தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, இளைஞர் அறிவியல் மாநாடு, துளிர் அறிவியல் திருவிழா, துளிர் அறிவியல் வினாடிவினா போன்ற பல்வேறு பணிகளைச் செய்துவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகளை நடத்தி வருகின்றது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத்திறனறிதல் போட்டிகள் நடத்தப்படுகின்றது.
இவ்வாண்டிற்கான போட்டிகள் இன்று, நவம்பர் 13 (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
திறனறிதல் போட்டியில் கூடலூர் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி.நடுநிலைப் பள்ளி, விக்ரம்சாராபாய் துளிர் இல்லம் காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் பாத்துமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச்சேர்ந்த சுமார் 150 மாணவ,மாணவியர் கலந்துகொண்டனர்.
அறிவியல் இயக்க தொண்டர்கள் திருமிகு.க.முத்துக்கண்ணன் திருமிகு.வி.வெங்கட்ராமன் திருமிகு.ஆர்.அறிவழகன் திருமிகு.ஈஸ்வரன் திருமிகு.அருண்பிரசன்னா திருமிகு.முத்துலட்சுமி ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டனர்.
கம்பம் அல்அஜ்ஹர் மெட்ரிக் பள்ளியில் திருமிகு.ஐயப்பன் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருமிகு.அம்மையப்பன் தேனி கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் திருமிகு.முத்துக்கணணன் மற்றும் திருமிகு.பாஸ்கரன் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டனர். திறனறிதல் போட்டி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் திருமிகு.தே.சுந்தர் செய்திருந்தார்.
* 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.
*6-8 இளநிலை எனவும், 9-12 முதுநிலை எனவும் இருபிரிவுகளில் தேர்வு நடைபெற்றது.
*தேர்வில் மாணவர்கள் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டும். வினாக்கள் பொது அறிவியலாகவும் அறிவியல் விழிப்புணர்வுத் தகவல்களாகவும் துளிர் அறிவியல் செய்திகளாகவும் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வுத் திறனை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும்.
*வினாக்களுக்கு பதில்களை 4 விடைகளிலிருந்து 1 விடையைத்தேர்வுசெய்யும் வகையிலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிற்கானபோட்டித் தேர்வுகளில் பங்கேற்கப் பயிற்சி அளிக்கும் வகையிலும் இருக்கும்.
*பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரணகாரிய அறிவையும் அறிவியல் குறித்த புரிதலையும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
*வினாக்கள் ஆங்கிலம்,தமிழ் ஆகிய இருமொழிகளிலும் இருக்கும்.
*எழுத்துத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
*தேர்வில் மாநில அளவில் முதல் பத்து இடங்கள் பெறும் மாணவர்கள் அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கும் வாய்ப்பும் சிறப்புப்பரிசும் வழங்கப்படும்.
*அதிக மாணவர்கள் கலந்துகொண்ட பள்ளிகளுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.
*திறனறிதல் தேர்வு மதிப்பீடு முனைவர்.அ.வள்ளிநாயகம் அவர்களது தலைமையில் தஞ்சையில் நடைபெறும்.
No comments:
Post a Comment