முதல் பக்கம்

Nov 13, 2010

தங்கத் தகவல்

அன்பான அறிவியல் நண்பர்களே.
உங்களுக்கு ஒரு தங்கத் தகவல். பாருங்களேன்..!
   அதிகாலை வணக்கம். ஒரு தகவல் கிடைத்தது. அந்த ஊரில் இந்தியர்கள் வாழும் வீட்டுக்குத்தான் திருடர்கள் வருவார்களாம். மற்றவர்களிடம் தங்கம் கி டையாதே ..அதனால்தானாம.
மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய உலோகம் தங்கம்தான். ஆதிகால இன்கா நாகரிகத்தினர் தங்கத்தை சூரியனின் கண்ணீர் என்றே அழைத்தனர். மனிதன் அதனை பணமாகப் பயன்படுத்தாததிற்கு முன்பே அது மதிப்பு வாய்ந்த உலோகமாக கருதப்பட்டது. பண்டைய சுமேரியர்கள்தான் தங்கத்தைப் புனித பொருளாக , ஆபரணமாக , அலங்கார கருவிகளாக சுமார் 7 ,000௦௦௦ ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தினார்கள். அதே கால கட்டத்தில் துவக்க கால எகிப்தியர்களும் பழங்கால உலகின் தங்கம் உற்பத்தி பண்ணும் நாகரிக மனிதர்களாகவும், பணக்காரர்களாகவும் இருந்தனர். சுத்தப்படுத்தப்பட்ட தங்கத்தில் நாணயம் செய்தவர்கள் எகிப்திய அரசர்களின் 6வது வமிசம்தான். காலம் கி.மு. 2 ,700 -2 ,270 .எகித்திய பாபிரஸ் சுருளில் நுபியாவில் பெரிய தங்க சுரங்கம் உள்ளது குறிக்கப்பட்டுள்ளது.
      முதன் முதலில்தங்க நாணயத்தை கி.மு 700 களிலேயே தயாரித்தது லிடிய வியாபாரிகள்தான். பின்னரே அனைவரும் பயன்படுத்தும் படியான தங்க நாணயங்களை செய்தது பழங்கால லிடிய அரசனான குரோசஸ் தான் (கி.மு. 560 -546 ). அவர் வெளியிட்ட நாணயங்களில் ஒரு புறம் சிங்க உருவமும், மறுபுறம் எருதும் காணப்பட்டது. மேலும் இது உலகம் முழுவதும் பயன்படும் பண்டமாற்று நாணயமாகவும் இருந்ததுதான் சிறப்பு அம்சம்.
     தங்கம் பாரம்பரியமாக troy ouncesஎன்ற அளவீட்டுப்படியே வழங்கப்படுகிறது.இது 31 .1035 கிராமுக்கு சமமாகும். மேலும் பழங்காலத்தில், காரோப் என்ற விதையை அளவீடாக பயன்படுத்தியதால், அதன்படி சர்வதேச அரங்கில் காரட் என்று சொல்லப்படுகிறது.மக்கள் ஆதிகாலத்தில் , தங்கத்தை தங்க துணுக்கு களாகத்தான் பொறுக்கி எடுத்தார்களாம் . அது காரட் மதிப்பில் சுமார் 20 -22காரட் தான் இருக்குமாம், ஆஸ்திரேலியா வில் தான் 23 காரட் 
உள்ள தங்கம் கிடைக்கிறதாம்.
தங்கத்தின் விலை ஏன்இப்படி கொடி கட்டிப் பறக்கிறது தெரியுமா? ஒரு கிராம் தங்கம் தயாரிக்க ஏராளமான செலவுதான். தங்க சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் 860 தங்கத் தாதுவிலிருந்து கிடைப்பது வெறும் 30௦ கிராம் தங்கம்தான்.தங்கம் கிடைக்கும் இடத்திலிருந்து சுரங்கம் தோண்ட , வெட்டி எடுக்க , அதனை சுத்தப்படுத்த என ஏராளமான
செலவுகள்.. எனவேதான். தங்கம் கனமாக இருந்தும், அதன் விலை இப்படி ராக்கெட்டைவிட உயரத்தில் பறக்கிறது. ௦2009ம் ஆண்டு கணக்குப்படி , இதுவரை மனித வரலாற்றில் சுமார் 161 ,௦௦௦ 000டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனை 5,175 , 000troy ounce என்கிறார்கள்.
உலகின் தங்க சேமிப்பு உள்ள இடம் நியூ யார்க்கிலுள்ள பெடரல் வங்கிதான்.இங்கே சுமார் 269 ,௦௦௦000,000௦௦௦ troy ounce தங்கம் உள்ளது. இது சுமாராக உலகின் 25 %-30 % தங்கமாகும்.பெடரல் வங்கி மன்ஹாட்டன் தீவில் தெருவுக்கு 80அடி ஆழத்தில் கடல் மட்டத்திற்கு கிழே 50 அடி ஆழத்தில் இந்த வைப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. 
உலகின் பெரிய தங்க சுரங்கம் தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு ராண்டுதான், இதன் பரப்பு 12,௦௦௦ 000ஏக்கர். இதிலுள்ள தங்க சுரங்க டன்னலின் நீளம் 40 ,000௦,௦௦௦ கி.மீ.உலகின் அதிக தங்க உற்பத்தி செய்யும் நாடு சீனாதான். போன ஆண்டு மட்டும் 260 டன் உற்பத்தி. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடம்தான். 
ஒரு துணுக்குச் செய்தி: ஹவாயிலுள்ள கேச்ட் வானோ க்கு நிலையத்தில் உள்ள தொலைநோக்கியில் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி உள்ளதாம். இதில் நெப்டியூன் மற்றும் புளுட்டோவின் பிம்பங்கள் நன்றாகத் தெரிகிறதாம். நவீன மருத்துவத் துறையிலும் , கீல்வாதம், வீக்கம், டி.பி போன்ற நோய்களுக்கு வலி நிவாரணியாக தங்கம் பயன்பாட்டில் உள்ளது.. நண்பர்களே.. போதுமா.?. தங்கத்தின் புராணம். .!
அன்புடன், 
மோகனா
--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642

No comments:

Post a Comment