முதல் பக்கம்

Nov 5, 2010

ஹிரோஷிமா நினைவு தினம்: கம்பத்தில் மனித சங்கிலி

தீக்கதிர்,தேனி,
நாள்:ஆகஸ்ட்,8,2010

ஹிரோஷிமா நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு
அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்ற மனிதச்சங்கிலி
இயக்கம் கம்பத்தில் நடந்தது.

அணுசக்தியை ஆக்கவேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அணுஆயுதங்களைத் தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவ மாணவிகள் முழங்கினர்.
மனிதச்சங்கிலி
இயக்கத்தில் மதுரை துளிர் அறிவியல் மைய இயக்குநர் மு.தியாகராஜன், மாநிலக்கல்விக்குழு உறுப்பினர் அமலராஜன், முத்துவிநாயகா மெட்ரிக்பள்ளி தாளாளர் ஜெயவேல்காந்தன், தலைமை ஆசிரியர் மனோகர்,அறிவியல் இயக்கம் மாவட்டச்செயலாளர்
சுந்தர்,மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராமன்,
துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்கள்
வெங்கட்ராமன்
சுரேந்தர்,முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment