கண்ணன் (HKRH கல்லூரி, உத்தமபாளையம்) வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் வாசிப்பின் முக்கியத்துவம் வாசிப்பின் நுணுக்கம் மற்றும் பல்வேறு முறைகள் பற்றி கருத்துரையாற்றினார். மதுரை துளிர் அறிவியல் மைய இயக்குநர் திருமிகு.மு.தியாகராஜன் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்துகாட்டினார். திருமிகு.ஆர்.ஆறுமுகம் திருமிகு.பிரபாகரன் உட்பட கல்லூரியின் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்த நிர்வாகத்தினர் மற்றும் கருத்தாளர்களுக்கு திருமிகு.வி.வெங்கட்ராமன் நன்றி கூறினார்.தேனி_அன்னஞ்சி
அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி:
நவம்பர் 19 வெள்ளிக்கிழமையன்று தேனி_அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. முதன்முதலாக பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு பலவித வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவியல் இயக்கப் புத்தகங்களை ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர். மிகவும் பின்தங்கிய ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் நமது எதிர்பார்ப்புகளை விடகூடுதலாகவே புத்தகங்களை ஆர்வமாக வாங்கிச் சென்றனர். கண்காட்சி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திருமிகு. பா.செந்தில்குமரன் மாவட்டச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு. ப.மோகன் குமாரமங்கலம் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment