முதல் பக்கம்

Nov 6, 2010

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு


பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010
காரைக்கால்:காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் 18வது மாநாடு நடந்தது.இம்மாநாடு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தர்மராஜ் கூறியதாவது:காரைக்காலில், தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டையொட்டி, 6 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவியர் 2500 வார்த்தையிலும், 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவியர் 3500 வார்த்தைகளிலும் மண் வளம் குறித்து ஆய்வுக் கட்டுரை தயாரித்து சமர்ப்பிக்கும்படி @கட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்படி 30 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். மாணவ, மாணவியர்களின் ஆய்வுக் கட்டுரைகளை புதுச்சேரி சி.இ.ஆர்.பி., அமைப்பின் தலைவர் ரகுநாத், செயலர் விஜயமூர்த்தி, சுதர்சன் ஆகியோர் ஆய்வு செய்து, 6 சிறந்த கட்டுரையாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.அந்த 6 கட்டுரையாளர்களும் அடுத்த மாதம் புதுச்சேரியில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.அதன்பின் தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் நடைபெறும் அகில இந்திய அளவிலான மாநாட்டில் பங்கேற்பர்.

சென்னை மாநாட்டில் சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, இளம் விஞ்ஞானி உள்ளிட்ட விருதுகளுடன் அரசு வேலைக்கும் ஏற்பாடு செய்யப்படும்.மாநாடு ஏற்பாடுகளை புதுச்சேரி அறிவியல் இயக்கத் தலைவர் சம்பந்தம், நிர்வாகிகள் விஸ்வேஸ்வரமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் உள்ளிட்டோர் செய்தனர்

No comments:

Post a Comment