முதல் பக்கம்

Nov 13, 2010

உலோகம்


அன்பானவர்களே,
. அனைவருக்கும், காலை வணக்கம்இதோ பாகரனின் பங்காளியான உலோகம். படியுங்கள். விமர்சனம் செய்யுங்கள். 
நன்றி, 
மோகனா. 
. இன்று அலுமினிய தட்டில் சாப்பிடச் சொன்னால் யாரவது சாப்பிடுவீர்களா? இதென்ன மடத்தனம் என்று சீறுவீர்கள். ஆனால் சுமார் 3000,௦௦௦ ஆண்டுகளுக்கு முன் அலுமினியம் தங்கத்தைவிட மதிப்பு வாய்ந்த உலோகமாக கருதப்பட்டது. பழங்கால கிரேக்கர்களும்,ரோமானியர்களும் அலுமினியம் பயன்படுத்தினராம். . .
பண்டைய ரோமானிய வரலாற்று ஆசியரான் பிளினி, ஒரு நிகழ்வினை குறிப்பிடுகிறார். " ரோமானிய சக்கரவர்த்தி டிபிரியசைக் காண வந்த. ஒருவன் வெள்ளி போல பளபளப்புடன் ஒரு கோப்பையை சக்கரவர்த்திக்கு பரிசளித்தான்.இது களிமண்ணிலிருந்து புதிதாக பிரித்தெடுத்த உலகம் என்றான். உடனே சக்கரவர்த்தி, அவன் தலையைச் சீவிவிட்டார்.அவனது ஆராச்சி கூடத்தையும் அழிக்க ஆணையிட்டார். காரணம் அந்த உலோகம் அவரின் தங்க வெள்ளியின் மதிப்பைக் குறைத்து விடும் என எண்ணினார். பின் அந்த உலோகம் அலுமினியம் என சரித்திரத்தில் எழுத 1 ,500 ஆண்டுகள் ஆயின. கி.பி.1,600ம் ஆண்டில் அலுமினியம் என்ற பெயர் எழுதப்பட்டது. .அவரின் பெயர்:பிளிப்பஸ் அரேலியஸ் தியோபிராச்டஸ் பாராசெல்சஸ் பாச்டஸ் வான் ஹோகன் ஹீம் !..போதுமா?. ஒரு முறை மூச்சை இழுத்து விட்டுக்கொள்ளுங்கள்.
அலுமினியம் 1827க்கு பிறகு இது தங்கம், வெள்ளியைவிட விலை உயர்ந்ததாயிற்று. ஒரு ஐரோப்பிய மன்னர் தன சட்டையில் அலுமினிய பொத்தான் கலை அணிந்து கர்வமாய் காட்சி யளித்தார். மற்றவர்கள் தம்மால் இப்படி அலுமினிய பொருட்கள் பயன்படுத்த முடியவில்லையே என ஏங்கினார்கள்
1855 ல் பிரான்சை ஆண்ட மூன்றாம் நெப்போலியன் தன பெருமையைக் காட்ட எண்ணி, ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் அரச குடும்பத்தினர் சிலருக்கும் மதிப்பு மிக்க பிரபுக்களுக்கும் மட்டும், அலுமினிய ஸ்பூனும், முள் கரண்டியும் வழங்கினார். மன்னரின் அதே மேஜையில் வேறு பலருக்கு தங்கம வெள்ளியிலான ஸ்பூன் முள் கரண்டிகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்களுக்கு அலுமினியம் தொடும் பாக்கியம் இல்லையே என வருந்தினர். இதே மன்னர் தன படை வீரர்களுக்கு அலுமினிய கவசங்களை கொடுத்து , தன பெருமையை,செல்வவளத்தைக் காட்டிக்கொண்டார்
மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனர்களின் கல்லறையில் கிடைத்த அணிகலன்களில் 85 % அலுமினிய கலப்பு இருந்தது. அவர்களுக்கு மின்சாரம் இன்றி அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் முறை தெரிந்திருந்தது, .ஆனால் அந்த ரகசியம் அவர்களோடு புதைந்து போய்விட்டது. புகழ் பெற்ற விஞ்ஞானியான, டி.மேண்டலிப்புக்கு அவரின் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி, அலுமினிய பூக்கிண்ணம் அன்பளிப்பாக கொடுத்தனர்.
கடந்த நூற்றாண்டில் அலுமினியத்தை அதன் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்க மலிவான முறை இல்லை. எனவே, அதன் விலை அதிகம். எளிதில் பிரித்தெடுக்கும் வழி தெரிந்தவுடன்..விலை மட மட வென சரிந்தது. அலுமினியம் விண்கலங்கள், மருத்துவத்துறை, விமானங்கள தயாரிக்க , கடல் ஆராய்ச்சியில் கட்டிட தொழில் போன்றவற்றில் இதன் பங்கு ஏராளமானது. வானவேடிக்கையிலும் , கொளுத்துகிறது. வைட்டமின்களை அழியாமல் பாதுகாக்கிறது. அலுமினியம்.இன்று ஏழைகள் அனைவர் வீட்டு அடுப்பில் வைத்து சமைக்கும் உலோகம் அலுமினியம்தான்.ஏழைகளின் நண்பன், ,
--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642

No comments:

Post a Comment