பூமி போன்ற .நிறையுடைய .வேறு சூரியனின்..வெளிக்கோள்..!
பூமிதான் நமக்கு சொந்தம், பூமியின் சொந்தம் சூரிய குடும்பம்தான். அதைத்தாண்டி நம் சொந்தம்,, இரவு வானில் தெரியும்,பால்வழி மண்டலம் தான். அதெல்லாம் சரி. நம் சூரிய குடும்பம் தாண்டி, நம் பூமி அல்லது, சூரிய குடும்ப கோள்கள் போல் ஏதாவது, கோள்கள் உண்டா, அதில் மனிதர்கள் வசிக்கிறார்களா என்றெல்லாம் நாம் எண்ணிப் பார்த்து இருக்கிறோமா ? நம் குழந்தைகள் வேண்டுமானால், இப்படி கேள்வி கேட்டு நம்மை மடக்கி, திணறடித்து இருக்கின்றன. நாம் பதில் தெரியாமல் முழித்து இருக்கிறோம்.. உண்மை நிலைதான் என்ன?
--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642
நம் சூரிய குடும்பம் தாண்டி ஏராளமான சூரியன்களும், அதைச் சுற்றிக்கொண்டிருக்கும், கோள்களும் உள்ளன. நாம் அவற்றை, வெளிக்கோள்கள் என்று அழைக்கிறோம். நேற்றைய தேதி வரை, அதாவது, 2010 , மே 14 ம் நாள் வரை, 454 வெளிக்கோள்களை வானவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை, நமது வியாழன் போல பெரிய அண்ணாச்சிகள்தான். இவற்றை இவைகளின் பிம்பம் மூலம் அறிவதைவிட. இன்றைய நவீன தொழில் நுட்ப சாதனங்கள் மூலம்தான் கண்டு பிடித்துள்ளனர்.அதுதான், எல்லா சூரிய குடும்பங்களும் ஒன்றை விட்டுஒன்று விலகிச் சென்றுகொண்டே இருக்கின்றன. இவ்வாறு விலகிச் செல்வதனை,radial velocity என்ற விலகல் தொலைவு மூலம் அறிய முடியும். அதன் விலகல் தொலைவினை, சிவப்பு விலகல்/ நீல விலகல். மூலம் அறிந்து கொள்கின்றனர். சிவப்பு விலகல் நிகழ்ந்தால்,அப்பொருள் விலகிச் செல்கிறது என்றும், நீல விலகல் தெரிந்தால் பொருள் நம்மை நெருங்கி வருகிறது என்றும் அறியலாம்
எல்லா சூரியன்களும் விண்மீன்களே.. எல்லா விண்மீன்களும் சூரியன்கள்தான். Radial velocity மூலம் , மற்ற சூரிய குடும்பத்தின் ஜாதகத்தையே கூட நிர்ணயித்துவிட முடியும். எனவே, இதன் மூலம் அந்த விண்மீன்களின் நிறை,(எடையல்ல),அவற்றைச் சுற்றும் கோள்கள்/பொருள்கள், அவைகள் சுற்றும் நீள்வட்டம்,அவைகளின் நிறை, உருவ நிர்ணயம், விட்டம், சுற்றும் கால அளவு , இன்ன பிற விஷயங்கள் யாவையும் அறிந்து கொள்ள முடிகிறது. அம்மாடியோவ் .. எவ்வளவு தகவல்கள்,,! பல ஒளியாண்டுகள் தொலைவில் ஓடிக்கொண்டு இருக்கும்,அனைத்தையு ம்,நாம் கண்ணால் காணாமலேயே, நிறத்தின் ஜாலம் மூலம் அறிய முடிகிறதென்றால்..அறிவியலின் அற்புதத்தை.. வியக்க, புகழ .. வார்த்தைகளே இல்லை எனலாம்.
வெளிகோள்கள் இருப்பதை 1989 ல் அனுமானித்து, 1992 ல் நிச்சயமாய் கண்டுபிடித்தனர். அது பெகாசி விண்மீன் படலத்தில் உள்ளது. நம் சூரியன் போல 10 % விண்மீன்களுக்கு கோள்கள் உள்ளனவாம். அதுவும், சமீபத்தில்2010 ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிளிஸ் 581 என்ற சிவப்பு அரக்க விண்மீனின் 4 வது கோள், நமது பூமி போன்ற பாறைக்கோள் எனவும், அதில் உயிர்கள் வாழக்கூடிய சுழல் காணப்படு வதாகவும் தெரிகிறது.. இங்கு பெரும்பாலான வெளிக்கோள் கள் கொதிக்கும் வியாழன்களாகவே உள்ளன.நம் சூரியன் போன்ற 3 % -5 %விண்மீன்களுக்கு அசுர கோள்களே உள்ளன. அவையும் ௧௦௦ நாட்களில் தன மைய சூரியனை சுற்றி முடிக்கின்றன. இவைகளில் 40% சூரியன்களுக்கு குறைந்த நிறை உள்ள கோள்கள் இருக்கின்றன.
சிலி நாட்டின் லாசில்லா என்ற இடத்தில், ஐரோப்பிய தெற்கு வானோக்ககம் உள்ளது. இங்கு 3.6 மீ விட்டமுள்ள தொலைநோக்கி மூலம் மிச்சல் மேயர் என்பவரின் குழு, 2009, ஏப்ரல் 21 ம் நாள் ஒரு கோளை கண்டுபிடித்தது. இது நம் பூமி போல 1 .9 நிறை உள்ளது. இதுவரை கண்டுபிடித்துள்ள வெளிக்கோள் களில் இதுதான் மிகச் சிறியது. கிட்டத்தட்ட நம் பூமியின் நிறை..!இதன் மேற்பரப்பு பாறை போன்று உள்ளது. மேலும் இது தன் தாய் விண்மீனை 0௦.௦03வானியல் அலகில், மிக நெருக்கமாக சுற்றிக்கொண்டு இருக்கிறது. .அதனால் இங்கே உயிர்கள் வாழ்வதற்கான வளிமண்டலமோ, வெப்ப நிலையோ இல்லை. ஏனெனில், இது தன் தாய் சூரியனை வெகு நெருக்கத்தில் சுற்று வதால், இதன் வெளி வெப்பம் அதிகமாக இருக்கின்றது.
சுற்றும் காலம் 3 .15 நாட்கள் மட்டுமே..!
--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642
VIEW_FROM_GLIESE_E.jpg 26K View Download |
Planet_reflex_200.gif 94K View Download |
No comments:
Post a Comment